வெள்ளி, 17 நவம்பர், 2017

🛑பரபரப்பு🛑செய்திகள்🛑17/11/17 !

🛑பரபரப்பு🛑செய்திகள்🛑17/11/17 !

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை.

3பேர் கொண்ட குழு சோதனை செய்கிறது ஜெயலலிதா அவர்களின் தனி உதவியாளர் பூங்குன்ரம் அவர்களின் தனி அறையில் உயர்நீதிமன்றம் அனுமதி பெற்று சோதனை.

தமிழக அரசு மீது நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை, ஸ்டாலின் காப்பியடித்து கூறி வருகிறார் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆர்கே.நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்.நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு ஆர்கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் : தேர்தல் ஆணையம்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு, தமிழ்நாட்டில் வீர வணக்கம் செலுத்தும் விழாவை அரசு அனுமதிப்பதா ? - திக. தலைவர் கி.வீரமணி கண்டனம்.

கட்சி தொடங்குவதற்கு முன்பணம் வாங்கினால் சட்ட விரோதமாகிவிடும் ரூ.30 கோடியை திருப்பி கொடுக்கிறார் கமல்ஹாசன்.

ஐக்கிய ஜனதாதள கட்சியின் வில் அம்பு சின்னத்தை நிதிஷ்குமார் அணியே பயன்படுத்தலாம் - தேர்தல் ஆணையம்.

மத்திய அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுவது ஏற்புடையது அல்ல - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை.

பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கலாம் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் : டிஎன்பிஎஸ்சி.

ஆய்வுசெய்ய ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் திட்டங்கள் குறித்த கோப்புகள் அனுமதிக்காக வருவது ஏன் ? - கிரண்பேடி.

தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை வரவேற்பதாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகலா கணவர் நடராஜன் உடல் பரிசோதனைக்காக அனுமதி.

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 223 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை, ஐதராபாத், செகந்தராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்.

தூத்துக்குடியில் பிரவீன்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.


தமிழகத்தில் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் 2 புதிய காற்றழுத்த தாழ்வுநிலை - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக