செவ்வாய், 28 நவம்பர், 2017

2017 நவ.26: மன் கி பாத் நிகழ்சியில் பிரதமர் மோடி உரை ..



2017 நவ.26: மன் கி பாத் நிகழ்சியில் பிரதமர் மோடி உரை ...

*பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரை 26/11/17- அன்று!*

*நவம்பர் 26 : மும்பை தாக்குதல் தினமான இன்று பயங்கரவாதத்தை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம்.*

*உலகின் சிறந்த கடற்படையாக சோழர் கடற்படை திகழ்ந்தது என இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.*

*மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக ரேடியோவில் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான இன்று காலை 11 மணிக்கு மோடி உரையாற்றினார்.*

*மோடியின் மன் கி பாத் உரையை ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் மற்றும் நரேந்திர மோடி மொபைல் ஆப்பில் மக்கள் நேரடியாக கேட்க வழி வகை செய்யப்பட்டது*

*இது தவிர தூர்தர்ஷின் பிராந்திய மொழிகளிலும் மோடியின் உரை ஒலிபரப்பப்பட்டது. இதனிடையே மன் கி பாத் நிகழ்ச்சியை தேநீர் அருந்தியபடி பிஜேபி தொண்டர்கள் செய்த ஏற்பாட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்திருந்தார்.*

*இந்நிலையில் நவம்பர் 26/2017 மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:*

*அரசியலமைப்பு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் நினைவு கூற வேண்டும். சர்தார் வல்லபாய் படேலும், இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார். அரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீனமானவர்களை காக்கிறது.*

*கடந்த 9 வருடங்களுக்கு முன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இன்றைய நாளில் தான் நடந்தது. உயிரிழந்த நமது ராணுவ வீரர்களை நாடு நினைவு கூர்கிறது.*

*அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். நாம் பயங்கரவாதத்தை வெற்றி பெற விட மாட்டோம்*

*நமது நதிகளும், கடலும், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உலக நாடுகளுக்கு நுழைவு வாயிலாக உள்ளன. நமது நாட்டுக்கு கடலுடன் உடைக்க முடியாத உறவு உள்ளது. பெரும்பாலான கடற்படையில் பெண்களை தாமதமாக அனுமதித்தன என்பதை சிலர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், 8 அல்லது 9 நூறாண்டுகளுக்கு முன்பு சோழர்களின் கடற்படை, உலகின் சிறந்த கடற்படையாக செயல்பட்டது. அதில், அதிகமான பெண்கள் முக்கிய பங்காற்றினர்.*

*கடற்படை பற்றி பேசும்போது சத்ரபதி சிவாஜியை மறக்க முடியாது. மராத்தா கடற்படையில், பெரிய மற்றும் சிறிய கப்பல்கள் இருந்தன. அவரின் கடற்படை எதிரிகளை தாக்குவதுடன், அவர்களின் தாக்குதலை முறியடித்தது.*

*இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக