மாலையில் இருந்து விடியவிடிய பலத்த மழை: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை..
* அனைத்து சாலைகளிலும் நீர் சூழ்ந்தது
* போக்குவரத்து அடியோடு முடங்கியது
* புறநகர் ரயில் சேவை கடும் பாதிப்பு
* பல இடங்களில் மக்கள் வெளியேற்றம்
* மழையின் இடையே இடியும், மின்னலும் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
* சில நேரங்களில் இடி கடுமையாக இருக்கும். அதே நேரத்தில் சில இடங்களி–்ல் அதிக ஓல்டேஜ் கொண்ட மின்னல் தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
* இதனால் மழை நேரத்தில் செல்போனில் பேசிக் கொண்டு செல்வது, சார்ஜர் போட்டபடி செல்ேபானில் பேசுவதும் கூடாது.
* மின்சாதனப் பொருட்களை எச்சரிக்கையாக கையாள வேண்டும்.
* மரத்தின் கீழ் ஒதுங்குவதும், மின்சாரம் கடத்தும் சாதனங்களின் அருகில் நிற்பதும் கூடாது.
சென்னை: சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் பஸ், கார், ஆட்டோ போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தண்டவாளத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதாலும், சிக்னல் செயல் இழந்ததாலும் ரயில் சேவை முற்றிலும் முடங்கியது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படியும், யாரும் வீட்டை விட்டுவெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் பெய்த மழையயை பார்த்த மக்களுக்கு 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழைக்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தான் நினைவுக்கு வந்தது. நேற்று நள்ளிரவு பெய்த மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் 2015ம் ஆண்டை நினைவுப்படுத்தியது.
மேலும், தேசிய பேரிடர் மேலாண்மையும் அந்த அச்சத்தை அதிகமாக்கும் வகையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு மிகவும் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் திடீரென இடியுடன் கூடிய மழை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு பெய்யத் துவங்கியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் கடைகள் மற்றும் கிடைத்த இடத்தில் ஒதுங்கி நின்றனர். இந்த கனமழை நள்ளிரவை கடந்தும் விடியவிடிய இடிமின்னலுடன் பெய்து கொண்டே இருந்தது.
இருளில் மூழ்கிய நகரம்: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை நேப்பியார் பாலம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள சாலை, கதிட்ரல் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உட்பட சென்னை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. மேலும், விவேகானந்தர் இல்லம் சாலை, மயிலாப்பூரில் இருந்து ராயப்பேட்டை நோக்கி செல்லும் சாலை, சைதாப்பேட்டை சுரங்கபாதை உட்பட பல சாலைகள் மூடபட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாததால் மயிலாப்பூர், மந்தவெளி, தரமணி, பெரம்பூர், ஓட்டேரி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் இந்தப் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
நள்ளிரவில் பயணிகள் தவிப்பு: பலத்த மழை
தண்ணீர் வடிந்திருந்தது. பிற்பகல் தொடங்கிய மழையால் மீண்டும் தண்ணீர் தேங்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக புறநகர் பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். சென்னையில் பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டது. மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் குறைந்த வேகத்துடன் இயக்கப்பட்டன. சென்னையில் மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுப்பதற்காக ஏற்கனவே 16 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆய்வு செய்தார். இதற்கிடையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, நாகை, ஆகிய கடேலார மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து நேற்று இரவு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக