புதன், 29 நவம்பர், 2017

சோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி... ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே! Flashback


சோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி... ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே! Flashback


*ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த பெண் குழந்தை நானே என பெங்களூரு அம்ருதா நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார்.* *ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதாவும், ஆம் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது; 1980-ல் ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்க்கும் போது நான் உடனிருந்தேன் என அதிர குண்டை வீசியுள்ளார்.*
*அம்ருதா யார் என்பது பிறகு இருக்கட்டும். ஆனால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவு என்பது உலகம் அறிந்ததுதான். புதிதாக அதில் ஏதும் இல்லை.*
*ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுவுக்கும் இடையேயான உறவு என்பதை முதலில் உறுதி செய்வதாக சுட்டிக்காட்டப்படுவது 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் "மனம் திறந்து பேசுகிறேன்" என்கிற தொடர்தான்.*

*அத்தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு.*

*இது பற்றி 1984-ம் ஆண்டு தி வீக் இதழில் மூத்த பத்திரிகையாளர் பகவான்தாஸ் எழுதியிருப்பதாவது: குமுதம் இதழில் தமது வாழ்க்கை வரலாற்றை ஜெயலலிதா பகிர்ந்து கொள்ள தொடங்கியது பலரது புருவத்தை உயர்த்த வைத்தது. ஜெயலலிதாவின் தொடர் குறித்து வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அந்த விளம்பரத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஒன்றும் சீதையோ அல்லது சாவித்திரியோ அல்ல. என்னுடைய வாழ்க்கையில் நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். அது பற்றி அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நீங்கள் படித்து பார்த்து முடிவுக்கு வாருங்கள்" என்பதுதான் ஜெயலலிதாவின் விளம்பர வாய்ஸ். இவ்வாறு பகவான்தாஸ் பதிவு செய்துள்ளார்.*



*1998-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் குமுதம் தொடர், சோபன்பாபு பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்த வலம்புரிஜானை மேற்கோள்காட்டி மற்றொரு தகவலையும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் பதிவு செய்துள்ளார். அதில், 1970களில் எம்ஜிஆர் ஜெயலலிதா அல்லாமல் வேறு ஹீரோயின்களை தேர்வு செய்தார். ஜெயலலிதாவும் அப்போது தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் நட்பாக இருந்தார். பின்னர் 1981-ல் தான் மீண்டும் எம்ஜிஆருடன் இணைந்தார். ஜெயலலிதாவை எம்ஜிஆர் தொடர்ந்து வேவு பார்த்து வந்தார் என பதிவு செய்திருக்கிறார்.*


*1999-ம் ஆண்டு இந்தியா டுடேயில் மூத்த பத்திரிகையாளர் வாசந்தியும் ஜெயலலிதா- சோபன் பாபு உறவு பற்றி சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி முரசொலி நாளேடானது 1978-ல் குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி என ஒன்றை பிரசுரம் செய்தது.*

*1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு - 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.* *ஜெயலலிதா! அதற்கு முன்பு - அவர் சில வருட காலம் - ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த - சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்! சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது - ‘குமுதம்' வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, " நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்" - என்று பதிலளித்தார். அப்படியானால் - " உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?"- என்று ‘குமுதம்' நிருபர் கேட்டார்.*


*'திருமணம் செய்து கொண்டால் தான் கணவன் - மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.* *நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்" - என்றார் ஜெயலலிதா! 'குமுதம்' நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன? " சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி - மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?" இது கேள்வி! ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! " அது தெரிந்திருப்பதால்தான் - அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் - நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்" கடைசியாக ஒரு கேள்வி - " இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?" ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் " கோயிங் ஸ்டெடி!" - குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி' என்று தலைப்பிட்டு... சோபன்பாபு - ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது - பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா' காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.*

*ஜெயலலிதா - சோபன்பாபுவுடன் மனைவி - கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது - வீணை வாசித்தது - உணவு பரிமாறியது,* *நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும்.*
*இவ்வாறு முரசொலி பதிவு செய்திருந்தது.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக