வெள்ளி, 10 நவம்பர், 2017

கோபாலபுரம் இந்தியாவின் கலங்கரை விளக்கு !



கோபாலபுரம்  இந்தியாவின் கலங்கரை விளக்கு !

அது சாதாரண இல்லமல்ல இந்தியாவின் 7 குடியரசு தலைவர்களையும் 6 பிரதமர்களை அந்த இல்லம் தான் தேர்ந்தெடுத்தது .

 ! இந்தியா வழிதவறி சென்ற போது முதல் கண்டன குரல் ஒலித்த இல்லமும் அது தான் ! இந்தியாவின் அரசியல் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து
இந்தியாவின் வழிகாட்டியாக  செயல்பட்ட இல்லமும் அந்த  கோபாலபுரம் தான்

அந்த இல்லத்திலிருந்து தான் ஒரு சூரியன் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் தந்தது .

அந்த இல்லத்திற்கு வராத தலைவர்கள் இல்லை ! மத தலைவர்கள் இல்லை !

இந்து மதத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருந்த புட்டபர்த்தி சாய்பாபா முதல் இந்தியாவின் குடியரசு தலைவர்கள் வரை அந்த இல்லத்தை நோக்கி ஓடி வந்துள்ளனர் .

1980 ல் தன் அரசியல் வாழ்வு முடிந்து விடுமோ என்ற பயத்தில் இந்திராகாந்தி தஞ்சம் அடைந்ததும் அந்த இல்லம் தான் .

அவருடைய மருமகள் 2004 ல் வாழ்வு கேட்டு ஓடி வந்ததும் அந்த இல்லத்திற்கு  தான் .

இன்று அரசியல் எதிரியாக இருந்தாலும்

இராவணனிடம் லக்சுமன் ஆசி வாங்கினானே அது போல ! எமனே பயந்து ஒதுங்கி நின்று   வீ்ழ்த்த முடியாத சூரியனிடம் ஆசி வாங்க வருகிறார் மோடி !

பேசாமல் அமைதியாக புன்சிரிப்பை மட்டும் அந்த சூரியன் வெளியிடும் ! அந்த புன்சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்களை நாளை தினசரிகள் வெளியிடும் !

தலைப்பு செய்தியாக மட்டுமல்ல அது கலங்கரை விளக்காகவும் மாறும் ஆம் கோபாலபுரம் இந்தியாவின் கலங்கரை விளக்கு !

கருணாநிதி - நேரு
கருணாநிதி - சாஸ்திரி
கருணாநிதி - இந்திரா
கருணாநிதி -மொரார்ஜி
கருணாநிதி - சரண் சிங்
கருணாநிதி - ராஜீவ்
கருணாநிதி - விபி சிங்
கருணாநிதி -சந்திரசேகர்
கருணாநிதி - நரசிம்மராவ்
கருணாநிதி - தேவே கெளடா
கருணாநிதி - ஐ.கே.குஜ்ரால்
கருணாநிதி - வாஜ்பாய்
கருணாநிதி - மன்மோகன் சிங்
கருணாநிதி_நரேந்திரா மோடி

வர்லாம் வர்லாம் வா வேற யாராவது இருக்கிங்களா

I am waiting ராகுல் காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக