வெள்ளி, 28 ஜூலை, 2017

மதி செய்திகள் 8am -29-7-2017-saturday

மதி செய்திகள்  8am -29-7-2017-saturday

♈ 🇮🇳  வனவர் வெட்டிக் கொலை ஹெல்மெட்டுடன் வந்த மூவர் கும்பல் வெறிச் செயல்-நெல்லை மாவட்டம் சிவகிரியில்

♈ 🇮🇳  அறிவியல் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்பாகும் . ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்-www.recruitnic@nielit.gov.in

  ♈ 🇮  புதுச்சேரி விமான நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு

♈ 🇮  சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮  தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

♈ 🇮  போதை மருந்து விவகாரம்: நடிகர் ரவி தேஜாவிடம் 10 மணி நேரம் விசாரணை

♈ 🇮  குஜராத்தில் 44 காங். எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல்

♈ 🇮  மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

♈ 🇮  தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் முற்றிலும் சீரமைக்கப்படும்: மத்திய அரசு

♈ 🇮  இன்றைய(ஜூலை- 29) விலை: பெட்ரோல் ரூ.67.37, டீசல் ரூ.58.20

♈ 🇮  ஊட்டி அருகே கருங்குரங்கு கடித்து 4 வயது குழந்தை படுகாயம்

♈ 🇮  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது

♈ 🇮  லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின்போது பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர், அனுப்பிரியா படேல், ''எலக்ட்ரோ ஹோமியோபதி,அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறை அல்ல; இதுதொடர்பான வகுப்புகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளோம். இந்த துறையில், டாக்டர் என கூறிக் கொண்டு மருத்துவம் செய்வதை, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்,'' என்று கூறினார்.

♈ 🇮  லோக்சபாவில் நேற்று, உள்துறை இணையமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசுகையில், ''பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிக்க, தேவையான பணிகள் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும்,'' என்றார்

♈ 🇮🇳 ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆதார் தகவல்கள் முழுமையான அளவில் பாதுகாக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு தலின்படி, பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் பாதுகாப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான டிக்கெட் பெற ஆதார் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை; இந்த விவகாரத்தில், முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை.

♈ 🇮🇳 லோக்சபாவில், நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறுகையில், ''ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காப்பீடு வழங்கி வந்தன. நம் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு, காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில், அரசு இருந்தது. ஆனால், ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட நம் பாரம்பரிய மருத்துவத்திற்கும் காப்பீடு வழங்க, 15 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம், சித்தா, ஆயுர்வேதம் மருத்துவங்களுக்கு காப்பீடு வழங்க முடியும்,'' என்றார்

♈ 🇮🇳 லோக்சபாவில், கார்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர்,அர்ஜுன் ராம் மெக்வெல் கூறுகையில், ''கடந்த, மூன்று ஆண்டுகளில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட, 18 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ''இவை, மிக மோசமான நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ள விபரம் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கம்பெனிகள் விவகாரத்துறை, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்

♈ 🇮🇳 நாகாலாந்தில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.

♈ 🇮  மும்பையின் கோரேகான் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்--விஸ்வரூபம்

♈   ஷார்ஜாவில் இருந்து கடத்தல் கோவையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮🇳  சென்னை : சேத்துப்பட்டு மங்களபுரம்9வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (36).இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, 4பேர் மடக்கி உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். புகாரின்பேரில்,சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில்,கீழ்ப்பாக்கம், ஓசான்குளம் பகுதியை ேசர்ந்த அஜித் (எ) பிள்ளை (21),சேத்துப்பட்டு புதிய பூபதி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) அஞ்சான் (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் விஜயகுமாரை தாக்கி செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர்.


  1pm -29-7-2017-saturday

♈ 🇮 தமிழக மத்திய சிறைகளில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க 12ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு பேட்டியளித்துள்ளார். கரூர் கிளைச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார்

♈ 🇮 புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின்25-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் உயர்நீதிமன்ற நீதிபதி மதாதேவனும் பங்கேற்றுள்ளார். 207 பிஹெச்.டி பட்டதாரிகள் உட்பட 16,697 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது

♈ 🇮 சென்னை தலைமைச் செயலாளர் கிரிஜா தலைமையில் அனைத்துச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை,சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்

♈ 🇮 சிகரங்கள் சீனிவாசனுக்கு நன்றி நிங்கள் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டேன் உங்களிடம்பேசச்சொல்லி கைபேசியில் தொடர்பு கொண்டவர் கூறி தொடர்பு எண் தந்தார் நிநீங்கள் இணைப்பில் இல்லை விஷ்வரூபம் கணேஷ் தொடர்பு கொண்டேன் முடியவில்லை. சின்ன செய்திதான் பப்பாளி இலையில் சாறு எடுத்து தினமும் இரண்டுவேளை தரவும்  டெங்கு காய்சல் கானாமல் போய்விடும் இது என் அனுபவத்தில் கூரும் செய்தி  இந்தச் செய்தி எப்படியாவது அந்த சேலம் மருத்துவணையிலுள்ள நோயிளிக்கு சென்று சேக்ககவும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்

♈ 🇮 தூத்துக்குடி : கோவில்பட்டி ராஜீவ் நகரில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

♈ 🇮 பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு

♈ 🇮 திண்டுக்கல்லில் தனியார் கண் மருத்துவமனையில் தீ

♈ 🇮 தர்மபுரியில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: ஒருவர் கைது

♈ 🇮🇳  நேற்று (28.07.2017) 6 மணியளவில் வடசென்னை தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் மீண்டும் குழாயில் கசிவு ஏற்பட்டது. கசிந்த கச்சா எண்ணெய் சாலையில் பரவியதால், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்து தண்டையார்பேட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சாலையில் மணலை கொட்டி சரி செய்தனர். மணலி சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கசிவை சரி செய்வதற்கான பணிகளை முழுவீச்சில் செய்தனர். இருப்பினும் பகல் நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால், அவர்களால் சீரமைக்க முடியவில்லை. இதையடுத்து, அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக, ஒரு பகுதியை மட்டும் பேரிகார்ட் போட்டு தடை செய்தனர். பின்னர், இரவு வாகன போக்குவரத்து குறைந்த பின், சிபிசிஎல் ஊழியர்கள் கசிவை சீரமைத்தனர்

♈ 🇮🇳  ஈரோடு நகர துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சுரேஷ்குமார். இவர் வரும் 31ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் இன்று திடீரென சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

  ♈ 🇮  புரோ கபடி லீக் தொடரின் முதலாவது ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தெலுகு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது

♈ 🇮  தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 26சதவிகிதம் குறைவு

♈ 🇮  ஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா

♈ 🇮  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக ஒற்றுமையோடு செயல்பட வேண்டியது அவசியம் என அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை வருகிறது. ஆனால்,சசிகலா குடும்பத்துக்கு எதிரான வியூகத்தில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதால்,அவரை சமரசப்படுத்தும் வழி தெரியாமல் தவிக்கின்றனர் சசிகலா உறவினர்கள்

♈ 🇮  இரோம் சர்மிளா கொடைக்கானலில் தங்கினால் சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என்று அவரது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மகேந்திரன் என்பவர் கூறியுள்ளார். இரோம் ஷர்மிளா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளரிடம் மனு அளித்த மகேந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

♈ 🇮  விடுதியில் குளிப்பதற்குகூட தண்ணீர் இல்லாததால் ஆத்திரமடை்நத சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் காலி பக்கெட்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

♈ 🇮  கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்ட போது சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 122பேர் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ உபசாரம் நடைபெற்றது. அதேபோல பிடதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கவனிப்பு இருக்குமா? அல்லது கூவத்தூரை மிஞ்சுமா பிடதி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
♈ 🇮  தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில்  தண்ணீர் லாரி மோதி10 மாடுகள் உயிரிழந்தனர். தண்ணீர் லாரிகள் செல்ல தடைவிதிக்கக் கோரி திருச்செந்தூர் - நெல்லை சாலையில் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்

♈ 🇮  சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த காரைக்காலை சேர்ந்த காஜா இப்ராஹிமிடம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.சூட்கேசில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்

♈ 🇮      உ.பி.,யில் போதையில் தள்ளாடியபடி கைதியை, போலீசார் அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது உத்தர பிரதேச மாநிலம் எட்டா நகரில் கோர்ட்டல் ராஜூ என்ற கைதியை ஆஜர்படுத்திய பின்னர் மீண்டும் ரவி குமார் சிங், ராகேஷ் குமார் சிறைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் , கைதியுடன் சேர்ந்து இரு போலீசாரும் மது அருந்தினர். இருவரும் போதையில், கைதியை கடையில் சிகரெட் மற்றும் புகையிலை வாங்கி கொடுக்க கட்டாயபடுத்தினர். அவரும் வாங்கி கொடுத்தார். இது அங்கிருந்த ஒருவர் மொபைலில்படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், தங்களது பணியில் கவனக்குறைவாக உள்ளதாகவும், பாதுகாபு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது

♈ 🇮  வரத்து குறைவால் நாடு முழுவதும் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டில்லி, கோல்கட்டா, இந்தூர், திருவனந்தபுரம்,சென்னை உள்ளிட்ட நாட்டின் 17 முக்கிய நகரங்களில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.90 ஐ தாண்டி உள்ளது.பெரும்பாலான வட மாநிலங்களில் நிலவி வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதே விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலை உடனடியாக சரியாக வாய்ப்பில்லை எனவும்,ஆகஸ்ட் இறுதி வரை இதே விலை நிலவரம் தான் காணப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    3pm -29-7-2017-saturday

♈ 🇮🇳  ரத்ததான முகாம்- சென்னையில் ராயபுரம் காங்கிரஸ் கட்சி தலைவர் தீனா முன்னிலையில் ஜி ஏ ரோட்டில் மரகதம் மாளிகையில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ரத்ததானம் அளிக்கலாம்.

♈ 🇮🇳  சென்னை மெரினாவில் போலீஸ் கடும் சோதனை-இளைஞர்களின் செல்போனை தீவிரமாக சோதிக்கிறது போலீஸ்

♈ 🇮🇳  குஜராத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அகமதாபாத் விமான நிலையம் என சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கிய பழைய படங்களை ஊடகங்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது

♈ 🇮🇳  சென்னை ஆவடியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் ராணுவத்தின் ஆளில்லா உளவு வாகனமான முந்த்ராவும் இடம்பெற்றிருந்தது
♈ 🇮🇳  பா.ஜ., தலைவர் அமித்ஷாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.1.90கோடியிலிருந்து ரூ.19 கோடியாக அதிகரித்துள்ளது. தனது வேட்புமனுவில்,தனது மூதாதையர் மூலம் வந்த சொத்துகள் மதிப்பு ரூ.10.38 கோடி என அமித்ஷா கூறியுள்ளார்.
அமித்ஷா மற்றும் அவரது மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் கடந்த 2012க்கு பிறகு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2012ல் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.8.54 கோடியிலிருந்து ரூ.34.31 கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியில் கல்வி தகுதி குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்தது. அவர் பிகாம் பார்ட் 1முடித்திருந்ததாக கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது தனது அபிடவிட்டில் கூறியிருந்தார். தற்போது தனது பட்டப்படிப்பை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை எனக்கூறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 2014ல் ரூ.4.91கோடி என தெரிவித்திருந்தார். தற்போது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து ரூ.8.88 கோடியாக அதிகரித்துள்ளது.:காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பல்வந்த் சிங் ராஜ்புத், சொத்து மதிப்பு கடந்த 2012ல் ரூ.263 கோடியிலிருந்து தற்போது ரூ.316 கோடியாக அதிகரித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி.,யாக அவர்தேர்வாகும் பட்சத்தில் கோடிஸ்வர எம்.பி.,க்களில் இவரும் ஒருவராக இருப்பார்.காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் தனக்கு ஆண்டு வருமானம் ரூ.15,10,147 எனவும், தனது மனைவிக்கு ஆண்டு வருமானம் ரூ.20,15,900 எனவும் கூறியுள்ளார். கடந்த 2011க்கு பிறகு படேல் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு 123 சதவீதம் அதிகரித்துள்ளது

♈ 🇮🇳  சென்னை: போலி பஸ் பாஸ் தயாரித்த 5 பேர் கைது

♈ 🇮🇳  விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டீல்கள் கொள்ளை

♈ 🇮 இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான 837மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கையெழுத்திட்டுள்ளது

♈ 🇮 அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய புதியதொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனும் தெரிவித்துள்ளன

♈ 🇮 'ரான்சம்வேர்` மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை இணைய குற்றவாளிகள் சம்பாதித்துள்ளதாக கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

♈ 🇮 நினைவாற்றல் இழப்பு (டிமென்சியா) ஏற்பட்டிருந்த அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் காணாமல் போன சில நிமிடங்களில் காவல்துறையின் மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈ 🇮 மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ வரீஸ் பதான் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘‘நான் ‘வந்தே மாதரம்’ பாடலை பாட மாட்டேன். என்னுடைய மதமும், சட்டமும் இவற்றை பாட என்னை அனுமதிக்காது. என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், நான் அதை பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார். இவரை போல சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ-களும் வந்தே மாதரம் பாடலை பாட மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

♈ 🇮 மதிமுக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள்,மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், இன்று மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

♈ 🇮 கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம் இரசாயன மண்டலம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இரண்டு மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 7,8 தேதிகளில் மக்கள் கருத்தறியும் பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்

♈ 🇮 ஒன்றிணைவோம் காவிரியை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ்.

♈ 🇮🇳  "கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துகள் ஒன்றுகூடி நாங்கள் இந்துக்கள் அல்ல என்று புரட்சி செய்வது போல், தமிழகத்தில் நாங்களும் எழுவோம்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳  அ.தி.மு.க.வை கைப்பற்ற தினகரன் அதிரடி வியூகம் வகுத்து வருகிறார் அவருடன் கை கோர்க்க 50எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது

  ♈ 🇮  கேரள நடிகை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நடிகர் திலீப் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

♈ 🇮  மத்திய பிரதேச மாநிலம் பார்வாணி மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த 16 வயது சிறுமி கைதுச் செய்யப்பட்டுள்ளார்

♈ 🇮  போதைப்பொருள் வழக்கு: தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஓட்டுநர் விசாரணைக்குழு முன் ஆஜர்.

♈ 🇮  உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் என்ற இடத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

♈ 🇮  கந்து வட்டி வசூலித்ததாக கைது செய்யப்பட்ட போத்ரா மீது 3-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அனந்தநகார் என்பவர் போத்ரா மீது போலீசில் புகார் அளித்தார். 2014-ம் ஆண்டு கொடுத்த ரூ.5 லட்சம், கடனுக்கு ரூ.30 லட்சம் மற்றும் 800 கிராம் தங்கம் போத்ரா வசூல் செய்துள்ளார். தற்போது மேலும் ரூ.3 கோடி கேட்டு மிரட்டுவதாக ஆனந்த்நகார் புகார் தெரிவித்தார்

♈ 🇮  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயலராக பி.செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்க்கப்பட்டுள்ளார்.

♈ 🇮  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷூக்கு ஜாமின் வழங்க மறுப்பு

♈ 🇮  மத்திய பிரதேசத்தில் நர்மதா நதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நதியில் இறங்கி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

♈ 🇮  மேற்குவங்கத்தில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினருக்கும்,போலீசாருக்கு இடையே மோதல்: 2 போலீசார் காயம்---விஸ்வரூபம்

♈ 🇮      தமிழகத்தில் நிரந்தரம் இல்லாத ஆட்சி நடப்பதால் நிரந்தர ஆளுநர் இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்

♈ 🇮  உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 8வயது சிறுமி காணாமல் போனார். இதனையடுத்து போலீசாரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை குழந்தையை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உள்ளூர் வாசிகள் காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்--- விஸ்வரூபம்

♈ 🇮🇳  மானாமதுரை: மின்சாரம் தாக்கி டாங்கர் லாரி டிரைவர் பலி

♈ 🇮🇳  பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: பா.ஜ., தவிர்க்க முடியாத சக்தியாக மாறி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் எங்களது பலத்தை நிருபிப்போம். ஊழலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழக கட்சிகள் நீட் தேர்வை அரசியலாக்குகின்றன. கலாம் மணிமண்டபத்தில் பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டதை வைகோ அரசியலாக்குகின்றார். இவ்வாறு அவர் கூறினார்

    7pm -29-7-2017-saturday

♈ 🇮🇳  விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தற்போது இரண்டாம் கட்டமாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், சனிக்கிழமை தங்களின் 14-வது நாள் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்

♈ 🇮🇳  11 உயிர்களை காப்பாற்றிய வேலூா் ஆயுதபடை காவலர் சி.கோபி.பாமக அணி தலைவர் திரு.ராமாதாஸ் அவர்கள் வேலூரிலிருந்து திருப்பத்தூருக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றாா்.

அவருக்கு மாவட்ட எல்லை பாதுகாப்புக்கு சென்ற வேலூா் காவல் வாகனம் ஆம்பூா் அடுத்த விண்ணமங்கலம் என்ற இடத்தில் செல்லும் போது காவல் வாகனத்தின் பின் டயர் வெடித்தது.தேசிய நெடுஞ்சாலையில்

நிலை தடுமாறி தாறுமாறாக ஓடிய வாகனத்தை வேலூா் ஆயுதபடையை சோ்ந்த ஓட்டுநர் திரு.சி.கோபிகாவலர் எண்-929.அவர்களின்  சாமர்த்தியத்தால் வாகனத்தில் இருந்த ஆய்வாளா் மற்றும் 10காவலர்கள் அதிஷ்டவஷமாக எந்த வித காயமுமின்றி உயிர் தப்பினா்.

♈ 🇮🇳  கதிராமங்கலத்தில் 5 பேர் மயக்கம்.

♈ 🇮🇳  அதிமுகவில் அதிகார மோதல்கள் காரணமாக 3அணியாக பிரிந்து கிடக்கும் நிலையில், அந்தக் கட்சிகாரர்களுக்கு கட்சிக் கொடியின் நிறம் கூடத் தெரியாது என்பது அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களே அம்பலப்படுத்துகின்றன

♈ 🇮🇳  முதல்வர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது, போதை பொருள்களை விற்பனை, செய்வதும்,கடத்துவதும்தான் குற்றம். அவற்றை உட்கொள்வது தவறில்லை.தெலுங்கு திரையுலகினர் கைது செய்யப்படமாட்டார்கள். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அவர்களை குற்றவாளிகளாக கருதாது, மாறாக அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே கருதும் என தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳  தன்னைப் பார்த்து சிரித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

♈ 🇮🇳  உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮🇳  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடையில் விற்பனைக்கு வைக்கபப்ட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர் ஆனந்த் சத்யா கைது செய்யப்பட்டார்

♈ 🇮🇳  பீகாரில் புதிய அமைச்சர்களாக 26 பேர் பதவியேற்றுக் கொண்டனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 பேர், பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 பேரும், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்

♈ 🇮 பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் அப்பாஸி  தேர்வு செய்யப்பட்டுள்ளார்

♈ 🇮 சென்னை அடுத்த மடிப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன. வேளச்சேரியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்

♈ 🇮 திருவண்ணாமலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்

♈ 🇮 காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பாதித்த10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள 4 பேருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

♈ 🇮 உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளித்த தாராபுரத்தை சேர்ந்த பிளஸ்1 மாணவன் பிரபாகரன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மாணவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

♈ 🇮 திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம், சோலார்,மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

♈ 🇮 ரயிலில் ஏசி சரியாக வேலை செய்யாததால், ரயில்வேக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சேகர் என்பவர் கடந்த 2015 மே 9 ல் பெங்களூருவிலிருந்து மைசூருக்கு திப்பு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஏசி கோச்சில் பயணம் செய்தார். ஆனால், ஏசி சரியாக வேலை செய்யவில்லை. அவர் புகார் அளித்ததின் பேரில் ஊழியர் சரி பார்த்தார். ஆனால், ஏசி சரியாக செய்யவில்லை. இதனையடுத்து, தனது ரயில் கட்டணத்தை திருப்பி கேட்டும்,மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், சேகருக்கு ரூ.1ஆயிரம் மற்றும் ரயில் கட்டணம் ரூ.2 ஆயிரத்தை 4 வாரத்தில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்

♈ 🇮 மருத்துவமனையில் டாக்டர்கள் அனுமதிக்க மறுத்ததால், பெண் ஒருவர் சாலையில் குழந்தை பெற்றெடுத்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்புரியா மருத்துவமனைக்கு நேற்று (ஜூலை28) கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி காரணமாக அழைத்து வரப்பட்டார். ஆனால், தற்போது குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை. மறுநாள் காலை அழைத்து வரும்படி பணியில் இருந்த டாக்டர்கள் கூறிவிட்டனர். அந்த கர்ப்பணிக்கு யாரும் உதவி செய்யவில்லை. தொடர்ந்து நேற்று இரவு 11 மணியளவில் மருத்துவமனை அருகில் சாலையிலேயே குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

 9.30pm -29-7-2017-saturday

♈ தேனி மாவட்ட செய்தியாளர்கள். சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் தேனி.ராஜாமுகமது ஆகிய எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் சத்தியம் தொலைக்காட்சியில் தேனி கோகிலா மருத்துவமனை போலி டாக்டர் குறித்து உண்மை செய்தியை வெளியிட்டதற்கு என் மீது கோபப்பட்டு ஆத்திரத்தில் நான் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் R.முருகேசன் எனது குடும்பம் முதல் உறவினர்கள் உள்பட அனைவருக்கும் குடும்ப டாக்டர் அவர் அவரை பற்றி செய்தி வெளியிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய நீங்கள் ஒருமுறை செய்தியை பார்த்துவிட்டு உத்தமபாளையத்தில் உள்ள எனது வீட்டில் குடும்பத்தோடு எங்களை வெட்டி கொன்றாலும் பரவாயில்லை உங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்ததான் அந்த செய்தி சார் தமிழகத்தில் எங்கு செய்தியாளருக்கும் வழக்கறிஞருக்கும் நட்புறவு இருக்கு என்பது தெரியவில்லை தேனி மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் நீங்கள் அல்ல நான் அல்ல யார்?நினைத்தாலும் அந்த உறவை பிரிக்க முடியாது. உண்மை ஒரு பொழுதும் உறங்காது

♈ 🇮🇳  திருநெல்வேலியில் உள்ள சரவணா செல்வரத்னா துணிகடையில் அடிதளம் பில்டிங் காா்பாா்க்கிங் இடம் என பிளன் பதிவு செய்து பில்டிங் திறப்புவிழா முடிந்து செயல்பட்டு வரும் தருவாயில் அந்த காா்பாா்க்கிங் தளத்தை  வேறு கடை திறந்துவிட்டு  கடைக்குவரும் வாடிக்கையாளரை ரோட்டில் வாகனங்களை நிறுத்த வைத்த நெல்லை சரவணா செல்வரத்னா துணிகடை மீது நடவடிக்கை எடுத்து அதுவும் இரண்டு மணிநேரத்தில் விளக்கம் கேட்ட மதுரை உயா் நீதிமன்ற நீதிபதிக்கு பொதுநலம் விரும்பும் அனைவா் சாா்பிலும் இதையம் கனிந்த நன்றியை உருத்தாக்குகிறோம் (இதேபோல் குமரி மாவட்டம் நாகா்கோவில் நகா் பகுதியில் செயல்படும் பாபா மெடிக்கல் கடையிலும் அடிதளம் காா்பாா்க்கிங்  தற்போது வேறுகடைக்கு வாடகைக்கு விடபட்டு  வாடிக்கையாளா்களை வாகனங்களை ரோட்டில் விடு வைக்கிறாா்கள் இதேபோல் பலகடைகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகிறது ஆகவே இதற்கும் பொதுநலத்துடன் வழக்குபதிவு செய்து மதுரை நீதிமன்றத்தை நாடினால் நல்ல வெற்றி கிடைக்கும் பொதுநல சிந்தனையாளருக்கு  இந்த தகவலை பதிவு செய்கிறேன்

♈ 🇮🇳  இன்று காலை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கோனூர் அரசு பள்ளியில் ADGP திரு. சைலேந்திரபாபு..ஐ.பி.எஸ் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தார்.

♈ 🇮🇳  விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை–விஸ்வரூபம்

♈ 🇮🇳  திருச்சியில் போதைப்பொருள் விற்ற 14 பேர் கைது

♈ 🇮🇳  குல்பூஷண் ஜாதவ் கருணை மனு குறித்து ராணுவ கோர்ட் முடிவு: தூதர்

♈ 🇮🇳  தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட விதிகள், ஜூன், 22ல் வெளியிடப்பட்டன. இந்த விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில், கட்டுமான நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும், ரியல் எஸ்டேட் சட்ட வரம்புக்குள் வரும்.ஆனால், விதிகள் அறிவிக்கப்படும் நாளில், பணி நிறைவு சான்றுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் பதிவாகிவிட்ட திட்டங்களை, ரியல் எஸ்டேட் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை.தற்போது, கட்டுமான நிலையில் உள்ள எந்தெந்த திட்டங்கள், பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன என்பது குறித்த குழப்பம் எழுந்துள்ளது.இதை தீர்க்கும் வகையில், ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்ட, ஜூன், 22ல், பணி நிறைவு சான்று கோரி விண்ணப்பித்துள்ள திட்டங்களின் பட்டியல், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, 266 திட்டங்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வதில் இருந்து விலக்கு பெறுகின்றன.வீடு வாங்குவோர், இத்திட்டங்கள் குறித்த விபரங்களை,http://www.cmdachennai.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

♈ 🇮🇳  தமிழக, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை தலைமை ஆணையர், சி.பி.ராவ் கூறியதாவது:நாடு முழுவதும், ஜூலை, 1ல் இருந்து,ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலானது. அதற்காக, 'வாட்' வரி விதிப்பின் கீழ் இருந்த வர்த்தகர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள்,ஜி.எஸ்.டி.,க்கு மாற, தமிழக அரசின் வணிக வரித்துறை இணையதளத்திலும், மத்திய அரசின் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை இணையதளத்திலும் பதிவு செய்து வருகின்றனர்.இது தவிர, நாடு முழுவதும் இதுவரை, வாட், கலால் மற்றும் சேவை வரி போன்ற எதிலும் பதிவு செய்யாத, 2.10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,க்கு பதிவு செய்து, அதற்கான எண்ணை, இணைய தளம் வழியாக பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும், இதுவரை, 21 ஆயிரத்து, 245 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்குப்பின், எவ்வளவு வரி கிடைத்தது என்பதை, இப்போது கூறுவது சிரமம். அடுத்த மாத இறுதி வரை, பதிவுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட உள்ளது. அதன் பிறகே, வருவாய் குறித்த விபரம் தெரிய வரும்.ஜி.எஸ்.டி.,க்கு முன், தமிழகத்தில் இருந்து, எங்களுக்கு,ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின்,இது அதிகரிக்கும் என, கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

♈ 🇮🇳  ஸ்ரீபெரும்புதூர் அருகே தாமரைப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். உடற்கூறு ஆய்வுக்காக ரமேஷ் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

♈ 🇮🇳  திருப்பூர் மாவட்டத்தில் 2,029 ஏக்கர் பஞ்சநிலத்தை ஆக்கிரமித்துள்ள 476பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மத்திய, மாநில அரசின் சலுகைகள் பற்றி விழப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். செய்யாறில் இரு பிரிவினரின் மோதலில் கொல்லப்பட்ட இளைஞர்குடும்பத்துக்கு இழப்பீடு தர வலியுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

♈ 🇮 கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கடல் அலையில் சிக்கிய சிறுவன் அனிஷை காணவில்லை. தந்தையுடன் கடலுக்குள் வந்த போது அலையில் சிக்கிய சிறுவன் அனிஷை மீனவர்கள் தேடி வருகின்றனர்

♈ 🇮 நிர்வாக வசதிக்காக ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். போளூர், செங்கம்,கலசப்பாக்கம் கிராமங்களை இணைத்து ஜமுனாமரத்தூரை புதிய வட்டமாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செண்பகத்தோப்பு அணை மதகுகள் ரூ.9.80 கோடி செலவில் சீரமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்

♈ 🇮 குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபியானா கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக