திங்கள், 20 நவம்பர், 2017

செய்திகள்@20/11/17

செய்திகள்@20/11/17

உணவகங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட அன்றாட உபயோகப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு சிறப்பு சலுகையாக வீட்டு உபயோகப் பொருட்களான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், வாக்யும் கிளீனர், ஏசி, வீட்டு உபயோகத்திற்கான டிஷ் வாஷர்கள் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, இவை ஆடம்பரப் பொருட்களுக்கான 28 சதவீத வரிக்குட்பட்டுள்ள நிலையில், அவை 18 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கிரைண்டர் போன்ற பல்வேறு மின்னணு பொருட்கள் மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆதாரமின்றி குற்றச்சாட்டு கூறும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியர்கள் பதுக்கிய கறுப்புபண விபரம்: உடனே தருகிறது சுவிஸ் வங்கி

சோனியா தலைமையில் காங்., உயர்மட்டக் குழு கூட்டம் துவங்கியது

ஆதார் அடையாள அட்டையின் ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதிமுறையை மீறி 210 இணைய தளங்களில் வெளியானதாக தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசம்: போலீஸ் நிலையத்தில் மேடை அமைத்து ஆபாச நடனம் - அதிகாரி ‘சஸ்பெண்டு’

பத்மாவதி படத்திற்கு தாவூத் இப்ராகிம் நிதி: ராஜ்புத் அமைப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு

பள்ளிபாளையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தி அ.தி.மு. பெண் நிர்வாகி வீட்டு முன்பு தீக்குளித்த தி.மு.க. முன்னாள் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எண்ணூர் கழிமுகப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அவற்றில் வி‌ஷத் தன்மை இருக்கிறது என்று பிரபல சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறியிருக்கிறார்

உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி தொல்லியல் துறை பராமரிக்கும் புராதான சின்னங்களை வரும் 25-ம் தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.-உலக பாரம்பரிய வாரத்தை ஒட்டி மாமல்லபுரம் சிற்பங்களை இலவசமாக பார்க்கலாம்

தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிடவும், உத்தரவிடவும் கவர்னருக்கு உரிமை இல்லை: நாராயணசாமி

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5½ கிலோ தங்கம் பறிமுதல்

போயஸ் கார்டனை கோவில் என்பது தமிழர்களுக்கு அவமானம்: இளங்கோவன்

தேனி : 10 ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

ராமேஸ்வரம் அருகே 5 கிலோ தங்கம் பறிமுதல்

பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்தக்கூடாது: ராமதாஸ்

கேரளா : கண்ணூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு

சபரிமலையில் இனி விஐபி தரிசனம் கிடையாது : தேவசம் போர்டு

ஆதார் பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்ய வங்கிகளுக்கு அனுமதி

மகாராஷ்டிராவில் மந்திரி ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் கொலைக்கு எதிரான பொது வேலை நிறுத்த அறிவிப்பினால் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வர்த்தக மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளன.

வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பதாக நாசா அனுப்பிய ஜூனோ எனப்படும் விண்கலம் கண்டறிந்துள்ளது.

மதிய செய்திகள்@20/11/17

1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்; முதல் அமைச்சர் வெளியிட்டார்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

2012ல் பட்டா வழங்கியதில் முறைகேடு: சகாயம், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்

நாளை ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை

தூத்துக்குடி: புதுர் பாண்டியபுரத்தில் ஜாமினில் வந்த 2 பேர் கொலை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16ல் தேர்தல்; காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

குஜராத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டி

நோ பார்க்கிங் புகார் அளித்தால் 10% கமிஷன் ; நிதின் கட்காரி

தமிழக கவர்னர் மாளிகை சுத்த சைவமாக மாற்றம்: பன்வாரிலால் அதிரடி நடவடிக்கை

சசிகலா, உறவினர்கள் வாங்கி குவித்த பினாமி சொத்து - போலி நிறுவனங்கள் குறித்து ஆய்வு

தமிழக அரசு உரிமைகளை அடகு வைத்து விட்டது: சீமான்

சென்னை: போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் தற்கொலை முயற்சி

மேலூர் : திமுக போராட்டத்தில் கலந்து கொண்ட தினகரன் அணியினர்

ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு பின் உணவகங்களில் சாப்பிடுவதற்கு பில் வசூல் செய்வதை தமிழிசை சவுந்தரராஜன் இட்லி சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தி.மு.க.வில் படிப்படியாகத்தான் வளர முடியும் என நெல்லையில் நடந்த திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

திராவிட கொள்கை ஏந்தி வருங்கால தலைமுறையை வார்ப்பிப்போம்: வைகோ

கமலின் ட்வீட்களை புரிந்துகொள்ள கோனார் உரை தேவை: தமிழிசை

விதிமுறைகளின் படியே புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் நியமனம் - ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்

குஜராத் தேர்தல் : 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.,

கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சத்தீஸ்வர் புஜாரா ஐந்து நாட்களும் பேட்டிங் செய்ததால், 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨20/11/17 !

தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத் திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்டத்த வரைவை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

மாநில அரசை மிரட்டி தமிழகத்தில் காலுன்ற பாஜக திட்டம்.பாஜகவால் தமிழகத்தில் காலை மட்டுமல்ல, கையைக் கூட ஊன்ற முடியாது - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு என புகார் - ஆட்சியர்கள் சகாயம் உள்ளிட்ட 3 பேர், 2 வாரத்திற்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்.

அதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன் : பாமக நிறுவனர் ராமதாஸ்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என ஷியா வக்ஃபு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் லக்னோவில் மசூதி கட்டவும் ஷியா வக்ஃபு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம்.

திமுக தொடர்ந்த வழக்குகளால்தான் ஆர்கே.நகர் தேர்தலை நடத்த முடியவில்லை - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு.

பத்மாவதி திரைப்படத்திற்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் நிதியுதவி அளித்துள்ளதாக ராஜபுத்திர கர்னி சேனா தலைவர் லோகேந்திர சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி விஐபி தரிசனம் கிடையாது பத்மகுமார் அறிவிப்பு -தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார்.

பத்மாவதி படத்துக்கு தடை விதிக்கக் கோரி மத்திய பிரதேச முதலமைச்சரிடம் ராஜபுத்திர சமூகத்தினர் மனு.

போயஸ் இல்லத்தில் சோதனை நடத்த துணையாய் இருந்தவர்களை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது - அமைச்சர் செல்லூர் ராஜு.

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பேரணியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

முட்டை விலை அதிகமாகிவிட்டது என காரணம் காட்டி சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முயற்சி - முக.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

குஜராத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கற்பனை உலகில் வாழும் கமல் ட்விட்டரில் இருந்து வெளிவர வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது -அமைச்சர் ஜெயகுமார்.

குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை - நடிகை திரிஷா.

அரசு தவறு செய்தால் அதை ஜனநாயக ரீதியில் சுட்டிக்காட்டலாம்.நடிகர் கமல் கூறுவது போல் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் நேரடியாக புகார் அளிக்கலாம் - அமைச்சர் ஜெயக்குமார்.

கமல் கருத்தைப் புரிந்து கொள்ள கோனார் தமிழ் உரை தேவைப்படுகிறது - தமிழிசை.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்து, பின் அணி மாறிய ஜக்கையன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளக்கம் அளிக்க அவகாசம் கோரியும் வழங்காமல் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டனர் - தினகரன் ஆதரவு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 16ல் நடைபெறவுள்ளது டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு.

பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் - அகில இந்திய ஷத்ரிய மகாசபா.

மதுரை மேலூரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலூர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5 ஆயிரம் விவசாயிகள் சாலை மறியல்.

அதிமுகவை அழிப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கையே வருமானவரி சோதனை. -டிடிவி தினகரன்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, கிரிமினல்களை என்கவுன்டரில் சுட்டுக் கொல்வோம். குற்றவாளிகளின் வாழ்க்கை இனி கடினமானதாக இருக்கும் - உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

கடலோர காவல்படை ராமேஸ்வரம் மீனவர்களை சுடவில்லை என அமைச்சர் கூறியது கண்டிக்கத்தக்கது - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

குஜராத் தேர்தலுக்கான 77 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.

விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமான வரித் துறையில் தனி அதிகாரிகள் குழு அமைப்பு : பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசியையும் விசாரிக்க முடிவு.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி அதிமுக பிரமுகர் கல்யாணி 11 லட்சம் மோசடி செய்ததாக தீக்குளித்த தங்கராசு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, ஆன் லைனில் பதியப்படும், கருத்துகளை அரசு பரிசீலிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மடியில் கனம் இருப்பதாலேயே வருமான வரி சோதனை குறித்து டிடிவி.தினகரன் பயப்படுவதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது - நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு.

சென்னையில் விதிகளை மீறி ரூ.174.5 கோடியை வெளிநாட்டிற்கு அனுப்பியதாக 6 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு.

பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது.

மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக தாலுகா முழுவதும் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த முகமது உமர் சித்திக் என்ற 8 வயது சிறுவன் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு.

ஈரோடு செம்மம்பாளையத்தில் வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி பழனிசாமி, அவரது மகன் துரைசாமி ஆகியோரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டியதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

ரூ.175 கோடி மோசடி செய்த சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு.

புதுச்சேரியில் இலவச திட்டங்களுக்குப்பதிலாக மக்களுக்கு சிறுகடன்களை வழங்கி சுயமுன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

உலக பாரம்பரிய வாரத்தையொட்டி தொல்லியல் துறை பராமரிக்கும் புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்; மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை வரும் 25 ஆம் தேதி வரை இலவசமாக மக்கள் பார்க்கலாம்.

பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவு.

ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி கழுத்தறுத்துக் கொலை.

தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரத்தில் முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டிக்கொலை : இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இருவரும் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற போது கொலை செய்யப்பட்டனர்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக