புதன், 26 ஜூலை, 2017

மதி செய்திகள் 7am -26-7-2017-wednesday

மதி செய்திகள் 7am -26-7-2017-wednesday

♈🇮🇳  பாரதிய ஜனதா கட்சியில் ஓபிஎஸ் அணி இணைய வேண்டும் என டெல்லி நெருக்கடி கொடுப்பதால் தமிழகம் முழுவதும் இது தொடர்பாக ஆதரவாளர்களிடம் திடீரென ரகசியமாக கருத்து கேட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது

♈🇮🇳  குஜராத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ. 500 கோடிக்கு மேல் நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

♈🇮🇳  பெப்சி அமைப்பின் தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்துப் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது

♈🇮🇳  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கட்டாயமாக ஆட்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் புலிகளின் இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
♈ 🇮  கிரிக்கெட்: இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் இன்று துவக்கம்-

♈ 🇮  கவர்னர், முதல்வர் இன்று மதுரை வருகை

♈ 🇮🇳   கடலூர்-திருச்சி பஸ்கள் இயக்கமில்லை   -விஸ்வரூபம்

♈ 🇮🇳   மேற்குவங்க மாநில நிலைமை: ராஜ்நாத்துடன் முதல்வர் மம்தா ஆலோசனை

♈ 🇮  சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயர் பரிந்துரை.

♈ 🇮  நீட் தேர்விலிருந்து விலக்கு; பிரதமர் பரிசீலிப்பதாக உறுதி: பழனிசாமி

♈ 🇮  ராமேஸ்வரம்-தனுஷ்கோடி சாலை : ஜூலை 27-ல் திறந்து வைக்கிறார் மோடி

♈ 🇮  எச் - 1 பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி உள்ளது.

♈ 🇮  சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் கூறியதாவது: முதலீட்டாளர்களின் பணத்தை, 'செபி'யிடம், செலுத்துவதாக கூறிய, 1,500 கோடி ரூபாயில், முதல் தவணையாக, 552 கோடி ரூபாயை செலுத்துவதாக, சுப்ரதா ராய் தெரிவித்திருந்தார். ஆனால், 247 கோடி ரூபாயை மட்டுமே செலுத்த முடிந்தது. மீதமுள்ள தொகையை, ஆகஸ்டுக்குள் செலுத்தி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.இதன்பின், நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:சுப்ரதா ராய், மீதமுள்ள தொகையை அவர் கூறியபடி செலுத்தலாம்; எனினும், ஜூன் மாத்திற்குள் செலுத்துவதாக கூறிய, 1,500 கோடி ரூபாயை, செப்., 7க்குள் செலுத்த வேண்டும்; அதற்கு மேல் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

♈ 🇮  அரசுக்கு, விவசாயி ஒருவர் தானமாக அளித்த நிலத்தை, சத்தீஸ்கர் அமைச்சரின் மனைவி, தன் பெயருக்கு மாற்றியதுடன், அங்கு,அரசின் அனுமதியுடன், சுற்றுலா விடுதி கட்டி வருகிறார்

♈ 🇮  திருவண்ணாமலை அருகே க.வாளவெட்டி கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்--

♈ 🇮  புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நேற்று 105வது நாளாக ேபாராட்டம் நீடித்தது. அப்போது, மத்திய,மாநில அரசுகளை கல்லால் அடித்து விரட்டுவதுபோல் சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து,விவசாயிகள் கூறுகையில், `இத்திட்டத்திற்கு எதிராக 105வது நாளாக போராடி வருகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி,இந்த பிரச்னையில் அவசர சட்டம் கொண்டு வந்து திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றும் வரை   போராட்டம் தொடரும்’ என்றனர்

♈ 🇮  பியட் கார் விற்பனையாளர் ராம்கே பியட் வழங்கும் மாபெரும் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லோன் மேளா பெருங்குடியில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் ,27,28,29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து பியட் நிர்வாகம், ‘‘இந்த மேளாவில் எந்த மாடல் பழைய காரையும் மாற்றி புதிய பியட் காரை ஓட்டிச் செல்லுங்கள். மேலும் குறைந்தபட்ச நிச்சய பண மதிப்பு ₹1 லட்சம் பெறுங்கள். மேலும் இதே மேளாவின் சர்வீஸ் முகாமில் மழைக்காலம் தொடங்கும் முன்பே வாகனங்களை தள்ளுபடி முறையில் சர்வீஸ் செய்துகொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளது

♈🇮🇳  சென்னை: கோட்டூபுரம் பொன்னியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் பள்ளியில் அபிராமபுரத்தை சேர்ந்த விஜயன் (9),சிபேஸ்வரன் (12), ஜோதிசிவம் (11),அரவிந்த் (10) ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பொன்னியம்மன் கோயில் எதிரே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது காந்தி மண்டபத்தில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி வந்த கார் 4 மாணவர்கள் மீது மோதியது. இதில் 4 மாணவர்களும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்

♈🇮🇳  திருவொற்றியூர் : மணலி புதுநகரைச் சேர்ந்தவர் செல்வம் (48). அங்குள்ள சாலையோரம் தள்ளு வண்டியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் சிற்றுண்டியை செய்து கொண்டிருந்தார். அப்போது, வண்டியின் கீழே இருந்த காஸ் சிலிண்டர் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே, செல்வம் மணலி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் தள்ளுவண்டியும், பக்கத்தில் இருந்த மேலும் இரண்டு சாலையோர கடைகளிலும் தீ பற்றி எரிந்தது. உடனே, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீயிச்சி அடித்து அணைத்தனர்

♈🇮🇳  திருவண்ணாமலையில் கடந்த 7 நாளாக. ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் 22 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். அதில், 2,400இளைஞர்கள் உடல் தகுதி மற்றும் மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கான தேதி, இடம் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும், நுழைவு சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 2இளைஞர்கள் போலி சான்று மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்

♈🇮🇳  தொடர்ந்து இரண்டாவது நாளாக 10கிராம் சுத்த தங்கத்தின் விலை உயர்ந்து விற்கப்பட்டது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.    உலகளவிலான போக்கு, உள்ளுர் நகைக் கடை உரிமையாளர்களின் வாங்கும் ஆர்வம் போன்ற காரணங்களால் சுத்த தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. நேற்றுமுன் தினம் 160 உயர்ந்திருந்த நிலையில்,  நேற்று 10 கிராம் சுத்த தங்கம் 90அதிகரித்து 29,400க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ( 8 கிராம்) விலை மாற்றமின்றி 24,400ஆக இருந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. அது முந்தைய நாள் விலையான (கிலோ) 39,100க்கு விற்கப்பட்டது. வார அடிப்படையில் வெள்ளி விலை 70 உயர்ந்து 38,180 ஆக காணப்பட்டது

♈🇮🇳  இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு அங்குள்ள வெப்ப நிலையை பொருத்து டயர்ட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுக்காத விராட் கோஹ்லி கூட இப்போது அரிசி சாதம் சாப்பிட்டுக் கொண்டுள்ளார். புவனேஸ்வர்குமாரும், உமேஷ் யாதவும், சோற்றில் தயிரை கலந்து கட்டி சாப்பிட்டுக்கொண்டுள்ளனர். வெப்பமான தட்பவெப்பம் நிலவுவதால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழக்கத்தைவிட சற்று மாறுபட்ட டயர்ட் சாப்பாடு தரப்படுகிறது. இந்திய வீரர்கள் அடுத்த மாதம் இறுதிவரை இலங்கையில் தொடர்ந்து 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டியுள்ள நிலையில், வீரர்களின் டயர்ட் லிஸ்டை இங்கே பாருங்கள்.காலை 8மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அன்னாசி,வாழை, ஆரஞ்சு, அவோகடோ, கார்ன் ப்ளாக்,கோதுமை ப்ளாக், சோகோ போப்ஸ், உலர்ந்த திராட்சை, ஆடை நீக்கிய பால், பாதாம், ஜாம்,செயற்கை வெண்ணை, தேன், ஆரஞ்சு பழச்சாறு,பிரவுன் பிரெட், பலதானியம், கொழும்பு குறைந்த வெண்ணை, துண்டாக்கப்பட்ட சிக்கன், மீன்,அவித்த முட்டை, வெட்டப்பட்ட தக்காளி,வெள்ளரிக்காய், வெங்காயம், லெட்யூஸ், டீ, காபி,கிரீன் டீ. இந்த உணவுகளில் விரும்பியதை சாப்பிடலாம். மதிய உணவு மதியம் 12 மணிக்கு வழங்கப்படுகிறது. மக்காச்சோள சூப், பிரெட் ரோல், நான், காய்கறி சலாட், பீட்ருட் சலாட், சோறு,தயிர் சோறு, சிக்கன் கபாப், சிக்கன் மஞ்சூரியன்,டால் நவ்ரத்னா, பிண்டி, அவித்த கா்யகறிகள்,கொழுப்பு குறைந்த தயிர், அப்பளம், இந்திய ஊறுகாய், வாழைப்பழம், ப்ரூட் சலாட், யோக்கர்ட்,கிங் கோக்கனட் வாட்டர். மாலை 2.30 மணிக்கு தந்தூரி சிக்கன் சான்ட்விச் அல்லது மட்டன் ரேப்ஸ், ப்ரூட் கேக், குக்கீஸ், பிஸ்கட்ஸ், டீ, காபி,கிரீன் டீ. இவற்றில் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். போட்டிக்கு பிறகு மாலை 5 மணிக்கு உணவு வழங்கப்படுகிறது. சோறு, சிக்கன் மகானி, மஞ்சள் பருப்பு, பன்னீர் புர்ஜி, நான், ப்ரூட் பிளாட்டர். ஆகியவை வழங்கப்படும். இதுதவிர இந்திய உணவு வகைகளை சாப்பிடவும் வசதி உள்ளது. உதாரணத்திற்கு கார்ன் பாலக், உருளை மேதி,சிக்கன் தந்தூர், பனஅனீர் லாபப்டார் போன்றவற்றை சாப்பிடலாம்.


  5pm -26-7-2017-wednesday

♈ 🇮🇳  சசிகலா சிறை வீடியோ: விலை ரூ.25லட்சம்? டி.ஐ.ஜி., ரூபாவுக்கு, சிறையில் நடக்கும் விதிமுறைகள் அனைத்தையும் ஏற்கனவே வீடியோ படம் எடுத்து வைத்திருக்கும் சசிகலாவைத் தவிர்த்த மற்ற கைதிகள், அதை கொடுத்துத்தான், பிரச்னையை கிளப்ப தூண்டியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில்,அந்த வீடியோ பதிவுகளை, நிறைய பதிவெடுத்து வைத்திருக்கும் கைதிகள்,தங்கள் உறவினர்கள் மூலமாக அதை வெளியே கொடுத்து அனுப்பி உள்ளனர். அதை அறிந்திருக்கும் பத்திரிகையாளர்கள், போட்டிப் போட்டுக் கொண்டு அந்த வீடியோ பதிவுகளை பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இப்படித்தான்,ஏற்கனவே சசிகலா சிறையில் சல்வார் கமீஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட் பையுடன் உலாவரும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு வெளிவந்தது.
இந்நிலையில் அந்தக் காட்சிகள் தவிர, வேறு பல காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவும் கைதிகளின் உறவினர்களிடம் இருப்பதாக அறிந்த பத்திரிகையாளர்கள்,ரூபாய் பத்து லட்சம் ரூபாய் வரையில் கொடுத்தாவது, அதை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ஆனால், கைதிகளின் உறவினர்கள் இருபத்தைந்து லட்ச ரூபாய் வரை கேட்பதாக தகவல் பரவி உள்ளது

♈ 🇮🇳  ஆதார் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டது தான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. ஆதார் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் இன்று பதிலளித்த மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், "தனிமனித சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே ஆகும். அது அடிப்படை உரிமையாக அனுபவிக்க முடியாது" என்று வாதிட்டுள்ளார்

♈🇮🇳  "அவர் போய் SRM யில் அட்மிட் ஆயிட்டாராமே?""SRMஎன்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த கல்வித்தந்தை கேஸ் என்ன ஆச்சு?""அவருக்கென்ன ராஜா போல இருக்கார்!""ராஜா என்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த 2G கேஸ் என்ன ஆச்சு?""கெணத்துல போட்ட கல்தான்."."கல் என்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த graniteகேஸ் என்ன ஆச்சு?""அங்கே இங்கே நகராம   மலையா நிக்குது.""மலையா  என்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த மல்லையா  கேஸ் என்ன ஆச்சு?""அவரே மனசு மாறனும் இந்தியா திரும்பனும்.. அப்பால த்தான் கேஸ் நடக்கும்..""மாறனும்  என்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த மாறன் (aircel) கேஸ் என்ன ஆச்சு?""அது சிதம்பர ரகசியம்பா!""சிதம்பரம் என்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த சாரதா நிதி நிறுவன மோசடி கேஸ் என்ன ஆச்சு?""ஐயோ மேலே ஒன்னும் கேக்காதே குடிச்சா மாதிரி தலை சுத்துது.""குடிச்சா மாதிரி என்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த மிதாஸ் மது தொழிற்சாலை ஊழல்  கேஸ் என்ன ஆச்சு?""சங்கரா மகாதேவா நீதான் என்னை இவன்டேந்து காப்பத்தனும்!"."சங்கரா என்றவுடன் ஞாபகத்துக்கு வருது .. அந்த சங்கரராமன் கேஸ் .. ஆ ஐயோ கட்டையிலே அடிக்காதே இனிமே கேக்கலை!!"கட்டை என்றதும் ஞாபகம் வந்துச்சு... அந்த செம்மரக் கட்டை கடத்தல் கேஸ் என்ன ஆச்சு? அதுல செத்தவங்களுக்கு பாலை ஊத்தியாச்சே!!பால்  என்றதும் ஞாபகம் வந்துச்சு? அந்த ஆவின் பால் கலப்பட கேஸ் என்னாச்சு?உஸ்ஸ்ஸ்ஸ்....தாங்க முடியல சாமி.சாமினு சொன்ன உடனேதான் ஞாபகம் வருது. சாமி சிலை திருட்டு கேஸ் என்ன ஆச்சு?ஐயையோ இவன ஏதாவது கண்டெய்னர் லாரியில ஏத்தி மொழி தெரியாத இடத்துல கொண்டு போய் விட்டிருங்கலே...கண்டெய்னர் லாரி னு சொன்ன உடனே தான் தோணுது. 570 கோடி மேட்டரு என்ன ஆச்சு‍ ?ட்ரெயின் கொள்ளை என்னாச்சு – தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு சம்பவம் என்னாச்சு .

♈🇮🇳  கதிராமங்கலம்: அண்ணா பல்கலை. மாணவர் குபேரனுக்கு ஜாமீன்
♈ 🇮  வெங்கய்யாவின் விடுகதை.. பொன்னாரின் புதுக்கதை.. தமிழிசையின் தனிக்கதை.. அதிமுக பொளேர்- வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் திடீரென பாய்ந்து சாடியுள்ளது-விஸ்வரூபம் -

♈ 🇮  ஆகஸ்ட் 5ல் அதிமுக தலைமை அலுவலகம் வரும் டிடிவி தினகரன்... அடிதடி நடக்குமா?

♈ 🇮🇳   திமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கருத்து கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதியான போராட்டத்தை எப்படி தடுக்க முடியும் என்று கேட்டுள்ளார்.

♈ 🇮🇳   நடவடிக்கை எடுப்பாரா தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால்??ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஐந்து முதல் அதிகபட்சம் ஏழு பேர் உதவிக்கு வருகிறார்கள். கடினமாக உழைக்கும் தொழிலாளர்களைவிட அதிக சம்பளம் வாங்குவது இவர்கள்தான்.ஒரு சிகரெட் நடிகருக்காக வாங்கப்பட்டால் அதுவும் தயாரிப்பாளர் கணக்கில்தான். கேரவேன் செலவு, இவர்களுக்கான ஃப்ளைட், அல்லது ட்ரெயின் டிக்கெட்? தயாரிப்பு சாப்பாடு போட்டால் சாப்பிடமாட்டார்கள் நடிகர்கள், நடிகைகள். வேற எங்கேயாவது ஆர்டர் பண்ணுவார்கள். பில் கண்ணைக் கட்டும். இதே நடிகர் சங்கம் நடத்திய விழாவிற்கு வந்த ஒரு நடிகை தன்னுடன் நடித்த இரு நடிகர்களை அறைக்கு அழைத்து குடி குடி யென குடித்ததில் அறுபதாயிரத்துக்கும் மேல் பில். இதே நடிகர் சங்கச் செயலாளர் அதை திட்டித் தீர்த்தார். ஒருநாளுக்கே இப்படியென்றால் அறுபது நாள் படப்பிடிப்பு நடத்தும் தயாரிப்பாளன் எங்கே போவான்? - சுரேஷ் காமாட்சி, இயக்குநர் &தயாரிப்பாளர்

♈ 🇮  அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் கொங்கு எம்.எல்.ஏக்கள் தொகுதி பிரச்சனையை முன்வைத்து வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி குடைச்சல் கொடுக்கும் முடிவில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

♈ 🇮  கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில்10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
♈ 🇮  மான்ட் டி மார்சன்: கால்பந்துப் போட்டி சவாலில் தோற்ற மேயர் சொன்னப்படி எலிக்கறி சாப்பிட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮  மும்பை விமான நிலையத்தில் செல்போனில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டுவந்த ஏர் இந்தியா பணியாளர் கைது செய்யப்பட்டார். செல்போன் பேட்டரி பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். அவரிடம் 400 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

♈ 🇮  மதுரை : சிந்து கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான 106கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

♈ 🇮  எஸ்பிஐ வங்கி சென்னை மாநகர காவல்துறைக்கு 100 ஸ்வைப்பிங் மெஷின்களை வழங்கியது. இதன்மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு பணம் செலுத்த மற்றும் பணப் புகார்களை தவிர்க்க கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

♈ 🇮  சென்னை வடபழனியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை-

♈ 🇮  பிரிவினைவாத தலைவர் சாபிர்ஷாவை விசாரிக்க அனுமதி

♈ 🇮  நாமக்கல்லில் பெண் பலாத்காரம்: சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள்

♈🇮🇳  குஜராத் வெள்ளத்திற்கு இதுவரை 82 பேர் பலி

♈🇮🇳  ஆன்லைன் மணல் விற்பனையில் முறைகேடு: அதிகாரிகள் விசாரணை

♈🇮🇳  சசிகலா பாணியில், நடிகர் திலீப் கேரள கிளை சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது


இரவு செய்திகள்@26/7/17..

ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி விலகாததை அடுத்து முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்து உள்ளார்.

பீகார் மாநில நலனுக்காக ராஜினாமா : நிதிஷ்குமார்

கூட்டணி தர்மத்துக்காக இதுவரை அமைதி காத்து வந்தேன் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த பின் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி அளித்தார்.

பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பீகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்  கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலகிய நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மாட்டான் என்ற இடத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.   பதுங்கியுள்ள 3 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடப்பதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ஹட்சன் நிறுவனத்தின் பாலில் காலாவதியான ரசாயனம் கலப்பு என்பது நிரூபிக்கப்பட்டது.
என்னை மிரட்டும் நோக்கத்தில் ஹட்சன், டோட்லா, விஜய் பால் ஆகிய நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது
நீதிமன்றத்தில் 3 நிறுவனங்களும் தங்களது பாலில் ரசாயனம் கலக்கவில்லை என்பதை நிரூபிக்க முடியாது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மாணவர்களின் கவனத்தை தேசப்பற்றின் பக்கம் திசைதிருப்ப வேண்டும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கதிராமங்கலத்தில் வெள்ளை சாயம் பூசி வேற்றுகிரகவாசி போல் போராட்டம்
தமிழக விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பாராமுகம் காட்டுவதாக போராட்டம்
ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறக் கோரி போராட்டம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.

சென்னை வடபழனியிலுள்ள மின்வாரிய அதிகாரி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் சாஸ்திரிபவன் முன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
பிற மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அன்றைய தினத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தலைமை நீதிமன்றம் நீக்கி உள்ளது

ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு பழ. நெடுமாறன் வரவேற்பு
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல என்று உறுதியாகியுள்ளது
விடுதலைப் புலிகள் மீதானத் தடையை இந்தியாவும் நீக்க வேண்டும் என நெடுமாறன் கோரிக்கை

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு பிரதமரிடம் வலியுறுத்தல்: ஓ.பி.எஸ்.

நீட் தேர்வுக்கு திமுக போராடுகிறது: வைகோ

இலங்கை அரசுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்: ஸ்டாலின்

கேரளா மாநிலம் மலப்புரத்தில் என்ஆர்ஐ எனப்படும்  வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரை கடத்த  முயன்றதாக பாஜக தலைவர் உட்பட 7 பேரை கேரள போலீசார்  கைது செய்யப்பட்டனர்.

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட துபாய் நிறுவன பெண் இயக்குனரின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வன்கொடுமையை தடுப்பதற்காக திருமண பதிவை கட்டாயப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் தனது லோகோ-வை மாற்ற முடிவு செய்துள்ளது.
புதிய லோகோ மிகவும் இளைமைதுவமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ள தூர்தர்ஷன் இதற்காக போட்டியை அறிவித்துள்ளது.

சசிகலா பாணியில், நடிகர் திலீப் கேரள கிளை சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் கனமழை, வெள்ளம் என பல்வேறு விபத்து சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்து உள்ளது.

ஜப்பான் நாட்டின் ஓகினாவா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக கணக்கிட்டப்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இலங்கையில் பெட்ரோலிய தொட்டிகளை இந்தியா மற்றும் சீனாவிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தத்தை சமாளிக்க ராணுவம் களமிறங்கியுள்ளது

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஒட்டுமொத்தமான தீர்மானம் ரஷ்யாவுடனான சிறந்த உறவுகளை சிதைக்கும் என்கிறது அந்நாடு.

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியா உதவ முடியும் என்று அதன் தூதர் அல்ஹைஜா நம்பிக்கைத் தெரிந்தார்.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 399 ரன்கள் குவித்துள்ளது. ஷிகர் தவான் மற்றும் புஜாரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக