வெள்ளி, 10 நவம்பர், 2017

பரபரப்பு செய்திகள் 10/11/17 !

பரபரப்பு செய்திகள் 10/11/17 !

இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8பேரின் காவல் நவம்பர் 23 வரை நீட்டிப்பு.

வருமான வரித்துறை சோதனை நாளையும் தொடரும் - வருமான வரிதுறை அதிகாரி.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகு கைப்பற்றபட்ட ஆவணங்களின் முழு தகவல் வெளியிடப்படும் - வருமானவரித்துறை.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ நடத்தும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை இனி புதிய அமைப்பு நடத்தும், சிபிஎஸ்இ நடத்தாது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் தேசிய தேர்வு முகமை மாவட்ட வாரியாகவும் அமைக்கப்படும்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற சுங்கத்துறை அதிகாரி ஆறுமுகத்திற்கு 2 ஆண்டு சிறை - சென்னை சிபிஐ நீதிமன்றம்.

சென்னை மெட்ரோ ரயில் தூண்களில் விளம்பர உரிமம் வழங்குவதற்கு வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்.

பாலியல் புகார் எதிரொலி: விழுப்புரம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்.

விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும் - நடிகர் விஜய் சேதுபதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றுவோம்; திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பின்வாங்கி கொள்வோம் - அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.

திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜவுள் & ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% இல் இருந்து 5% ஆக குறைப்பு.

அழகு சாதன பொருட்கள், சோப்பு, சாக்லேட்டுகள், கிரனைட் மார்பிள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 28% இல் இருந்து 18% ஆக குறைப்பு.

மெர்சல், பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு தரப்படவில்லை : தம்பிதுரை எம்பி.

நீதிபதி கிருபாகரனை விமர்சித்தற்காக தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கத்திற்கு காவல்துறை நோட்டீஸ்.

தமிழகத்தின் வருமானவரி சோதனை மூலம் பாஜக காலூன்ற நினைப்பது நடைபெறாது : முத்தரசன்.

டிடிவி.தினகரன் சகோதரர் பாஸ்கரன் இல்லத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிரான கருத்துகளை வைத்ததால் பிரசாந்த் பூஷண் வெளியேற்றம்.

தருமபுரியில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் நீதிபதியை அவமதித்து பேசிய 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.

தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது; மழை பாதிப்புக்காக எந்த தற்காப்பு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை : வைகோ.

தன்வீட்டில் ரெய்டு நடக்கும் என தெரியாத ஜோசியரிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போதாவது புரிந்திருக்கும் : ஹெச். ராஜா.

அறந்தாங்கி அருகே கூத்தாடிவயலில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் ஜெயராமன் உயிரிழப்பு.

எம்ஜிஆர் திரைப்படம் : படபிடிப்பை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார் நடிகர் கமல்ஹாசன்.

அரவக்குறிச்சியில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு.

மாநகராட்சி பள்ளிகளில் படித்தவர்கள் உயர்நிலையில் உள்ளனர் நானே மாநகராட்சி பள்ளியில் படித்தவன் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ.

2023 இல் ஆசிய கண்டத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கும் வகையில் முன்னேறி வருகிறது : அமைச்சர் செல்லூர் ராஜூ.

சென்னை பாலவாக்கத்தில் திரைப்பட பின்னணி பாடகி ராதிகா (47) மாரடைப்பால் காலமானார்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீட்டில் 2வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற நிலையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சிலை கடத்தல் தொடர்பாக முன்னாள் கோயில் நிர்வாக அதிகாரி கைது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு.

இந்தியாவின் வளர்ச்சிக்கு நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக