வியாழன், 27 ஜூலை, 2017

துணை கலெக்டரானார் சிந்து : சந்திரபாபு நாயுடு..



துணை கலெக்டரானார் சிந்து : சந்திரபாபு நாயுடு..

*பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை துணை கலெக்டராக நியமித்து பணி நியமன ஆணையை வழங்கினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.*

*ஆந்திரா மாநிலம் ஐதரபாத்தை சேர்ந்த பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 2016- ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரினுடன் நடந்த பைனலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.*

*அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டராக நியமித்து அதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.*

*அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் இதற்கான ஆணையை சிந்துவிடம் பெற்றோர் முன்னிலையில் வழங்கினார்.*

*சிந்து பணி நியமனம் குறித்து ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஆந்திரா அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-1 தேர்வு மூலம் சிந்துவிற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.*

*இதற்காக ஆந்திரா சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. சிந்து 30 நாட்களில்பணியில் சேர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக