ஊரை அடித்து உலையில் போட்ட மன்னார்குடி கும்பல்
வருமான வரித்துறையின் சூறாவளி சோதனையில் சிக்கியுள்ள சசிகலா மற்றும் அவரைச் சார்ந்த மன்னார்குடி கும்பல், பலரது வயிற்றெச்சரிச்சலை கொட்டி, அடாவடியாக சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது. அவர்களின் பெரும்பாலான சொத்துக்களின் பின்னணியில், அதன் உரிமையாளர்களின், வேதனையும், கண்ணீரும் மறைந்திருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, வீடியோ கேசட்டை வாடகைக்கு கொடுத்தவர் சசிகலா. இன்றோ, சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துப் பட்டியலில், 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இடம் பெற்றுள்ளன. இவை, கடலில் ஒரு துளி போன்றதே. இது மட்டுமின்றி, ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, விவசாயம், ஆயத்த ஆடை என, சசி கும்பல், ஜெ.,வின் பெயரைக்கூறி, சொத்து சேர்க்காத துறையே கிடையாது.
ஜெ.,வை பயன்படுத்தி பெற்ற, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தில், சொத்துக்களை வாங்கி குவிக்க, 'லெட்டர் பேடு' நிறுவனங்களை வைத்து கணக்கு காட்டியதில் துவங்கி, உரிமை யாளர்களை மிரட்டி சொத்துக்களை வாங்கியது வரை, அவர்கள் செய்த, தில்லாலங்கடி வேலைகள் கணக்கில் அடங்காதவை.'ஜெயா பப்ளிகேஷன்ஸ்' எனும், லெட்டர்பேடு நிறுவனத்தின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதை, உதாரணமாக கூறலாம்.
அந்நிறுவனத்திடம், அதற்காக, கோடிக்கணக்கில் பணம் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அந்நிறுவனத்தை, நிர்வகிக்கும் அதிகாரத்தை, சசிகலாவுக்கு, ஜெ., வழங்கி இருந்தார்.சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, குன்ஹா, 'ஜெயலலிதா, தவறான வழியில் சேர்த்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை நிர்வகிக்கவே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர், ஜெ., இல்லத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
'இவர்களின் நிறுவனங்கள், 3,000 ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்து உள்ளன. அவை, எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை் குற்றவாளிகளால் கூற முடிய வில்லை' என, தெரிவித்திருந்தார்.
நில அபகரிப்பு
போலி கம்பெனிகள் வழியாக பண பரிவர்த் தனை செய்தது ஒருபுறம் இருக்க, பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகளை, வீட்டுக்கே வர வழைத்து, ஏராளமான நிலம், கட்டடங்களை, முறையான வழிமுறைகளை பின்பற்றாமல், பத்திரப்பதிவு செய்த கதை ஊரே அறியும். கடந்த, 1991ல், அரசு நிறுவனமான, 'டான்சி' நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானதும், ரூட்டை மாற்றினர்.
சசிகலாவும், அவரது சொந்தங்களும், தமிழகம் முழுவதும், முக்கியமான இடங்களில் உள்ள, கட்டடங்கள், நிலங்களை குறி வைத்து, பலப் பிரயோகம் செய்து, கைப்பற்ற துவங்கினர். அவர்களிடம், அடிமாட்டு விலைக்கு நிலத்தை
வாங்கினர். நிலத்தை விற்றோர், இந்த விபரங்களை வெளியில் கூற முடியாமல், மனதுக்குள் குமுறினர்.
அவ்வாறு, மன்னார்குடி கும்பலிடம், நிலத்தை இழந்தவர்களில், தமிழக மக்களுக்கு நன்கு அறிமுக மான, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், கங்கை அமரனும் அடக்கம். பழைய மகாபலிபுரம் சாலை யில், பையனுார் என்ற இடத்தில், அவருக்குச் சொந்தமான, 22 ஏக்கர் பண்ணை வீட்டை, ஜெ.,வின் பெயரைக் கூறி, தினகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கினார். அது குறித்து, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவிடம் பூச்செண்டு கொடுத்தது மட்டும் தான், கங்கை அமரன் கடைசியாக, மகிழ்ச்சியாக செய்த காரியம். பின், அவரது வீட்டுக்கு பத்திரப் பதிவு அதிகாரிகளுடன் சென்று,சசிகலா கும்பல், 13 லட்சம் ரூபாய்க்கு, அதை எழுதி வாங்கியது. இது குறித்து, கங்கை அமரன் வெளிப்படையாக கூறியும் ஒன்றும் நடக்கவில்லை. செல்வாக்கு மிக்க ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
சந்தேகங்கள்
பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர், பாலுவின் மர்மமான மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் இன்று வரை தீரவில்லை. வேளச்சேரி, 'பீனிக்ஸ்' வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும், 11 திரையரங்குகள் அடங்கிய, 'லுாக்ஸ் மல்டிபிளக்ஸ்' திரையரங் கத்தை, 2015ல், 'ஜாஸ் சினிமா' வாங்கியது. அது, இளவரசியின் பெயரில் இருந்த நிறுவனம். 'மிடாஸ்' மது ஆலையில் இயக்குனர் களாக உள்ள, சிவகுமார், இளவரசியின் மருமகன், கார்த்திகேயன் கலியபெருமாள் ஆகியோர் தான் அதன் இயக்குனர்கள்.அதை, தற்போது, இளவரசியின் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார். சத்யம் திரையரங்க வளாகத்தின் உரிமையாளர்களை மிரட்டி, அவற்றை வாங்கிய தாக, அரசியல் கட்சிகள், அப்போதே சுட்டிக்காட்டின.
இதுபோல், மேலும் பல திரையரங்குகளை அவர்கள் வாங்கி குவித்துள்ளனர்.கோடநாடு எஸ்டேட்டை யும், வெளிநாட்டைச் சேர்ந்த, அதன் உரிமையாள ரிடம் இருந்து, கட்டாயப்படுத்தி வாங்கியதாகவும், அவரது வாரிசுகள் கூறி வருகின்றனர். சென்னை, மயிலாப்பூரில் உள்ள, அமிர்தாஞ்சன் மாளிகையை, அதன் உரிமையாளரிடம் இருந்து பறித்தது மற்றொரு கதை.காஞ்சி மாவட்டம், சிறுதாவூர், கருங்குழிபள்ளம் உள்ளிட்ட இடங்களில், 112 ஏக்கர் நிலத்தையும், இக்கும்பல் மிரட்டி வாங்கியுள்ளதாக, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
சசிகலா, இளவரசி மற்றும் இளவரசியின் மகன் விவேக், சுதாகரன் ஆகியோரின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சசிகலா கும்பலின் சொத்துப் பட்டியல்களை, வீடியோ வடிவில், 'பினாமி குயின்' என்ற பெயரில், அறப் போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.அதன் அமைப் பாளர், ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, 1996 வரை, சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள், பின், அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் கிடைத்த லஞ்சப் பணம் மற்றும் ஊழல் பணத்தை, வேறு விதமாக குவித்து வைத்தனர்.
போலி நிறுவனங்கள்
நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா, 'டிவி' உள்ளிட்ட அவர்களின் வேறு நிறுவனங்களில், பல்வேறு வழிகளில் குவிந்த வருவாயை, 'ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்ெவஸ்ட்மென்ட்ஸ்' போன்ற போலி நிறுவனங்களுக்கு மாற்றினர்.ஊழல் பணத்தை முறைகேடாக பதுக்கி வைக்க, மோசடி ஆசாமிகள், இரு வழிகளை கையாள்கின்றனர். ஷேர் அப்ளிகேஷன் பெண்டிங்' என்ற முறைப் படி, பணத்தை, போலி நிறுவனங்களில் முதலீடு செய்வர்.
இரண்டாவதாக, 'அன் செக்யூர்டு லோன்' என்ற வழிமுறை. இதில்,எவ்வித பிணைப்பத்திரம்
இல்லாமல், கடன் வாங்குபவரின் நம்பகத் தன்மையை வைத்து, கடன் தரப்படுகிறது. அதுபோன்ற, வழிமுறைகளை கையாண்டு, பெரும் தொகையை, போலியான வேறு நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டு வர். அவர்களுக்கு, 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், சொந்தமாக இருக்கலாம் என, நினைக்கிறோம்.இவ்வாறாக, மோசடி வழியில் வந்த பணம், இந்த போலி நிறுவனங்களில் உலவியபடி இருக்கும்.
அத்தனை நிறுவனங்களுக்கும், அன்செக்யூர்டு லோன், ஷேர் அப்ளிகேஷன் பெண்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததாக கணக்கு காட்டி இருப்பர். அந்த நிறுவனங்கள், அத்தொகையில், சொத்துக் களில் முதலீடு செய்ததாக கணக்கு காட்டப் படும்.அந்த நிறுவனங்களின் வேலையே இதுவாகவே இருக்கும்; அவற்றில், வேறு பணிகள் நடக்காது. அவர்கள் துவங்கிய போலி நிறுவன பங்குகளை வாங்க, பெரும் தொகையை கொடுத்தது போல் கணக்கு காட்டுவர்.
அதுபோல், சசிகலா குடும்பத்தினர், 43 போலி நிறுவனங்களை துவங்கினர். இதுபோன்ற, 10 நிறுவனங்களுக்கு, சசிகலா சகோதரர் சுந்தரவதனத்தின் மருமகன், கே.எஸ். சிவகுமார், சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசியின் சம்பந்தி, கலிய பெருமாள் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.
சிக்கிய, 'ஜாஸ் சினிமா'
இதுபோலத்தான், 'ஹாட் வீல்ஸ் இன்ஜினி யரிங்' என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த சசிகலா குடும்பத்தினர், அதன் பங்குகளை, மேலும், 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டி, அந்த நிறுவனங் களை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின், அதை, 'ஜாஸ் சினிமாஸ்' என, பெயர் மாற்றினர். அதுவும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நிறுவனங்களில் ஒன்று.இது, மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்டடங்கள், சொத்துக்களையும் வாங்கி குவித்தனர். அதன் உரிமையாளர்களை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கினர்.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள, இசையமைப்பாளர் கங்கை அமரனின், பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, 13 லட்சம் ரூபாய்க்கு, மிரட்டி வாங்கினர். இது, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். தமிழகம் முழுவதும், விசாரித் தால் பல கண்ணீர் கதைகள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி தினமலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக