வியாழன், 20 ஜூலை, 2017

சவூதி அரேபியாவில் வாழும் எந்த குடி மகனுக்கும் income tax வரி கிடையாது!


சவூதி அரேபியாவில் வாழும் எந்த குடி மகனுக்கும் income tax வரி கிடையாது!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி எந்த ஒரு பணக்காரரின் வீட்டிலும் CBI சோதனை என்ற பெயரில் அரசியல் பித்தலாட்ட ரெய்டுகள் கிடையாது! நீதிமன்ற வழக்கும் கிடையாது.

மாறாக ஒவ்வொரு குடிமகனையும் தனது பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கச் சொல்கிறது அந்நாட்டு அரசு!!

திறமை இருப்பவன் அதிகம் அதிகமாய் சம்பாதித்துக்கொள், நீ யாரிடமும் கணக்கு காட்ட தேவையில்லை என்கிறது..!

இதனால் அங்கே கருப்பு பணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது!

சுவிஸ் பேங் என்றால் என்ன வென்றும் அந்நாட்டு மக்களுக்கு தெரியவே தெரியாது..!

But: ஒரே ஒரு #கண்டிஷன்
யாரிடமும் திருடாதே, திருடினால் உனது கையை வெட்டி விடுவேன்..!
இதுதான் சவுதியின் வருமாண வரிச் சட்டம்.

அதேபோல் மக்களிடமே வரி வாங்கி, அதிலே சாலை அமைத்து,
அதில் செல்லும் மக்களிடமே மீண்டும் டோல்கேட் போட்டு காசை பிடுங்கும் திருட்டு புத்தியும் அவர்களிடம் இல்லை! :(

அப்படியும் கூட ரகசியமாக ஒரு வருமான வரி இருக்கிறதென்றால் அதுவும் உண்மைதான்!

அதாவது தனது வருமானத்தில் 2.5% வரியை கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற சிறப்பு சட்டமும் உள்ளது.

ஒரு மனிதன் தனது செலவுகள் போக ஒரு வருடத்தில் 10ஆயிரம் ரூபாய் சம்பாதித்து இருந்தால் அவன் 250ரூபாய் வரி செலுத்த வேண்டும்..!

தனது ஆண்டு வருமானத்தில் செலவு போக மீதம் எவ்வளவு உள்ளது என்று நோன்பு மாதம் தொடங்கும் முதல் நாளே சரியாக கணக்கு பார்த்து தனது மனசாட்சிக்கு விரோதமின்றி தனக்குத்தானே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்..!

அந்த கணக்கை வேறு யாரிடமும் சென்று காட்ட வேண்டிய அவசியமுமில்லை...!

எஞ்சிய அந்த வருமானத்தில் அல்லது சொத்தில், இரண்டரை சதவிகிதம் வரியை அவர் அந்த நோன்பு 30நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டும். (அந்த income tax வரியின் இன்னொரு பெயர்தான் ஜகாத் என்கிற தர்மம்)

இது சவுதி மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக முஸ்லீம்களுக்கு மான சட்டம். அந்த வரியை வசூலிக்க வேண்டிய அதிகாரிகள் வேறு யாருமல்ல..! அந்த ஊரில் வசிக்கும் ஏழை, பாலைகள்தான் அந்த வசூல் அதிகாரிகள்.

அப்படியே அந்த வருடாந்திர வரியை ஒருவன் செலுத்த மறுத்தாலோ அல்லது வருமான கணக்கை தனக்குத் தானே மறைத்தாலோ, அதில் அரசு அதிகாரிகளோ, அல்லது அதை வசூலிக்க வரும் ஏழைகளோ யாரும் அவர்களை தட்டி கேட்கவும் மாட்டார்கள்..!

ஏனென்றால்.... அவனது மரணத்திற்கு பிறகு உரிய கணக்கை அவனிடம் நான் வாங்கி கொள்கிறேன் என இறைவனே கூறி விட்டதால் அதில் நடைபெறும் வரி ஏய்ப்பு பற்றி அந்த நாட்டு அரசுக்கு எந்த கவலையுமில்லை.!

வரி வரி என்று ... வெறிபிடித்து வழிப்பறி செய்து... குடிமக்களின் வியர்வையை அரசே உறிஞ்சி குடித்துவிடக் கூடாது என்பது தான் முஹம்மது நபிகளார் இயற்றிய *இஸ்லாமிய_சட்டம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக