செவ்வாய், 18 ஜூலை, 2017

தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா.



தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா.

_தனியார் பள்ளிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதால் தன்னுடைய ஒரே மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன் உதாரணத்தை உருவாக்கியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி லலிதா._

_லலிதா தனது ஒரே மகள் தருணிகாவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார். தற்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கின்றார்._

_அரசுப் பள்ளிகள் குறித்து பலரும் தவறான கண்ணோட்டத்தை வைத்திருக்கும் நிலையில் ஐஏஎஸ் பணியில் இருக்கும் அதிகாரி மாநகராட்சிப் பள்ளியில் தனது ஒரே மகளை சேர்த்திருப்பது மற்ற அனைவரின் மனசாட்சியிலும் சாட்டையடி கொடுக்கும் என்பதோடு, இவர் அரசு அதிகாரிகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக