முக்கிய செய்திகள்@20/8/17
லடாக் பகுதியில் அத்துமீறிய சீனா ராணுவம்நமது ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்சீன ராணுவத்தினர் கற்களை வீசும் வீடியோ வெளியானது
ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது உத்கால் எக்ஸ்பிரஸ் டிரைவரிடம் தெரிவிக்கவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை
ஆடம்பரங்களை தவிருங்கள் : அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
சத்தீஸ்கரில், அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் பசு காப்பகத்தில், 27 மாடுகள் இறந்தன; இதையடுத்து, காப்பகத்தின் பொறுப்பாளரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹரிஷ் வர்மாவை, போலீசார் கைது செய்தனர்
நான் மோடியை ஆதரிக்கிறேன், அமித்ஷாவை அல்ல. நான் பிரதமரை குற்றம் சொல்ல மாட்டேன். அவரை எதற்காக குற்றம் சொல்ல வேண்டும். அவர், தனது கட்சி சொல்வதன் பேரில் நடக்கிறார். நாட்டில் சர்வாதிகார சூழல் ஏற்பட்டுள்ளதற்கு, பா.ஜ., தலைவர் அமித்ஷா தான் காரணம்:மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
நாளை முதல்வர் தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்
நாளைக்குள் அணிகள் இணைப்பு: அமைச்சர் சீனிவாசன்
டெல்லியின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கேற்ப ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் நடிக்கின்றனர் என மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் இலங்கையில் பராமரிப்பின்றி சேதம்: படகுகளை மீட்க சென்ற தமிழக மீட்பு குழு ஏமாற்றம்
வேலூர் அருகே தமிழகம்-ஆந்திரா எல்லையில் 2-வது நாளாக நக்சல் வேட்டை
வேலூர் சிறையில் முருகன் ஜீவசமாதி அடைய முயற்சி- 3வது நாளாக உண்ணாவிரதம்
வரும் 22-ந் தேதி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
செம்மஞ்சேரியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் மாயம்
கன்னியாகுமரி: இணயம் துணைமுகத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்
நாகப்பட்டினம் அருகே காரில் வைக்கப்பட்டிருந்த 75 சவரன் நகை கொள்ளை
போயஸ் கார்டன் குறித்து கருத்து சொல்ல ஸ்டாலின் வக்கீல் அல்ல: ஓபிஎஸ்
அதிமுக ஆட்சி கலைய வாய்ப்புள்ளது: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கணிப்பு
அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகளால் தமிழக நலன்கள் பறிபோகின்றன: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
ஈரோட்டில் நடக்கவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. புறக்கணித்தார். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் தோப்பு வெங்கடாசலத்தின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்கள் ஈரோடு அதிமுகவினர்.
சசிகலாவை நீக்கினால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்: பழனியப்பன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு
ராணுவ அமைச்சகத்தை மோடி தீவிரமாக கையாள வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
ஒளிரும் நீல வண்ணத்தில், புதிய, 50 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
புனே விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கத்துடன் பெண் உள்பட 4 பேர் கைது
பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவர் சுட்டுக்கொலை
டெல்லி _சியோமி நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் ரெட்மி நோட் 4 வாடிக்கையாளர் ஒருவரின் பாக்கெட்டில் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெடித்து சிதறிய ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்ததில், போனிற்கு வெளிப்புற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேக் கவர் மற்றும் பேட்டரி வளைந்து, போனின் ஸ்கிரீன் உடைந்துள்ளது தெரியவந்துள்ளது. போனில் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு பின்னரே வெடித்து சிதறியதற்கான முழு விவரம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
11am -20-8-2017-sunday
♈ 🇮🇳 நாளை ஒரு போராட்டம்...ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு விளையாட்டு மைதானமும் இல்லை செயல்படுத்த வேண்டிய மாநகராட்சியோ கோமா நிலையில் கிடக்கிறது...எனவே எழில் நகர் அருகாமையில் உள்ள அரசு நிலத்தில் ( பணக்கார நகர்) சிலர் ஆக்கிரமிக்க துடிக்கின்றனர்.. இவற்றை முறியடித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து பல துறை விளையாட்டு மைதானம் அமைக்க கோரி கோரிக்கை பேரணி..21.08.2017 காலை 10.30 மணிக்கு .வ உ.சி.நகரிலிருந்து தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு வரை நடைபெறும்....பங்கேற்பு.. தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.சிபிஎம் மாநில செயலாளர்
♈ 🇮🇳 டான்ஸ்ரீ நல்லா கே.எஸ். சேவையை பாராட்டி மலேசிய அரசு சமீபத்தில் சேவை தன்னார்வ படையின் சிறப்பு விருதான துணை ஆணையர் விருது வழங்கி கவுரவித்து உள்ளது
♈ 🇮🇳 ரஷ்யாவிலும் கத்திக்குத்து தாக்குதல்; 8 பேர் காயம், ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு
♈ 🇮🇳 பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவரான மவுலானா சையத் அதவுல்லா ஷாவை துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள், சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினர்
♈ 🇮🇳 தந்தை–மகளை எரித்துக்கொன்ற வழக்கில் தூக்கு மற்றும் ஆயுள்தண்டனையை எதிர்த்து 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கை விடுமுறை நாளில் விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.திருப்பூர் மாவட்டம்
♈ 🇮🇳 உத்தரபிரதேசம் மாநிலத்தில் 15 வயது சிறுமி போலீஸ் மற்றும் கிராம தலைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
♈ 🇮🇳 பொது நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஒருவர்,பெண் எம்.எல்.சி.யின் கையை பிடித்த வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.சி. வீணா அச்சையா. இதே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.பி.ரமேஷ்
♈ 🇮🇳 டெல்லியில் தமிழக விவசாயிகள் சாக்குப்பையால் தலையில் முக்காடு அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்
♈ 🇮🇳 ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அங்குள்ள குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இதற்கு காரணம்,அப்பெண்ணின் புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததுதான்
♈ 🇮🇳 பிரதமர் மோடியை காணவில்லை என வாரணாசி தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன
♈ 🇮🇳 ஹைதராபாத் காவல் துறையினர் ரூ 1 கோடி மதிப்பிற்கு பழய நோட்டுக்களை வைத்திருந்த 6 பேரை கைது செய்துள்ளனர்
♈ 🇮🇳 தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பிளஸ் 1க்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தநிலையில், ‘சேவ் பிளஸ் 1 ஸ்டூண்டன்ஸ்’ என்ற பெயரில் பல்வேறு வெப்சைட்டுகள் மற்றும் பேஸ்புக்கில் அரசுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதை தெரிந்து கொண்ட போலீசார் முன்னெச்சரிக்கையாக வ.உ.சி. மைதானத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
♈ 🇮🇳 திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்ட ஆம்னி பஸ்சில் திருச்சி தனியார் கல்லூரி மாணவர்கள் 42 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் டோல்கேட் அருகில் சென்றபோது பஸ் பின்பகுதியில் இருந்து புகை வந்ததை அறிந்த டிரைவர் உடனடியாக ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் தீ பிடித்து எரிய ஆரம்பித்ததால் உடனடியாக பஸ்சில் வந்த அனைவரும் உயிர் தப்பினர். தீ விபத்தில் பஸ் முற்றிலும் சேதமானது
♈ 🇮🇳 முசாபர்நகர்.ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது உத்கால் எக்ஸ்பிரஸ் டிரைவரிடம் தெரிவிக்கவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது
♈ 🇮 செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு
♈ 🇮🇳 திண்டிவனம்: லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலி
♈ 🇮🇳 கன்னியாகுமரி: இணயம் துணைமுகத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்
♈ 🇮🇳 வேளாங்கண்ணியில் 60 சவரன் நகை கொள்ளை
♈ 🇮🇳 மேட்டூர் அணை நீர்வரத்து 5,976 கன அடியாக குறைந்தது
♈ 🇮🇳 அமைச்சர்கள் ஆடம்பரமாக இருக்கக்கூடாது என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்
♈ 🇮🇳 தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்போர்ட்ஷயர் பகுதியை சேர்ந்த இட்ரிஸ் ஹைல்டன் என்ற 5 வயது சிறுவன் ராக்கெட் ஒன்றை வரைந்து, இதை போல் ராக்கெட் வடிவமைத்து விண்வெளிக்கு அனுப்புமாறும், தனக்கு விண்வெளி வீரர் உரிமம் கோரியும் நாசாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கடந்த ஏப்ரல் மாதம் இட்ரிஸ்- ன் தந்தை ஜமால் அமெரிக்காவில் உள்ள நாசாவின் தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நாசாவிற்கு சென்றடைந்த நிலையில் தற்போது சிறுவனின் கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. சிறுவனின் ராக்கெட் வடிவமைப்புக்காக நன்றி தெரிவித்துள்ள நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் பொறியாளர் கெவின் டிரூயின், இந்த ராக்கெட் வடிவமைப்பு சிறந்த விண்வெளி வீரர் ஆவதற்கான தொடக்கம் என கடிதம் எழுதி இட்ரிஸ்-க்கு அனுப்பியுள்ளார். உங்களைப் போன்ற ஆர்வம் உள்ள குழந்தைகளை வரவேற்கிறோம். 110 சதவீதம் உங்களுக்கு நாசாவில் இடம் உண்டு என கடிதத்தில் பதிவிட்டுள்ளார். நாசா அனுப்பிய கடிதத்தின் புகைப்படத்தை இட்ரிஸ்-ன் தந்தை ஜமால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.முன்னதாக கிரகங்களை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவனுக்கு நாசாவின் கிரக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் எல். கிரீன் ரால், ஜக் டேவிஸின் உயர்வான எண்ணத்தையும், ஆர்வத்தையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியது குறிப்பிடத்தக்கது
♈ 🇮🇳 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஆயிஷா, அத்திபா என்ற 2 சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேலும்3 பேரும், லேசான காயமடைந்த 5 பேரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
♈ 🇮🇳 சத்தீஸ்கரில், அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் பசு காப்பகத்தில், 27மாடுகள் இறந்தன; இதையடுத்து, காப்பகத்தின் பொறுப்பாளரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹரிஷ் வர்மாவை, போலீசார் கைது செய்தனர்
♈ 🇮🇳 ஒளிரும் நீல வண்ணத்தில், புதிய, 50 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது
♈ 🇮🇳 மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 'வந்தே மாதரம்' பாடியபோது, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி உறுப்பினர்கள் எழுந்து நிற்கமறுத்ததால், கைகலப்பு ஏற்பட்டது.
♈ 🇮🇳 ''கேரள மாநிலம், மலப்புரத்தில், மத மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை, அம்மாநில அரசு சமர்ப்பிக்கவில்லை,'' என, மத்திய உள்துறை இணையமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார்
♈ 🇮🇳 அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது
♈ 🇮🇳 திருவள்ளூர்: சோழவரம் ஏரியில் 5மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 5மில்லியன் கனஅடி நீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 60 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது
♈ 🇮🇳 சென்னை நடுக்குப்பம் சர்வீஸ் சாலையில் அமித்ஷாவுக்கு பேனர் வைக்க முயன்ற நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அனுமதி பெறாமல் பேனர் வைக்க முயன்ற நபர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்
♈ 🇮🇳 மாதவாரத்தில் சரக்கு வேன் ஓட்டுநரைத் தாக்கி வேனைக் கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கத்தில் நடத்தப்பட்ட வாகனசோதனையில் வேனைக் கடத்திய கார்த்திக் என்பவர் பிடிபட்டார்
♈ 🇮🇳 சென்னை: செம்மஞ்சேரியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகள்2 பேர் மாயமானார்கள்
♈ 🇮🇳 பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காதோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து,அபராதமாக எடுக்கப்பட்ட தொகை ரூ.235 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
♈ 🇮🇳 1pm -20-8-2017-sunday
♈ 🇮🇳 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, ஓரினச் சேர்க்கையாளர்கள், சிறுபான்மை மதக் குழுக்கள், ஹிஸ்பேனிக்ஸ் எனப்படும் ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய பாரம்பரியத்தை உடைய, லத்தீன் அமெரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் என பல தரப்பினர் மீதும் வெறுப்பின் காரணமாக நிகழும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன
♈ 🇮🇳 கரூரில் தங்கியிருக்கும் வைகோ, காலையில் வாக்கிங் செல்லும் போது இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடி அசத்தியுள்ளார். இளைஞர்களும் வைகோவுடன் சேர்ந்து குதுகலமாக வாலிபால் விளையாடியுள்ளனர்
♈ 🇮🇳 மகராஷ்டிராவில் நக்சலைட்டுகள் அதிகம் இருக்கும் கட்ச்ரோலி பகுதியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சலி விரும்பி பணியில் சேர்ந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது
♈ 🇮🇳 தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் 3 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழைக்கு தாங்காத ஆவடி வெள்ளனூர் ஏரி உடைந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
♈ 🇮🇳 காய்ச்சல் காரணமாக குமார் ஜெயந்த் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஐபி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா என டாக்டர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்
♈ 🇮🇳 ராஜஸ்தானில், 15 நாட்களில் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க மாவட்ட துணை கலெக்டர் உத்தரவிட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
♈ 🇮🇳 அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில், ஹேமில்டன் என்ற இடத்தில் சுவாமி நாராயண் மந்திர் என்ற இந்து கோவிலில் கட்டுமானப்பணி ஒன்று நடந்து வந்தது.இதில் தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கட்டுமானப்பணியில் உதவினர். இந்த நிலையில் அங்கு கட்டுமானப்பணியின்போது 45 அடி உயரத்தில் இருந்து 16 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத வகையில் தவறி விழுந்தான். உடனடியாக அவன் அங்குள்ள உட் ஜான்சன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்
♈ 🇮🇳 அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது
♈ 🇮🇳 வடகொரியாவில் Goryeo வம்ச காலத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வடகொரியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக Goryeoவம்சம், வடகொரியாவை ஆண்ட (918-1392) காலக்கட்டத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்
♈ 🇮🇳 அமெரிக்காவில் சிறையில் இருக்கும் பெண்கள் கருத்தடை செய்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டால் அவர்களின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு விடுதலை வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
♈ 🇮🇳 ஜிம்பாப்வே நாட்டில் ஹவாஞ் பகுதியை சேர்ந்தவன் பான்பேஸ் நியாம்பியா (32). பிச்சைக்காரனான இவன் அங்குள்ள ஒரு பஸ் நிலையத்தில் தங்கியிருந்தான்.அவன் பிச்சையெடுக்கும் பணத்தை பயன்படுத்தி விபசார அழகிகளிடம் உல்லாசமாக இருந்து வந்தான். சமபலத்தன்று ஒரு விபசார அழகியை உல்லாசத்துக்கு அழைத்தான். அதற்கு அவள் மறுத்துவிட்டாள்.எனவே அவளை இரும்பு கம்பியால் தாக்கி கற்பழித்தான். அவளிடம் இருந்து விலை மதிப்பு மிக்க செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விரட்டிவிட்டான்.அதன்பின்னர் இரவு 10மணியளவில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது ஹவாஞ் நகரம் அருகே விக்டோரியா பால்ஸ் பள்ளி ஆசிரியை ஒருவர் அங்கு வந்தார்.அவரை பார்த்ததும் அவனுக்கு ‘செக்ஸ்’ வெறி தலைக்கேறியது. பஸ்சுக்காக காத்திருந்த அவரிடம் பேச்சுக்கொடுத்தான். பின்னர் திடீரென அவர் எதிர்பார்க்காதபோது இரும்பு கம்பியால் ஆசிரியையை தாக்கிவிட்டு அருகில் உள்ள புதருக்கு இழுத்து சென்றான். பின்னர் மரத்தில் கட்டி வைத்து கற்பழித்தான்.அதிகாலை 3 மணிக்கு ஆசிரியையை அவன் விடுவித்தான். இதற்கிடையே ஏற்கனவே கற்பழிக்கப்பட்ட விபசார அழகி கொடுத்த புகாரின் பேரில் பிச்சைக்காரனை போலீசார் கைது செய்தனர்
♈ 🇮🇳 குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர். அவற்றில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. எனவே தாயின் கருப்பை போன்றே வடிவமைக்கப்பட்ட செயற்கை கர்ப்பபையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை கருப்பை தாயின் கர்ப்பபை போன்று மிகவும் பாதுகாப்பானதாக இருக்ககும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.ஜப்பானில் உள்ள தொகோகு பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் நிபுணர்களும், மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான பனிக்குட நீர் மற்றும் செயற்கை நச்சுக்கொடி போன்றவையும் இதில் உள்ளதாகவும், அதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
♈ 🇮🇳 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரு மாதங்களுக்கு முன்னர் சட்டையில்லாத நிலையில் தனது விடுமுறையை ஜாலியாக கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அது வைரலானது.ரஷ்ய தொலைகாட்சியும் இதை வெளியிட்டது. நமது ஜனாதிபதி போலவே நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அந்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும், #PutinShirtlessChallenge என்ற டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது
♈ 🇮🇳 பிரித்தானிய நாட்டில் மனைவியுடன் உடலுறவுக்கொள்ள கணவனுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி இருவர் தொடர்பான முகவரி, பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட அந்த தம்பதி இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். ஆனால். 38 வயதான கணவருக்கு Down's Syndrome என்ற நோய் இருந்ததால் அவர் மனைவியுடன் உடலுறவில் ஈடுப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் கூட கடந்த 15 மாதங்களாக தனித்தனி அறைகளில் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.கணவனை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் இல்லற உறவில் ஈடுப்பட வேண்டும் என்றால் பாலியல் தொடர்பான கல்வியை அவர் கற்க வேண்டும் எனவும், உள்ளூரில் உள்ள கவுன்சில் இவருக்கு உதவ வேண்டும் எனவும் மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.கணவருக்கு நேர்ந்துள்ள நிலையைக் கண்டு வருத்துமுற்ற அவரது நண்பர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.இதனை தொடர்ந்து கணவருக்கு பாலியல் தொடர்பான கல்வியை கவுன்சில் அதிகாரிகள் இலவசமாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஆனால், நீதிபதியின் உத்தரவை புறக்கணித்த அதிகாரிகள் கணவருக்கு தேவையான கல்வியை வழங்கவில்லை.இதனால் கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையை தொடங்குவதில் சிக்கல் நீண்டு வந்துள்ளது.இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் அதனை நீதிபதி மீண்டும் விசாரணை செய்துள்ளார்.அப்போது, கணவருக்கு தேவையான கல்வியை கவுன்சில் அதிகாரிகள் தராமல் இருந்ததை நீதிபதி கண்டித்துள்ளார்.மேலும், கல்வியை உடனடியாக தொடங்குவது மட்டுமில்லாமல் கணவருக்கு 10,000 பவுண்ட் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட கவுன்சில் அதிகாரிகள் இந்தாண்டு தொடக்கத்தில் பாலியல் உறவு தொடர்பான கல்வியை தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த யூன் மாதம் முதல் கணவர் இல்லற உறவுக்கு தயாராக உள்ளதாக மருத்துவர் கூறியதை தொடர்ந்து தற்போது கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய 1 வரிச்செய்திகள்!
20/08/17
மத்திய அரசின் நிதி உதவியுடன், 10 மாவட்டங்களில், சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளை, வேளாண் துறை துவங்கி உள்ளது.
அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் நிரந்தர அஞ்சல்தலைக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தை உருவாக்கும் கலைத்திட்டக் குழுவின், கருத்தாய்வுக் கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள 10 ரயில் நிலையங்களில்
*'ஒரு ரூபாய் கிளினிக்"*
அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 500 புதிய ஊராட்சி மன்ற கட்டடங்களை, 75 கோடி ரூபாய் மதிப்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.956.77 கோடியை தேசியக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
சென்னையில் வருகிற அக்டோபர் மாதம் பிரெஞ்சு தூதரகக் கிளை திறக்கப்படும் என, பிரான்ஸ் துணைத் தூதர் கேத்ரீன் ஸ்வாட் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் அல்லோ ஆப் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் செயலிகளை பின்னுக்கு தள்ள கூகுள் நிறுவனம் அல்லோ எனும் செயலியை அறிமுகப்படுத்தியது.
அல்லோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 5 மில்லியன் டவுன்லோடுகளை கடந்து தொடர்ந்து முன்னிலையில் உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக