MATHI NEWS 8am -27-7-2017-thursday..
♈ 🇮🇳 ஜிம்பாப்வேயில் பாதிரியார் ஒருவரை கட்டிவைத்து 3இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.பிற ஆண்களை போல் பாதிரியாருக்கும் பெண்கள் மீது மோகம் இருக்கும் என நிரூபிக்க இப்படி செய்ததாக அந்த பெண்கள் கூறியுள்ளனர்.நாங்கள் தொட்டதும் அவரும் எங்களது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் எனவும் பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.பெண்கள் வாக்குமூலம் பாதிரியார் மறுத்துள்ளார்
♈ 🇮🇳 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் மொய்விருந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்
♈ 🇮🇳 அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் 150பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அனுமதி வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் பணியாற்றும் 150 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 150 பள்ளி ஒன்றுக்கு 5பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படுகிறது.தரம் உயர்த்தப்படுவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையான தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் பெறும் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம்150 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகள், பணியிடங்கள், தற்போது உள்ள வழிமுறைகள், விதிகளின்படி நியமனம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
♈ 🇮🇳 இயற்கை பேரிடர்கள், விபத்துகள், அகதிகளாக தஞ்சம் அடைவது, பாதுகாப்பான வழி,நிலநடுக்கம், மீட்புப்பணி, அவசர கால மொபைல் எண்கள் ஆகியவற்றை எஸ்.ஓ.எஸ்., எச்சரிக்கைகளாக கூகுள் மேப்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான தகவல்களை சேகரிக்கவும் குழு ஒன்றை அமைத்துள்ளது. இத்திட்டம் முதல்கட்டமாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்,கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு நடைமுறைக்கு வருகிறது.
♈ 🇮🇳 மாதம் ரூ.1500 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களின் ரேஷன் சலுகைகளை ரத்து செய்ய உள்ளதாக கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
♈ 🇮🇳 ''ஜாதி, இனம், மதம், மொழி அடிப்படையில் நடக்கும் வன்முறைகளை தடுக்க, இந்திய குற்றவியல் சட்டத்தில், புதிய ஷரத்துக்கள் சேர்ப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது,''என, உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜுஜு, ராஜ்யசபாவில்தெரிவித்தார்.
♈ 🇮🇳 'நாடு முழுவதும், 18 ஆயிரம், என்.ஜி.ஓ.,எனப்படும், அரசு சாரா அமைப்புகள், ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக, தங்கள் வருவாய் கணக்கை தாக்கல் செய்யவில்லை' என, ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜுஜு, எழுத்து மூலம் பதில் அளித்தார். மத்திய அரசு உத்தரவுப்படி, 8,000, என்.ஜி.ஓ.,க்கள், தங்கள் வருவாய் கணக்கை முறைப்படி தாக்கல் செய்து வருவதாகவும், அவர் கூறினார்.
♈ 🇮🇳 தமிழகத்தில்,அ.தி.மு.க.,வில், பன்னீர் அணி, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என,மூன்று அணிகள், தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. கட்சி நிர்வாகிகள் யாரேனும் இறந்தால், அவர்கள் எந்த அணியில் இருந்தனரோ, அந்த அணியின் தலைவர், இரங்கல் செய்தி வெளியிடுகிறார். சில நிர்வாகிகள் இறப்புக்கு, இரு அணிகள் சார்பில், தனித்தனியே இரங்கல் செய்தி வெளியிடப்படுகிறது; மற்ற அணிகள் கண்டு கொள்வதில்லை.
♈ 🇮🇳 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.07 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.93காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 27)காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
♈ 🇮🇳 மத்திய அரசு துறைகளில், 2016 - 17 நிதியாண்டில், புதிதாக, 7,900 பதவிகள் உருவாக்கப்பட்டதாக, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திரா சிங்,லோக்சபாவில்தெரிவித்தார். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, இந்த பதவிகள் உருவாக்கப்பட்டதாக, அமைச்சர் கூறினார். மேலும், ''தனியார் துறையில் உள்ள திறமையான நிர்வாகிகளை, மத்திய அரசு துறைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் பரிசீலனையில் உள்ளது,'' அவர் தெரிவித்தார்.
♈ 🇮🇳 ''ரப்பர் வாரியத்தை மூடும் திட்டம்பரிசீலனையில் இல்லை,''என, ராஜ்யசபாவில், வர்த்தகம் மற்றும தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ரப்பர் வாரியம், காபி வாரியம் ஆகியவற்றுக்கு உறுப்பினர்களாக, தலா, ஒரு, எம்.பி.,யை நியமிப்பதற்கான தீர்மானத்தை,ராஜ்யசபாவில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
♈ 🇮🇳 ரயில் டிக்கெட்டுகளை வாங்கி, அதிக விலைக்கு விற்றல், டிக்கெட் வாங்காமல் பயணம்,ரயில்களில் அளிக்கப்படும் வசதிளை தவறாக பயன்படுத்துதல் போன்றவற்றை தடுக்க, ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளதாக, லோக்சபாவில், ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்தார்-.
♈ 🇮🇳 நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க., இன்று மனித சங்கிலி போராட்டம்.
♈ 🇮🇳 அப்துல் கலாம் தேசிய நினைவகம்; பிரதமர் மோடி இன்று திறப்பு.
♈ 🇮🇳 ஸ்ரீவில்லிபுத்துரில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்-.
♈ 🇮🇳 சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்.
♈ 🇮🇳 குற்றாலத்தில் இன்று முதல் சாரல் விழா.
♈ 🇮🇳 நிதிஷ் மீண்டும் முதல்வராக இன்று (ஜூலை 27 ) பதவியேற்கிறார்.
♈ 🇮🇳 பாகிஸ்தானில் பஞ்சாயத்து தீர்ப்பினை அடுத்து 16 வயது சிறுமி அவளது குடும்பத்தினர் முன்னாலேயே கற்பழிக்கப்பட்டு உள்ளார்-.
♈ 🇮🇳 சென்னை: திருவள்ளூர் அருகே பொன்னேரியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. தத்தை மஞ்சி ஏரியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்-.
♈ 🇮🇳 ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. பலமு மாவட்டம் செயின்பூரில் இருந்து ராஞ்சி நோக்கி ஒரு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியரும், அவரது உறவினர்களும் வந்தனர். நேற்று அதிகாலை2.30 மணியளவில் லோகர்தாகா மாவட்டத்தில் உள்ள சித்தோயா பாலத்தை ஆம்புலன்ஸ் கடக்க முயன்றது. அப்போது,கோயல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் ஆம்புலன்சின் இன்ஜின் பழுதாகி நின்றது. ஆற்று வெள்ளம் அடித்துச்சென்றதால் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உட்பட 4பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்கள்.2பேர் உயிர் தப்பினர்.
♈ 🇮🇳 கர்நாடகாவில் கலபுர்கி சிறையில் கண்காணிப்பு அதிகாரி வசந்தசுல்லி தலைமையில் கைதிகளிடம் நேற்று சோதனை செய்யப்பட்டது. அதற்கு கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த ஒரு கைதி, சோதனை நடத்திய போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். உடனே, கூடுதல் போலீசார் அழைக்கப்பட்டு தாக்குதல் நடத்திய கைதி ரவுடி மார்க்கெட் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து, நடந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து ரூ.1.20 லட்சம் ரொக்கம், 6 கஞ்சா பொட்டலம், 5 செல்போன்கள், கத்தி, கத்தரிக்கோல், கார்ட் ரீடர், 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
♈ 🇮🇳 சென்னை :திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் மாலை சகிதம் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஸ்கூட்டரில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், மணலி,அம்பேத்கார் நகரை சேர்ந்த ரமேஷ் (26) என தெரியவந்தது. மேலும், திருவல்லிக்கேணி,ஜாம்பஜார் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், ஜவுளிக்கடைக்காரர் சரவணன் வீட்டில் கொள்ளையடித்தும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேஷை கைது ெெசய்தனர்.
*செய்திகள்@27/7/17🔵*
ராமேஸ்வரம் புனித யாத்திரை வருபவர்கள், கலாம் மணிமண்டபத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
விழா மேடையில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி பேசினார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியாவின் அக்னியாகத் திகழ்ந்தவர் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்
உண்மை, உழைப்பு, தன்னம்பிக்கையால் உச்சத்தை தொடமுடியும் என்பதற்கு அப்துல்கலாம் உதாரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்
ராமேஸ்வரம் - அயோத்தி ரயில்சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் கலாம் நினைவகத்தை பொது மக்கள் பார்வையிட அனுமதி
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி தரம் சிங் மாரடைப்பால் இன்று காலமானார்.அவருக்கு வயது 80.
பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதாவிற்கு இரு அவைகளிலும் ஆதரவு அளிப்போம் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்து உள்ளது.
ஸ்டாலின் கைதுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
மதுரையில் மோடியை சந்திக்கிறார் ஓபிஎஸ்
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பாரிமுனையில் உள்ள கல்லூரி வாயிலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மதுரை காலவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 9 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய சமூகநல அலுவலர் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். குஜிலியம்பாறை ஊராட்சியில் திருமண உதவித்தொகை வழங்க ரூ.2000 லஞ்சம் பெற்ற ரேணுகாவை லஞ்ச ஒழிப்புதுறை கைது செய்தது. கோவில்பட்டி ஆறுமுகம் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய போது அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கும்பகோணம் அருகே இன்னம்பூரில் பஞ்சு வியாபாரி சேகர் என்பவரின் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து நகை மட்டுமின்றி ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்தனர்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை உள்ளது என்றும் அதனை தற்போது மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்
நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் என காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் மணிமாறன் புகார் மனு அளித்துள்ளார். நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனபால் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.12 கோடி லஞ்ச புகார்: அமைச்சர் அன்பழகனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
திமுக எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கு: எம்.எல்.ஏ., போஸ் பதிலளிக்க உத்தரவு
சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி கொடுக்கபட்டதாக தகவல் வெளியானது இதைதொடர்ந்து ‘இந்தியா டுடே’ இணையத்தில் கேலி சித்திர வீடியோ வெளியிட்டு உள்ளது.
கட்சி நட்பு குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்
நிதிசுடன் கூட்டணி வைத்தது பெரிய தவறு: ராப்ரி தேவி
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி ஆகியோர் கொலை குற்றம் சாட்டி வருகின்றனர்.
பீகாரில் நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தேஜஸ்வி யாதவ் முடிவு செய்துள்ளார்.
நிதீஷ் குமார் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று லாலு பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமார் ஆறாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பாகிஸ்தானில் பஞ்சாயத்து தீர்ப்பினை அடுத்து 16 வயது சிறுமி அவளது குடும்பத்தினர் முன்னாலேயே கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
திருநங்கைகளுக்கு இனி அமெரிக்க ராணுவத்தில் இடம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
7.30pm -27-7-2017-thursday
♈ 🇮🇳 ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகின்றனர் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள். முதல் விக்கெட்டாக கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுகுட்டி எம்எல்ஏதான் அணி மாறினார். மேலும் சிலரை தங்கள் வசம் இழுத்து ஓபிஎஸ் அணியை வலுவிழக்கச் செய்யவேண்டும் என்று ஈபிஎஸ் அணியினர் முயற்சி செய்கின்றனர்
♈ 🇮🇳 பீகாரைப் போல எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்பதால் புதுச்சேரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
♈ 🇮🇳 தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.'அரியர்ஸ் வைக்காதவன் அரைமனிதன்' என்ற கல்லூரி பழமொழிக்கு முடிவு கட்டப் போகிறது அண்ணா பல்கலைக்கழகம்.
♈ 🇮🇳 அனைத்து பிரச்சனைகளிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிக்கைகள் வெளியிடுகின்றன...ஆர்ப்பாட்டம் போராட்டம் என போர்ப்பாட்டு பாடுகின்றன... ஆனாலும் தமிழக உரிமைகள் காவு கொள்ளப்படுவதும் மக்கள் விரோத திட்டங்கள் திணிக்கப்படுவதும் தொடருகின்றன. இவற்றை தடுக்கவும் தட்டிக்கேட்கவும் திராணியற்றதாக திணறிக் கொண்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் பேரவலம்.
♈ 🇮🇳 சென்னை ராயபுரத்தில் ரயில்வே பணிகளின் காரணமாக மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள், வழக்கமாக சுங்கச்சாவடியில் இருந்து கடற்கரை வழியாக மிக வேகமாக செல்லும் 6 டி பேருந்து, மெதுவாக சாலைகளை கடந்து செல்கிறது. இதற்கு காரணம் வழித்தடம் மாற்றம் தான்,. வழக்கமாக தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை டு ராயபுரம் ராபின்சன் பார்க் - மேம்பாலம் தாண்டி செல்லும் இந்த பேருந்து இப்போது, பாரதி கலைக்கல்லூரி வழியாக செல்ல தொடங்கியிருக்கிறது. அந்த சாலையை கடக்கவே சுமார் ஒரு மணிநேரமாகிறது. வழியெங்கும் ஆங்காங்கே வாகனங்கள் நடுத்தெருவில் நிறுத்தாத குறை,.பீக் அவரில் அதனை அகற்ற போக்குவரத்து காவல்துறையினர் வழிவகை செய்யவேண்டும், மேலும் அந்த பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றினால் பயணிகளின் சிரமம் குறையும்.
♈ 🇮🇳 அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓபிஎஸ் அணிக்கு வந்த மாஃபா பாண்டியராஜன்தான் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அணிகளை சீக்கிரம் இணைக்காவிட்டால் தான் அணி மாறப்போவதாக நேரடியாகவே அவர் கூறியிருக்கிறாராம். மதுசூதனன் கூட அணிகளை இணைக்கத்தான் ஆசைப்படுகிறாராம். ஆனால் கட்சியில் உள்ள சில மாஜி அமைச்சர்கள்தான் இணைப்பு பணிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம். அணியை இணைப்பது ஓபிஎஸ் கையில்தான் இருக்கிறது. என்ன செய்யப்போகிறார் என்பது என்பதே அவரை நம்பி சென்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது----vishwarubam news
♈ 🇮🇳 சென்னை செங்குன்றத்தில் இருந்து கிண்டி சென்ற மாநகரப் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து காயம் அடைந்த பெண் பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநகரப் பேருந்து நடத்துனர் அளித்த புகார் பேரில் கல்வீசிய கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.
♈ 🇮🇳 சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சிவில் சரவீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை அறியலாம் .
♈ 🇮🇳 சென்னையில் பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்பட்ட 25 சிறுவர்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். காவல் ஆணையர் உத்தரவின்படி ஆபரேஷன் முஸ்கான்-3 என்ற தனிப்படை காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் இந்த மாதத்தில் மட்டும்79 சிறுவர்களை போலீஸார் மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்துள்ளனர்
♈ 🇮🇳 சென்னையில் திருமங்கலம், நொளம்பூர்,நுங்கம்பாக்கம் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி கொள்ளையர்கள் வினோத், அரவிந்த்,ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 சவரன் நகை, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
♈ 🇮🇳 இந்திய தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் மனு அளித்தனர்.
♈ 🇮🇳 ஜி.எஸ்.டி.வரிவிதிப்பில் இருந்து தீப்பெட்டி தொழிலுக்கு விலக்கு அளிக்க தொழிலாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
குஜராத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ♈ 🇮🇳 அரக்கோணத்திலிருந்து மீட்புக்குழு புறப்படுகிறது. அரக்கோணம் பேரிடர்மீட்பு குழுவைச் சேர்ந்த 140 பேர் 3 குழுக்களாக தனி விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்.
♈ 🇮🇳 பாஜக வின் 53 எம்எல்ஏ க்களும் மற்றும் சில உதிரிக் கட்சிகளும் நிதிஷிக்கு ஆதரவு கொடுத்ததால் மீண்டும் முதல்வராகிவிட்டார். 2013செப்டம்பரில் மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்த போது அதற்கு கண்டனம் தெரிவித்து தான் நிதிஷ் குமார் பாஜக வுடன் கூட்டணி யில் இருந்து விலகினார். தேர்தலை சந்தித்தார். லாலு மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் பிஹார் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்தக் கூட்டணியில் பாஜகவும் அமைச்சர் பதவிகளை பெற்றுவிட்டது. நிதிஷின் இந்த முடிவு 2019 ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக மிகப் பெரியதோர் ‘'மஹா கட்பந்தன்'' அதாவது கிட்டத் தட்ட எல்லா பெரிய கட்சிகளையும் உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணி அமைவது என்பது வெறுங் கனவாகிப் போனது என்பதுதான்.
♈ 🇮🇳 கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ராஜ்யசபாவில் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்
♈ 🇮🇳 கதிராமங்கலத்தில் பணத்தை உண்ணும் நூதன போராட்டம்
♈ 🇮🇳 சேலம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல்
♈ 🇮🇳 நாமக்கல், மதுரை மாவட்டங்களில் லேசான மழை
♈ 🇮🇳 கேல்ரத்னா, அர்ஜூனா விருதுக்கு சேவாக், பி.டி.உஷா பெயர் தேர்வு
♈ 🇮🇳 ராமநாதபுரம்: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 17 பேர் படுகாயம்
♈ 🇮🇳 மதுரையில் திடீர் மழை.
♈ 🇮🇳 நீட் தேர்வு: மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என முதல்வர் பேட்டி
♈ 🇮🇳 சசிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.
♈ 🇮🇳 இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணையை பயன்படுத்த திட்டமிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
9.30pm -27-7-2017-thursday
♈ 🇮 ♈ 🇮🇳 தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு திரு ஜெயக்குமார் கவனத்திற்கு சென்னை ராயபுரம் நீரோற்று நிலைய பிரச்சனை பற்றி கொண்டு செல்லப்பட்டது . சரிப்பா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் .
♈ 🇮 இப்பவே இறக்க நினைத்தாலும் விஷம் கிடைக்கவில்லை -இறந்துபோன தன் தாயை கூகுள் எர்த்தில் பார்த்து வியந்த மகள்!இங்கிலாந்தில் வசிக்கும் அமெரிக்கரான டெனிஸ் அண்டெர்ஹில் எனும் பெண்மணி, 18 மாதங்களுக்கு முன் இறந்துபோன தன் தாயை கூகுள் எர்த்தில் பார்த்து வியந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
♈ 🇮 மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் போராட்டம் நடத்திய க.அன்பழகன்,தயாநிதி மாறன், திருநாவுக்கரசர், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது
♈ 🇮 கேரளாவில் ரூ.2.71 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்
♈ 🇮 சென்னை அருகே பள்ளியில் மேற்கூரை இடிந்து 6 மாணவர்கள் காயமடைந்தனர்.ஆவடி அருகே வீராபுரத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மேற்கூரை இடிந்தது.காயமடைந்த 6 மாணவர்களில் 3 பேருக்கு கையில் தையல் போடப்பட்டுள்ளது
♈ 🇮 பிரதமரின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500படகுகள் வழங்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்-பிரதமரின் நீலப்புரட்சி திட்டத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
♈ 🇮 அதிகாரத்துக்குள் மீண்டும் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்தில், ஜோதிடர்களை நாடி ஓடத் தொடங்கியுள்ளனர் சசிகலா உறவுகள். 'குருபெயர்ச்சி காரணமாகத்தான் நமது குடும்பத்துக்கு அனைத்து தோல்விகளும் வந்து சேர்ந்தன. பரிகாரம் செய்துவிட்டால், மீண்டும் அதிகாரம் நம் கைக்கு வரும்' என முடிவெடுத்து,கோவில் கோவிலாக அலையத் தொடங்கியுள்ளனர். திருவாரூர், குடவாசலில் சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பரிகார பூஜை செய்வதில் மிகுந்த பிரசித்தி பெற்ற கோவில் அது.இந்தக் கோவிலுக்கு இன்று வந்த திவாகரன், ராகு-கேது பெயர்ச்சிக்குரிய பரிகார பூஜைகளைச் செய்தார். பூஜை முடிந்ததும் கோவில் குருக்களிடமும் ஆதரவாளர்களிடமும் பேசிவிட்டுக் கிளம்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக