வியாழன், 20 ஜூலை, 2017

வாட்ஸ் ஆப்-பில் வரவிருக்கும் 6 புதிய அம்சங்கள்..!!


வாட்ஸ் ஆப்-பில் வரவிருக்கும் 6 புதிய அம்சங்கள்..!!

தகவல் தொடர்பை எளிமைப்படுத்தியுள்ள வாட்ஸ் ஆப் மெசேஜிங் செயலி, உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களால் உயயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ் ஆப்-பில் புதிய அம்சங்களை சேர்ப்பதற்காக அதன் பீட்டா வெர்ஷன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப்-பின் புதிய பதிப்பில் புதிதாக 6 அம்சங்களை சேர்க்கப்பட உள்ளது தெரியவந்துள்ளது. அந்த அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

1. யூடியூப் வீடியோக்களை பின்னணியில் செயல்படுத்தும், பிப் (PIP):
வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் சாட் விண்டோவில், நேரடியாக யூடியூப் வீடியோக்களை பயனர்கள் பிளே செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் சோதனை செய்கிறது. வீடியோ பிளேபேக்கிற்கான யூடியூப் பயன்பாட்டை தனியாக திறக்க வேண்டிய அவசியத்தை இந்த அம்சம் அகற்றும்.

2. யுபிஐ பணப்பரிமாற்றம்:
வாட்ஸ் ஆப் வாயிலாக பணப்பறிமாற்றங்களை எளிதாக மேற்கொள்ள வசதியை ஏற்படுத்தும் வகையில், யுபிஐ (UPI)-ஐ ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

3. மெசேஜ் ரீகால்:
மெசேஜ் ரீகால் என்ற புதிய அம்சம் கடந்த டிசம்பர் மாதம் முதல் சோதனையில் உள்ளது, இதன்மூலம் அனுப்பிய மெசேஜை திரும்பப்பெற்றுக்கொள்ளும் வசதி கிடைக்கும்.

4. லைவ் லொகோஷன் ஷேரிங்:
லைவ் லொகேஷன் ஷேரிங் வசதியின் மூலமாக, வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களுடைய இருப்பிடத்தை நேரலையாக மற்றவர்களுடன் ஷேர் செய்யும் வசதி கிடைக்கப்போகிறது. இதற்கு முன்பாக லொகோஷன் ஷேரிங் மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
1 நிமிடம், 2 நிமிடம், 5 நிமிடம் அல்லது அளவில்லாமல் என்ற முறையில் இருப்பிடத்தை ஷேர் செய்யும் வசதி கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

5. எண் மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்கும் வசதி
பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணை வேறொரு எண்ணுக்கு மாற்றும் போது, அதனை காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தும் வசதியை இந்த அம்சம் அளிக்கும்.

6. அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி:
இறுதியாக நாம் பார்க்க இருக்கும் இந்த புதிய அம்சம் மெசேஜ் ரீகால் அம்சத்திற்கு இணையானது. மெசேஜ் ரீகால் மூலம் அனுப்பிய மெசேஜை முற்றிலும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம், ஆனால் இந்த புதிய அம்சத்தில் அனுப்பிய மெசேஜில் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த 6 புதிய அம்சங்களும் தற்போது வாட்ஸ் ஆப் பீட்டா-வில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் இந்த 6 புதிய அம்சங்கள் இடம்பெறப் போகிறது. இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயன்பாடு மேலும் சுவாரஸ்யம் நிறைந்ததாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக