சத்தமில்லாமல் நடந்த சாதனை-
உலகிலேயே உயரமான இடத்தில் சாலை அமைத்து
உயரமான இடத்திற்கு சென்றுள்ளது இந்தியா.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் மாகாண த்தில் உலகின் மிக உயரமான சாலை அமைக்கப்பட டுள்ளது. உமலிங்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை தரை மட்டத்தில் இருந்து 19,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
நப்ரா பள்ளதாக்கு பகுதியான இந்த இடம் லடாக் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலை இந்திய ராணுவத்திற்க்கு முக்கிய போக்குவரத்து சாலை யாகும்.இந்திய சீனா எல்லைப் பகுதியான இந்த
இடத்தில் இருந்து சீன வீரர்கள் நோக்கி கல் வீசி
யே தாக்க முடியும் என்றால் மோடி அரசு நாட்டின்
பாதுகாப்பு விசயத்தில் எவ்வளவு அக்கறை யோடு
செயல் படுகிறார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்
இதற்கு முன்பும் உலகின் உயரமான சாலை இதே
பகுதியில் தான் இருந்தது.18,380 அடி உயரத்தில் அமைந்துள்ள கார்டுங் லா கணவாய் ரோடு தான்
உலகின் உயரமான சாலையாக இருந்து வந்தது.
இப்பொழுது அதற்கும் மேல் 1000 அடி உயரத்தில்
ரோடு போடப்பட்டு ள்ளது.
இந்த சாலையை பிஆர்ஓ எனப்படும் இந்திய எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு இந்த சாலையை உருவாக்கி உள்ளது. 'ப்ராஜெக்ட் ஹிமான்க்' எனும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த சாலை 86 கி.மீ நீளம் கொண்டது. சிசும்லே மற்றும் டெம்சோக் எனும் இரண்டு கிராமங்களுக்கு இடையே வாகன போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு 1960 ல் அமைக்கப்பட்ட போதிலும்
மோடி ஆட்சி வந்த பிறகே வெளிச்சத்திற்கு வர
ஆரம்பித்தது. தினமும் நம்முடைய எல்லைப் பகுதி யில் ரோடு போடுவதறகாக இந்த அமைப்பினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறார்
கள்.
உலகத்தின் உயரமான சாலையான இந்த சிசும்லே
டூ டெம்சோக் சாலையை அமைக்க நம்முடைய ராணுவத்தினர் எவ்வளவு கட்டப்பட்டு ள்ளார்கள்
என்று தெரியுமா?
கோடை காலத்தில் இங்கு வெப்பநிலை மைனஸ் 10 முதல் 20 டிகிரி வரை இருக்கும். குளிர் காலத்தில் மைனஸ் 40 டிகிரி வரை சென்று விடும். இங்கு மற்ற இடங்களை காட்டிலும் ஆக்சிஜன் அளவ வேறு நார்மல் லெவலில் இருந்து பாதியாக 50% தான் இருக்கிறது
இதனால் இங்கு வேலை செய்பவர்கள் 10 நிமிடத் திற்கு ஒரு முறை சுவாச காற்றிற்காக கீழே செல்ல வேண்டி இருந்தது. மேலும், இங்கு மெஷின் மற்றும் மனிதனின் செயலாற்றல் 50%-மாக குறைந்து விடுமாம்.
மெஷின்கள் அடிக்கடி பழுதாகிவிடுவதால் அவற்றை சரி செய்வதற்கும் பொருட்செலவு மற்றும் காலச்செல வு அதிகமாகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணி யை முடிக்க வேண்டும் என்ற வெறியுடன் இரவு பகல் பாராமல் உழைத்து இந்த ரோட்டை உருவாக்கி யுள்ளார்கள்.
சாதாரணமான பகுதியிலேயே ரோடு போடாமல்
பராக்கு பார்த்துக் கொண்டிருக்கும் மாநில அரசுக்கு
மத்தியில் 19300 அடி உயரத்தில் ரோடு போட்டு
உலகின் உயரமான சாலை இந்தியாவில் இருக்கி றது என்று உலக வரலாற்றில் பதிய வைத்துள்ள மோடி அரசுக்கு பாராட்டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக