திங்கள், 31 ஜூலை, 2017

Mathi News மாலை செய்திகள்@31/7/17

Mathi News  மாலை செய்திகள்@31/7/17


2016-17 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்துக்குள் சீனா ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து ஊடுருவியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது

சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு மார்ச் வரை, மாதம் தோறும், ஒரு சிலிண்டருக்கு நான்கு ரூபாய் வீதம் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டு பெற புதிய விதிமுறை வகுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர், அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறிஉள்ளார்.

லாலு கட்சியுடனான கூட்டணியை காப்பாற்ற கடைசி வரை முயற்சித்தேன். ஆனால், எனக்கு வேறு வழியில்லை,'' என, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்

ஆதார் எண் இணைக்கப்படாத பான்கார்டுகள் விரைவில் ரத்து செய்யப்படும்மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் அதியா தகவல்ஆதாரை பான் கார்டுடன் இணைக்க ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு அறிவிப்பு

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை சுற்று பகுதியில் பலத்த மழை

அனைவருக்கும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்; அமைச்சர் காமராஜ்

நாகை, குத்தாலம் தாலுகா தென்குடி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் குளத்தில் மூழ்கி பலிஇவர்கள் அக்கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்துவரும் கிரு‌ஷணகுமார்,சஞ்சய் என தெரியவந்துள்ளதுஇதுகுறித்து குத்தாலம் போலீஸார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டசபையில் அராஜகம் செய்தவர் ஸ்டாலின் என அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது டிராமா செய்து சட்டையை கழட்டி காண்பித்தார் எனவும் தெரிவித்தார்.மேலும், வேஷ்டியையே கழட்டிக் காண்பித்தாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார்

வரும் 5ம் தேதி டிடிவி தினகரன், அதிமுக அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை

ராமேஸ்வரத்திலுள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்பவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி மறுப்பு மக்கள் புகைப்படம் எடுக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதுகலாம் அருகே கீதை புத்தகம் இருப்பது தமிழகத்தில் பல்வேறுமட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இதற்கு காரணம் என கூறப்படுகிறது

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நசீர் மதானிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உணவு பாதுகாப்பு விதிகள் தமிழக அரசிதழில் வெளியீடு

மணி மண்டபத்தில் கலாம் சிலையருகே பைபிள் மற்றும் குரான் நூல்களை வைத்ததற்காக அவரது பேரன் ஷேக் சலீம் மீது இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்அணைக் கட்டுவது தொடர்பாகத் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டம் வேண்டும்

நீட் தேர்வுக்காக, அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்லவில்லை என்றும், தனது தலைக்குமேல் தொங்கும் கத்திக்காக சென்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை, சோழிங்கநல்லூர் அருகே, வடமாநில இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக அவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துள்ளார்அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மோடியிடம் அவர் கோரிக்கை வைத்ததுள்ளதாக தகவல்

கந்து வட்டி தொடர்பான 3வது புகாரில் போத்ரா கைது

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களுடனான அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்க வந்த கேரள முதல்வர் பினாரயி விஜயன், அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களை, 'வெளியே போ...' என, கோபத்துடன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மருத்துவ பயன்பாடுகளுக்கு கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கஞ்சா அனுமதிக்கப்பட்டது போல் இந்தியாவிலும் அனுமதி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் 261.85 கோடி ரூபாய் செலவில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

தூங்கிய ஆசிரியரை புகைப்படம் எடுத்ததால் போலீசாரை ஏவி மாணவனை கம்பியில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உயர் நிலைப்பள்ளியில்

மேற்கு வங்காளம் மாநிலம் புருலியா மாவட்டத்தில் 3 வயது சிறுமியை செய்வினை பொம்மையாக்கி ஊசியால் குத்திக் கொன்ற மந்திரவாதி சனாதன் தாகூர் இன்று கைது செய்யப்பட்டார்

முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது

ஊழலுக்கு எதிராக கருத்து கூறியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதரவு அளித்துள்ளார்.

நடிகை நயன்தாரா 50 வினாடி டிவி விளம்பரத்திற்கு ரூ. 5 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகையை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்த நடிகர் திலீப் திட்டங்களை மலையாள பிரபலங்கள் பலர் அறிந்து இருந்தனர் என விசாரணையில் தெரியவந்து உள்ளது.

ஆண் பாதுகாவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சவுதியை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் நூறு நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரிய மிரட்டல் விவகாரத்தை அமெரிக்கா வர்த்தக உறவுடன் தொடர்புபடுத்த கூடாது: சீனா

தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகளின் உரிமை மீறலாகும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான இன்று என்றும் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை சென்செக்ஸ் நிலவரம் உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

எஸ்பிஐ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு.

🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 31/07/17 !

தமிழக ரேசன் திட்டத்தின் கீழ் மாற்றம் இல்லை.மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது - அமைச்சர் காமராஜ்.

அனைத்து தரப்பினருக்கும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.தற்போது உள்ள பொது விநியோகத்திட்டத்தில் எள்ளளவும் மாற்றமில்லை; ரேஷன் பொருட்கள் இல்லை என்பது வதந்தி - அமைச்சர் காமராஜ்.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4பேரின் காவலை ஆக.14 வரை நீட்டித்தது நீதிமன்றம்.

சிறையில் உள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.

குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்துக்கு இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சிறைகளில் காலியாக உள்ள சிறை கைதி நல அலுவலர்களை 6 மாதங்களில் நியமிக்க தமிழக உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுகவின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொல்லவில்லை : முக.ஸ்டாலின்.

எம்.எல்.ஏ.களை ரூ.15 கோடிக்கு விலை பேசுகிறது பாஜக : காங்கிரஸ் குற்றச்சாட்டு.

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் இடமுண்டு - சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

கலாம் வீணை வாசிப்பது போல சிலை வைத்தும், பகவத் கீதையை வைத்தும் மதவாதம் திணிக்கப்படுகிறது : திமுக.

நளினிக்கு 6 மாத பரோல் தருவது குறித்து ஆக.7க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருவனந்தபுரத்தில் ஆக.6ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு : கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் உள்ள ஜெயராமனுடன் முக.ஸ்டாலின் சந்திப்பு.

சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் : சித்தராமையாவுக்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடிதம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.8,892கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து செய்யப்படும் - வருவாய்த்துறை செயலர்.

சவுதி அரேபியாவில் உள்ள சிறைகளில் 2,046 இந்தியர்கள் உள்ளனர் : மத்திய அரசு.

பசுவை தடுப்பு என்ற பெயரில் குண்டர்கள் கொலை வெறியாட்டம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு.

ஈரோடு: நாதகவுண்டம்பாளையத்தில் சொத்து தகராறில் தாயை கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

கேரள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை : முதல்வர், டிஜிபியிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்.

கலாம் நினைவு மண்டபத்தில் செல்போன், கேமரா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கதிராமங்கலத்தில் மத்திய அரசு ஆய்வுப்பணிகள் மட்டுமே மேற்கொண்டது : முக.ஸ்டாலின்.

வேட்டி, சட்டையை கிழித்தாலும் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது : அமைச்சர் சி.வி.சண்முகம்.

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை எதிர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - முக.ஸ்டாலின்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதிஷின் முடிவை ஏற்க முடியாது - ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்  சரத் யாதவ்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு பேசுவது ஏமாற்று வேலை - சீமான் மதுரையில் பேட்டி.

சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் பாஜகவினர் தன்னை மிரட்டுவதாக ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி புகார்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது பாட்னா உயர்நீதிமன்றம்.

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பின் மேலாளர் போலீசில் சரண்.

தன்னை குறித்தும், சேலம் வங்கி தலைவர் குறித்தும் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது : செல்லூர் ராஜூ.

டிஜிபி, காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான லஞ்ச புகார் என்பது முக்கிய பிரச்னை: உயர்நீதிமன்றம்.

நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வை ஆக.30க்குள் நடத்தி முடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை : சிபிஎஸ்இ.

ஓ.என்.ஜி.சி. திட்டத்திற்கு எதிராக கதிராமங்கலம் கிராம மக்கள் 21வது நாளாக போராட்டம்; துணியால் வாயை மூடி நூதன போராட்டம்.

கக்கூஸ் ஆவணப்படத்தில் சில சமூகங்களை திவ்யா இழிவுப்படுத்தியதாக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு.

புதுக்கோட்டை : ஆர்.புதுப்பட்டினம் கடற்கரையில் இலங்கைக்கு சொந்தமான பைபர் படகு கரை ஒதுங்கியது.

கோவை குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் நாசர் மதானிக்கு ஆக.14வரை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

திமுகவின் முரசொலி பவளவிழாவில்  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆசிரியர் வகுப்பில் தூங்குவதை படம் பிடித்து உயரதிகாரிக்கு அனுப்பிய மாணவரை போலீசார் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

வட கொரியாவுக்கு பதிலடி கொடுப்பது பற்றி அமெரிக்கா - ஜப்பான் ஆலோசனை: ராணுவ பலத்தைப் பிரயோகிக்க டிரம்ப் முடிவு?.

வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.1கோடி அபராதம் விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி.

கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரத்தை முறையாக பராமரிக்காத புகாரில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா மீது ஆர்பிஐ நடவடிக்கை.

உத்தராகண்ட்: பர்ஹோட்டி எல்லையில் சீன துருப்புகள் ஒரு கிலோ மீட்டர் வரை ஊடுருவியுள்ளதாக தகவல்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.

கொடைக்கானல் எரிச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

எல்லை பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் மூத்த ராணுவ அதிகாரிகள் ஆலோசனை.

கந்துவட்டி தொடர்பான 3ஆவது புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா கைது.

டெங்கு காய்ச்சல் எதிரொலி: சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.

உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் சுவிட்சர்லாந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் சிலிண்டர் விலை ரூ.4 உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக