சனி, 11 நவம்பர், 2017

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨11/11/17 !

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨11/11/17 !

பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார் விரைவில் மழை நிவாரணத்திற்கு மத்திய அரசின் உதவி தமிழகத்திற்கு கிடைக்கும் : தமிழக முதல்வர் பழனிசாமி.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ, விசாரணை ஆணையம் அல்லது வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் - திருவண்ணாமலையில் டிடிவி.தினகரன் பேட்டி.

தமிழகம், புதுச்சேரியில் 742 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் - உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நடவடிக்கை.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் 490 பேருந்துகள் ரூ.44.27 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன.அடகுவைக்கப்பட்ட அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள், பணிமனைகளை மீட்க வேண்டும் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

தமிழகத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரிசோதனை நடத்துகின்றனர். பண்ணை வீட்டில் பணம் பறிமுதல் செய்ததால், அது பதுக்கப்பட்ட பணம் என கூறமுடியாது - டிடிவி தினகரன்.

அரசை விட திமுக சிறப்பாக செயல்படுகிறது என ஸ்டாலின் கூறியது சிறந்த ஜோக் : அமைச்சர் செல்லூர் ராஜூ.

வாகன கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியது டெல்லி மாநில அரசு.

அரசு பேருந்துகளையும், பணிமனைகளையும் அடகு வைத்ததுபோல தமிழக அரசு தலைமைச் செயலகத்தையே மத்திய அரசுக்கு தெரியாமல் அடகு வைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது : முக.ஸ்டாலின்.

வருமான வரித்துறை சோதனையை பழிவாங்கும் நடவடிக்கை என கூறிய அரசியல் கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் .வருமான வரித்துறை சோதனையில் மீட்கப்படும் பணம் மக்களுக்கான பணம் - தமிழிசை பாஜக.

நான் காந்தியின் பேரன் போல பேசவில்லை நானும் சாதாரண மனிதன் தான் எங்கள் மீது குற்றம் சொல்லுபவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா ? : டிடிவி தினகரன்.

போகிற போக்கை பார்த்தால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் டயர்களையும், பயணிகளையும் கூட அடமானம் வைத்து விடுவார்களோ என்ற அவல நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது : முக.ஸ்டாலின்.

தமிழக அரசின் இலவச செட்-டாப் பாக்ஸ்களை விற்பனை செய்தால் கைது செய்யப்படுவார்கள் - தகவல் தொழில்துறை அமைச்சர் மணிகண்டன்.

மன்னார்குடியில் திவாகரனிடம் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் 747 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

திருவையாறு அருகே கோனேரிராஜபுரத்தில் வயலில் நடவுப்பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி கோகிலா என்ற பெண் உயிரிழப்பு.

பண மதிப்பிழப்பை விமர்சித்து நடிகர் சிம்பு பாடிய பாடல் : பாடலை கண்டித்து பாஜவினர் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1800 பேரை கொண்டு தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? சோதனைக்கு பயன்படுத்திய கார்கள் ஒரே தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது ஏன் ? - டிடிவி தினகரன்.

குஜராத் தேர்தலுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை : தம்பிதுரை எம்பி.

பருவமழை முடிந்தபின்னர் தான் முழுமையான பாதிப்புகள் குறித்து தெரியவரும் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

சேகர் ரெட்டியின் நண்பர்கள், அவரது டைரியில் உள்ளவர்களிடம் சோதனை நடைபெறவில்லை சேகர் ரெட்டியை உருவாக்கியவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறாதது ஏன் ? :
டிடிவி.தினகரன்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் செய்யப்பட்ட சம்பவம் : பணகுடி ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் ஆய்தபடைக்கு மாற்றப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி கபில் குமார் சராட்கர் உத்தரவு.

பட்டுக்கோட்டை அருகே கிணறு வெட்ட பள்ளம் தோண்டியபோது 12 ஐம்பொன்சிலை கண்டெடுப்பு.

ஜாஸ் சினிமாஸ் விவகாரம் : சத்யம் சினிமாஸிடம் வருமானவரித்துறை விளக்கம் கேட்பு.

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் நிகழ்ந்த விபத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்.

கோவை மதுக்கரையில் குளத்தில் தவறி விழுந்த மாமியாரை காப்பாற்ற முயன்ற மருமகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

ஆசிரியை மீது தாக்குதல் எதிரொலி யோகாவை மதத்துடன் இணைத்து பார்க்க வேண்டாம் : பாபாராம் தேவ் வேண்டுகோள்.

மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் திவாகரனின் கல்லூரியில் பெண் ஊழியரிடம் முக்கிய ஆவணங்களில் வருமான வரித்துறையினர் கையெழுத்து பெற்றனர்.

பாகிஸ்தானில் 23 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது - முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்.

சபரிமலை மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக நவ.15இல் நடை திறப்பதையொட்டி நவ.14 முதல் குமுளியில் இருந்து பம்பைக்கு கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நவம்பர் 16ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தமிழகத்திற்கு ரூ.40 கோடி மதிப்பிலான 20 அதிநவீன ரோந்து படகுகள் மத்திய அரசால் வழங்கப்படும் : தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் இன்று 4 பேர் உயிரிழப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக