புதன், 8 நவம்பர், 2017

இத்தனை மக்களை துன்பத்தில் ஆழ்த்தி, பணமதிப்பிலப்பின் மூலம் பெற்ற நன்மைகள் என்ன?



இத்தனை மக்களை துன்பத்தில் ஆழ்த்தி, பணமதிப்பிலப்பின் மூலம் பெற்ற நன்மைகள் என்ன?

1) RK நகர் தேர்தலில் 89 கோடி விநியோக திட்டம் போட்டதை தடுக்க முடிந்ததா?

2) சேகர் ரெட்டியிடம் இருந்து பிடிபட்ட பணம் செல்லாது என்று அறிவிக்க முடிந்ததா?

3) குஜராத் கூட்டுறவு வங்கியில் மாற்றிய பணத்தின் அளவு என்ன அல்லது அதன் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?

4) கேரள பிஜேபி பிரமுகரிடன் எடுத்த புதிய பணம் இன்று என்ன ஆனது?

5) அந்த 50 நாட்களுக்குள், ரெட்டி சகோதரர் நடத்திய 500 கோடி ரூபாய் செலவில் திருமணம். அது ஆராய பட்டதா?

6) ஜன்தான் கணக்குகளில் வரவு வைக்க பட்ட பணம் ஆராய பட்டதா?

இப்படி கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல், இன்னமும் மக்களை வாட்டி, அதில் பிஜேபியினர் கூடுதலாக மக்களை குற்றவாளி ஆக்குகின்றனர்.

2 ஆண்டுகளில் தன்னுடைய சாதனை என்னவென்று கூறமுடியாமல், மக்களை முட்டாளாக்கும் திட்டம் தான் இந்த நடவடிக்கை.

பனாமா பேப்பர், இப்போ ஏதோ பாரடைஸ் பேப்பர் போன்ற செவி வழி செய்திகள் தான் உள்ளது. நடவடிக்கை என்னவென்று கூற முடியவில்லை.

அனைத்து பணமும் வங்கிக்கு வந்து விட்டது என்றால், கருப்பு பணம், கள்ள பணம் எங்கே?

வரிசையில் நிற்கும் பொழுது வரிசையை தவறவிட்ட முதியவரின் அழுகையும், பணம் மாற்ற முடியாமல் அரை நிர்வாணமாக ஓடிய பெண், மாரடைப்பால் காலமானவர்கள், வேலையை இழந்தவர்கள், உணவில்லாமல் தூங்கியவர்கள், போன்று பலர் இன்னலை சந்தித்தார்கள்.

அது தான் மோடியின் பணமதிப்பிலப்பு சாதனை.

இந்த சாதனை செய்ய ஒரு தயிரியமான பிரதமரால் தான் முடியுமென்று, சப்பை கட்டும் பிஜேபி இரண்டாம் நிலை தலைவர்கள். அவர்களுக்கு பதவி, மக்களுக்கு பட்டை நாமம்.

மக்கள் பட்ட துன்பங்களை பார்த்த நம் கண்கள் பணிக்கும், மோடிக்கு அந்த கண்ணீர் துளி இனிக்கும்.

Nov 8

#DemonitizationBlackDay
ஆணியை புடுங்கிய நாள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக