MATHI NEWS 7.30am -1-8-2017-tuesday
♈ 🇮🇳 ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஓடியது. மெட்டல்வாடி-மல்லன்குழி சாலையை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
♈ 🇮🇳 ஏடிஎம் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என சேலம் மாநகர போலீசார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வங்கி பரிவர்த்தனை குறித்து சந்தேகம் இருந்தால் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை அணுக வேண்டும் என்று தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் பேசுவதாக தொலைபேசியில் யாரேனும் அழைத்தால் இணைப்பை துண்டிக்கவும் என்று கூறினார்
♈ 🇮🇳 ♈ 🇮🇳 கோவையில் போலீஸ் ஓட்ட தேர்வு: இலக்கை எட்டும் முன் மயங்கி விழுந்த 7 பெண்கள்
தென் கொரியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் 4 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்நாட்டு அரசு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு போனஸ், தாய்மார்களுக்கு மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தென் கொரியா அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது
♈ 🇮🇳 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது
♈ 🇮🇳 வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தைஇ வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
♈ 🇮🇳 குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காதவர்களின் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட்31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
♈ 🇮 பணம் கஷ்ட்டப்பட்டு கொடுப்பது தயாரிப்பாளர்கள் .சங்கம் அமைத்து கொள்ளையடிப்பது அரசியல்வாதிகள் போல இதர சங்கங்கள் ரவுடிகள் போல தீவிரவாதிகளை போல செயல்பட்டால் நியாயமா –கே.ஆர் .கிரியேஷன்ஸ் –கணேஷ் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் மாற்றமில்லை என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். பெப்சி அமைப்பின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பு நடைபெறும் என விஷால் அறிவித்துள்ளார்.தயாரிப்பாளர்கள் இல்லாமல் ஒரு இயக்குனர் , ஒரு ஒளிப்பதிவாளர் ஒரு நடிகர் எப்படி வர முடியும். அவர்களின் தயாரிப்பின் போது பல பிரிவிடம் கமிஷன் பெற்றுதான் இவர்கள் தயாரிப்பாளராக வளர முடிகிறது. நடிகர் நடிகைகளின் , உதவியாளர்களின் அட்டகாசம் மிகவும் மோசம் –விஸ்வரூபம்
♈ தன் பிள்ளையை பார்த்து குரைத்ததால் தந்தை ஒருவர் நாயை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றதாக ஒரு செய்தி – தெருக்களில் நாயை வாக்கிங் கூட்டி செல்வோர் பலர் தன் வீட்டு வாகனத்தில் உச்சா போக விடமாட்டார் . அடுத்தவர் வீட்டு வாகனத்தில் உச்சா போக அனுமதிப்பார். கையிறை இறுக்கமாக பிடித்து செல்ல மாட்டார். இப்படியெல்லாம் நாயை வாக்கிங் அழைத்து சென்று பொதுமக்களை அச்சுருத்துவர்
♈ அணிகள் இணைப்பு: அ.தி.மு.க., இன்று ஆலோசனை
♈ இயக்குனர் விக்ரமனுக்கு விஸ்வரூபம் நன்றி தெரிவித்தது -பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் உதவியால்
♈ இன்றைய(ஆக.,1) விலை: பெட்ரோல் ரூ.67.71; டீசல் ரூ.58.49--விஸ்வரூபம்
♈ சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக மழை
♈ 🇮 குடியாத்தம்: சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி
♈ திருச்சி ரயில்வே பிளாட்பாரக்கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20ஆக உயர்வு
♈ 🇮🇳 மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை
♈ 🇮🇳 தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் அட்டகாசம்.
♈ 🇮🇳 சேலம்: லஞ்ச புகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்
♈ 🇮🇳 டில்லி பல்கலையின் கீழுள்ள, 28 கல்லூரிகளுக்கு வழங்கப்படும் நிதியை, டில்லி அரசு முடக்கியுள்ளது. அரசு விதிமுறைகளின்படி, நிர்வாகக் குழுவை அமைக்காததால், இந்தக் கல்லூரிகளுக்கான நிதியை நிறுத்துவதாக,டில்லி அரசு கூறியுள்ளது
♈ 🇮🇳 அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 169.50 முதல், 165.50 வரை, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு, நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று, 165 முதல், 161 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கவுன்சிலிங் நடக்க உள்ளது
♈ 🇮🇳 பீம்' ஆப் மூலம் 50 லட்சம் பரிவர்த்தனைகளில், ரூ.1,500 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது என மத்திய அமைச்சர ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்
♈ 🇮🇳 ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தின் போது பதிலளித்த, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி, ''கங்கை நதி துாய்மை திட்டத்துக்காக, 20 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது,'' என்றார்.
♈ 🇮🇳 மரபணு மாற்றப்பட்ட கடுகை அனுமதிப்பது தொடர்பான பிரச்னையில்,ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது
♈ 🇮🇳 ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், சுற்றுலா துறைக்கு பாதிப்பு உள்ளதா என்பதை, தற்போது கணிக்க முடியவில்லை. அதே சமயம், துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், வரி விகிதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரளாவில் படகு வீடு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,''என, சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா, லோக்சபாவில் தெரிவித்தார்.
♈ 🇮🇳 மத்திய டெல்லி கரோல் பாக்கில் மொபைல் போன் உதிரிபாகம் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்ப்பவர் நீரஜ்(20). நேற்று முன்தினம் அவர், கடையை விட்டு, படி வழியாக கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 2பேர் அவரை வழிமறித்தனர். பின் நீரஜிடம் இருந்த பணப்பையை பறிக்க முற்பட்டனர். ஆனால் பணப்பையை தரமறுத்ததால்,ஆத்திரமடைந்த அவர்கள் நீரஜின் வயிற்றில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு,அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
♈ 🇮🇳 தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த ராஜா (55)என்பவரின் வீட்டில் சோதனை நடத்திய போது, 300 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்யும் மொத்த வியாபாரி என தெரிந்தது. போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
♈ 🇮🇳 மின்வாரிய தொமுச பொதுச்செயலாளர் ரத்தினசபாபதி வெளியிட்ட அறிக்கை:மின்வாரிய தொழிலாளர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். களப்பிரிவில் ஓராண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை. சுமார் 30,000 காலி பணி இடங்கள் உள்ளன. மின்வாரியத் தலைவர் உடனே ஊதிய உயர்வு தொடர்பாக எங்களுடன் பேசி, வரும் 15ம் தேதிக்குள் முடிவு அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தோழமை சங்கங்களுடன் இணைந்து நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என வாரியத்துக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் நிலக்கரி லாரி மீதி மற்றோரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குண்டூரைச் சேர்ந்த ஓட்டுநர் பஷீர் மற்றும் கிளீனர் ரியாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற நிலக்கரி லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது
1pm -1-8-2017-tuesday
♈ 🇮🇳 கலாச்சார நடன நிகழ்ச்சி என்ற பெயரில் சென்னையில் நள்ளிரவில் பெண்களின் ஆபாச நடனம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, என்று புகார்கள் எழுந்துள்ளன. சென்னை அண்ணா சாலை வாகன நெரிசலுடன் எப்போதும் ஹாரன் சத்தம் பறக்கும் பரபரப்பான சாலை. இந்த சாலைக்கு மிக அருகில் உள்ள ஒரு தெருவில் நள்ளிரவு நேரத்தில் ஆபாச நடனம் நடக்கிறது. வாசலில் ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் பாடல்கள் ஒலிக்க அன்ன நடை போட்டு கொண்டு விதவிதமான அலங்காரத்தில் வரும் பெண்கள் ஆபாச நடனம் ஆடுகின்றனர். இரண்டு கம்பிகளுக்கு நடுவே ஆடும் பெண்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. காதைக் கிழிக்கும் இசைக்கேற்ப உற்சாகத் தள்ளாட்டம் போடும் போதை ஆசாமிகள், நடனமாடும் பெண்களுக்குப் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கின்றனர். சிலர் எல்லை மீறி நடனமாடும் பெண்கள் மீது ரூபாய் நோட்டுகளை தலையில் வாரி இறைக்கின்றனர்.கலாச்சார மையம் என்ற பெயரில் சென்னையின் மைய இடமான அண்ணாசாலையிலேயே இது போன்ற ஒரு ஆபாச நடனம் நடப்பது போலீசாருக்குத் தெரியாமலா இருக்கும் என்ற சந்தேகம் எழும். ஆம் காவல்துறையினர் ரகசியமாக பணம் வாங்கிக் கொண்டு இந்த கலாச்சார நடனத்தை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது
♈ 🇮🇳 தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதுவரை 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது
உயிரை பறிக்கும் இணைய விளையாட்டில் கலந்து கொண்டு இந்திய சிறுவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புளூ வேல் சூசைடு சேலஞ் (Blue Whale suicide challenge) எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task)விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும்.நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது,தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக்கொள்வது, மொட்டமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என மொத்தம் 50 நாட்களுக்கு வெவ்வேறு வகையான டாஸ்குககள் கொடுக்கப்படும்.பங்கேற்பாளர்கள் தினமும் இந்த டாஸ்குகளை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு டாஸ்கையும் முடித்த பிறகே அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும்.இந்த விபரீத விளையாட்டின் கடைசி கட்டமான 50வது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் படி டாஸ்க் கொடுக்கப்படும்
சமுக வலைத்தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-கின் சொத்து மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 25,000 கோடி ரூபாய் அதாவது அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 3.8 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சுமார் 175.49ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பெற்றது. பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-இன் மதிப்பு வியாழக்கிழமை மட்டும் சுமார் 3.8பில்லியன் டாலர் வரை உயர்ந்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25,000,000,000 ரூபாய்
♈ 🇮🇳 அமெரிக்கவின் சிகாகோ நகரில் ஓட்டலில் ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கியுள்ளனர்.அவர்கள் அளித்துள்ள புகாரில், நாங்கள் ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் போது விசித்திரமான ஒலிகளும்,வாசனைகளும் வருகின்றன.நாங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த ஓட்டல் அறைக்கு வருகிறோம். ஒவ்வொரு முறையும் இங்கு தங்கும் போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன்.இந்த விஷயத்தில் கவனம் எடுத்துகொள்ள நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் சிகாகோ ஓட்டல் நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளோம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது
♈ 🇮🇳 எல்லையில் எந்த ஊடுருவலையும் தடுக்க சீன ராணுவம் தயராக உள்ளதாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்
♈ 🇮🇳 அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
♈ 🇮🇳 அமெரிக்கா வெனிசூலாவின் அதிபர் நிக்கோலஸ் மாடுரோவை ‘சர்வாதிகாரி’ என்றழைத்து அவர் மீது தடைகளை விதித்துள்ளது
♈ 🇮🇳 நீட் தேர்வில் தமிழகத்துக்கு இடைக்கால விலக்கு தொடர்பாக எந்த சட்ட விளக்கமும் கேட்கப்படவில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தகவல் அளித்துள்ளார்.நீட் தேர்வில் தமிழகத்துக்கு இடைக்கால விலக்கு தருவது தொடர்பாக எந்த ஆவணங்களும் தனக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்
♈ 🇮🇳 சினிமா பைனான்சியர் போத்ரா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்
♈ 🇮🇳 நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை அனைத்து விளையாட்டு சங்கங்களும் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. லோதா குழு பரிந்துரைகளை 3 மாதத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் அமல்படுத்த வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது
♈ 🇮🇳 திருமுருகன் காந்திக்கு ஆகஸ்ட் 9 வரை காவல் நீட்டிப்பு
♈ 🇮🇳 போதைப்பொருள் விவகாரம்: தெலுங்கு நடிகர் ஆனந்தகிருஷ்ணா ஆஜர்
♈ 🇮🇳 காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்
♈ 🇮🇳 இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு ஹைதராபாத் தொழிலதிபர் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார். உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி சாமுண்டீஸ்வரநாத் பரிசளித்தார்
♈ 🇮🇳 பெங்களூரு: வேலை பறிபோகும் என்ற பீதியிலுள்ள மென் பொறியாளர்கள், ஜோதிடர்களை நாடி, 'எங்களின் பணி பாதுகாப்புக்கு பரிகாரம் ஏதாவது இருக்கா?' என, கேட்டு மன்றாடுகின்றனர். இதனால், ஜோதிட வல்லுனர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது
♈ 🇮🇳 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,271 கன அடியில் இருந்து 7,181 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 35.67 அடியாகவும், நீர் இருப்பு9.93 டிஎம்சியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
♈ 🇮🇳 லோக்சபாவில், கேள்வி நேரத்தின் போது, ''தேசிய கல்வியறிவு திட்டத்தின் மூலம், 2010 - 2016 வரை, 7.92 கோடி பேர், அடிப்படை படிப்பறிவுக்கான பயிற்சியில் பங்கேற்றனர். இதில், 5.88 கோடி பேர் தேர்ச்சி பெற்று, படித்தவர்கள் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர்,'' என, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்
♈ 🇮🇳 ''நாடு முழுவதும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், வேலை கேட்டு, 2016 - 17ம் நிதியாண்டில், 5.69 கோடி பேர் மனு செய்தனர். அதில், 5.12கோடி பேருக்கு வேலை அளிக்கப்பட்டது,'' என, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ராஜ்யசபாவில் தெரிவித்தார்
♈ 🇮🇳 உ.பி., மாநிலத்தில் உள்ள, ஒரு சிவன் கோவிலுக்கு, ஹிந்து, முஸ்லிம் பாகுபாடின்றி, அனைவரும் வந்து பூஜை செய்வதுடன், கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை பெற்று செல்கின்றனர்
♈ 🇮🇳 3 கோடி போலி காஸ் இணைப்புகள்: மத்திய அமைச்சர்
♈ 🇮🇳 ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
♈ 🇮🇳 நித்யானந்தா சீடர்களுக்கு இந்து அறநிலையத்துறை எச்சரிக்கை
♈ 🇮🇳 பெண் பலாத்காரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
♈ 🇮🇳 நீர் நிலைகளை பார்வையிட சென்ற ஸ்டாலினை தடுத்தது ஏன்? ஐகோர்ட்
♈ 🇮🇳 கட்சியின் து.பொதுசெயலர் என்ற முறையில் எனது செயல்பாடு இருக்கும்; தினகரன்
♈ 🇮🇳 திருச்சியில் மறியல் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி
♈ 🇮 அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு ஐகோர்ட் எச்சரிக்கை –விஸ்வரூபம்
♈ அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: கட்சியும், ஆட்சியும் முதல்வரிடம் உள்ளது. எங்களின் கட்சி அலுவலகத்திற்கு வழக்கம் போல் சென்று வருகிறோம். தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வருகை குறித்த அனுமானத்திற்கு பதில் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்
♈ காஷ்மீரில் லஷ்கர் அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி அபு துஜானா என்பவரை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு கொன்றனர்
1pm -1-8-2017-tuesday
♈ 🇮🇳 முதல்வரின் மாவட்டத்தில் “திருடன்-போலீஸ்” விளையாட்டு..!
எங்க எஸ்.பி. ஐயா திருச்செங்கோட்டில் நாலு கோடி செலவில் வீடு கட்டிக்கிட்டு இருக்கிறார். அதுக்கு மரம், எலக்ட்ரிகல் சாமானெல்லாம் நான்தான் வாங்கிக்குடுக்கவேண்டும். என்று சொல்லி பத்தாயிரத்தை கழித்துக்கொண்டு இருபது ஆயிரத்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
“சின்னப் பையனா இருக்கிறான், சட்டப்படி இவனை கைது செய்து விசாரிக்கவும் முடியாது. பணத்தை எடுத்துக்கிட்டு இவ்வளவு கேர்லஸ்சா இருப்பாங்களா...? ஆத்தூர் காவல் நிலையத்தின்ஆய்வாளர் கேசவன்
♈ 🇮 பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே; கமல் டுவீட்
♈ 🇮🇳 காவிரியில் கழிவு நீர் கலப்தை தடுக்க குழு அமைப்பு
♈ 🇮🇳 மதுரையில் குண்டர் சட்டத்தில் 2 சிறுவர்கள் கைது
♈ 🇮 சுனந்தா புஷ்கர் மரண பின்னணி கண்டறிவதில் தாமதம் ஏன்? டில்லி ஐகோர்ட்
♈ 🇮 காஷ்மீரில் இணையதள சேவை துண்டிப்பு
♈ 🇮 சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படாது: மத்திய அரசு விளக்கம்
♈ 🇮 சென்னை கொடுங்கையூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்,மேலும் 3 பேர் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
♈ 🇮 மதுரையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் மயங்கி சரிந்தார். உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்த முருகன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி மதுரை காளவாசலில் 9 வழக்கறிகஞர்கள் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது
♈ 🇮 உத்தரப்பிரதேசம் மாநிலம் சிடாபூரில் குடும்ப உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் 3 பேர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த 3பேரும் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
♈ 🇮 படப்பிடிப்பு தடைபட்டதற்கு ஃபெப்சி காரணமல்ல என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். ஃபெப்சி மீதான குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் முன் வைத்தால் பிரச்னையை தீர்க்கலாம் என்றும் தாணு கையெழுத்திட்ட ஊதிய ஒப்பந்தத்தை ரத்து செய்ததே பிரச்னைக்கு காரணம் என்றும் அவர் கூறினார்
♈ 🇮 வங்கதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று 16வயதான மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவரரையும் அவரது தாயையும் மொட்டை அடித்துவிட்டு கொலை மிரட்டல் விட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது
♈ 🇮 மும்பையில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் மருத்துவர்கள்
♈ 🇮 கேரள மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமகள் காதலுடன் ஓடப் போவதாக மணமகனிடம் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
♈ 🇮 பலாத்கார வழக்கில் அந்த நபர் குற்றவாளிதான் என நிரூபிக்கப்பட்டு அவருக்கு அதிரடி தண்டனை வழங்கியுள்ளது அரசு. 3 வயது குழந்தையை கற்பழித்துகொன்ற 41 வயதான முகமது அல் மகரப் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் முக்கிய சாலை ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைத்து போலீசாரால் ஏகே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்
♈ 🇮 பிரபல ஹாலிவுட் நடிகையின் தங்கை கெயிலி ஜென்னர் தனது மார்பை பராமரிப்பதற்காக 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களை செலவழித்து வருவது தெரியவந்துள்ளது
MATHI NEWS மாலை செய்திகள்@1/8/17
தெலுங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங்கை நீக்கம் செய்தும் ஆர்.சி. குந்தியாவை நியமித்தும் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் உதவியாளர் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அனுப்பியது அம்பலமாகி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.2,000 கோடி வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர்கள் வருகை
பாமக நிறுவனர் ராமதாசும், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் திமுக மீது வெகுண்டு எழுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று திமுகவின் முதன்மை செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விசாரணை குழு கால அவகாசம் நீட்டிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சீராய்வு மனு நாளை விசாரணை
கீழடி ஆய்வு: முறையான நபர்களை நியமிக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன், தளவாய் சுந்தரம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சிவகாசி: பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி கட்டடம் இடிந்தது
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வசதிகளை, கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழுவினர், வரும் 4 ம் தேதி ஆய்வு செய்யவுள்ளனர். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் நீக்கி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நிடி ஆயோக்கின் துணைத்தலைவர் அர்விந்த் பனகரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
காரைக்குடியில் இளம் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைதுவீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞர் முயற்சிபொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கில் இன்று தேர்வுக்குழு விளக்கம் அளித்துள்ளதுஅதில்,போதிய அனுபவமில்லை என்று தெரிந்தே பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்தோம் என்று தெரிவித்துள்ளதுமேலும், துணைவேந்தர் நியமனத்தில் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளரின் நிர்பந்தம் இருந்தது என்று கூறியுள்ளனர்
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 4 குழந்தைகளுடன் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரேஷன் பொருள் மீதான கட்டுப்பாடுகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்-வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்படும்ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் அதிகம் பாதிக்கும்-ஸ்டாலின்
ஓபிஎஸ் அணியின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் அணிகள் இணைப்பு தானாக நிகழும்என ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
சென்னை மேடவாக்கம் அருகே பெற்றோர் திட்டியதால், மாயமான பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
சுதந்திர தினக் கொடியேற்று விழாவை பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் நடத்த வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமையல் எரிவாயு மானியம் ரத்து ஏழை மக்களை பாதிக்கும்மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு கண்டனம்பொதுவிநியோக திட்டத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு உடந்தை- வைகோ
எய்ம்ஸ் அமையும் இடத்தை அறிவிக்க கோரிய வழக்க நாளைக்கு ஒத்திவைப்பு
கிணறு விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ்., மனைவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
வேலூர் மாவட்டம் இராமாலையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர், மாணவர்கள் போரட்டம்நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி போராட்டம்
ஸ்டாலினை தடுத்தது சட்டபிரச்னையா? கவுரவ பிரச்னையா? ஐகோர்ட்
கமல் இணையத்தில் கருத்துச் சொல்லாமல் அரசியல் களாத்துக்கு வர வேண்டும்தமிழக பாஜக தலைவர் தமிழிசை காரைக்குடியில் பேச்சுரஜினி, கமல் இருவரும் அரசியல் களத்துக்கு வந்து பிறகு கருத்து சொல்வது நல்லது என தமிழிசை கருத்து
ஆந்திராவில், 2019ம் ஆண்டு முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஜகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சி சார்பில், 20 மாத தொடர் யாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பெங்களூருவுக்கு, 'கடத்தி' செல்லப்பட்டுள்ள காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு வசதியாக, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஓட்டு இல்லை என்ற, ' நோட்டா' வசதி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் பா.ஜனதா எம்.பி.க்கள் ஆஜராகததை முக்கியமானதாக அமித்ஷா விளக்கம் எடுத்துக் கொண்டு உள்ளார்.
652 இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு
1.44 கோடி சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் வேலை--16 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்!உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்-இல் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும்.இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தின் 16 வயது சிறுவனுக்கு இந்த மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது கூகிள்.
சீனாவில் அதிவேக ரெயில் சேவைக்கான ரெயில் பாதையின் ஒரு பகுதி, சீனப்பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு அமைய உள்ளது. இந்த சுரங்கப்ப் பாதையால் பெருங்சுவருக்கு பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் தாங்கள் தங்கும் ஓட்டலில் பேய் பீதி இருப்பதாக, ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் விபரீதம் ஏற்படும் என பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயிர் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் எந்த கிரகங்களில் உள்ளன என ஆய்வில் தெரியவந்து உள்ளன
மாலை விலை நிலவரம்--22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,73622 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,88824 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.28,730வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.70வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,700
வார வர்த்தகத்தின் 2வது நாளான இன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 60.23 புள்ளிகள் அதிகரித்து 32,575.17. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 37.55 புள்ளிகள் உயர்ந்து 10,114.65
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளதுஇதில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார்.பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புஜாரா 4வது இடத்திலும், இந்திய கேப்டன் கோலி 5வது இடத்திலும் இருக்கின்றனர்
மிதாலி ராஜூக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார் ஹைதராபாத் தொழிலதிபர்இந்திய கிரிக்கெட் உலகில் மிதாலி ராஜ் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்மிதாலி ராஜால் பெண்கள் இடையே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதை பாராட்டி பரிசு
சிலம்பம், களறி விளையாட்டுகளை ஊக்குவிக்க இந்திய விளையாட்டு ஆணையம் முடிவு
உலகில் எவரும் பசியுடன் தூங்கக் கூடாது என்ற பிரார்த்தனை என் உதடுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என கவுதம் காம்பீர் கூறி உள்ளார்.
முக்கிய செய்திகள்@1/8/17
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதும் வன்முறை வெடித்து உள்ளது. இதனையடுத்து இன்டர்நேட் சேவை முடக்கப்பட்டது.
காஷ்மீர்: என்கவுண்ட்டர் பகுதியில் கல்வீச்சு தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பரபரப்பான பேட்டி அளித்திருக்கும் சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பெரம்பலூரில் அ.தி.மு.க ஆட்சியின் முட்டை ஊழல் அம்பலமாகி உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்: உத்தேச அட்டவணை ஐகோர்ட்டில் தாக்கல்
பொதுச்செயலாளர் இல்லாத சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என அ.தி.மு.க (அம்மா) அணியின் துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
முதல்வருடன் தினகரன் ஆதரவாளர்கள் சந்திப்பு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள். அனைத்தையும் விரிவாக சொல்கிறேன் என தினகரன் இன்று நிருபர்களிடம் பேசுகையில் சஸ்பென்ஸ் வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆதார் அமலாக்கத்தை அடுத்து விதிகளை மீறி வாங்கப்பட்டு இருந்த 3 கோடி கேஸ் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மேலும், ஆதார் எண் மூலம் 2.5 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பால் கலப்பட விவகாரத்தில் தடையை மீறி செயல்பட்டது தெரிய வந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது
திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரின் காவல் ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரை சஸ்பெண்ட் செய்ய கலெக்டர் உத்தரவு
கோவை அரசு கல்லூரியில் மாணவர்கள் மோதலால் விடுமுறை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 9 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்
கட்சராயன் ஏரியை பார்வையிடச் செல்லும் ஸ்டாலினை அரசு ஏன் தடுக்கிறது என்று ஹைகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது
திருவாரூர் : வரதட்சணைக்காக திவ்யா கொல்லப்பட்ட வழக்கில் கணவர், மாமனார், மாமியாரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் மயங்கி சரிந்தார். உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்த முருகன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே; கமல் டுவீட்
நிர்பந்தத்தால் மதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம்: தேர்வுக்குழு
ராஜஸ்தான் மாநில மந்திரி பாபு லால் வெர்மா இன்று கார் விபத்தில் படுகாயமடைந்தார். அவருடைய உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்
உத்தரப்பிரதேசம் மாநிலம் சிடாபூரில் குடும்ப உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் 3 பேர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் இந்த ஆண்டு மட்டும் 80 பேர் இறந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது
சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் ஆர்ஜேடி எம்எல்ஏ மீது வழக்கு
வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த பாடலை பாடாமல் போனால் தவறு என்ன?--
இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே
மொபைல் போன் மூலம், பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட, 'பீம்' ஆப் மூலம், 50 லட்சம் பரிவர்த்தனைகளில், 1,500 கோடி ரூபாய், 'டிஜிட்டல்' பரிவர்த்தனை நடந்துள்ளது--தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
காவிரியில் கழிவு நீர் கலப்தை தடுக்க குழு அமைப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பிளஸ்-2 படித்து விட்டு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்க காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.சென்னையில் டெங்குவால் 100 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காப்பதில் தமிழக அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேவையில்லாமல் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய அரசிடமோ, கோர்ட்டுக்கோ செல்லக்கூடாது என்று கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சிஐடி அதிகாரிகள் நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ரூபா கங்குலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்று குழந்தைகளை சட்ட விரோதமாக வெளிநாட்டினருக்கு தத்துகொடுத்தது தெரிய வந்தது.
டீலர் கமிஷன் அதிகரிப்பால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்கிறது.
திருநங்கைகள் சேலை அணிய கூடாது என, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமாக்கல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அந்துலே தெரிவித்துள்ளார்.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அளித்த பேட்டி: வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. 2019ல் அவருக்கு சவால் விட வேறு யாரும் இல்லை. இவருக்கு எதிராக வல்லமை கொண்டவர்கள் யாரும் இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்பதை எனது பணி மற்றும் அரசின் செயல்திறன் மூலம் நிருபிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவைச் சேர்ந்த பார்மா நிறுவனம் ஒன்று இந்திய நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த முயற்சிக்கு செக் வைத்திருக்கிறது மோடி அரசு.
சுவிட்சர்லாந்தில் இரு மலைகளை இணைக்கும், உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளதுஇந்த பாலம், 278 அடி உயரத்தில், 1,620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ளது.பாதசாரிகள் நடக்கும் போது, பாலம் ஆடாமல் இருக்க, 8 டன் கேபிள்கள் பயன்படுத்தி கட்டப்பட்டு உள்ளன.
எந்த படையெடுப்பையும் சந்திக்க சீன ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கேபிள் கார் ஒன்று தூணில் மோதியதில் 100க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தனர்.
வட கொரியா "மிகவும் அசாதாரண மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவு" நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது .
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரளாவை சேர்ந்த வாலிபர் ஏவுகணை தாக்குதலில் பலியானார்.
ஸ்ட்ரைக் அறிவித்த பிறகு தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை-ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி
நடிகை ஸ்கார்லெட் வில்சன் அவரிடம் தவறாக நடந்து கொண்ட நடிகரை கன்னத்தில் அறைந்தார்
நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை கிரிக்கெட்டில் மட்டுமின்றி அனைத்து விளையாட்டு சங்கங்களும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவு.இந்த உத்தரவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.மேலும் லோதா குழு பரிந்துரைகளை 3 மாதத்திற்குள் இந்திய ஒலிம்பிக் சங்கம் அமல்படுத்த வேண்டும் என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2024ம் ஆண்டு 33வது ஒலிம்பிக் போட்டிகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். போட்டியிலிருந்த அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 2028ல் நடக்கும் 34வது ஒலிம்பிக்ஸை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது. 32வது ஒலிம்பிக்ஸ் வரும் 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக