திங்கள், 31 ஜூலை, 2017

Mathi News மாலை செய்திகள்@31/7/17

Mathi News  மாலை செய்திகள்@31/7/17


2016-17 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்துக்குள் சீனா ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து ஊடுருவியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது

சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு மார்ச் வரை, மாதம் தோறும், ஒரு சிலிண்டருக்கு நான்கு ரூபாய் வீதம் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டு பெற புதிய விதிமுறை வகுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர், அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறிஉள்ளார்.

லாலு கட்சியுடனான கூட்டணியை காப்பாற்ற கடைசி வரை முயற்சித்தேன். ஆனால், எனக்கு வேறு வழியில்லை,'' என, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்

ஆதார் எண் இணைக்கப்படாத பான்கார்டுகள் விரைவில் ரத்து செய்யப்படும்மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் அதியா தகவல்ஆதாரை பான் கார்டுடன் இணைக்க ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு அறிவிப்பு

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை சுற்று பகுதியில் பலத்த மழை

அனைவருக்கும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்; அமைச்சர் காமராஜ்

நாகை, குத்தாலம் தாலுகா தென்குடி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் குளத்தில் மூழ்கி பலிஇவர்கள் அக்கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்துவரும் கிரு‌ஷணகுமார்,சஞ்சய் என தெரியவந்துள்ளதுஇதுகுறித்து குத்தாலம் போலீஸார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டசபையில் அராஜகம் செய்தவர் ஸ்டாலின் என அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது டிராமா செய்து சட்டையை கழட்டி காண்பித்தார் எனவும் தெரிவித்தார்.மேலும், வேஷ்டியையே கழட்டிக் காண்பித்தாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார்

வரும் 5ம் தேதி டிடிவி தினகரன், அதிமுக அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை

ராமேஸ்வரத்திலுள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்பவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி மறுப்பு மக்கள் புகைப்படம் எடுக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதுகலாம் அருகே கீதை புத்தகம் இருப்பது தமிழகத்தில் பல்வேறுமட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இதற்கு காரணம் என கூறப்படுகிறது

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நசீர் மதானிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உணவு பாதுகாப்பு விதிகள் தமிழக அரசிதழில் வெளியீடு

மணி மண்டபத்தில் கலாம் சிலையருகே பைபிள் மற்றும் குரான் நூல்களை வைத்ததற்காக அவரது பேரன் ஷேக் சலீம் மீது இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்அணைக் கட்டுவது தொடர்பாகத் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டம் வேண்டும்

நீட் தேர்வுக்காக, அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்லவில்லை என்றும், தனது தலைக்குமேல் தொங்கும் கத்திக்காக சென்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை, சோழிங்கநல்லூர் அருகே, வடமாநில இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக அவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துள்ளார்அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மோடியிடம் அவர் கோரிக்கை வைத்ததுள்ளதாக தகவல்

கந்து வட்டி தொடர்பான 3வது புகாரில் போத்ரா கைது

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களுடனான அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்க வந்த கேரள முதல்வர் பினாரயி விஜயன், அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களை, 'வெளியே போ...' என, கோபத்துடன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மருத்துவ பயன்பாடுகளுக்கு கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கஞ்சா அனுமதிக்கப்பட்டது போல் இந்தியாவிலும் அனுமதி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் 261.85 கோடி ரூபாய் செலவில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்ததால் போலீசாரை ஏவி மாணவனை கம்பியில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உயர் நிலைப்பள்ளியில்

மேற்கு வங்காளம் மாநிலம் புருலியா மாவட்டத்தில் 3 வயது சிறுமியை செய்வினை பொம்மையாக்கி ஊசியால் குத்திக் கொன்ற மந்திரவாதி சனாதன் தாகூர் இன்று கைது செய்யப்பட்டார்

முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது

ஊழலுக்கு எதிராக கருத்து கூறியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதரவு அளித்துள்ளார்.

நடிகை நயன்தாரா 50 வினாடி டிவி விளம்பரத்திற்கு ரூ. 5 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகையை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்த நடிகர் திலீப் திட்டங்களை மலையாள பிரபலங்கள் பலர் அறிந்து இருந்தனர் என விசாரணையில் தெரியவந்து உள்ளது.

ஆண் பாதுகாவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சவுதியை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் நூறு நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரிய மிரட்டல் விவகாரத்தை அமெரிக்கா வர்த்தக உறவுடன் தொடர்புபடுத்த கூடாது: சீனா

தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகளின் உரிமை மீறலாகும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான இன்று என்றும் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை சென்செக்ஸ் நிலவரம் உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

எஸ்பிஐ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு.

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 31/07/17 !

தமிழக ரேசன் திட்டத்தின் கீழ் மாற்றம் இல்லை.மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது - அமைச்சர் காமராஜ்.

அனைத்து தரப்பினருக்கும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.தற்போது உள்ள பொது விநியோகத்திட்டத்தில் எள்ளளவும் மாற்றமில்லை; ரேஷன் பொருட்கள் இல்லை என்பது வதந்தி - அமைச்சர் காமராஜ்.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4பேரின் காவலை ஆக.14 வரை நீட்டித்தது நீதிமன்றம்.

சிறையில் உள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.

குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்துக்கு இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சிறைகளில் காலியாக உள்ள சிறை கைதி நல அலுவலர்களை 6 மாதங்களில் நியமிக்க தமிழக உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுகவின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொல்லவில்லை : முக.ஸ்டாலின்.

எம்.எல்.ஏ.களை ரூ.15 கோடிக்கு விலை பேசுகிறது பாஜக : காங்கிரஸ் குற்றச்சாட்டு.

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் இடமுண்டு - சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

கலாம் வீணை வாசிப்பது போல சிலை வைத்தும், பகவத் கீதையை வைத்தும் மதவாதம் திணிக்கப்படுகிறது : திமுக.

நளினிக்கு 6 மாத பரோல் தருவது குறித்து ஆக.7க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருவனந்தபுரத்தில் ஆக.6ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு : கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் உள்ள ஜெயராமனுடன் முக.ஸ்டாலின் சந்திப்பு.

சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் : சித்தராமையாவுக்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடிதம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.8,892கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து செய்யப்படும் - வருவாய்த்துறை செயலர்.

சவுதி அரேபியாவில் உள்ள சிறைகளில் 2,046 இந்தியர்கள் உள்ளனர் : மத்திய அரசு.

பசுவை தடுப்பு என்ற பெயரில் குண்டர்கள் கொலை வெறியாட்டம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு.

ஈரோடு: நாதகவுண்டம்பாளையத்தில் சொத்து தகராறில் தாயை கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

கேரள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை : முதல்வர், டிஜிபியிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்.

கலாம் நினைவு மண்டபத்தில் செல்போன், கேமரா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கதிராமங்கலத்தில் மத்திய அரசு ஆய்வுப்பணிகள் மட்டுமே மேற்கொண்டது : முக.ஸ்டாலின்.

வேட்டி, சட்டையை கிழித்தாலும் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது : அமைச்சர் சி.வி.சண்முகம்.

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை எதிர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - முக.ஸ்டாலின்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதிஷின் முடிவை ஏற்க முடியாது - ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்  சரத் யாதவ்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு பேசுவது ஏமாற்று வேலை - சீமான் மதுரையில் பேட்டி.

சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் பாஜகவினர் தன்னை மிரட்டுவதாக ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி புகார்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது பாட்னா உயர்நீதிமன்றம்.

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பின் மேலாளர் போலீசில் சரண்.

தன்னை குறித்தும், சேலம் வங்கி தலைவர் குறித்தும் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது : செல்லூர் ராஜூ.

டிஜிபி, காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான லஞ்ச புகார் என்பது முக்கிய பிரச்னை: உயர்நீதிமன்றம்.

நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வை ஆக.30க்குள் நடத்தி முடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை : சிபிஎஸ்இ.

ஓ.என்.ஜி.சி. திட்டத்திற்கு எதிராக கதிராமங்கலம் கிராம மக்கள் 21வது நாளாக போராட்டம்; துணியால் வாயை மூடி நூதன போராட்டம்.

கக்கூஸ் ஆவணப்படத்தில் சில சமூகங்களை திவ்யா இழிவுப்படுத்தியதாக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு.

புதுக்கோட்டை : ஆர்.புதுப்பட்டினம் கடற்கரையில் இலங்கைக்கு சொந்தமான பைபர் படகு கரை ஒதுங்கியது.

கோவை குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் நாசர் மதானிக்கு ஆக.14வரை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

திமுகவின் முரசொலி பவளவிழாவில்  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆசிரியர் வகுப்பில் தூங்குவதை படம் பிடித்து உயரதிகாரிக்கு அனுப்பிய மாணவரை போலீசார் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

வட கொரியாவுக்கு பதிலடி கொடுப்பது பற்றி அமெரிக்கா - ஜப்பான் ஆலோசனை: ராணுவ பலத்தைப் பிரயோகிக்க டிரம்ப் முடிவு?.

வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.1கோடி அபராதம் விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி.

கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரத்தை முறையாக பராமரிக்காத புகாரில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மீது ஆர்பிஐ நடவடிக்கை.

உத்தராகண்ட்: பர்ஹோட்டி எல்லையில் சீன துருப்புகள் ஒரு கிலோ மீட்டர் வரை ஊடுருவியுள்ளதாக தகவல்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.

கொடைக்கானல் எரிச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

எல்லை பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் மூத்த ராணுவ அதிகாரிகள் ஆலோசனை.

கந்துவட்டி தொடர்பான 3ஆவது புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா கைது.

டெங்கு காய்ச்சல் எதிரொலி: சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.

உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் சுவிட்சர்லாந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் சிலிண்டர் விலை ரூ.4 உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

தன் பிரசவத்துக்காக மருத்துவமனை வந்த மருத்துவர்: வேறு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தருணம்..



தன் பிரசவத்துக்காக மருத்துவமனை வந்த மருத்துவர்: வேறு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த தருணம்..

நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்கு பெண் மருத்துவர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், வேறு பெண்ணுக்கு அவர் பிரசவம் பார்த்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Kentucky மாகாணத்தை சேர்ந்தவர் Amanda Hess. மகப்பேறு மருத்துவராக உள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான இவர், தான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே தன் பிரசவத்துக்காக சேர்ந்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் என்ற நிலையில் அவர் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் பக்கத்து அறையில் Leah Halliday என்ற பெண்ணும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது Leah Halliday வலியால் துடித்துள்ளார்

அந்த நேரத்தில் மருத்துவமனையில் வேறு மருத்துவர்கள் இல்லாததால், அவரின் சத்தத்தை கேட்டு நிறைமாத கர்ப்பிணியான Amanda அந்த அறைக்கு சென்றுள்ளார்.

பின்னர், செவிலியர்கள் உதவியுடன் Leah-வுக்கு பிரசவம் பார்த்த Amanda குழந்தையை வெற்றிகரமாக வெளியில் எடுத்துள்ளார்.

இதற்கு பிறகு வேறு மருத்துவர்கள் அங்கு வர பிரசவத்தில் Amanda-வுக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவர் Amanda கூறுகையில், மருத்துவர்கள் நோயாளியாக இருந்தாலும், அடுத்த நோயாளிகளை பற்றி தான் சிந்தித்து கொண்டிருப்போம்.

ஏற்கனவே Leah-ன் உடல்நிலையை சில தினங்களுக்கு முன்னர் நான் பரிசோதனை செய்ததால் எனக்கு பிரசவம் பார்க்க சுலபமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Leah கூறுகையில், என் பிரசவம் நடக்கவிருந்த தக்க சமயத்தில் நல்ல மனதோடு Amanda உதவியது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.


ஞாயிறு, 30 ஜூலை, 2017

7000 கார்கள்..!! அதில் 604 ரோல்ஸ் ரோய் கார்கள் – மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம்…யார் கிட்டே இம்புட்டும்..



7000 கார்கள்..!! அதில் 604 ரோல்ஸ் ரோய் கார்கள் – மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம்…யார் கிட்டே இம்புட்டும்..

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.

எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல்தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது.

ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய்.

அவரது அரண்மனை இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன. இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது.

இங்கு 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் எல்லாம், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை.

இவரது மகளுக்கு 18 வயது நிரம்பியதும் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் அவருக்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் வழங்கினார். அவர் பயன்படுத்துவதோ போயிங் 747 விமானம்.

இதை எல்லாம் விட, வித விதமான கார்களை வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுல்தான்.

அவரது கேரேஜில், தற்போது 7,000 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின்மதிப்பு, 2,312 கோடி ரூபாய். அவரிடம் உள்ள 7,000 கார்களில் அதிகளவில் இருப்பவை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தான்.

இவற்றின் எண்ணிக்கை மட்டுமே 604. இது தவிர, மெர்சிடீஸ் பென்ஸ்-574, பெராரி-452, ஆஸ்டின் மார்ட்டின்-300, பென்ட்லீ-382, பி.எம்.டபிள்யூ – 209, ஜாகு வார்-179, போர்ஷெய்-160, கோனிநெக்-134, லம்போர்க்கினி-21, மெக்லாரன் எப்1 ரகம்-8, பியூஜோ-5, ஷெல்பி சூப்பர் 1 ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபல மாடல் கார்கள்.

இந்த அதிக விலையுள்ள ஆடம்பர கார்களை தவிர, மேலும் நான்காயிரம் வெவ்வேறு நிறுவன கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன.


கார்களையும் அவரது அரண்மனை அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு மூலையில் நிறுத்தி வைத்துள்ளார்.
கார்கள் நிறுத்தப் படும் பார்க்கிங் ஏரியாவுக்கும் கார் நிறுவனங்களின் பெயர்களையே சூட்டி உள்ளார். அவற்றை பராமரிப்பதற்கென தனித்தனியே மெக்கானிக்கு களையும் வைத்துள்ளார்.

அவர்களுக்கு உணவு, உறைவிடம், கை கொள்ள முடியாத அளவுக்கு சம்பளமும் வழங்கி வருகிறார்.

அதில் குறிப்பிட்ட சில கார் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

உலகில் மிக முக்கிய கார்தயாரிப்பு நிறுவனங்களின் அனைத்து பிரபல கார்களும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் சில குறிப்பிட்ட மாடல்கள், அவரது விருப்பத்திற்கேற்ப கார் நிறுவனங்கள் தயாரித்து அளித்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

நீங்க பெரு மூச்சு விடாதீங்க,

MATHI NEWS -30-7-2017-sunday

MATHI NEWS    8.30am -30-7-2017-sunday

♈ 🇮🇳  கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற காதலரை போலீசார் மீட்பு-மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  காதல் ஜோடி ஒன்று கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றது. இதை பார்த்த போலீசார், உடனடியாக அந்த காதல் ஜோடியை மீட்டு,காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், நுங்கம்பாக்கம் வீராசாமி தெருவை சேர்ந்த 19 வயது இளைஞன் என்பதும், கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும் தெரிய வந்தது. அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்ய முயன்றது தெரிந்தது. அவர்களை சமாதானப்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்



♈ 🇮🇳  சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் போரூர் ஏரியும் ஒன்று. இங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி  வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் கரைப்பகுதியில் குப்பை கழிவுகள் தேங்கியும், புதர் மண்டியும் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. இவற்றை சுத்தம் செய்யும் பணியில் சென்னை பெருநகர காவல்துறை, தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்று தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று  ஏரிக்கரையில் கிடந்த குப்பை, கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், செடி கொடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். சேகரிக்கப்பட்ட குப்பைகளை சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து அகற்றினர். இந்த பணியில், வடக்கு கூடுதல் கமிஷனர் ஜெயராமன், வடக்கு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பெரியய்யா மற்றும் வடக்கு இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் ஈடுபட்டனர்

♈ இன்றைய(ஜூலை 30) விலை: பெட்ரோல் ரூ.67.51; டீசல் ரூ.58.32

♈ 🇮🇳  இன்று மன் கீ பாத்தில் பிரதமர் மோடி உரை

♈ 🇮  கேரளாவில் இன்று முழு அடைப்பு-கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை :

♈ 🇮  சென்னை: ராயப்பேட்டை பகுதியில் டிரான்பார்மரில் தீ விபத்து–விஸ்வரூபம்

♈ 🇮 இ ந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.சீனாவுக்கான சுற்றுலா, சென்னையில் இருந்து, செப்., 29ல்,புறப்படும். இந்த ஏழு நாள் விமான சுற்றுலாவுக்கான கட்டணம், நபர் ஒன்றுக்கு, 94 ஆயிரம் ரூபாய்

♈ 🇮  ''மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்பாக, கோர்ட்டில் பதிலளிப்பேன்; நானே நேரடியாக சென்று வாதாடுவேன்,'' என, கர்நாடக மாநில, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா தெரிவித்தார்

♈ 🇮  ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட, 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் அடிக்கடி, 'மக்கர்' செய்வதால், ஊழியர்கள் தவிக்கின்றனர்.தமிழகத்தில், 2.03கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களுக்கு, ஏப்., 1 முதல்'ஸ்மார்ட்' கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும், 25 ஆயிரத்து, 532ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.அதில், ரேஷன் கார்டு தாரர்களின் விபரம் மற்றும் அரிசி,பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் இருப்பு, வினியோக விபரம் போன்றவை இருக்கும். பொருட்கள் வழங்கியதும், கார்டு தாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., சென்று விடும்.கருவியில் பதிவாகும் விபரங்கள் அடிப்படையில், கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், இக்கருவி, 'ஆன்லைன்'மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், அலுவலகங்களில் இருந்தபடியே,அதிகாரிகள், கடைகளை கண்காணிக்க முடியும்.இக்கருவிகள் அடிக்கடி, 'ஹேங்' ஆவதால்' பொருட்கள் வினியோகம் செய்வதில், தாமதம் ஏற்படுகிறது. மேலும், கருவிகள் பழுதானாலும், உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பதில்லை.அந்த சமயங்களில், பொருட்கள் வினியோகம், சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், ஊழியர்களிடம் கார்டு தாரர்கள் பிரச்னை செய்கின்றன.

♈ 🇮  பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி எக்ஸ்பிரஸ்,கும்பகோணத்தில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮  ஆதார் கார்டு வைத்திருந்தாலும், அதில் உள்ள விபரங்கள், பான் கார்டில் உள்ள விபரங்களுடன் ஒத்து போகாததால், ஆயிரக்கணக்கானோர், அவை இரண்டையும், இணைக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த குறைபாட்டை தவிர்ப்பதற்காக, மீண்டும் பான் அட்டைக்கோ, ஆதார் அட்டைக்கோ, திருத்தம் கோரி மனு கொடுக்க வேண்டியுள்ளது.இந்த நடைமுறைகள் முடிய, 10நாட்களுக்கு மேல் ஆவதால், கடைசி தேதியான, ஜூலை, 31க்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அதனால், ஜூலை, 31 கெடுவை, மேலும், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அவர்கள்,எதிர்பார்க்கின்றனர்

♈ 🇮  'மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, டில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது--- விஸ்வரூபம்

♈ 🇮 மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹனுமபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (23). இவர் கோகலூரு கிராமத்தை சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து வந்தார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர்,ஜெயராமுடன் இனி பேசவோ, பழகவோ கூடாது என அந்த பெண்ணுக்கு புத்திமதி கூறினர். ஆனால் அந்த பெண் காதலனை சந்தித்து வீட்டில் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். ஜெயராம், மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று காலை மைனர் பெண்ணை யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த பெண் வீட்டார் ஜெயராம் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஊரக போலீசார் ஜெயராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

♈ 🇮 சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,சேலத்தில் இருந்து தனி ரயில் மூலம் நேற்று கரூர் ரயில் நிலையம் வந்து, ஆய்வு மேற்கொண்ட ஹரிசங்கர் வர்மா ஈரோடு - கரூர் திருச்சி மற்றும் சேலம் கரூர் - திண்டுக்கல் ஆகிய இரண்டு வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்,கரூர் - திருச்சி இடையிலான பணி மார்ச் இறுதிக்குள் முடிவடைந்து விடும் என இவ்வாறு கூறினார்.

 11.30am -30-7-2017-sunday

♈ 🇮🇳  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சின்னையாசத்திரம் பகுதியில் போலியாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய ஈடுபடுவதாக, 3 பேரை போலிசார் கைது செய்தனர்

♈ 🇮🇳  வாடிக்கையாளர்களின் A.T.M. கார்டு எண்கள் மூலம் 40 லட்சம் மோசடி: பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கைது-அவினாசி சாலையில் இருக்கும்,குறிப்பிட்ட ஒரு  பெட்ரோல் பங்க்கில்

♈ 🇮🇳  கொடைக்கானல் கூக்கால் பிரிவு,மன்னவனூர் உள்ளிட்ட இடங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டத்தால் சுற்றுலாக்கயணிகள்,கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

 ♈ 🇮🇳  வேளாண்துறை வெளியிட்ட செய்தி: தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஹெக்டேர் ஒன்றுக்கு 175 தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிரிமீய தொகையை காசோலையாக வேளாண் அலுவலகங்களில் செலுத்த வேண்டும். இதில் மத்திய அரசு 50சதவீதம், மாநில அரசு மற்றும் விவசாயிகள் தலா 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும். மரங்களின் வயதுக்கு ஏற்றாற் போல் மரம் ஒன்றிற்கு தொகை வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044- 4343400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.சமீபத்தில் சி.ஏ.ஜி., தனது அறிக்கையில், ரயில்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்திருந்தது

♈ 🇮  கலாம் மணி மண்டபத்தில் குரான், பைபிள் புத்தகங்கள்

♈ 🇮  சேலத்தில் கட்டட தொழிலாளி அடித்துக்கொலை

♈ காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

♈ 🇮  கோவை: சூலூர் அருகே கணவன், மனைவி கொலை

♈   புதுச்சேரி: பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த கவர்னர்-vishwarubam

♈   விருதுநகரில் இளைஞர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு–விஸ்வரூபம்

♈ 🇮 ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

♈   கொரியா ஏவுகணை சோதனை: சீனாவுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம்

♈   திருப்பதியில் ஒன்றறை வயது ஆண் குழந்தை மீட்பு.

♈   போருக்கு தயாராகுங்க; ராணுவத்திற்கு சீன அதிபர் அறிவுரை

♈   மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 25.கால்டாக்சி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஒன்றறை வயதில் குழந்தை உள்ளனர். நேற்று இரவு வீட்டில் மூன்று பேரும் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம கும்பல், அவரது வீட்டுக்கதவை தட்டியது. விசாரணையில், அவர்கள் போலீஸ் எனக்கூறியுளளனர். ரமேஷ் கதவை திறக்க மறுத்துள்ளார். தொடர்ந்து அந்த மர்ம கும்பல் கதவை உடைத்தது. இதனால், பயந்து போன ரமேஷ் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அங்கு, அந்த மர்ம கும்பல், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிசென்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் நாகமலை புதுக்கோட்டையில் நடந்த கொலை சம்பவத்தில் ரமேசிற்கு தொடர்பு உள்ளது. இதனால், பழிக்கு பழியாக ரமேஷ் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

♈   மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6,699 கன அடியிலிருந்து 7,017 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 33.30 அடியாகவும், நீர் இருப்பு 8.90 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

♈ 🇮 தஞ்சை : கதிராமங்கலத்தில் அண்ணாதுரை, அமுதா ஆகிய இருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக 71 வது நாளாகப் போராட்டம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது

♈ 🇮 சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த மேராஜ் என்ற பெண் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

♈ 🇮🇳  சென்னையில் கல்லூரி மாணவர்கள் பைக் ரேஸால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒண்டிக்குப்பத்தில் மாணவர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்தார். ரேஸ் சென்று விபத்தை ஏற்படுத்திய மாணவர்கள் மது போதையில் இருந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் விஜய் மற்றும் சீனிவாசன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்

♈ 🇮🇳  கோவை அரசு மருத்துவமனையில் 24பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 175 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

♈ 🇮🇳  தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் சென்னையில் தொடங்கியது. தலைவர் பதவிக்கு விக்ரமனும், செயலாளர் பதவிக்கு செல்வமணி போட்டியிடுகின்றனர். மேலும் பொருளாளர் பதவிக்கு இயக்குநர்கள் பேரரசு,ஜெகதீசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

♈ 🇮🇳  கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில், தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், மகாலிங்கத்தின் ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் அதற்காக கடவு எண்ணை தெரிந்துகொண்டு, அதன் மூலம் பணம் மாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மகாலிங்கத்திடம், “உங்களுடைய ஏ.டி.எம். கார்டை எங்கெல்லாம் கொடுத்தீர்களா...”? என்று விச்சரித்தனர்.

தன்னுடைய கார்டை உறவினர்களிடம் கூட கொடுத்து பணம் எடுத்ததில்லை, வழக்கமாக அவினாசி சாலையில் இருக்கும்,குறிப்பிட்ட ஒரு  பெட்ரோல் பங்க்கில்தான் தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதாகவும், அதற்காக மட்டுமே ஏ.டி.எம். கார்டை அங்குள்ள ஊழியர்களிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெட்ரோல் பங்க்குக்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், அங்குள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அப்போது அங்கு இருக்கும் ஊழியர்கள் இருவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி சுவைப் கருவியில் தேய்த்து பணத்தை பெற்ற பின்னர், அருகிலிருந்த மற்றொரு கருவியில் கார்டுகளை தேய்ப்பதையும் பார்த்துள்ளனர்.
அதன் பின்னர் போலீசார் ஒரு வாரம் அந்த பெட்ரோல் பங்க்குக்கு அவ்வப்போது சென்று அந்த இருவரின் நடவடிக்கையை கண்காணித்தபோதும், அந்த ஊழியர்கள் இருவரும் அதுபோன்று செய்து வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது,கோவையை சேர்ந்த ஆனந்த் (வயது-32), மகேந்திரன் (வயது-30)என்பதும், ‘ஸ்கிம்மர்‘ என்ற கருவி மூலம் ஏ.டி.எம். கார்டை தேய்த்து,அதில் உள்ள எண்ணை தெரிந்து கொண்டு, அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது

   5pm -30-7-2017-sunday

♈ 🇮🇳 நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் 6வது இடத்தையும்,கோவை வேளண் பல்கலைக்கழகம் 20வது இடத்தையும்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 28வது இடத்தையும், பிடித்துள்ளது

♈ 🇮🇳  ஊத்தங்கரை அருகே மான் இறைச்சியுடன் 2 பேர் கைது

♈ 🇮🇳  மதுரையில் பலத்த மழை

♈ 🇮🇳  கமல், நடன இயக்குநர் காயத்ரிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வக்கீல் நோட்டீஸ்

♈ 🇮🇳  மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் குளித்த வாலிபர் பலி

♈ 🇮🇳  பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: ஜம்முவில் ரெய்டு

♈ 🇮🇳 நெல்லை அருகே போலீசைத் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

♈ 🇮🇳 டெல்லியில் 15-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்
♈ 🇮🇳  சென்னை பல்கலையில் 15 மாணவர்கள் சிறை வைப்பு-அமைச்சர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கையாக சிறை வைப்பு-சென்னை பல்கலை விழாவில் அருண்ஜெட்லி பங்கேற்பு

♈ 🇮🇳  someone commet-- Group admine sir. Don't sperad ''vishwaroopam" news. It is oneside. He also expect money for news

♈ 🇮🇳  தமிழகத்தில் தற்போதுள்ள மாவட்டங்களை60 ஆக பிரித்து, அரசு நிர்வாகம் செயல்படத் தொடங்கினால் மாநிலம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்கிறார்கள் அரசியல் கட்சியினர். ஆனால் மாவட்டங்களின் எண்ணிக்கையை கூட்டுவதுடன் காலி பணியிடங்களை நிரப்புவதும் மிக முக்கியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.60மாவட்டங்கள் என எண்ணிக்கை கூடினால், ஆட்சியர்கள் எண்ணிக்கைதான் 60 ஆகும். வேறு எந்த ஒரு மாற்றமும் நடக்காது. ஏன் எனில், அரசின் பெரும்பாலான துறைகளில் லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பி மக்கள் சேவையைத் துரிதப்படுத்த அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் நல திட்டங்கள், அரசின் பிற சேவைகள் சென்றடைவதில் தேக்கம் ஏற்பட்டு அதுநீடிக்கும். ஆகையால் அதிக மாவட்டங்கள் பிரிக்கப்படும் சூழலில் காலி பணியிடங்களையும் நிரப்பினால்தான் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

♈ 🇮🇳  ஆக.5 முதல் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன்... தினகரன் அறிவிப்பால் பரபரப்பு-சசிகலாவின் சீராய்வு மனு மீதான முடிவுக்குப் பின் அதிமுகவை வலுப்படுத்துவோம்-தஞ்சாவூரில் சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி
♈ 🇮  ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸ் நகரில் உள்ள இரவு நேர விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மூவர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

♈ 🇮  இலங்கையில் வறட்சியான கால நிலை நீடித்து வரும் நிலையில் மனிதர்களை போன்று மிருகங்களுக்கும் குடி நீர் கிடைக்கும் வகையிலான முன் மாதிரியான வேலைத்திட்டமொன்று புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது-நீர் தேடி அலையும் காட்டு விலங்குகளுக்கு நீர் கிடைக்கும் வகையில் குளங்களை அண்மித்த பகுதியில் தகர மற்றும் பிளாஸ்ரிக் பரல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டு வவுசர்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டு நீர் வழங்கப்படுகின்றது

♈ 🇮 பயங்கரவாத நடவடிக்கை மூலம், விமானம் தாக்கப்படலாம் என்ற சந்தேகத்திற்குரிய தாக்குதலை, பயங்கரவாத தடுப்பு போலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் மார்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார் .

♈ 🇮  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் 29,184 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

♈ 🇮  கொலம்பியா பொலிசார் பிரபல மொடல் அழகியை காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணமாக்கி படமெடுத்து இணையத்தில் வௌயிட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.

 ♈ 🇮  பாகிஸ்தான் நாட்டில் அடுத்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

♈   சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலாளியை கொலை செய்த வங்கி அதிகாரிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

♈   ரஜினி ரசிகர்களும், பாபா ஜி பக்தர்களும் இணைந்து தமிழகத்தில் நிலவும் வறட்சி அகன்று மழை பெய்யவேண்டும் என்பதற்காக மதுரை அழகர் கோயிலிலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் நேற்று மாலை தங்க தேர் இழுத்தார்கள்.

♈   மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது-vishwarubam

♈   வடகொரியாவிற்கு படை பலத்தை காட்டும் வகையில் கொரிய தீபகற்பகத்தில் அமெரிக்காவின் ஏவுகணை வீச்சு விமானங்கள் பறந்தது –விஸ்வரூபம்

♈ 🇮 ஃபோபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதற்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

♈   அமேதி-வருகின்ற ரக்‌ஷா பந்தன் விழாவிற்கு மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் பெண்களுக்கு கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தை முன் வைக்கின்றனர் அதிகாரிகள். இதன்படி 854 “சகோதரர்கள்” தங்களது சகோதரிகளுக்கு கழிப்பறை கட்டித்தருவார்கள். அதுவும் தங்களது சொந்தச் செலவில். மாவட்டத்தின் பல்வேறு தாலுக்காக்கள், ஒன்றியங்களிலிருந்து இவர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழிப்பறைகளை கட்ட வேண்டும்.கட்டிய பின்னர் குலுக்கள் முறையில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். ரொக்கப்பரிசாக ரூ. 50,000 மும் மொஃபைல் ஃபோன்களும் வழங்கப்படும். கட்டப்பட்ட கழிவறைகளை அதிகாரிகளின் குழு ஒன்று ஆராயும். அதன் பின்னர் மாவட்ட அளவிலான விழா ஒன்றில் பரிசுகள் வழங்கப்படும் என்றனர் அதிகாரிகள்

♈   கொடைக்கானல்-பழனி சாலையில் சரக்கு வாகனம் மோதியதில் கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது --- விஸ்வரூபம்

♈   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை இலுப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளார். விவசாயத் தோட்ட மின்வேலியில் சிக்கி 10 வயது சிறுவன் ஹரிபிரசாந்த் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

    8.30pm -30-7-2017-sunday

♈ 🇮🇳  ஈரோட்டில் போலியாக ரயில் டிக்கெட் தயாரித்து விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ரயில் டிக்கெட் விற்ற பழனிசாமி என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். பழனிசாமியிடம் இருந்து 141 ரயில் டிக்கெட் மற்றும் ரூ.1.60லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது

♈ 🇮🇳  திருவள்ளூர் மாவட்டம் மோவூரில் குட்டையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளான். குட்டையில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் விக்னேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்

♈ 🇮🇳  டெல்லி: அவசரக் காலங்களில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விமானங்கள் தரையிறங்க இந்திய விமானப் படை அனுமதி வழங்கியுள்ளது.அவசரக் காலங்களில் விமானங்கள் சாலையோரங்களில் தரையிறங்க இந்திய விமானப்படை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து விமானங்கள் தரையிறங்கும் வகையில் சாலையோரங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன

♈ 🇮🇳  அமிஷாக்கு ஐந்து வருடங்களில் பல மடங்கு வருமானம் உயர்ந்தது பற்றி யாருக்காவது கேட்க தைரியம் இருக்கிறதா –போலீஸ், அதிகார வர்கம் இருக்கும் பயத்தில் நடுக்கும் நம்ம ஆளுங்க அவங்களும் உயர மாட்டாங்க – உயர நினைப்பவர்களையும் காலை வெட்டி விட்டு உயர விட மாட்டார்கள். ஒருவருக்குள்ளே ஒருவர் வன்மம், பொறாமை , துரோகம் இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு பெற்றோராக, மனைவிகளாக ,சகோதர,சகோதிரிகளாக , நண்பனாக உறவினர்களாக வாழ்கின்றனர். என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் இவர்களே நல்லவர்களாக பேசுவதுதான்-reason – money  .

♈ 🇮🇳  ஒடிசாவில் மின்னல்தாக்கி 11 பேர் பலி: 8 பேர் படுகாயம்

♈ 🇮🇳  இயக்குநர் சங்க தலைவர் தேர்தல்: விக்ரமன் முன்னிலை-இயக்குநர் சங்க செயலாளர் தேர்தல்: ஆர்.கே. செல்வமணி முன்னிலை

♈ 🇮🇳  ஆக.,1 முதல் வேலை நிறுத்தம்: பெப்சி எச்சரிக்கை

♈ 🇮🇳  மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: சித்தராமையா

♈ 🇮🇳 ஜிஎஸ்டி - நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: ஜெட்லி

♈ 🇮🇳 கலாம் நினைவிடத்தில் மத நூல்கள்: உளவுத்துறை விசாரணை
♈ 🇮🇳  தொழில் துறையில் தமிழகம் முதலிடம்: நிர்மலா சீதாராமன்

♈ 🇮🇳  மழை வெள்ளத்தால் குஜராத் மக்கள் தத்தளித்து வரும் இந்நேரத்தில் தொகுதியில் மக்களுக்கு சேவை செய்யாமல் காங்., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு ரிசார்ட்டில் உல்லாசமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்தல் ஆக.,8 ல் நடக்கிறது. பா.ஜ., சார்பில் அமித்ஷா,மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிறுத்தப்பட்டுள்ளனர். காங்., வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற, 46 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், ஒன்றின்பின் ஒன்றாக பல காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., பக்கம் தாவி வருகின்றனர். இதனால் அகமது பட்டேல் வெற்றி கேள்விகுறியாக உள்ளது. இத்துடன் சமீபத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறிய, சங்கர் சிங் வகேலாவின் உறவினரான, பல்வந்த் சிங் ராஜ்புத் போட்டியிடுகிறார்

♈ 🇮🇳  ரூ. 15 கோடி தருவதாக பா.ஜ., வினர் பேரம் பேசியதாக குஜராத் காங்.,எம்.எல்.ஏ., திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்

♈ 🇮🇳  தீர்க்கமான முடிவெடுத்து கமல், ரஜினி அரசியலுக்கு வரலாம் - தமிழிசை பேட்டி.
♈ 🇮  வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கூறினார் (அமித்ஷாவின் வரிபற்றி சரியாக சொல்ல முடியுமா.

♈ 🇮  இந்தியா பல்வேறு துறைகளிலும் தனது இலக்குகளை அடைவதற்கு உதவ தயாராக இருக்கிறோம் என ஜப்பான் தூதர் நோடா கூறியுள்ளார்

♈ 🇮 கேபிள் ஆப்ரேட்டர்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலிக்க பஞ்சாப் அரசு திட்டம்.

♈ 🇮 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் யானை தாக்கியதில் தங்கராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். தனது மாட்டை தேடி வனப்பகுதி்க்கு சென்றபோது யானை தாக்கி உயிரிழந்துள்ளார் .

♈ 🇮  நைஜீரியாவின் டிக்வா என்ற ஊரில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒரே வீட்டில் தங்கி இருந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். போகோஹரம் தாக்குதலில் வீடுகளை இழந்தோர் தங்கியிருந்த வீட்டின்மீது பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்துள்ளனர் .


சனி, 29 ஜூலை, 2017

பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்க்கு ரூ.1 கோடி பரிசு!! - தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு!!



பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்க்கு ரூ.1 கோடி பரிசு!! - தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு!!

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த, அந்த அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும், பிளாட் ஒன்றும் பரிசாக வழங்கினார்.

இங்கிலாந்தில் அண்மையில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணிக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட் வாரியம் தலா ரூ.50 லட்சம் வழங்கி கவுரவித்தது. தங்கள் துறையில் பணியாற்றும் 10 வீராங்கனைகளுக்கு பதவி உயர்வும், ரூ.13 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

இதே போல் அணியில் அங்கம் வகித்த மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பூனம் ரவுத், மந்தனா, ஆல்-ரவுண்டர் மோனா மேஷ்ரம் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஐதராபாத்தில் வசிக்கும் கேப்டன் மிதாலி ராஜ், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது மிதாலி ராஜ்க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், அடுக்குமாடி குடியிருப்பில் 600 சதுரஅடியில் வீடும் வழங்கப்படும் என்று அறிவித்தார். உலக கோப்பையில் மிதாலியின் ஆட்டம் அற்புதமாக இருந்ததாக பாராட்டிய சந்திரசேகர ராவ், தெலுங்கானாவுக்கும், ஐதராபாத் நகருக்கும் பெருமை சேர்த்து இருப்பதாகவும் பாராட்டினார்.


கீழடி அகழ்வு மாதிரிகள் 2,200 ஆண்டுகள் பழமையானவை: இந்திய அரசு தகவல்...


கீழடி அகழ்வு மாதிரிகள் 2,200 ஆண்டுகள் பழமையானவை: இந்திய அரசு தகவல்...

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சேகரிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருள்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கீழடியில் உள்ள பொருள்கள் சங்க காலத்தை சேர்ந்தவை என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை பதில் அளித்துள்ளார்.

அதில், கீழடியில் இருந்து இருந்து கரியமில பொருள்கள் சேகரிக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

மேலும், அந்த கார்பன் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் முதலாவது மாதிரியின்படி, இவை சுமார் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின்படி இவை 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் மகேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

கீழடியில் முன்பு தொல்லியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு தொல்லியல் கண்காணிப்பாளராக கே.அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றினார்.

தற்போது அவர் அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் பணிபுரிந்து வருகிறார்.

அமெரிக்க ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும், ஆய்வு முடிவில் அவை கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டு பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது " என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கீழடி அகழ்வாய்வுப் பணியின்போது, ஆதன், உதிரன், சந்தன் போன்ற பெயர்கள் அங்குள்ள மாதிரிகளில் இருந்தன என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வு மாதிரிகள் நிரூபிக்கும் வகையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

மதி செய்திகள் 8am -29-7-2017-saturday

மதி செய்திகள்  8am -29-7-2017-saturday

♈ 🇮🇳  வனவர் வெட்டிக் கொலை ஹெல்மெட்டுடன் வந்த மூவர் கும்பல் வெறிச் செயல்-நெல்லை மாவட்டம் சிவகிரியில்

♈ 🇮🇳  அறிவியல் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்பாகும் . ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்-www.recruitnic@nielit.gov.in

  ♈ 🇮  புதுச்சேரி விமான நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு

♈ 🇮  சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮  தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

♈ 🇮  போதை மருந்து விவகாரம்: நடிகர் ரவி தேஜாவிடம் 10 மணி நேரம் விசாரணை

♈ 🇮  குஜராத்தில் 44 காங். எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல்

♈ 🇮  மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

♈ 🇮  தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் முற்றிலும் சீரமைக்கப்படும்: மத்திய அரசு

♈ 🇮  இன்றைய(ஜூலை- 29) விலை: பெட்ரோல் ரூ.67.37, டீசல் ரூ.58.20

♈ 🇮  ஊட்டி அருகே கருங்குரங்கு கடித்து 4 வயது குழந்தை படுகாயம்

♈ 🇮  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது

♈ 🇮  லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின்போது பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர், அனுப்பிரியா படேல், ''எலக்ட்ரோ ஹோமியோபதி,அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறை அல்ல; இதுதொடர்பான வகுப்புகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளோம். இந்த துறையில், டாக்டர் என கூறிக் கொண்டு மருத்துவம் செய்வதை, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்,'' என்று கூறினார்.

♈ 🇮  லோக்சபாவில் நேற்று, உள்துறை இணையமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசுகையில், ''பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிக்க, தேவையான பணிகள் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும்,'' என்றார்

♈ 🇮🇳 ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆதார் தகவல்கள் முழுமையான அளவில் பாதுகாக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு தலின்படி, பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் பாதுகாப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான டிக்கெட் பெற ஆதார் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை; இந்த விவகாரத்தில், முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை.

♈ 🇮🇳 லோக்சபாவில், நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறுகையில், ''ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காப்பீடு வழங்கி வந்தன. நம் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு, காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில், அரசு இருந்தது. ஆனால், ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட நம் பாரம்பரிய மருத்துவத்திற்கும் காப்பீடு வழங்க, 15 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம், சித்தா, ஆயுர்வேதம் மருத்துவங்களுக்கு காப்பீடு வழங்க முடியும்,'' என்றார்

♈ 🇮🇳 லோக்சபாவில், கார்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர்,அர்ஜுன் ராம் மெக்வெல் கூறுகையில், ''கடந்த, மூன்று ஆண்டுகளில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட, 18 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ''இவை, மிக மோசமான நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ள விபரம் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கம்பெனிகள் விவகாரத்துறை, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்

♈ 🇮🇳 நாகாலாந்தில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.

♈ 🇮  மும்பையின் கோரேகான் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்--விஸ்வரூபம்

♈   ஷார்ஜாவில் இருந்து கடத்தல் கோவையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮🇳  சென்னை : சேத்துப்பட்டு மங்களபுரம்9வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (36).இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, 4பேர் மடக்கி உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். புகாரின்பேரில்,சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில்,கீழ்ப்பாக்கம், ஓசான்குளம் பகுதியை ேசர்ந்த அஜித் (எ) பிள்ளை (21),சேத்துப்பட்டு புதிய பூபதி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) அஞ்சான் (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் விஜயகுமாரை தாக்கி செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர்.


  1pm -29-7-2017-saturday

♈ 🇮 தமிழக மத்திய சிறைகளில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க 12ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு பேட்டியளித்துள்ளார். கரூர் கிளைச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார்

♈ 🇮 புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின்25-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் உயர்நீதிமன்ற நீதிபதி மதாதேவனும் பங்கேற்றுள்ளார். 207 பிஹெச்.டி பட்டதாரிகள் உட்பட 16,697 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது

♈ 🇮 சென்னை தலைமைச் செயலாளர் கிரிஜா தலைமையில் அனைத்துச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை,சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்

♈ 🇮 சிகரங்கள் சீனிவாசனுக்கு நன்றி நிங்கள் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டேன் உங்களிடம்பேசச்சொல்லி கைபேசியில் தொடர்பு கொண்டவர் கூறி தொடர்பு எண் தந்தார் நிநீங்கள் இணைப்பில் இல்லை விஷ்வரூபம் கணேஷ் தொடர்பு கொண்டேன் முடியவில்லை. சின்ன செய்திதான் பப்பாளி இலையில் சாறு எடுத்து தினமும் இரண்டுவேளை தரவும்  டெங்கு காய்சல் கானாமல் போய்விடும் இது என் அனுபவத்தில் கூரும் செய்தி  இந்தச் செய்தி எப்படியாவது அந்த சேலம் மருத்துவணையிலுள்ள நோயிளிக்கு சென்று சேக்ககவும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்

♈ 🇮 தூத்துக்குடி : கோவில்பட்டி ராஜீவ் நகரில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

♈ 🇮 பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு

♈ 🇮 திண்டுக்கல்லில் தனியார் கண் மருத்துவமனையில் தீ

♈ 🇮 தர்மபுரியில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: ஒருவர் கைது

♈ 🇮🇳  நேற்று (28.07.2017) 6 மணியளவில் வடசென்னை தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் மீண்டும் குழாயில் கசிவு ஏற்பட்டது. கசிந்த கச்சா எண்ணெய் சாலையில் பரவியதால், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்து தண்டையார்பேட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சாலையில் மணலை கொட்டி சரி செய்தனர். மணலி சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கசிவை சரி செய்வதற்கான பணிகளை முழுவீச்சில் செய்தனர். இருப்பினும் பகல் நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால், அவர்களால் சீரமைக்க முடியவில்லை. இதையடுத்து, அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக, ஒரு பகுதியை மட்டும் பேரிகார்ட் போட்டு தடை செய்தனர். பின்னர், இரவு வாகன போக்குவரத்து குறைந்த பின், சிபிசிஎல் ஊழியர்கள் கசிவை சீரமைத்தனர்

♈ 🇮🇳  ஈரோடு நகர துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சுரேஷ்குமார். இவர் வரும் 31ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் இன்று திடீரென சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

  ♈ 🇮  புரோ கபடி லீக் தொடரின் முதலாவது ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தெலுகு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது

♈ 🇮  தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 26சதவிகிதம் குறைவு

♈ 🇮  ஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா

♈ 🇮  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக ஒற்றுமையோடு செயல்பட வேண்டியது அவசியம் என அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை வருகிறது. ஆனால்,சசிகலா குடும்பத்துக்கு எதிரான வியூகத்தில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதால்,அவரை சமரசப்படுத்தும் வழி தெரியாமல் தவிக்கின்றனர் சசிகலா உறவினர்கள்

♈ 🇮  இரோம் சர்மிளா கொடைக்கானலில் தங்கினால் சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என்று அவரது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மகேந்திரன் என்பவர் கூறியுள்ளார். இரோம் ஷர்மிளா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளரிடம் மனு அளித்த மகேந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

♈ 🇮  விடுதியில் குளிப்பதற்குகூட தண்ணீர் இல்லாததால் ஆத்திரமடை்நத சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் காலி பக்கெட்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

♈ 🇮  கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்ட போது சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 122பேர் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ உபசாரம் நடைபெற்றது. அதேபோல பிடதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கவனிப்பு இருக்குமா? அல்லது கூவத்தூரை மிஞ்சுமா பிடதி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
♈ 🇮  தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில்  தண்ணீர் லாரி மோதி10 மாடுகள் உயிரிழந்தனர். தண்ணீர் லாரிகள் செல்ல தடைவிதிக்கக் கோரி திருச்செந்தூர் - நெல்லை சாலையில் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்

♈ 🇮  சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த காரைக்காலை சேர்ந்த காஜா இப்ராஹிமிடம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.சூட்கேசில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்

♈ 🇮      உ.பி.,யில் போதையில் தள்ளாடியபடி கைதியை, போலீசார் அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது உத்தர பிரதேச மாநிலம் எட்டா நகரில் கோர்ட்டல் ராஜூ என்ற கைதியை ஆஜர்படுத்திய பின்னர் மீண்டும் ரவி குமார் சிங், ராகேஷ் குமார் சிறைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் , கைதியுடன் சேர்ந்து இரு போலீசாரும் மது அருந்தினர். இருவரும் போதையில், கைதியை கடையில் சிகரெட் மற்றும் புகையிலை வாங்கி கொடுக்க கட்டாயபடுத்தினர். அவரும் வாங்கி கொடுத்தார். இது அங்கிருந்த ஒருவர் மொபைலில்படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், தங்களது பணியில் கவனக்குறைவாக உள்ளதாகவும், பாதுகாபு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது

♈ 🇮  வரத்து குறைவால் நாடு முழுவதும் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டில்லி, கோல்கட்டா, இந்தூர், திருவனந்தபுரம்,சென்னை உள்ளிட்ட நாட்டின் 17 முக்கிய நகரங்களில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.90 ஐ தாண்டி உள்ளது.பெரும்பாலான வட மாநிலங்களில் நிலவி வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதே விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலை உடனடியாக சரியாக வாய்ப்பில்லை எனவும்,ஆகஸ்ட் இறுதி வரை இதே விலை நிலவரம் தான் காணப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    3pm -29-7-2017-saturday

♈ 🇮🇳  ரத்ததான முகாம்- சென்னையில் ராயபுரம் காங்கிரஸ் கட்சி தலைவர் தீனா முன்னிலையில் ஜி ஏ ரோட்டில் மரகதம் மாளிகையில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ரத்ததானம் அளிக்கலாம்.

♈ 🇮🇳  சென்னை மெரினாவில் போலீஸ் கடும் சோதனை-இளைஞர்களின் செல்போனை தீவிரமாக சோதிக்கிறது போலீஸ்

♈ 🇮🇳  குஜராத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அகமதாபாத் விமான நிலையம் என சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கிய பழைய படங்களை ஊடகங்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது

♈ 🇮🇳  சென்னை ஆவடியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் ராணுவத்தின் ஆளில்லா உளவு வாகனமான முந்த்ராவும் இடம்பெற்றிருந்தது
♈ 🇮🇳  பா.ஜ., தலைவர் அமித்ஷாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.1.90கோடியிலிருந்து ரூ.19 கோடியாக அதிகரித்துள்ளது. தனது வேட்புமனுவில்,தனது மூதாதையர் மூலம் வந்த சொத்துகள் மதிப்பு ரூ.10.38 கோடி என அமித்ஷா கூறியுள்ளார்.
அமித்ஷா மற்றும் அவரது மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் கடந்த 2012க்கு பிறகு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2012ல் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.8.54 கோடியிலிருந்து ரூ.34.31 கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியில் கல்வி தகுதி குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்தது. அவர் பிகாம் பார்ட் 1முடித்திருந்ததாக கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது தனது அபிடவிட்டில் கூறியிருந்தார். தற்போது தனது பட்டப்படிப்பை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை எனக்கூறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 2014ல் ரூ.4.91கோடி என தெரிவித்திருந்தார். தற்போது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து ரூ.8.88 கோடியாக அதிகரித்துள்ளது.:காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பல்வந்த் சிங் ராஜ்புத், சொத்து மதிப்பு கடந்த 2012ல் ரூ.263 கோடியிலிருந்து தற்போது ரூ.316 கோடியாக அதிகரித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி.,யாக அவர்தேர்வாகும் பட்சத்தில் கோடிஸ்வர எம்.பி.,க்களில் இவரும் ஒருவராக இருப்பார்.காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் தனக்கு ஆண்டு வருமானம் ரூ.15,10,147 எனவும், தனது மனைவிக்கு ஆண்டு வருமானம் ரூ.20,15,900 எனவும் கூறியுள்ளார். கடந்த 2011க்கு பிறகு படேல் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு 123 சதவீதம் அதிகரித்துள்ளது

♈ 🇮🇳  சென்னை: போலி பஸ் பாஸ் தயாரித்த 5 பேர் கைது

♈ 🇮🇳  விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டீல்கள் கொள்ளை

♈ 🇮 இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான 837மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கையெழுத்திட்டுள்ளது

♈ 🇮 அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய புதியதொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனும் தெரிவித்துள்ளன

♈ 🇮 'ரான்சம்வேர்` மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை இணைய குற்றவாளிகள் சம்பாதித்துள்ளதாக கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

♈ 🇮 நினைவாற்றல் இழப்பு (டிமென்சியா) ஏற்பட்டிருந்த அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் காணாமல் போன சில நிமிடங்களில் காவல்துறையின் மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈ 🇮 மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ வரீஸ் பதான் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘‘நான் ‘வந்தே மாதரம்’ பாடலை பாட மாட்டேன். என்னுடைய மதமும், சட்டமும் இவற்றை பாட என்னை அனுமதிக்காது. என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், நான் அதை பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார். இவரை போல சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ-களும் வந்தே மாதரம் பாடலை பாட மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

♈ 🇮 மதிமுக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள்,மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், இன்று மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

♈ 🇮 கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம் இரசாயன மண்டலம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இரண்டு மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 7,8 தேதிகளில் மக்கள் கருத்தறியும் பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்

♈ 🇮 ஒன்றிணைவோம் காவிரியை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ்.

♈ 🇮🇳  "கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துகள் ஒன்றுகூடி நாங்கள் இந்துக்கள் அல்ல என்று புரட்சி செய்வது போல், தமிழகத்தில் நாங்களும் எழுவோம்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳  அ.தி.மு.க.வை கைப்பற்ற தினகரன் அதிரடி வியூகம் வகுத்து வருகிறார் அவருடன் கை கோர்க்க 50எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது

  ♈ 🇮  கேரள நடிகை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நடிகர் திலீப் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

♈ 🇮  மத்திய பிரதேச மாநிலம் பார்வாணி மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த 16 வயது சிறுமி கைதுச் செய்யப்பட்டுள்ளார்

♈ 🇮  போதைப்பொருள் வழக்கு: தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஓட்டுநர் விசாரணைக்குழு முன் ஆஜர்.

♈ 🇮  உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் என்ற இடத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

♈ 🇮  கந்து வட்டி வசூலித்ததாக கைது செய்யப்பட்ட போத்ரா மீது 3-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அனந்தநகார் என்பவர் போத்ரா மீது போலீசில் புகார் அளித்தார். 2014-ம் ஆண்டு கொடுத்த ரூ.5 லட்சம், கடனுக்கு ரூ.30 லட்சம் மற்றும் 800 கிராம் தங்கம் போத்ரா வசூல் செய்துள்ளார். தற்போது மேலும் ரூ.3 கோடி கேட்டு மிரட்டுவதாக ஆனந்த்நகார் புகார் தெரிவித்தார்

♈ 🇮  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயலராக பி.செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்க்கப்பட்டுள்ளார்.

♈ 🇮  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷூக்கு ஜாமின் வழங்க மறுப்பு

♈ 🇮  மத்திய பிரதேசத்தில் நர்மதா நதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நதியில் இறங்கி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

♈ 🇮  மேற்குவங்கத்தில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினருக்கும்,போலீசாருக்கு இடையே மோதல்: 2 போலீசார் காயம்---விஸ்வரூபம்

♈ 🇮      தமிழகத்தில் நிரந்தரம் இல்லாத ஆட்சி நடப்பதால் நிரந்தர ஆளுநர் இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்

♈ 🇮  உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 8வயது சிறுமி காணாமல் போனார். இதனையடுத்து போலீசாரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை குழந்தையை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உள்ளூர் வாசிகள் காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்--- விஸ்வரூபம்

♈ 🇮🇳  மானாமதுரை: மின்சாரம் தாக்கி டாங்கர் லாரி டிரைவர் பலி

♈ 🇮🇳  பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: பா.ஜ., தவிர்க்க முடியாத சக்தியாக மாறி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் எங்களது பலத்தை நிருபிப்போம். ஊழலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழக கட்சிகள் நீட் தேர்வை அரசியலாக்குகின்றன. கலாம் மணிமண்டபத்தில் பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டதை வைகோ அரசியலாக்குகின்றார். இவ்வாறு அவர் கூறினார்

    7pm -29-7-2017-saturday

♈ 🇮🇳  விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தற்போது இரண்டாம் கட்டமாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், சனிக்கிழமை தங்களின் 14-வது நாள் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்

♈ 🇮🇳  11 உயிர்களை காப்பாற்றிய வேலூா் ஆயுதபடை காவலர் சி.கோபி.பாமக அணி தலைவர் திரு.ராமாதாஸ் அவர்கள் வேலூரிலிருந்து திருப்பத்தூருக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றாா்.

அவருக்கு மாவட்ட எல்லை பாதுகாப்புக்கு சென்ற வேலூா் காவல் வாகனம் ஆம்பூா் அடுத்த விண்ணமங்கலம் என்ற இடத்தில் செல்லும் போது காவல் வாகனத்தின் பின் டயர் வெடித்தது.தேசிய நெடுஞ்சாலையில்

நிலை தடுமாறி தாறுமாறாக ஓடிய வாகனத்தை வேலூா் ஆயுதபடையை சோ்ந்த ஓட்டுநர் திரு.சி.கோபிகாவலர் எண்-929.அவர்களின்  சாமர்த்தியத்தால் வாகனத்தில் இருந்த ஆய்வாளா் மற்றும் 10காவலர்கள் அதிஷ்டவஷமாக எந்த வித காயமுமின்றி உயிர் தப்பினா்.

♈ 🇮🇳  கதிராமங்கலத்தில் 5 பேர் மயக்கம்.

♈ 🇮🇳  அதிமுகவில் அதிகார மோதல்கள் காரணமாக 3அணியாக பிரிந்து கிடக்கும் நிலையில், அந்தக் கட்சிகாரர்களுக்கு கட்சிக் கொடியின் நிறம் கூடத் தெரியாது என்பது அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களே அம்பலப்படுத்துகின்றன

♈ 🇮🇳  முதல்வர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது, போதை பொருள்களை விற்பனை, செய்வதும்,கடத்துவதும்தான் குற்றம். அவற்றை உட்கொள்வது தவறில்லை.தெலுங்கு திரையுலகினர் கைது செய்யப்படமாட்டார்கள். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அவர்களை குற்றவாளிகளாக கருதாது, மாறாக அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே கருதும் என தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳  தன்னைப் பார்த்து சிரித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

♈ 🇮🇳  உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮🇳  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடையில் விற்பனைக்கு வைக்கபப்ட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர் ஆனந்த் சத்யா கைது செய்யப்பட்டார்

♈ 🇮🇳  பீகாரில் புதிய அமைச்சர்களாக 26 பேர் பதவியேற்றுக் கொண்டனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 பேர், பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 பேரும், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்

♈ 🇮 பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் அப்பாஸி  தேர்வு செய்யப்பட்டுள்ளார்

♈ 🇮 சென்னை அடுத்த மடிப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன. வேளச்சேரியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்

♈ 🇮 திருவண்ணாமலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்

♈ 🇮 காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பாதித்த10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள 4 பேருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

♈ 🇮 உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளித்த தாராபுரத்தை சேர்ந்த பிளஸ்1 மாணவன் பிரபாகரன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மாணவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

♈ 🇮 திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம், சோலார்,மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

♈ 🇮 ரயிலில் ஏசி சரியாக வேலை செய்யாததால், ரயில்வேக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சேகர் என்பவர் கடந்த 2015 மே 9 ல் பெங்களூருவிலிருந்து மைசூருக்கு திப்பு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஏசி கோச்சில் பயணம் செய்தார். ஆனால், ஏசி சரியாக வேலை செய்யவில்லை. அவர் புகார் அளித்ததின் பேரில் ஊழியர் சரி பார்த்தார். ஆனால், ஏசி சரியாக செய்யவில்லை. இதனையடுத்து, தனது ரயில் கட்டணத்தை திருப்பி கேட்டும்,மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், சேகருக்கு ரூ.1ஆயிரம் மற்றும் ரயில் கட்டணம் ரூ.2 ஆயிரத்தை 4 வாரத்தில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்

♈ 🇮 மருத்துவமனையில் டாக்டர்கள் அனுமதிக்க மறுத்ததால், பெண் ஒருவர் சாலையில் குழந்தை பெற்றெடுத்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்புரியா மருத்துவமனைக்கு நேற்று (ஜூலை28) கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி காரணமாக அழைத்து வரப்பட்டார். ஆனால், தற்போது குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை. மறுநாள் காலை அழைத்து வரும்படி பணியில் இருந்த டாக்டர்கள் கூறிவிட்டனர். அந்த கர்ப்பணிக்கு யாரும் உதவி செய்யவில்லை. தொடர்ந்து நேற்று இரவு 11 மணியளவில் மருத்துவமனை அருகில் சாலையிலேயே குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

 9.30pm -29-7-2017-saturday

♈ தேனி மாவட்ட செய்தியாளர்கள். சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் தேனி.ராஜாமுகமது ஆகிய எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் சத்தியம் தொலைக்காட்சியில் தேனி கோகிலா மருத்துவமனை போலி டாக்டர் குறித்து உண்மை செய்தியை வெளியிட்டதற்கு என் மீது கோபப்பட்டு ஆத்திரத்தில் நான் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் R.முருகேசன் எனது குடும்பம் முதல் உறவினர்கள் உள்பட அனைவருக்கும் குடும்ப டாக்டர் அவர் அவரை பற்றி செய்தி வெளியிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய நீங்கள் ஒருமுறை செய்தியை பார்த்துவிட்டு உத்தமபாளையத்தில் உள்ள எனது வீட்டில் குடும்பத்தோடு எங்களை வெட்டி கொன்றாலும் பரவாயில்லை உங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்ததான் அந்த செய்தி சார் தமிழகத்தில் எங்கு செய்தியாளருக்கும் வழக்கறிஞருக்கும் நட்புறவு இருக்கு என்பது தெரியவில்லை தேனி மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் நீங்கள் அல்ல நான் அல்ல யார்?நினைத்தாலும் அந்த உறவை பிரிக்க முடியாது. உண்மை ஒரு பொழுதும் உறங்காது

♈ 🇮🇳  திருநெல்வேலியில் உள்ள சரவணா செல்வரத்னா துணிகடையில் அடிதளம் பில்டிங் காா்பாா்க்கிங் இடம் என பிளன் பதிவு செய்து பில்டிங் திறப்புவிழா முடிந்து செயல்பட்டு வரும் தருவாயில் அந்த காா்பாா்க்கிங் தளத்தை  வேறு கடை திறந்துவிட்டு  கடைக்குவரும் வாடிக்கையாளரை ரோட்டில் வாகனங்களை நிறுத்த வைத்த நெல்லை சரவணா செல்வரத்னா துணிகடை மீது நடவடிக்கை எடுத்து அதுவும் இரண்டு மணிநேரத்தில் விளக்கம் கேட்ட மதுரை உயா் நீதிமன்ற நீதிபதிக்கு பொதுநலம் விரும்பும் அனைவா் சாா்பிலும் இதையம் கனிந்த நன்றியை உருத்தாக்குகிறோம் (இதேபோல் குமரி மாவட்டம் நாகா்கோவில் நகா் பகுதியில் செயல்படும் பாபா மெடிக்கல் கடையிலும் அடிதளம் காா்பாா்க்கிங்  தற்போது வேறுகடைக்கு வாடகைக்கு விடபட்டு  வாடிக்கையாளா்களை வாகனங்களை ரோட்டில் விடு வைக்கிறாா்கள் இதேபோல் பலகடைகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகிறது ஆகவே இதற்கும் பொதுநலத்துடன் வழக்குபதிவு செய்து மதுரை நீதிமன்றத்தை நாடினால் நல்ல வெற்றி கிடைக்கும் பொதுநல சிந்தனையாளருக்கு  இந்த தகவலை பதிவு செய்கிறேன்

♈ 🇮🇳  இன்று காலை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கோனூர் அரசு பள்ளியில் ADGP திரு. சைலேந்திரபாபு..ஐ.பி.எஸ் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தார்.

♈ 🇮🇳  விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை–விஸ்வரூபம்

♈ 🇮🇳  திருச்சியில் போதைப்பொருள் விற்ற 14 பேர் கைது

♈ 🇮🇳  குல்பூஷண் ஜாதவ் கருணை மனு குறித்து ராணுவ கோர்ட் முடிவு: தூதர்

♈ 🇮🇳  தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட விதிகள், ஜூன், 22ல் வெளியிடப்பட்டன. இந்த விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில், கட்டுமான நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும், ரியல் எஸ்டேட் சட்ட வரம்புக்குள் வரும்.ஆனால், விதிகள் அறிவிக்கப்படும் நாளில், பணி நிறைவு சான்றுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் பதிவாகிவிட்ட திட்டங்களை, ரியல் எஸ்டேட் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை.தற்போது, கட்டுமான நிலையில் உள்ள எந்தெந்த திட்டங்கள், பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன என்பது குறித்த குழப்பம் எழுந்துள்ளது.இதை தீர்க்கும் வகையில், ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்ட, ஜூன், 22ல், பணி நிறைவு சான்று கோரி விண்ணப்பித்துள்ள திட்டங்களின் பட்டியல், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, 266 திட்டங்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வதில் இருந்து விலக்கு பெறுகின்றன.வீடு வாங்குவோர், இத்திட்டங்கள் குறித்த விபரங்களை,http://www.cmdachennai.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

♈ 🇮🇳  தமிழக, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை தலைமை ஆணையர், சி.பி.ராவ் கூறியதாவது:நாடு முழுவதும், ஜூலை, 1ல் இருந்து,ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலானது. அதற்காக, 'வாட்' வரி விதிப்பின் கீழ் இருந்த வர்த்தகர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள்,ஜி.எஸ்.டி.,க்கு மாற, தமிழக அரசின் வணிக வரித்துறை இணையதளத்திலும், மத்திய அரசின் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை இணையதளத்திலும் பதிவு செய்து வருகின்றனர்.இது தவிர, நாடு முழுவதும் இதுவரை, வாட், கலால் மற்றும் சேவை வரி போன்ற எதிலும் பதிவு செய்யாத, 2.10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,க்கு பதிவு செய்து, அதற்கான எண்ணை, இணைய தளம் வழியாக பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும், இதுவரை, 21 ஆயிரத்து, 245 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்குப்பின், எவ்வளவு வரி கிடைத்தது என்பதை, இப்போது கூறுவது சிரமம். அடுத்த மாத இறுதி வரை, பதிவுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட உள்ளது. அதன் பிறகே, வருவாய் குறித்த விபரம் தெரிய வரும்.ஜி.எஸ்.டி.,க்கு முன், தமிழகத்தில் இருந்து, எங்களுக்கு,ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின்,இது அதிகரிக்கும் என, கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

♈ 🇮🇳  ஸ்ரீபெரும்புதூர் அருகே தாமரைப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். உடற்கூறு ஆய்வுக்காக ரமேஷ் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

♈ 🇮🇳  திருப்பூர் மாவட்டத்தில் 2,029 ஏக்கர் பஞ்சநிலத்தை ஆக்கிரமித்துள்ள 476பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மத்திய, மாநில அரசின் சலுகைகள் பற்றி விழப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். செய்யாறில் இரு பிரிவினரின் மோதலில் கொல்லப்பட்ட இளைஞர்குடும்பத்துக்கு இழப்பீடு தர வலியுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

♈ 🇮 கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கடல் அலையில் சிக்கிய சிறுவன் அனிஷை காணவில்லை. தந்தையுடன் கடலுக்குள் வந்த போது அலையில் சிக்கிய சிறுவன் அனிஷை மீனவர்கள் தேடி வருகின்றனர்

♈ 🇮 நிர்வாக வசதிக்காக ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். போளூர், செங்கம்,கலசப்பாக்கம் கிராமங்களை இணைத்து ஜமுனாமரத்தூரை புதிய வட்டமாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செண்பகத்தோப்பு அணை மதகுகள் ரூ.9.80 கோடி செலவில் சீரமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்

♈ 🇮 குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபியானா கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் அன்னையின் அன்பின் முன்னே! *



தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் அன்னையின் அன்பின் முன்னே! *

தென்ஆப்ரிக்காவில் சிங்க ராணி அரவணைப்பில் மான்குட்டி ஒன்று வளர்ந்து வருகிறது. தான்சேனியாவில் சிறுத்தைக்குட்டி ஒன்றை மற்றொரு பெண்சிங்கம் பாதுகாக்கிறது.

தென்ஆப்ரிக்காவில் க்ரேகர் வனத்துக்கு சுற்றுலா சென்ற க்ரீம் மெத்லே மற்றும் அவரின் மனைவி, பெண் சிங்கம் ஒன்றின் அரவணைப்பில் மான்குட்டி ஒன்று இருப்பதை கண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சாலையில் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது,  சிங்கத்தின் வாயில் ஏதோ ஒன்று இருப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.  உற்றுக்கவனித்த போது, அது உயிருடன் உள்ள மான்குட்டி எனத் தெரிய வந்தது. அந்த பெண் சிங்கம், மான்குட்டியை தாயன்போடு நாவால் வருடிக் கொடுத்துக் கொண்டே இருப்பதையும் அவர்கள்  பார்த்திருக்கின்றனர். அருகில், மான்குட்டியை கொல்வதற்காக கழுகு, செந்நாய் போன்றவை சுற்றி வந்தாலும், சிங்க ராணி, அதிக கவனத்துடன்  மான்குட்டியை பராமரித்து வருகிறது.

அதேபோல், தான்சேனியாவில் உள்ள காரன்காரோ வனப்பகுதியில் பெண் சிங்கம் ஒன்று சிறுத்தைக் குட்டியை வளர்த்து வருகிறது. அண்மையில் இந்த பெண் சிங்கம், குட்டிகளை ஈன்று பறிகொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தாயை இழந்த சிறுத்தைக் குட்டி, வனப்பகுதியில் பரிதாபத்துடன் சுற்றி வந்துள்ளது. இதனைப் பார்த்த பெண் சிறுத்தைக்குட்டியை அரவணைத்துக் கொண்டது. சிங்கம் தாய் ஸ்தானத்தில் சிறுத்தைக் குட்டிக்கு பால் கொடுத்து பராமரிக்கிறது. இந்த பெண் சிங்கம் வன உயிரின ஆர்வலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆஹா' முனையானது அரிச்சல் முனை!



'ஆஹா' முனையானது அரிச்சல் முனை!

கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி தீவே அழிந்து போனது. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்தது. முகுந்த்ராயர் சத்திரத்துக்கு பிறகு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தனுஷ்கோடியை புயல் தாக்கிய சமயத்தில் இந்த சாலை அலங்கோலமாகி விட்டது.  அதற்கு பிறகு, அரிச்சல் முனைக்கு வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சாலை போடப்படவில்லை. சேரும் சகதியுமாக உள்ள இந்தப் பகுதியில் ஃபோர் வீல் ட்ரைவ் கொண்ட ஜீப்புகள் மட்டுமே போக முடியும். சாதாரண வாகனங்கள் சென்றால் சேற்றில் சிக்கிக் கொள்ளும்.

ராமேஸ்வரத்தில் இருந்து  அரிச்சல் முனைக்கு சாலை போடும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 9.5 கி.மீ தொலைவுக்கு  சாலை போடும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ரமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக அரிச்சல் முனைக்கு செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. இருபுறமும் கடல் தண்ணீர் சூழ்ந்திருக்க இந்த பயணம் சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும்.


உலகில் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 100 கோடி..



உலகில் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 100 கோடி..

உலகில் வாட்ஸ்அப் செய்வோர் எண்ணிக்கை தினசரி அடிப்படையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

வாட்ஸ்அப் சமீபத்திய தகவல்களில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஆண்டு நிலவரப்படி மாதந்தோரும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியாக இருந்தது.

ஸ்நாப்சாட் ஸ்டோரீஸ் போன்ற வாட்ஸ்அப் அம்சமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தினமும் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இது ஸ்நாப்சாட் செயலியை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் வலைதளத்தில் அந்நிறுவனத்தின் பதிவில் மாதந்திர அடிப்படையில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 130 கோடி ஆகும்.

மொத்தம் 60 மொழிகள் சப்போர்ட் செய்வதோடு தினமும் 550 கோடி குறுந்தகவல்களும், 100 கோடி வீடியோக்களும், 450 கோடி புகைப்படங்கள் தினமும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ளுப்படுகிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை தினமும் சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்நாப்சாட் செயலியினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய மைல்கல் சாதனையை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மேலும் பயனுள்ள அம்சங்களை மிகவும் எளிமையாகவும், அதிக பாதுகாப்புடன் வழங்குவோம் என வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி ஜான் ஜௌம் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் 'கைசாலா ஆப்' அறிமுகம்


வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் 'கைசாலா ஆப்' அறிமுகம்

புதுடில்லி : உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புது புது வசதிகளை அறிமுகம் செய்து அப்டேட் செய்து வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. பல மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் ஏற்கனவே இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில் மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆப்ஸ் தற்போது ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

*வாட்ஸ்ஆப் இல்லாத வசதிகள் :*

கைசாலா ஆப்பில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்சில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.

கைசாலா ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். கைசாலா ஆப்ஸ் வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும்.

*அரசுகளின் வரவேற்பு :*

சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலின் போது கைசாலா ஆப்சை பயன்படுத்தியே தேர்தல் கமிஷன் கருத்துகணிப்புக்களை நடத்தி உள்ளன. ஆந்திராவில் பெரும்பாலான அரசு துறைகள் இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆப்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மெசேஜ் அனுப்பி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கேட்டு வருகிறார்.
பல வர்த்தக நிறுவனங்கள், மீடியாக்களும் கைசாலா ஆப்சை பயன்படுத்த துவங்கி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட அரசு துறைகள், அரசு துறைகளைச் சேர்ந்த 70,000 க்கும் மேற்பட்டோர் இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றனர். புரோ கைசாலா என்ற மற்றோரு ஆப்ஸ் மாதத்திற்கு ரூ.130 என்ற கட்டணத்தில் தொழில்துறை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதி செய்திகள் முக்கிய செய்திகள்@28/7/17

 மதி செய்திகள் முக்கிய செய்திகள்@28/7/17

வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்ததில் தவறு இல்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சேலத்தில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி அளித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி பரோல் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மகள் ஹரித்ரா திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோலில் தர கோரி நளினி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். பரோலில் விடுவிக்க கோரும் நளினியின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

எத்தனை கமல், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை கவிழ்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும், கமல் தொடர்ந்து இவ்வாறே பேசி வந்தால் மூன்றாம்பிறை படத்தின் இறுதி காட்சி போல ஆகிவிடுவார் எனவும் நக்கலடித்துள்ளார்.

திருவொற்றியூர்-மாட்டுமந்தை மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.58 கோடி செலவில் திருவொற்றியூர் - மாட்டுமந்தை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்மநபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை அடுத்து ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

செய்யாறு அருகே கிளியாத்தூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சாலையில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.

அதிமுக ஆட்சியில் 61 மேம்பாலங்கள்: முதல்வர் பழனிசாமி

குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் ரத்து செய்ய அரசு திட்டமிட்டதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

அதிமுக அணிகள் இணைப்பு நடக்கும்: முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

ஏரி, குளங்களை தூர்வார திமுகவுக்கு தடை கூடாது: ஐகோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு

இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களில் 64 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்யசபா தேர்தல்: அமித்ஷா, ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

பிரபல பட அதிபரின் புகாரின்பேரில் சினிமா பைனான்சியர் போத்ரா மீது புதிய வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டார்

கர்நாடக மாநிலத்தில் நம்ம மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை கன்னட ஆர்வலர்கள் தார் பூசி அழித்தனர். மேலும் நம்ம மெட்ரோவில் வேலை செய்யும் ஹிந்தி பேசும் பொறியாளர்களை பணியிடமாற்றம் செய்ய வலிறுயுத்தி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் கொச்சியில் ரூ.16 கோடி மதிப்பிலான வாசனை திரவியமான கஸ்தூரி பறிமுதல் செய்யபப்ட்டது. வாசனை திரவியத்தை வைத்திருந்த ஒருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பீஹார் சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு: ஆர்ஜேடி கோரிக்கை

திருவனந்தபுரத்தில் நேற்றிரவு பாஜகவின் மாநிலத் தலைமையகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் வீட்டை பாஜக தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.

போதைப் பொருள் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார்.போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்

குஜராத்தில் தமது கட்சி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்தி செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நிதிஷ் நாடகம் போடுகிறார்: தேஜஸ்வி குற்றச்சாட்டு

இலங்கையில் மைத்ரிபால சிறிசேனாவின் ஆட்சியைக் கவிழ்க்கத ராஜபக்சே துடித்து கொண்டு இருக்கிறார்.ராஜபக்சேவின் முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோகாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இன்றியமையாச் சேவைகளை முடக்கி, அரசைக் கவிழ்க்கும் முயற்சி ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

இங்கிலாந்தில் 15 வயது சிறுமி ஒரே நாளில் வெவ்வேறு நபர்களால் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை நிலவரம்-22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,72622 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,80824 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,904வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.00வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,000

விவசாயத்தை பாதுகாக்க மாணவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும் என்று சேலத்தில் நடந்த விழாவில் நடிகர் விவேக் பேசினார்.

புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்

கடந்த 2011 ஆம் ஆண்டு  உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கியவர் முனாப் படேல். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள அவருக்கு செக் பவுன்ஸ் வழக்கில் டெல்லி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அகர்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த சம்மன் அனுப்பட்டுள்ளது.

   8.30pm -28-7-2017-friday

♈ 🇮🇳  பல வருடங்களாக வாட்ஸ் அப்பில் முகம் தெரியாத பலருக்கும் செய்திகள் தருகிறேன் . எனக்கு வருமானம் வரக்கூடிய vishwaroobam என்ற பெயரில் ஆன் லைன் டாட் காம் தொடங்குவது கூறித்து இலவசமாக யாராவது உதவி செய்தால் அடுத்து ஒரு அலைபேசி யாரிடமும் கையேந்தாமல் வாங்க உதவியாக இருக்கும் .

♈ 🇮🇳  Honorable Modi ji please give pm post to honorable sushmaji .realy she is great   அன்புக்குரிய அம்மா, நோயாளியின் இப்போதைய நிலைக்குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்து உள்ளோம், இனி அனைத்தும் உங்கள் கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் அனுமதி அளித்தால் எங்களுக்கு விசா கிடைக்கும். மேடம், இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான மருத்துவ அறிக்கைகளை அளிக்க தயாராக உள்ளோம். இந்திய தூதரகத்திடம் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்பிக்க தயாராக உள்ளோம். உங்களுடைய உதவியானது உடனடியாக தேவைப்படுகிறது,நோயாளியின் நிலையானது மோசமாக உள்ளது, என்று கோரிக்கை விடுத்தார் ஹிஜாப் ஆசிஃப்.இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரான கெளதம் பம்பாவாலேவை தொடர்பு கொண்ட சுஷ்மா,அந்த பெண்ணிற்கு உடனடியாக விசாவை தெளிவு செய்யுமாறு உத்தரவிட்டார். இந்திய தூதரகமும் இவ்விவகாரத்தை கையில் எடுத்தது.இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாவின் உடனடி நடவடிக்கை மற்றும் இந்திய தூதரகத்தின் துரிதமான செயல்பாட்டினால் பூரித்துப்போன ஹிஜாப் ஆசிஃப்,சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு பிரதமராக இருந்திருக்க வேண்டும், நாடு மாற்றம் கண்டிருக்கும் என டுவிட்டரில் உருக்கமாக தெரிவித்து உள்ளார்-vishwaroobam posted this message in whats up tittle

♈ 🇮🇳  மனிதம் என்றால் உணர்வு உயிர் – இலங்கை நீதிபதி ஒருவருக்கு மட்டுமே தெரிந்துள்ளது -தனக்காக உயிரிழந்த பாதுகாவலரின் மனைவியின் காலில் விழுந்து கதறும் நீதிபதி. இந்தியாவில் நீதி எங்கே என்று கேட்டு கதறல் குரல் ஒலிக்கிறது –விஸ்வரூபம் -கொழும்பு: துப்பாக்கிச் சூட்டில் பலியான தன் பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து இலங்கை நீதிபதி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ வைரலாக சுற்றி வருகிறது

♈ 🇮🇳 இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன் நியமனம்

♈ 🇮🇳 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகாத நிலையில் இப்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாதவையாக அறிவிக்கப்படலாம் என்ற சந்தேகம் பரவுகிறது

♈ 🇮🇳 ஆண்டுதோறும் 4 லட்சம் விபத்துகள் நடப்பதாகவும், இதில் சிக்கியவர்களில் ஒன்றரை லட்சம் பேர் இறப்பதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.மக்களவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, புழக்கத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலி என்று தெரிவித்தார். சாலைப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன். நாடு முழுவதும் பாலங்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 163பாலங்கள் மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்

♈ 🇮  ஐதராபாத்தில் புரோ கபடி லீக் போட்டி தொடர் துவங்கியது--விஸ்வரூபம்    

♈ 🇮🇳  ஐதராபாத்:பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜூக்கு சிறப்பான வரவேற்பு-விஸ்வரூபம்

♈ 🇮  சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மழை

♈ 🇮  இலங்கை சிறையில் இருந்து 77 தமிழக மீனவர்கள் விடுதலை

♈ 🇮  தேவகோட்டை: வாலிபர் கொலை: மற்றொருவர் காயம்

♈ 🇮புதுச்சேரியில் மருத்துவ மேல்படிப்பில் சேர்க்கப்பட்ட 95 பேரை விடுவிக்க வேண்டும் என மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 7 கல்லூரிகளில் சேர்ந்த95 பேரும் சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரியில் சுயநிதி மருத்துவ கல்லூரி,நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது

♈ 🇮 மதுராந்தகம், மொரப்பாக்கம்,பெரும்பாக்கம், மேல்மருவத்தூரில் அரைமணி நேரமாக மழை பெய்து வருகிறது. மேலும் அச்சிறுப்பாக்கம், சித்தாமூரிலும் மழை பெய்து வருகிறது

♈ 🇮  மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் நேர்மை ஆட்சிப் பணி பயிற்சியகத்தில் மூன்றாம்ண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது: ஏழை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற பலருக்கு பயிற்சி அளிப்பதற்காக நேர்மை பயிற்சியகத்தின் இலவச வகுப்புகள் தொடங்கப்பட்டது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதன் விளைவாகவே பலரின் ஒத்துழைப்போடு நேர்மை அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகில் நேர்மைதான் மிகவும் உயர்ந்ததென்று நினைக்கிறேன். அதற்காகத்தான் இந்த பயிற்சியகத்திற்கு நேர்மை என்று பெயர் வைத்தேன். ஆனால் நாட்டில் நேர்மை என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர். ஏதோவோர் அச்சமான சொல்லைப் போல் வியந்து பார்க்கின்றனர். திருநெல்வேலிக்கு ஒருவிழாவிற்கு சென்றிருந்த போது என்னை அழைக்க வரவேண்டியவர்கள் நீண்ட நேரமாக வரவில்லை. சிறிது தாமதத்திற்கு பிறகு வந்தவர்களிடம் பொதுமக்கள் நேர்மையான அதிகாரியை காக்க வைத்து விட்டதாக உரிமையோடு கடிந்தார்கள். அப்போது நான் சொன்னேன் அவர்களைத் திட்டாதீர்கள் நேர்மையை எப்போதும் தமிழர்கள் மெதுவாகத்தான் வரவேற்பார்கள் என்றேன். அது போல யாரும் நேர்மைக்கு வரவேற்பு இல்லை என்று ஒதுங்கிவிடாதீர்கள். கண்டிப்பாக நேர்மைக்கு மிகப்பெரும் மரியாதை கிடைக்கும். அதை நான் புதுச்சேரியில் கண்டேன். நான் பணியாற்றிடாத இடத்தில் கூட எனக்காக 5000 இளையர்கள் காத்துக்கிடந்தனர். மதுரை மக்களைவிட அதிகப்படியான உணர்ச்சிகளைக் கொண்டு என்னை வரவேற்றனர். என்னைப் போல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதை விட என்னை விட சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாக நினைத்து உழைத்திடுங்கள். முதலில் நமது வரலாறுகளைப் படியுங்கள். அதுதான் உங்களை உயர்த்தும். கடந்த 15 வருடத்தில் மூன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற தகவல் வேதனைக்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் . நமது வாழ்வாதாரம் வயல்வெளிகளில் இருந்துதான் தொடங்குகிறது. வல்லரசு கனவுகளெல்லாம் வயல்களில் இருந்து தான் தொடங்க வேண்டும்,என்று பேசினார்

    10pm -28-7-2017-friday

  ♈ 🇮🇳  ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர், ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான, 148 கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது

♈ 🇮🇳  மித்தாலி ராஜூக்கு ஒரு கோடி ரூபாய் ,வீ்ட்டுமனை பரிசு: தெலுங்கானா அரசு

♈ 🇮🇳  மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்று நாட்களில் 4 அடி உயர்வு

♈ 🇮🇳  சட்டபேரவை கூட்டத்தொடர் நிறைவு :கவர்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு

♈ 🇮🇳  திருப்பதியில் கடத்தப்பட்ட சிறுமி பெங்களூருவில் மீட்பு

♈ 🇮🇳  கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

♈ 🇮🇳  அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

♈ 🇮🇳  பாக்., எல்லையில் தயார் நிலையில் இருக்க படைகளுக்கு தளபதி உத்தரவு

♈ 🇮🇳  இந்தியாவாக மாறிய வெனிசுலா -தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா நாட்டில் அரசியல் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நாட்டின் அதிபர் மடுரோவாவுக்கு எதிராக கடந்த 4 மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு அதிபர் ராணுவத்தையும்,போலீசாரையும் ஏவி வருகிறார்

♈ 🇮🇳  தமிழக நிதியமைச்சர் ,ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. ஜெயக்குமார் அவர்களுக்கு மக்களுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டமைக்கு நன்றி. இதை தவறாமல் கடைபிடிக்க ராயபுரம் குடிநிரோற்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்த தமிழக மக்கள் இயக்கம் வேண்டுகிறது  

♈ 🇮🇳  ---முன்பக்கத்தில் "ஹீரோ" என்று எழுதியிருந்த டி-சர்ட் அணிந்திருப்போரை தேடும் பணியில் துருக்கி பாதுகாப்பு படைபிரிவுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த டி-சர்ட்அணிந்திருப்போர், தடைசெய்யப்பட்ட குலென் இயக்கத்தோடும், கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்போடும் தொடர்புடையவர்கள் என்று படையினர் கருதுகின்றனர்.

♈ 🇮🇳  அமேசான் இணையதளத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெஸொஸ் கடந்த வியாழக்கிழமையன்று மிகக் குறுகிய கால நேரத்திற்கு உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்

♈ 🇮🇳 ரஷ்யா, இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மீது புதிய தடைகளை பிறப்பிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை 98-2 என்ற விகிதத்தில் ஆதரவாக வாக்களித்துள்ளது.

♈ 🇮🇳 இலங்கையில் காட்டு யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது என்பது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு என வன பாதுகாப்பு ஆய்வு மத்திய தலைவரான பேராசிரியர் பிரித்திராஜ்  ஃபெர்ணான்டோ கூறியுள்ளார்

♈ 🇮🇳 ப்ரீ சார்ஜ் நிறுவனத்தை கைப்பற்ற ஆக்சிஸ் வங்கியுடன் போட்டியிட்ட அமேசான் நிறுவனம் தோல்வியை சந்தித்துள்ளது

♈ 🇮🇳 கொல்கத்தாவில் மது போதையில் கார் ஓட்டி வந்த பெண்ணை தடுத்து அவரிடம் விசாரித்த போலீசுக்கு அந்த பெண் லஞ்சமாக முத்தம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮  ஐரோப்பாவை நோக்கி கடலில் ரப்பர் படகில் ப்யணத்தை மேற்கொண்ட அகதிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர் .

♈ 🇮🇳  சீன நிறுவனமான சியோமியின் ரெட்மி நோட்4 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. பெங்களூர் நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு செல்போன் கடையின் சிசிடிவு கேமராவில் இது தொடர்பான வீடியோ பதிவாகியுள்ளது .

♈ 🇮  ரஷ்ய கடற்படை தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெறவுள்ள பயிற்சியில் பங்கேற்க உலகின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பலான The Dmitry Donskoy செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்துள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பல், 120 நாள்கள் மேற்பரப்புக்கு வராமல் நீருக்குள்ளேயே இருக்கும் திறன் படைத்தது

வியாழன், 27 ஜூலை, 2017

துணை கலெக்டரானார் சிந்து : சந்திரபாபு நாயுடு..



துணை கலெக்டரானார் சிந்து : சந்திரபாபு நாயுடு..

*பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை துணை கலெக்டராக நியமித்து பணி நியமன ஆணையை வழங்கினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.*

*ஆந்திரா மாநிலம் ஐதரபாத்தை சேர்ந்த பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 2016- ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரினுடன் நடந்த பைனலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.*

*அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டராக நியமித்து அதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.*

*அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் இதற்கான ஆணையை சிந்துவிடம் பெற்றோர் முன்னிலையில் வழங்கினார்.*

*சிந்து பணி நியமனம் குறித்து ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஆந்திரா அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-1 தேர்வு மூலம் சிந்துவிற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.*

*இதற்காக ஆந்திரா சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. சிந்து 30 நாட்களில்பணியில் சேர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.*

புதன், 26 ஜூலை, 2017

நதி நீர் இணைப்பு


மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நதி நீர் இணைப்புக்கு ஆராய நிதி ஒதுக்கப்பட்டது ,, அவை 8 குழுக்களாக செயல்பட்டன. செயல்பட்ட குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ளன.

ஆய்வுக்குப் பின் 30நதிகளை இனைக்க முடியும். அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மத்தியரசிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போது தான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும்

இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க முடியுமென்றும் ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியையும், சோமசீலம், கிராண்டு, அனிகட் பகுதியில் பெண்ணாறு-காவிரி நதிகளையும் இணைக்க முடியும். கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்க முடியும். மேலும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆறுகளின் இணைப்புக்கும் சாத்தியம் இருப்பதாக தெளிவுபடுத்தியது அந்த ஆய்வறிக்கை.

மேற்சொல்லப்பட்ட அனைத்து நீர் வழிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆராய்ச்சிகளுக்கு பிறகு இதன் வடிவமைப்பு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.

*நதிநீர் இணைப்புத் திட்டத்தால் கிடைக்கும் பலன்கள்:*

1) வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடியது.

2) 3.5 கோடி ஹெக்டேர் விவசாய பாசன நிலங்களுக்கு கூடுதலான தண்ணீரை பயன்படுத்த முடியும்.

3) 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடி நிலப்பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும்.

4) நாட்டில் உள்ள எந்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்படாது.

நீர்ப்பெருக்கு இல்லாத அல்லது வற்றிய ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும்.

5) ஆற்றங்கரையில் வசிக்கும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்படும்.

6) 10 மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட நீர்வழிச்சாலைகள் கட்டமைக்கப்படும்.

7) நீர்வழிப்பாதைகள் மூலம் உள்நாட்டு வணிகமும், சுற்றுலா துறையும் வளம் கொழிக்கும்.

8) வாகனப் போக்குவரத்து குறைவதன் மூலம் 90% எரிபொருளை சேமிக்கலாம்.

9) 50 மில்லியன் பொது மற்றும் தொழிற்சாலை சார்ந்த மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.

10) தண்ணீரின் உவர் தன்மையை குறைக்கலாம்

11) சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம்.

12) 3 கோடி மெகாவாட் மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

மாற்றுக் கருத்துகள்:
-------------------------------
1. நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தோராயமாக பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.

2. வட-தென் நதிகளை இணைப்பதற்கு 15 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு கால்வாய் தோண்ட வேண்டும்.

3. இதன் மூலம் 17,500 கன மீட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்றாலும், கால்வாய் தோண்டும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்விடங்களை பறிக்க நேரிடும்.

4. நதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும்.

5. கங்கை நதியில் அணை கட்டுவதால், இமயமலைக் காடுகளுக்கு இந்த அணைகள் பெரிய ஆபத்தாக அமையும்.

6. இத்திட்டம் பருவமழைப் பொழிவுகளை பாதிக்கக்கூடும்.

நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தும் போது போது சில மக்கள் வீடுகளை இழக்க நேரிடும் ,, அதையே அரசியல்வாதிகள் துருப்பு சிட்டாக எடுத்து கொண்டு போராட்டம், உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து விடுவார்கள்  

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் இவ்வாறான மாற்றுக் கருத்துக்களும், அச்சுறுத்தல்களும் நிலவுவதால் தான் மத்திய அரசு, இத் திட்டத்தை செயல்படுத்த தயங்குகிறது.

மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சர்வதேச அரசியலும் அடங்கியிருக்கிறது. வெளிநாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்த விடாது ,, உள்ளூர் அரசியல் வாதிகளை வைத்து தூண்டி அதை கெடுக்க நினைக்கும்

எனவே நதிகளை இணைப்பதற்கு பதிலாக இப்போதுள்ள நதிகளின் தண்ணீரை சிக்கனமாகவும், பயன்பெறும் வகையிலும் உபயோகிக்கும் உத்திகளை முதலில் கையாள வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவிக்கவேண்டும். ஏரிகளில் தண்ணீரை தேக்கிப் பயன்படுத்தும் பழையகால பாசன முறையை ஊக்குவிக்க வேண்டும். ஏராளமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கி மழை நீரை சேகரிக்க வேண்டும் என்றெல்லாம் மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் நடந்துகொண்டிருப்பதோ வேறு.

நிலம் கையக படுத்தி தந்தால் நதிகளை இணைத்து தருகிறேன் என்று மோடி கூறினார், அந்த திட்டத்தின் படி, கடந்தாண்டு பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியது ஆந்திர அரசு.

173 நாட்களில் 174 கி.மீ. தொலைவுள்ள கால்வாய் தோண்டப்பட்டு, கோதாவரி ஆற்றின் நீரை பகிர்ந்தளித்து  ராயலசீமா மாவட்ட வறட்சி போக்கப்பட்டது. இத்திட்டத்தில் 24 பிரமாண்ட பம்ப்புகள் பயன்படுத்தப்பட்டன. ஆந்திராவின் இந்த பம்ப் ஹவுஸ்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பம்ப் ஹவுஸ் ஆகும். சமீபத்தில் இந்த சாதனை திட்டமானது லிம்கா புத்தகத்திலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டமே சாதனை படைத்தது என்றால், ஒரு நாடு தழுவிய நதிநீர் இணைப்புத் திட்டம் பலன் கொடுக்காமல் போய் விடுமா? சர்வதேச அரங்கில் சாதனை படைக்காமல் போய் விடுமா?

குஜராத்தில் நதிகளை இணைக்கும் போது எவ்வளவு பிரச்சனைகள் , மத்திய அரசு சுத்தமாக ஒத்துழைப்பு இல்லாமல்,சமூக ஆர்வலர் என்ற போர்வையில் அலையும் " மேத்தா பட்கர் " போன்ற துரோகிகளை  வைத்து கொண்டு அந்த திட்டத்தை முழுவதுமாக எதிர்த்தது , அதை எல்லாம் தாண்டி நதிகளை இணைத்து காட்டியவர் மோடி , அதனால் கண்டிப்பாக நதியை இணைத்து காட்டுவார்  என்று உறுதியாக கூறலாம் ,

இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவா நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போது தான் வந்துள்ளது இந்திய அரசு

விரைவில் நதி நீர் இணைப்பு சாத்தியமே!!

இதற்கு நான் என்ன செய்யனும்.

இதில் உள்ள நன்மைகளை படித்தவர்களுக்கு பரப்பி படிக்காத பாமரர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

(நான் செய்து விட்டேன்..நீங்கள் செய்வீர்களா??!!)                                                           🙏