உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்...
```■ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.கெஹர் சமீபத்தில் ஓய்வுபெற்றார்
■ இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு
■ இவர் டெல்லி நிர்பயா, ஜல்லிக்கட்டு, உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
■ மேலும், எப்ஐஆர்யை 24 மணி நேரத்தில் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு இருந்தார்.```
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு...
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஒடிசாவை சேர்ந்த தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கெஹர் உள்ளார். இவரது பதவி காலம் வரும் 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் புதிய தலைமை நீதிபதியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் ஜெ.எஸ்.கெஹர் பதவி காலம் நிறைவடைவதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் 45 வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்க உள்ளார்.
அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைப்பார். தீபக் மிஸ்ராவின் பதவி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக