புதன், 19 ஜூலை, 2017

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான எம்ஆதார் அப்ளிக்கேஷன் அறிமுகம்



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான எம்ஆதார் அப்ளிக்கேஷன் அறிமுகம்

UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India) எம்ஆதார் அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஆதார் அப்ளிக்கேஷனை பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் ஆதார் எண்ணுடம் இணைந்து பெயர், பிறந்த தேதி, பாலினம், விசாலம் மற்றும் படம் ஆகியவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் காணலாம்.

இந்த எம்ஆதார் அப்ளிக்கேஷன் ஏற்கனவே கூகுள் ப்ளேவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. தற்போது எம்ஆதார் அப்ளிக்கேஷனை அனைத்து ஆண்ட்ராய்டு செல்ஃபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் (IOS) ஸ்மார்ட்போன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து, ஆதாரின் முழு விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.

பயனர்களால் தங்களது தனிநபர் விவரங்களையும் புதுப்பித்த பிறகு வெற்றிகரமாகப் பெற்றுக்கொள்ள முடியும். எம்ஆதார் அப்ளிக்கேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டும் என்றால், உங்கள் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த ஆப் வைத்திருந்தால், எல்லா இடத்திற்கும் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் ஆதார் மூலம் கிடைக்கும் சேவைகளுக்கும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அப்ளிக்கேஷன் மூலம் தனிநபர் ஒருவர் தனது ஆதார் விவரங்களை லாக் மற்றும் அன்-லாக் செய்து கொள்ளவும் முடியும். இந்த எம்ஆதார் அப்ளிகேஷன் எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஓடிபி(OTP)யை பயன்படுத்துவதற்கு பதிலாக டைம் அடிப்படையிலான ஓடிபி(TOTP) பயன்படுத்தப்படுகிறது.

பயனர்களால் தங்களது தனிநபர் விவரங்களையும் புதுப்பித்த பிறகு ஸ்மார்ட்போனில் விவரங்களை காணலாம். இதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வேலை உங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும். QR குறியீடு மற்றும் கடவுச் சொல் ஆகியவை பாதுகாப்புடன் பரிமாறிக் கொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்ளிக்கேஷன் தற்போது பீட்டா வெர்ஷனில் தான் உள்ளது என்றும் வரும் காலத்தில் இன்னும் சில மேம்படுத்துதல்களுடன் வரும் என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 1 முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக