மதி செய்திகள் -21-7-2017-friday
♈ 🇮🇳 சென்னை: 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
♈ 🇮🇳 Upset Hindus have urged Leuven (Belgium) headquartered leading global brewer Anheuser-Busch InBev to change the name of its popular “Brahma” beer, calling it highly inappropriate.Distinguished Hindu statesman Rajan Zed, in a statement in Nevada (USA) today, said that in Hinduism, the creator god Lord Brahma, along with Lord Vishnu and Lord Shiva, forms the great triad of Hindu deities. Linking Lord Brahma with an alcoholic beverage was very disrespectful, Inappropriate usage of Hindu deities or concepts or symbols for commercial or other agenda was not okay as it hurt the devotees, Zed, who is President of Universal Society of Hinduism, pointed out.Rajan Zed stressed that Lord Brahma was highly revered in Hinduism, meant to be worshipped in temples or home shrines and not to be used in selling beer for mercantile greed.
♈ 🇮🇳 கோவை புத்தக திருவிழா இன்று காலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் தொடங்குகிறது. இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் 167 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளன. பபாசி, கொடிசியா அமைப்புகள் இணைந்து கோயமுத்தூர் புத்தக திருவிழா என்ற பெயரில் கண்காட்சியை நடத்துகின்றனர்
♈ 🇮🇳 திருவனந்தபுரம்: மாத்ருபூமி ஊடக நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 75 பெண்களுக்கு மாதவிடாயின் முதல் நாள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது
♈ 🇮🇳 முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்வது எப்படி? இதைப் பற்றி விரிவாக கூறும் புத்தகம் அமேஸான் ஆன்லைன் வர்த்தக வலைதளத்தில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன.
♈ 🇮🇳 செளதியின் ஒரு இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத், பலரை அடிக்கும் காணொளிக் காட்சி,சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அவரை கைது செய்ய செளதி அரசர் சல்மான் பின் அப்தெலாஜிஸின் உத்தரவிட்டார்
♈ 🇮🇳 செளதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் நேரடி விமானங்களின் உள்ளே லேப்டாப் எடுத்துச்செல்ல கூடாது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக செளதி அரேபியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது-
♈ 🇮🇳 ஜிம்பாப்வே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிங்கங்கள் அதிகமாக வசிக்கின்றன. இங்குள்ள ஜிரெட்சி என்ற இடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் இரவில் இயற்கை உபாதை காரணமாக வெளியே வந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த சிங்கம் ஒன்று அந்த சிறுமியை இழுத்து சென்று விட்டது. அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அந்த சிறுமி கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.பின்னர் காலையில் சென்று தேடிபார்த்த போது அங்கிருந்து 300 மீட்டர் தூரத்தில் சிறுமி பிணமாக கிடந்தார். அவளுடைய உடல் பாகங்கள் பலவற்றை சிங்கம் தின்றுவிட்டது. இந்த பகுதியில் சிங்கங்கள் அடிக்கடி மனிதர்களை தாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
♈ 🇮🇳 ஆடி கார் நிறுவனம், ஒரு விளம்பரத்தால் சீனாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆடியின் இந்த விளம்பரம் பாலியல் பாகுபாட்டுடன் (பெண்களை இழிவுப்படுத்துவது போல்) இருப்பதாக ஆயிரக்கணக்கான இணையப் பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஒரு முக்கியமான முடிவினை கவனமாக எடுக்க வேண்டும் எனக் கூறி கார் வாங்குவதை மனைவியைத் தேடுவதற்கு ஒப்பிடும் வகையில் இந்த விளம்பரம் உள்ளது.
♈ 🇮🇳 சென்னை உயர்நீதிமன்றத்தில் பழுதான லிப்டில் சிக்கிய மூன்று பேர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
♈ 🇮🇳 பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து,பூமியும் அழிந்து மற்ற கோள்கள் அனைத்து அழிந்தாலும் அழியாமல் இருக்கும் உயிரினம் ஒன்று உள்ளது. பொதுவாக இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதியிலும், பனிப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன. இது பார்பதற்கு கரடி போல் இருக்கும். இந்த உயிரினம் அதிகபட்சமாக 0.5 மில்லி மீற்றர் அளவிற்கு வளரக்கூடிய நுண்ணுயிரி. நீர் மற்றும் உணவு இல்லாமல் இதனால் 30 வருடங்கள் வரை வாழ முடியும்.150டிகிரி வெப்ப நிலையிலும், உறைய வைக்ககூடிய விண்வெளியிலும் உயிர் வாழுக்கூடியது. மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவை விட, 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும்.இந்த உயிரனத்தின் பெயர் டார்டி கிரேட். இது நீர் கரடி என்றும் அழைக்கப்படுகிறது.
♈ 🇮🇳 கம்போடியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் கன்று குட்டி ஒன்றை இறந்துபோன தனது கணவராக நினைத்து அதை வளர்த்து வருகிறார். தொழுவத்தில் இருக்க வேண்டிய கன்று தற்போது சகல வசதிகளுடன் மெத்தை, தலையணையுடன் வாழ்ந்து வருகிறது. மேலும் அந்த கன்று குட்டியின் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கிறது.
♈ 🇮🇳 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று வங்கி நிர்வாகத்திற்கு ஒரு அறிவுரை வழங்கி இருந்தார். இது எப்படியோ விஜய் மல்லையாவிற்கு தெரிந்து விட்டது. எனவே, கடந்த ஆண்டு மார்ச்,1ம் தேதி லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை விட்டு கொடுத்ததன் மூலம், விஜய் மல்லையாவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. அதாவது அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன் இந்த தொகை கிடைத்தது. ஆனாலும்,வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த அவர் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, புதிய தொழில் முதலீடுகளில் தான் ஆர்வம் காட்டினார். கடந்த ஆண்டு ஜனவரியில் அவர் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள பார்போடாஸ் பகுதிக்கு சென்று அங்கு ஒரு உள்ளூர் டி20 கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். மல்லையாவிற்கு கடன் கொடுத்த வங்கிகள் அவர் மீது புகார் அளிப்பதில் மிகவும் தயக்கம் காட்டின.
♈ 🇮🇳 வேகத்தடை ஒரு காரணமல்ல – விதியை மீறி மதியை இழந்து செல்வதுதான் காரணம் - சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் தெரிவித்ததாவது: முன்பிருந்ததைவிட தற்போது சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆனால் அதிகரித்து வரும் வாகனம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.சாலைகளில் அமைந்துள்ள வேகத்தடையால் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த 2015ம் ஆண்டில் 3,409 பேரும், 2014ம் ஆண்டில் 3,633பேரும் பலியாகி உள்ளனர். வேகத்தடையால் சராசரியாக தினமும் 9 பேர் பலியாகின்றனர். விபத்தை தடுக்க, குறைந்தபட்சம் தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டாம் எனவும், அத்தியாவசிய இடங்களில் சிறிய அளவிலான வேகத்தடைகளை அமைக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
♈ 🇮 அதிரடி அறிவிப்புகளை அறிவித்த உ பியால் இது மட்டும் சாத்தியமில்லை.வரி பணத்தில் ஆட்சி நடத்த முடியவில்லை. மதுவிலக்கு சாத்தியமில்லை என உ.பி., அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து உ.பி.,சட்டசபையில் அம்மாநில அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்ததாவது: மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆகையால் உ.பி.,யில் மதுவிலக்கு சாத்தியமில்லை. ஒருவேளை மதுவுக்கு தடை விதித்தால், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை பெருகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
♈ 🇮 ரயில்வே துறையை சீரமைக்கவும் மேம்படுத்தவும் ரூ.5 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. பழமையான முறைகளை மாற்றி, ரயில்வேத்துறையில் டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, திட்டமிடல், ரயில் பல்கலை அமைத்தல், ரயில் கட்டண அமைப்பு உருவாக்குவது தொடர்பாக உலக வங்கி,இந்திய ரயில்வேக்கு உதவி செய்ய உள்ளது.ரயில்வேயை நவீனமாக்கும் பணி நிறைவடைய 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதுவரையிலும், உலக வங்கி ஆலோசனை சேவை, நிகழ்ச்சி திட்டமிடல் ஆலோசனை ஆகியவையும் வழங்க உள்ளது.
♈ 🇮 மும்பையில் 11 பேர் கொண்ட கும்பலால் ஜாமினில் வெளிவந்த கொலை குற்றவாளி பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இதன் சி.சி.டி.வி. காட்சியை போலீசார் வெளியிட்டு விசாரிக்கின்றனர்
♈ தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள கோஷமஹால் என்ற இடத்தில் முதல் முறையாக அரிய வகை பறக்கும் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
♈ திருவள்ளூர்: மீஞ்சூர் பஸ் நிலையம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
♈ சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஏகராஜ் என்பவர் பலியாகியிருந்தார். கீழ்பாக்கம் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு தீயணைப்பு வீரர் பரமானந்தம் மற்றும் அபிமன்யு பலியாக பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பேக்கரி உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது
♈ துருக்கி, கிரீஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.7ஆக பதிவான இந்நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் .
♈ 🇮 சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னுத்தாய் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
♈ நாமக்கல் மாவட்டம் தரங்கம்பாடியில் காரைக்காலை சேர்ந்த அரிசி வியாபாரியிடம் ரூ.4.70 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற கலீல் ரஹ்மானிடமிருந்து ரூ.4.70லட்சம் வழிப்பறி செய்த மர்மநபர்கள் 3 பேர் தப்பியோடியுள்ளனர்
♈ ஈரோடு மாநகராட்சியில் அதிமுக பிரமுகரை கண்டித்து துப்பரவுத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.துப்புரவுத் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியதாக கோவிந்தராஜ் மீது மக்கள் குற்றஞ்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டம் காரணமாக ஈரோடு - பழனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
♈ நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 2 நாட்களில் நீர்மட்டம் 5.5 அடி உயர்ந்து 42.33அடியிலிருந்து 47.53அடியாக உயர்ந்துள்ளது .
♈ கடலூர்: என்எல்சி நிறுவனத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நாட்கள் 26ல் இருந்து 19 நாட்களாக குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த என்எல்சி ஊழியர்கள் 26நாட்கள் பணி வழங்க கோரி இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நெய்வேலியில் நடக்க உள்ள உண்ணாவிரதத்தில் அனைத்து ஒப்பந்தஊழியர்கள் கூட்டமைப்பினர் பங்கேற்க உள்ளனர்.
♈ 🇮 சென்னையில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, மாவாவை விற்றதாக 421 பேர் கைது செய்யப்பட்டனர் . 12,306 பான்மசாலா,மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 610 வழக்குகள் பதிவாகியுள்ளது -திருவள்ளூர்: ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்.
♈ தஞ்சை : கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 5வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. 10பேரை விடுவிக்கக்கோரியும் அய்யனார் கோயில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் .
♈நாமக்கல் அருகே ராசிபுரத்தில் 2 வீடுகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்
12.30pm -21-7-2017-friday
♈ 🇮🇳 ஜிகே மணி சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'தமிழகத்தில் வாக்களித்த, வாக்களிக்கும் உரிமையுள்ள யாரும் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்கலாம். தவறுகளை சுட்டிக் காட்டலாம். அதற்கு, மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த வகையில், கமல் இந்த ஆட்சியை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை. அதற்கு, நாகரீகமாக இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் பதில் அளிப்பதை விட்டுவிட்டு, கமலிடம் மிரட்டலாக, நாகரீகம் அற்ற வார்த்தைகளில் பேசுவது தவறு. கமலை அப்படி பேசத்தான் அமைச்சர்களுக்கு உரிமையில்லை" என்று கூறினார்
♈ 🇮🇳 கரூர் தனியார் தேங்காய் நார் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக இருந்த13 பேரை வட்டாட்சியர் மீட்டு சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார்
♈ 🇮🇳 திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா
♈ 🇮🇳 ஜியோவில் மாதம் ரூ.153க்கு இலவச கால், அன்லிமிட் டேட்டா .
♈ 🇮🇳 திருப்பூர்: தனியார் நூல் ஆலையில் தீ விபத்து
♈ 🇮🇳 அயோத்தி விவகாரத்தை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு.
♈ 🇮🇳 தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
♈ 🇮🇳 ராம்நாத் கோவிந்துக்கு இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து .
♈ 🇮🇳 ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
♈ 🇮🇳 பண மோசடி: லாலு மகள் மிசாவின் ஆடிட்டர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
♈ 🇮🇳 செப்டம்பரில் கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: தம்பிதுரை
♈ 🇮🇳 பசுவதை தடுப்பு கும்பல் மீதான நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி.
♈ 🇮🇳 அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றிவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த சசிகலா தரப்பினர் அனைவரும் ஒன்றாக கைகோர்த்திருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
♈ 🇮🇳 நைட்டாச்சுனா ஏதாச்சும் கொடச்சல் கொடுத்து அமைச்சர்களை தூங்கவிடாம செஞ்சிட்டு தூங்குற தூக்கம் இருக்கே .சென்னை: இரவு நேரம் வந்துவிட்டால் கமல் ஹாஸன் ட்விட்டரில் என்ன சொல்லப் போகிறாரோ என்று தமிழக மக்கள் ஆவலாக காத்துள்ளனர். மாநில அரசை மறைமுகமாக தாக்கிப் பேசிய உலக நாயகன் கமல் ஹாஸன் தற்போது நேரடியாகவே விமர்சிக்கிறார். இரவாகிவிட்டால் ஏதாவது ட்வீட்டி பலரின் தூக்கத்தை கெடுத்துவிடுகிறார்.
♈ 🇮🇳 காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொசுகளை ஒழிக்க நடவக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். காய்ச்சல் வந்தால் தானாக மருந்து உட்கொள்ளக்கூடாது மருத்தவமனையை நாடவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
♈ 🇮🇳 சாலை விபத்தில் படுகாயமடைந்த உயிருக்கு போராடிய பொறியாளருக்கு உதவாமல், அங்கிருந்த மக்கள் மொபைலில் புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
♈ 🇮🇳 அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்பவர்களில் இந்தியர்களே அதிகம்.
♈ 🇮🇳 ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, மங்கல்யான்-2, சந்திராயன் செயற்கைகோள் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. 2018இல் சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். சந்திரயான் 1 வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தகவல்களை அனுப்பும் என தெரிவித்துள்ளார்
♈ 🇮🇳 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் - பூவந்தி அருகே ஏனாதி கிராமத்தில் அடுத்தவர் வயலில் ஆடு,மாடு மேய்த்ததால் ஏற்பட்ட தகராறில் தவமணியின் மனைவி லோகாம்பாள் (32) என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை கை,கால்,உடம்பு துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டி ஏனாதி கண்மாயில் கொலையாளிகள் போட்டுச் சென்றுள்ளனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்
♈ 🇮🇳 திருட்டு விசிடி விற்பனை செய்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் மயிலை அசோக்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
♈ 🇮🇳 மும்பை: டிஆர்பிக்காக ஒரே மாதிரியான காட்சிகளை காட்டுவதாகக் கூறி பிரபல டிவி சீரியலுக்கு எதிராக பார்வையாளர்கள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்
♈ 🇮🇳 ‘பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா’ ஓய்வூதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் அருண் ஜேட்லி! --- vishwarubam news
♈ 🇮🇳 சேலம்: மேட்டூரை அடுத்துள்ள செட்டியூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் அப்பாவும் இரண்டு வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
♈ 🇮🇳 ஐதராபாத் : தெலுங்கானாவில் பள்ளிக்கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என்று ஆசிரியர்கள் நூதன முறையில் ஹெல்மெட் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
♈ 🇮🇳 நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
♈ 🇮🇳 பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பொதுமக்களை தாக்குவதையோ,கொள்வதையோ ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களை தாக்குதல் அதிகரித்துள்ளது என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு பிராமண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஹரியானா, உபி, குஜராத்,ராஜஸ்தான், கர்நாடக ஆகிய மாநிலங்கள் 4வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பொதுமக்கள் சிலர் மீது தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
♈ 🇮🇳 நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக நாட்டை விட்டு வெளியேற திலீப் முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கு தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
♈ 🇮🇳 இந்தியா-சீனா இடையேயான எல்லை மோதலை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
♈ 🇮🇳 ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி வாக்களிக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடத்தப்படும்: காங்கிரஸ்
♈ 🇮🇳 நாட்டின் 14-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்திற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது
♈ 🇮🇳 இடஒதுக்கீடு விதிமுறையைப் பின்பற்றாத தனியார் கல்லூரிகள் - தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் நடவடிக்கை! .
♈ 🇮🇳 இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
♈ 🇮🇳 சென்னை, அடையார் போட் கிளப் பகுதியில் உள்ள முன்னாள் ஐஜி அருள் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரூ.60 கோடி மதிப்புள்ள சொத்தை ரூ.10 கோடிக்கு குறைத்து மதிப்பீட்டு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
♈ 🇮🇳 ஒருவேளை கமல் அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்போம் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறினார். மேலேயும் கமல் எந்த திசை நோக்கி பயணம் செய்ய போகிறார் என்பது போகபோகத்தான் தான் தெரியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
♈ 🇮🇳 தமிழகத்தில் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காய்ச்சல்இ தொற்று நோய்கள் நிலைமை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுசுகாதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாஸ் கிளீனிங் செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
♈ 🇮🇳 சென்னை தரமணியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தரமணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
♈ 🇮🇳 இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 25 ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் த.பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து, ஜிஎஸ்டி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்-
♈ 🇮🇳 தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளதை நடிகர் கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார். கமலுக்கு பதில் சொல்வதை விடுத்து டெங்குவை ஒழிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
♈ 🇮🇳 கடலூரில் குறைத்தீர்வுக் கூட்டத்தில் விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
♈ 🇮🇳 1977ம் ஆண்டில் ரிலையன்ஸ் ரூ.7கோடி வருமானத்தை ஈட்டியது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி உரையாற்றி வருகிறார். மிகச்சில நிறுவனங்களே ரிலையன்ஸ் போன்று வளர்ச்சி அடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 4,700 மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது.
♈ 🇮🇳 அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரை சேர்ந்த 52-வயதானவர் அண்டான்யோ முரல்ஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் காபி வாங்கி கொண்டு வெளியில் விரைவாக வந்துள்ளார். வெளியில் வரும்பொழுது ஹால் மற்றும் அவரது நண்பர் மீது தவறுதலாக மோதியதில் முரல்ஸின் கையிலிருந்த காபி, ஹால் மீது சிந்தியுள்ளது. இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஹால், முரல்ஸை கொடூரமாக தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த முரல்ஸ் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து போலீசார், 15-வயதான ஹாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.ஹாலின் இந்த செயல் ‘‘மிருகத்தனமான, புத்தியில்லாத மற்றும் முற்றிலும் தேவையற்றது” என கருத்து தெரிவித்த நீதிபதி,ஹாலுக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அடுத்த 12 ஆண்டுகள் கழித்துதான் பரோலில் வெளியில் வர முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக