செவ்வாய், 25 ஜூலை, 2017

மதி செய்திகள் -24-7-2017-monday

மதி செய்திகள் -24-7-2017-monday

♈ 🇮  பெண்களிடம் அநாகரிகமாக நடக்கும் , பணம் கொடுப்பவர்களுக்கு தண்ணீர் லாரியை அனுப்பும் குடிநீர் வாரிய ஊழியரை கண்டித்து ஆர்பாட்டம் – சென்னை ராயபுரம் குடிநீரோற்று நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஏழுமலை என்பவர் தமிழக நிதியமைச்சர் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜெயக்குமார் உத்தரவிட்டும் கப்பல் போலு தெரு மக்களுக்கு குடிநீர் லாரியை முறையாக வழங்காமல் ஏ இ ஆளுங்க தானே நீங்க .போய் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் நான் தண்ணீர் லாரி கொடுக்க முடியாது என்று ஏளனமாக பேசுகின்றார் . பெண்களை தன் கைகளால் பிடித்து வெளியே தள்ளுகிறார். குடிநீருக்காக அவதிப்படும் பெண்கள் பலர் ஏதும் பேச முடியாமல் தலை     குனிந்து செல்கின்றனர். பணம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். மற்றவர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். லாரி ஓட்டுனர்களை போராட்டம் நடத்த சொல்லி துண்டுகிறார். அவரின் கிழ்த்தரமான செயல்களை கண்டித்து தமிழக மக்கள் இயக்கம் சார்பில் நாளை 25-7- 2017 காலை 10 மணியளவில் ராயபுரம் சிமேண்ட்ரி சாலையிலுள்ள குடிநீரோற்று நிலையம் அருகில் போராட்டம் நடைபெற உள்ளது. பாதிக்கப்பட்டோர் கலந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.


♈ 🇮🇳  மதுரை நகை கடைகளில் 80 பவுன் நகை கொள்ளை

♈ 🇮  டில்லியில் தூக்க மாத்திரை விழுங்கிய தமிழக விவசாயி

♈ 🇮🇳   நீட் தேர்வில் விலக்கு அளிக்க ராஜ்நாத்திடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

♈ 🇮  பசுவில் பெயரால் ஒகொலை : லோக்சபா ஒத்திவைப்பு  –விஸ்வரூபம்
♈ 🇮🇳  வேலூர் லத்தேரியில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

♈   கேளிக்கை வரி: சென்னை தலைமை செயலகத்தில் இறுதிக்கட்ட பேச்சு -

5pm -24-7-2017

♈ 🇮 போராட்டம் வாபஸ் – சென்னை ராயபுரம் குடிநீரோற்று நிலைய அதிகாரி ஒருவர் விஸ்வரூபத்தை தொடர்பு கொண்டு பேசினார். ஏழுமலை என்ற ஊழியரின் தவறான செயல்களை கண்டித்ததாகவும், இனி இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும், லாரி நீர் முறையாக வழக்கப்படும் எனவும் போராட்டம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவரின் உடனடி நடவடிக்கைகாக நாளை தமிழக மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த போராட்ட செய்தியை பார்த்து வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி. ராயபுரம் காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.தீனா அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அவருக்கும் நன்றி . இப்பிரச்சனை குறித்து சென்னை காவல்துறை கையிலெடுத்து  தீவிரமாக விசாரித்தது . அதன் காரணமாகவே இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது . காவல்துறை ஆணையர் திரு. விஸ்வநாதன் அவர்களுக்கும், உளவுத்துறை துணை ஆணையர் அவர்களுக்கும் , உளவுத்துறை ஆய்வாளர் திரு காளிராஜன் அவர்களுக்கும் ராயபுரம் உளவுபிரிவு காவலர்களுக்கும் தமிழக மக்கள் இயக்கம் சார்பில் பணிவுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.மாண்புமிகு நிதியமைச்சர் திரு ஜெயக்குமார் அவர்களுக்கும் குடிநீர் வாரிய இ இ , ஏ இ அவர்களுக்கும் நன்றி    

♈ 🇮  ஜனாதிபதி பதவியேற்பு விழா : முதல்வர் பழனிசாமி டில்லி புறப்பட்டார்

♈ 🇮🇳  காஷ்மீரில் 7 பிரிவினைவாத இயக்க தலைவர்கள் கைது

♈ 🇮🇳  காபூல் தாக்குதல் : பிரதமர் மோடி கண்டனம்

♈ 🇮  நாளை ஆதார் வழக்கு விசாரணை கிடையாது : சுப்ரீம் கோர்ட்

♈ 🇮🇳   ஆப்கன் கார் குண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு-

♈ 🇮  ராமநாதபுரம் : 2 டன் செம்மரங்கள் பறிமுதல்–விஸ்வரூபம்
♈ 🇮🇳  சென்னை அண்ணாசாலையில் தாறுமாறாக ஓடிய காரால் விபத்து

♈   கர்நாடகாவில் நிரம்பி வழியும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு அம்மாநில விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது

♈ 🇮🇳 ஐ.பி.எல்., அமைப்பின் முன்னாள் கமிஷனர் லலித் மோடி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை, ஏழு ஆண்டுகளாக விசாரித்து வந்த சென்னை போலீசார், அதை மும்பை போலீசுக்கு மாற்றினர். ஆனால், வழக்கை விசாரணைக்கு ஏற்க மும்பை போலீசார் மறுத்து விட்டனர்

♈ 🇮🇳 ''நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்காவிட்டால், அதிகாரிகளை தலைகீழாக தொங்க விடுவேன்,'' என, ம.பி.,முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்


7.30pm -24-7-2017-monday

♈ 🇮🇳 முதல்வருடன் உள்ளபுகைப்படத்தை காட்டி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் இடுபடுகிறாரா சேலம் மாவட்டத்தில் ஊத்துக்காடு ஆவுச்சி அருள் –செய்தியாளரையே கொலை செய்துவிடுவதாக மிரட்டல் .காவல்துறையில் பிடிபட்ட அருள் கைது செய்யப்படாமல் வேறு ஒருவர் மீது வழக்கை திசைதிருப்பியது எப்படி

♈ 🇮🇳 புதுச்சேரி: டெஸ்ட் டியூப் பேபி எனப்படும் செயற்கை முறை கருத்தரிப்பில் குழந்தை பெற்றுக் கொள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுக்க முயன்றபோது பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் குழந்தையும், தாயும் உயிரிழந்துவிட்டனர்

♈ 🇮🇳 கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ஹெர்ட் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

♈ 🇮🇳 வரும் 27ஆம் தேதி ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அவரது நினைவு மண்டபத்தில் உள்ள கலாமின் ஓவியங்கள் மற்றும் போட்டோக்களை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தையும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ரமேஸ்வரத்தில் இருந்து அயோத்யா வரையிலான ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். அப்துல் கலாமின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அவரால் எழுதப்பட்ட புத்தகங்களை கொண்ட பேருந்து சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அந்த பேருந்து ராமேஸ்வரத்தில் பல நகரங்கள் மற்றும் மாநிலங்களை கடந்த டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் தனது பயணத்தை நிறைவு செய்யும். தனுஷ்கோடி வரையிலான சாலைப் பணி இன்னும் நிறைவடையாமல் உள்ளதால் அதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மட்டும் தள்ளிவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈ 🇮🇳 கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய டிரைவர் கனகராஜை ஆறுக்குட்டிக்கு நன்றாகத் தெரியும். அவர் கனகராஜுடன் பேசிய ஆடியோ தகவல்களும் வெளியானது. ' இந்த விவகாரத்தில் உன்னை சிக்க வைப்பது எளிது' என ஆளும்தரப்பில் இருந்து தகவல்கள் செல்லவே,எந்தப் பதிலையும் பேசாமல் எடப்பாடி பக்கம் வந்துவிட்டார். கூடவே, ஆறுக்குட்டியிடம் பேசிய கொங்கு அமைச்சர் ஒருவர், ' அறுவடைக் காலத்தில் அமைதியாக இருந்துவிட்டால், வேறு எப்போதும் சம்பாதிக்க முடியாது. எங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று பாருங்கள்'எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் பிறகே மனம் மாறினார் ஆறுக்குட்டி" என்றனர் விரிவாக.'இது மட்டும் காரணமல்ல...கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் எந்த ஒரு திட்டத்தையும் தொடங்க விடாமல் ஒரே அடியாகப் புறக்கணித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதன் விளைவாகத்தான் தொகுதிப் பிரச்னையைக் காரணம் காட்டி,ஆளும்கட்சி பக்கம் வந்தார் ஆறுக்குட்டி' எனவும் சொல்கின்றனர் கோவை அ.தி.மு.கவினர்
♈ 🇮 நில மோசடி வழக்கு: முன்னாள் ஏ.டி.ஜி.பி., உறவு பெண் கைது

♈ 🇮  ஈரப்பதம் குறைவு; தமிழக வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம்

♈ 🇮🇳  திருவண்ணாமலை: இருதரப்பினர் மோதல்: 9 பேர் கைது

♈ 🇮🇳  காஷ்மீரில் பாக். படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதல் நடத்தின.
காஷ்மீரின் சர்வதேச எல்லையான பூஞ்சப்- ராவல்கேட்டை என்ற பகுதி பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில் இப்பகுதியை குறிவைத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாக். படைகள் தாக்குதல் நடத்தின. சம்பவத்தையடுத்து அந்த வழியாக பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

♈ 🇮  இலங்கையில் கடலில் மூழ்கிய இரண்டு யானைகளை, அந்நாட்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்

♈ 🇮🇳   டில்லியில், பல அரசு அலுவலகங்கள் உள்ள லோக்நாயக் பவனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 க்கும் மேற்பட்ட தீயைணப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதுமில்லை. அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

♈ 🇮  புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று,அக்கட்சியின் தேசிய தலைவர்கள் விரும்புவதால், விருப்பத்தை நிறைவேற்ற புதுச்சேரி பா.ஜ., தலைவர்கள் வேகமான பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் பரவி இருக்கிறது–விஸ்வரூபம்
♈ 🇮🇳  போதை பொருள் விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக மறுத்துள்ள தெலுங்கு நடிகை சார்மி, இது தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்

♈   தேனி : கண்டமனூர் பரமசிவம் கண்மாயை தூர்வாரும் பணியை கிராம மக்களே செய்து வருகின்றனர். கிராம மக்களே பணம் வசூல் செய்து கண்மாயை தூர்வாரும் பணிக்கு செலவிடுகின்றனர். இந்த  தூர்வாரும் பணியை பார்க்கச் சென்ற ஆண்டிபட்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வனை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.

♈ 🇮🇳 மும்பை விமான நிலையத்தில் 7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். டூத்பேஸ்ட்டில் மறைத்து  வைத்து கொண்டுவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

♈ 🇮🇳 சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

♈ 🇮🇳 பாகிஸ்தானில் லாகூர் நகரில் அர்பா கரீம் கட்டிடம் அருகில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேலும் 30 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

♈ 🇮🇳 நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரி மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடன் திமுக எம்.பிக்கள் சந்தித்து பேசியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து திமுக எம்.பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக