புதன், 22 நவம்பர், 2017

பரபரப்பு🛑செய்திகள்🛑22/11/17 !

பரபரப்பு🛑செய்திகள்🛑22/11/17 !

புதுடெல்லி : இந்தியாவில் டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால் பொதுமக்கள் ஆதரவுடன் திமுக போராட்டம் : முக.ஸ்டாலின்.

அன்புச்செழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யார் வந்தாலும் விட மாட்டோம் - நடிகர் விஷால்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளேன்.ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் - ஜெ.தீபா.

திரைத்துறையினரும், முதலீட்டாளர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம். கழுத்தை இறுக்குவதை தவிர்த்து கைகோர்த்து செல்வது நல்லது - நடிகர் சங்கம்.

அரசியல் களத்தில் இறங்க வேண்டியதற்கு நல்விடியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த்.

”நான் கடவுள்” நேரத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனால் நடிகர் அஜித்குமாரும் மிரட்டப்பட்டவர்.தமிழ்நாட்டின் பாதிப் பணம் வைத்திருக்கும் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு செய்யவும் - இயக்குநர் சுசீந்திரன்.

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவது உறுதி - விசிறி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு.

கந்து வட்டி புகாரை மட்டுமே அடிப்படையாக வைத்து குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது டிஜிபிக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி : பொன்.ராதாகிருஷ்ணன்.

மத்திய அரசிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யாரும் தமிழக அரசுக்கு பாடம் நடத்த வேண்டாம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை சுகோய் போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவியது இந்தியா.

நடிகர் அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது; அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே எனது நோக்கம் - இயக்குநர் சுசீந்திரன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலை தலையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்.தூத்துக்குடி மாநகராட்சியில் விரிவாக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலைப்பணிகள் தொடங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

கந்துவட்டி விவகாரத்தில்பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வரவேண்டும்; அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்.

ஆர்கே.நகர் தேர்தலில் டிடிவி.தினகரன் மீண்டும் போட்டியிடுவார் : தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தன்னையும் இணைத்து கொள்ள வேண்டிவிசாரணை ஆணையத்தில் டிராபிக் ராமசாமி மனு.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் மத பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் : ஹெச்.ராஜா.

திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடருவேன் : சைதை துரைசாமி ஆவேசம்.

ஆர்கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய டெல்லி செல்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

ஆர்கே.நகர் தொகுதி போல் அனைத்து தொகுதியிலும் போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை தேவை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன்
அரசு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிக வாபஸ்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்த நித்தியானந்தா பாலியல் வீடியோவில் இருப்பது அவர் தான் உறுதி செய்தது டெல்லி தடயவியல் துறை.

சத்தியபாமா பல்கலைக்கழக மாணவி தற்கொலை : தேர்வில் காப்பி அடிக்கும்போது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், சக மாணவர்கள் முன்னால் நிர்வாகத்தினர் அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலை.

நித்யானந்தா - ரஞ்சிதா தொடர்பான காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை அல்ல கர்நாடக மாநில காவல்துறைக்கு டெல்லி தடயவியல் ஆய்வகம் அறிக்கை.

அடுத்த 5ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து டீசல் ரயில் என்ஜின்களும் மின்சார என்ஜின்களாக மாற்றப்படும் - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்.

அசாம் மாநிலத்தில் அதிவேக ரயில் மோதியதில் 2 ஆசிய யானைகள் பரிதாபமாக உயிரிழப்பு.

ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது என்பது ஏமாற்று வேலை.️ஜிஎஸ்டி வரியை அழியோடு ஒழிக்க வேண்டும் என்பதே வணிகர் சங்க பேரவையின் நோக்கம் - தமிழ்நாடு வணிகர் சங்கபேரவை தலைவர் வெள்ளையன்.

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்ட கடலோர கிராமங்களில், மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் - தமிழக அரசு.

கோவையின் அடையாளமாக ஈஷாவின் தியான லிங்கத்தை முன்னிறுத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து ரயில் பெயர்ப்பலகையில் கோவை ரயில் சந்திப்பு இலச்சினையை பொறித்தது தெற்கு ரயில்வே.

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், வட, தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.️சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இரவு நேரங்களில் இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக