புதன், 19 ஜூலை, 2017

நாக்கில்லா சுறாமீன் உணவை விழுங்குவது எப்படி?



நாக்கில்லா சுறாமீன் உணவை விழுங்குவது எப்படி?

சுறாமீன் தோள் பட்டையை அசைத்து அசைத்தே உணவை விழுங்குகிறது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நடுக்கடலில் வாழும் சுறா மீன் பற்றியும் அதன் குணாதிசயங்களைப்பற்றியும் தெரிந்துகொள்வதற்காக அலாஸ்கா மற்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.

சுறா மீனுக்கு நாக்கு கிடையாது என்பதும் சுறா மீன் தனது பட்டையின் அசைவுகளை வைத்தே தன் உணவுகளை விழுங்குகிறது என்பதும் இந்த ஆய்வின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன எக்ஸ் ரே (X-ray)  இமேஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆராய்ச்சியை அவர்கள் பாம்பூ சுறா மீன் (bamboo Shark ) என்னும் குறிப்பிட்ட மீன் வகையை வைத்து செய்துள்ளனர்.

சுறா மீன் தனது பகுதியில் ’U’ வடிவம் கொண்ட குருத்தெலும்புகள் மற்றும் வெவ்வேறு தசைகளைக் கொண்டுள்ளது. சுறா மீன் தன் இரையை உறிஞ்சி எடுக்கும் தனித்தன்மை வாய்ந்த மீன் ஆகும். இரையை உறிஞ்சி எடுத்த பின் பகுதியின் அசைவுகளின் மூலம் தான் உட்கொள்ளும் இரையை வயிற்றப் பகுதிக்கு அனுப்புகிறது. இந்த குருத்தெலும்புகள் மீனின் வாய் மூடிய சில நொடிகளிலேயே உணவை வால் வரைக்கும் அனுப்பி விடுகிறது.

இந்த ஆராய்ச்சி சுறா மீனை வைத்து மட்டும் நடத்தப்பட்டாலும் இதே போன்றுதான் உணவை உறிஞ்சி இழுக்கும் எல்லா சுறா வகைகளும் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் எல்லா முடிவுகளும் ப்ரொசீடிங்ஸ் பி (Proceedings B) என்னும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக