செவ்வாய், 7 நவம்பர், 2017

Economic Disaster Day - November 08.



Economic Disaster Day - November 08.

4000 ரூபாயை மாற்றுவதற்கு தேசத்தையே வரிசையில் நிற்க சொன்னார்கள்.
*நின்றோம்!*
ஒரு நாளுக்கு ஒரு முறை தான் 4000 ரூபாய். மீண்டும் வரக்கூடாது என்பதற்காக கையில் மை வைத்தார்கள்.
*வைத்துக்கொண்டோம்!!*
100 பேர்க்கு மேல் வரிசையில் நின்றே செத்தார்கள்.
*மௌனமாகயிருந்தாேம்!!!*
இத்தனை துன்பங்களையும் எதற்காக பொருத்தம் என்று நினைத்தார் மோடி.
*என் தேசம் பொருளாதார வளர்ச்சி வல்லரசாகும் என்ற ஆசையில் தானே*
வெய்யலில் காய்ந்தோம். வரிசையில் நின்று செத்தோம். வயிறு பசியை அடக்கினோம். உண்டியில் சேர்த்து வைத்த பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து இறந்தோம்.
*ஆனால் இன்று என் தேசத்தை வளரும் நாடு என்ற பட்டியலில் இருந்து வீழ்ச்சி அடைய வைத்தது மட்டுமில்லாமல். உள்நாட்டு உற்பத்தியில் இரண்டரை லட்சம் கோடி சரிவு. ஒவ்வொரு மாநிலம் பல ஆயிரம் கோடி வரி இழப்பு வெட்க்கம் கெட்ட மோடி அரசே இதற்காக தானா இத்தனை சுமைகளை சுமந்தோம்*
7000 கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய நீதி கேட்டு வந்த உனக்கு சோறு போட்ட விவசாய மக்களை அம்மனமாக்கி அழகு பார்த்த பாரத பிரதமரே
உங்க பாஜக கட்சி தலைவர்கள் வீட்டில் மட்டும் பல கோடி கணக்கான 2000 நோட்டுகள் வந்தது எப்படி விளக்குவீரா?
4000 ரூபாய் மாற்ற என் தேசத்தின் மீது நான் வைத்த பாசத்தையும் நேசத்தையும் காரணம் காட்டி வெயிலில் காய வைத்த மோடி அரசே.
ரூபாய் 33 கோடியை சேகர் ரெட்டி சுலபமாக மாற்றிவிட்டார்.
எந்த வங்கியில் மாற்றப்பட்டது என்பது மத்திய அரசுக்கும் தெரியாதாம், ரிசர்வ் வங்கிக்கும் தெரியாதாம், சிபிஐயால் கூட கண்டுபிடிக்கவே முடியாது என்று சொன்ன பிறகும்
டிஜிட்டல் இந்தியா. புதிய இந்தியா என பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை தங்கள் ஆட்சியின் விளம்பரத்திற்கும். ஊர் சுத்தவும் ஊதாரி தனம் செய்து என் தேசத்தை படுபாதகுழியில் தள்ளிவிட்டு மீசையில் மண் ஒட்ட வில்லை என்று வெட்கம் கெட்டு தலைகுனியாமல்
நம் தேசத்தின் மாபெரும் தோல்வியை வெட்கமேயில்லாமல் வெற்றி என்று கொண்டாட வேண்டும் என சொல்லும் மானங்கெட்ட மோடி அவர்களே. இது எங்களுக்கு வெற்றி தினம்
#Demonetisation
#November8
#மக்கள் ஏமாற்றப்பட்ட தினம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக