புதன், 22 நவம்பர், 2017

முத்ரா தொழில் கடன் திட்டம்* *(MUDRA LOAN SCHEME)


முத்ரா தொழில் கடன் திட்டம்* *(MUDRA LOAN SCHEME)

குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பிணயம் இல்லா வங்கி கடன் பெரும் முத்ரா திட்டம் பற்றிய #முழு #விபரம்:

உங்கள் தொழிலை வளருங்கள் முத்ரா கடனுடன்......

இப்போது.......

மீன் வளர்ப்பு,
மாடு வளர்ப்பு,
பால் பண்ணை,
தேனீ வளர்ப்பு,
கோழிப் பண்ணை,
பட்டு தொழில் போன்ற தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

 திட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கடன் வழங்கப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் வரையில் நியாயமான வட்டியில் கடன் பெறலாம்.  சொத்து பிணையம் தேவையில்லை. பணம் எடுக்கும் போது வட்டிச் செலுத்தினால் போதுமானது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எளிதான தவணைகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முத்ரா கார்டு பயன்படுத்தி எந்த ATM-லும் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம்.

முத்ரா கடன் திட்டம்: ரூ.50,000/- , ரூ.5,00,000/- , ரூ.10,00,000/

சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. வங்கிக்கடன் கிடைக்காததால் தனியார் நிதி நிறுவனங்களை இத்தொழில் செய்வோர் நாடுகின்றனர். அங்கு, அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை.

மத்திய பட்ஜெட்டில் 'முத்ரா' வங்கி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த   வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல், 8ம் 2015 தேதி முத்ரா வங்கியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழுவதிலும் முத்ரா வங்கி அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு  சொத்து பணயம் இல்லா கடன் பெரும் திட்டம். இது தனிநபர் கடன் திட்டம் அல்ல. தொழில் நடத்துவதற்கு வழங்கப்படும் தொழில் கடன் திட்டம்.

முத்ரா கடன் திட்டம் பற்றிய முழு விபரம்- know about the MUDRA LOANS:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PMMY) . இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயபடுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயபடுத்தப்படுகிறது.

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குருந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.

இதன் சேவைகள்:
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கபடுகிறது.

சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம்  வரை கடன் பெறலாம்.
தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக  ஐந்து லட்சம்  முதல் பத்து லட்சம்  வரை கடன் பெறலாம்.

தகுதி:
பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்.....?
1 அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

 2. உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், கோழிப் பண்ணை, மாடு வளர்த்தல், மீன் பண்ணை, தேனீ வளர்த்தல், பால் பண்ணை, பட்டு தொழில், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர் கைவனை கலைனர் உற்பத்தி தொழிசாலை அமைதல்  என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.

 3. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவு படுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

 4. கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல்( Quatation) கொடுக்க வேண்டும்.அதன் அடிபடையல் கடன் கிடைக்கும்.

 5.  உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.

 6. சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.

 7. கல்வி கடன், தனிநபர் கடன் , தனிநபர் வாகன கடன்  இதில் வராது.

இத்திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை....


* இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

 * வயது வரம்பு 18 வயது  முடிந்திருக்க வேண்டும்.

 * இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.

* இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.


 * . இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும்.

 * நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும்.

 * .   நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.

 * .  ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.

 * .  இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் ( SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. கடன் பத்து லட்சம் வரை பெறலாம்.

 * .ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

 *  உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.

 * .  அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.

 *. விலைப் பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.

* .  இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.

கடன் வழங்கும் வங்கிகள்:

• 27 Public Sector Banks

• 17 Private Sector Banks

• 31 Regional Rural Banks (RRBs)

• 4 Co-operative Banks

• 36 Micro Finance Institutions (MFIs)

• 25 Non Banking Financial Companies (NBFCs)

அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் அவசியம் நிரப்பப்பட வேண்டும்.

1)      அடையாள சான்று ( வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்) Proof of Identity (Self attested Voter ID/Driving License/PAN Card/Aadhaar Card/Passport/any other Photo ID issued by Government)

2)      இருப்பிட சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசிது, மின்சார கட்டண ரசிது, வீட்டு வரி ரசிது) Proof of Residence (Recent Telephone Bill/Electricity Bill/Property Tax Receipt (not older than 2 months)/Voter ID Card/Aadhaar Card/Passport/Domicile Certificate/Certificate Issued by a local authority)

3)    லேட்டஸ்ட் புகைப்படம் Applicant’s recent photograph (not older than 6 months)

4)    இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது Quotation of Machinery/other items to be purchases

5)    சப்லேயர் விபரங்கள் Name of the Supplier/Details of Machinery/Price of Machinery

6)    தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ் Proof of Identity/Address of the Business Enterprise (relevant licenses & certificates)

7)    சாதி சான்று Proof of Category (SC/ST/OBC/Minority etc)

மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதல்களை பெறலாம். கடன் திருப்பி செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்க பட்டுள்ளது.

முத்ரா அட்டை:

முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் மறுக்கும் பட்சத்தில்....
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன் மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.. உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.

திட்ட அறிக்கை என்றால் என்ன?

திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது?

 அந்த தொழில் லாபகரமான தொழிலா?

 அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது?

அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன?

அந்த எந்திரங்களின் விலை என்ன?

தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்?

சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம்.

உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன்  கொடுப்பார்கள்.

முக்கிய குறிப்பு:
Ø  வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் பார்க்கவும் மாலை  4.00 மணிக்கு அனுமதி பெற்று பார்த்தல் நன்று.
மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன் தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும்.
 மேலாளரின் முடிவே இறுதியானது.

 மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கவும். நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எங்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக