திங்கள், 6 நவம்பர், 2017

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨06/11/17 !

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨06/11/17 !

நாட்டின் நன்மைக்காகவே நாளிதழ்கள், ஊடகங்கள் செயல்படுகின்றன.நாட்டின் நான்காவது தூணாக திகழ்கிறது பத்திரிக்கைத்துறை - பிரதமர் மோடி.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு : தலைமை நீதிபதி அமர்வு 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு.திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கும் அன்றே விசாரிக்கப்படுகிறது.

2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு பொதுமக்கள் 04428513599 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு - இந்திய தேர்தல் ஆணையம்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக நவ.10-ல் முடிவு வெளிவர வாய்ப்பில்லை - டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்.

சென்னையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு திமுக ஆட்சியில் தான் பட்டா வழங்கப்பட்டது - அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் தான் தண்ணீர் தேங்கியுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ.

இரட்டை இலை விவகாரம் : டிடிவி தினகரன் தரப்பு வாதம் இன்று முடிவு பெற்றது எங்கள் தரப்பு வாதத்தை நாங்கள் 8-ம் தேதி நடைபெறும் விசாரணையின் போது முடித்து விடுவோம் - அமைச்சர் சிவி.சண்முகம்.

நீர்நிலைகள் தூர்வாரியது குறித்து அரசு இதுவரை எந்தவொரு வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை.எங்கே கமிஷன் வாங்கலாம் என்பதிலேயே அமைச்சர்கள் குறியாக உள்ளனர் - முக. ஸ்டாலின்.

கந்துவட்டி கொடுமை குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மழைக்கால பணிகள் முடங்கி கிடக்கின்றன
பொதுப்பணித்துறையும் உள்ளாட்சித்துறையும் செயலற்றுக்கிடக்கிறது - மு.க.ஸ்டாலின்

இந்தியாவை புதிய யுகத்திற்கு பிரதமர் மோடி கொண்டு செல்வார் : முதலமைச்சர் பழனிசாமி.

சென்னையில் தினத்தந்தி நாளிதழின் பவளவிழா மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி நவ. 13 வரை பதில் தர அவகாசம் அளித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.

முரசொலி பவளவிழா மலரை பரிசாக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார்.

ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டத்தை எதிர்த்து பீட்டா தொடர்ந்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகபட்டினம், திருவாரூரில் 8-ம் தேதி திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.

சவுதி அரேபியா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு இளவரசர் அரசு அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு.

சென்னை கொடுங்கையூரில் மின் இணைப்பு பெட்டியால் விபத்து ஏற்படவில்லை மின்வயர் மழைநீரில் மூழ்கியதால் தான் விபத்து நேர்ந்தது - அமைச்சர் தங்கமணி.

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமை செயலர் உள்பட 4 பேர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே நெய்வாசலில் உள்ள சிவன் கோயில் குளத்தில் முதலை : நாளை காலை முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி.

கார்ட்டூனிஸ்ட் பாலா மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரிக்கை வைத்தும் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

2016-ல் சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வழக்கு : 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

வெளிநாடு செல்ல அனுமதி கோரி தொடர்ந்த வழக்கு : கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான விசாரணை அறிக்கையை வரும் 9-ம் தேதி தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் இடைவெளி விட்டு மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக