செவ்வாய், 7 நவம்பர், 2017

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨07/11/17 !

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨07/11/17 !

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கோவையில்
விசாரணையை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.

சென்னை பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி பாப்பான்சத்திரத்தைச் சேர்ந்த மிராஜ் என்ற சிறுவன் உயிரிழப்பு.

2ஜி வழக்கில் தீர்ப்பு இன்னும் உருவாகவில்லை தீர்ப்பு தேதியை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திபைப்பு - சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷைனி.

சிவாஜி சிலையின் கல்வெட்டில் கருணாநிதி பெயர் அகற்றப்பட்டது பற்றி தமிழக அரசு 2 வாரத்தில் பதில் தர வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்.

கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் : வானிலை மையம்.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்.

உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நவ 10ல் மீண்டும் ஆஜராக மாநில தேர்தல் ஆணையர் ஃபெரோஸ்கானுக்கு உத்தரவு - உயர் நீதிமன்றம்.

மனிதாபிமான அடிப்படையில் தனது தந்தை மற்றும் தாயை சந்தித்து உடல் நலம் விசாரித்த பிரதமர் மோடிக்கு நன்றி.பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் -முக.அழகிரி.

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் வரவேற்பேன் அரசு நிதியானது மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை அரசியல்வாதிகளுக்கே ஒதுக்கப்படுகிறது : தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மழைநீர் வடிகாலுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.19 கோடி என்ன ஆனது ? நீர் நிலைகளை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை - வரதராஜபுரத்தில் திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின்.

திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் மோடி சந்தித்ததற்கும் , 2ஜி வழக்குக்கும் தொடர்பு இல்லை - சுப்பிரமணியன்சாமி.

முன்னாள் அமைச்சர் கேஎன்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.

நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு பயன்படுத்தப்படவில்லை.
அமைச்சர்கள் தற்போது மாறி மாறி பேசி வருகிறார்கள், இதனால் தான் ஜெயலலிதா அமைச்சர்களை பேசாமல் வைத்திருந்தார் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

வெள்ளையனே வெளியேறு இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றவர் சுமார் 70 தமிழ்க் கட்டுரை, பாட நூல்களை எழுதிய தமிழ் அறிஞர் மா.நன்னன் காலமானார்.

தமிழ்ச் சமூகத்தின் அரிய பொக்கிக்ஷமாகத் திகழ்ந்த ஐயா நன்னன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - டிடிவி.தினகரன்.

மருத்துவ முகாம்களுக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. மருத்துவ முகாமிற்காக அரசியலை பயன்படுத்தி கொள்வோம் - திருவள்ளூரில் ஆவடி நகரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நடிகர் கமல் பேட்டி.

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டார்.

மயிலாப்பூரில் இருக்கும் அறிவு ஜீவிகளின் ஆலோசனையின் படி தான் பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் - சுப்பிரமணியன் சுவாமி.

கனமழை போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளிக்கரணை நடைபெற இருந்த நடிகர் கமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான நடவடிக்கை நியாயமானதே - பாஜக எச்.ராஜா.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சர்ச்சில் புகுந்து விமானப்படை வீரர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் பலி.

ரியாத் : ஊழல் குற்றச்சாட்டில் கைதான சவுதி இளவரசர்கள், அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே வங்கி ஏஜெண்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி மீது வழக்குப்பதிவு.

தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் நெல்லை குற்றால மெயின் அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை விதிப்பு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்.

பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட அதிமுக பிரமுகரின் இறால் பண்ணை அகற்றம்.

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு.

சென்னை: தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தில் 186 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அரசு நோட்டீஸ்.

ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை - திமுக முன்னாள் அமைச்சர் கேஎன்.நேரு.

லட்சுமி பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி, அத்தியாவசியப் பொருட்கள் விலை கட்டுக்குள் உள்ளது.தமிழகத்தில் வெங்காயம் வரத்து குறைவாக உள்ளது தேவை ஏற்படும் பட்சத்தில் நகரும் பண்ணை பசுமை கடைகள் அமைக்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜூ.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறை விழுந்தது மலை ரயில் நிறுத்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருவதால் 21 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

டெல்லி ஏடிஎம் இயந்திரத்தில் போலியான ரூ.2,000 நோட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பாதுகாப்பு குறைவால் இனி ஒரு மான் இறந்தால் கூட ஐஐடி நிர்வாகம் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் : பசுமை தீர்ப்பாயம்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக