புதன், 23 ஆகஸ்ட், 2017

Mathi News மதி செய்திகள்@24/8/17



Mathi News காலை செய்திகள்@24/8/17.

தமிழகம், புதுவையில் பரவலாக மழை வாய்ப்பு

ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

எதிர்க்கட்சிகள் இன்று 'நீட்' தேர்வு போராட்டம்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

மத்திய பிரதேச பள்ளியில் விஷவாயு தாக்கியதால் 50 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் செல்பி எடுக்கும் மோகத்தால் மாணவர்கள் ரெயில் பெட்டிகளை கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சரை சந்திக்கிறார் தமிழக கவர்னர்: டெல்லியில் இன்று அவசர ஆலோசனை

அமைச்சர்கள் சென்னைக்கு வர முதல்வர் அவசர உத்தரவு

அ.தி.மு.க. பொதுக்குழு 15 நாட்களில் கூடுகிறது அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனை

பொதுத்துறை வங்கிகளை இணைக்க குழு: அருண் ஜேட்லி தகவல்

திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 1400 கேமராக்கள் பொருத்த முடிவு

யமுனை நதியில் மாசு விவகாரம்: மத்திய, டெல்லி மாநில அரசுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: 6 மாத சிறை தண்டனைக்கு எதிராக நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சிறையில் இருந்தாலும் சசிகலாவால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: விஜயகாந்த்

சென்னையில் 40 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி: அர்ஜூன் சம்பத்

கட்சியில் யாரையும் நீக்க தினகரனுக்கு தகுதி இல்லை: காமராஜ்

ஆத்தூர் அருகே 75 வயது முதியவர் கடத்தல்

திருநெல்வேலி- சென்னைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

நவிமும்பை சான்பாடா ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நள்ளிரவு 1.15 மணி அளவில் மின்சார ரெயிலில் சென்ற பயணி ஒருவர் பிளாட்பாரத்தில் தவறி விழுந்தார்.ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்த ரெயில்வே போலீஸ்காரர் பணி இடைநீக்கமும், ஊர்க்காவல்படை வீரர் பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.

சூடான்: நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய தூதர்

சீனா துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை நீதித்துறை மந்திரி நீக்கம்

சிங்கப்பூரில் தமிழருக்கு வாழ்நாள் சிறை போதைப்பொருள் கடத்திய வழக்கில் தீர்ப்பு

ப்ளூ வேல் விளையாட்டால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப நண்பர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பிரியாமணி திருமணம் தொழில் அதிபரை மணந்தார்

முதல் 10-இடத்துக்குள் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தி நடிகர்கள் ஷாருக்கானுக்கு 8-வது இடம்

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் கொல்கத்தா நகர லோகோவை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த தமிழ் தலைவாஸ்-உத்தரபிரதேச யோத்தா அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆக-24: பெட்ரோல் விலை ரூ. 71.37, டீசல் விலை ரூ.60.06.


முக்கிய செய்திகள்@24/8/17

தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம்: தி.மு.க. அறிவிப்பு

நீட் தேர்வு: தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இந்தியாவும் -பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அமெரிக்கா கோரிக்கை

பீகாரில் ரூ.502 கோடி ஊழல்: நிதிஷ்குமார், சுஷில் மோடி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

திருவாரூர்: தினகரன் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

அ.தி.மு.க.வில் இருந்து யாரையும் நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை: மதுசூதனன்

அரசியல் கருத்துகளை எப்போதும் சொல்வதில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தினகரன் அணியில் 40 எம்எல்ஏக்கள்:‘மைனாரிட்டி’ அரசு விரைவில் அகற்றப்படும்: தனபால் முதல்வராவார் என திவாகரன் தகவல்

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் சந்திப்பு

சிபிஎஸ்இ மாணவர்களும் பங்கேற்ற சூழலில் நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த அனுமதித்தது ஏன்? - உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி

குடும்ப தகராறு: திருவள்ளூரில் கணவன் மனைவி தீக்குளிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா நீறுவனம் முறைகேடாக நேரடி அந்நிய முதலீடு செய்வதற்கு உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று (ஆக.,23) சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜரானார்.டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான கார்த்தியிடம் 100 க்கும் மேற்பட்ட கேள்விகளை சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது

கேரளாவில் முதன்முறையாக குண்டர் சட்டத்தில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பறவாபுழாவைச் சேர்ந்தவர் ஷோபா ஜான். இவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் இருந்து சிறுமியை விலைக்கு வாங்கி உள்ளார். அதன்பிறகு அந்தச் சிறுமியை கேரளாவின் முக்கிய பிரமுகர்களின் பாலியல் உறவுக்கு பயன்படுத்தி வந்தார். தொடர்ந்து பாலியல் கொடுமை அனுபவித்து வந்த அந்தச் சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டார். இதையடுத்து ஷோபா ஜான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜெயச்சந்திரன் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை முகப்பேரில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் தலைமைக்காவலர் சர்மிளா உயிரிழந்துள்ளார். சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உயிரிழந்த சர்மிளா உயர்நீதிமன்ற காவலில் பணியாற்றி வந்தார்.

சேலம்: ஆத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

கழகங்கள் இல்லாத ஆட்சிதான் மாணவர்களுக்கு விடிவு: பொன்.ராதா

டிடி.நாயுடுவின் ரூ.152 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவு

இங்கிலாந்தில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டுகளுடன் வந்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை

வார வர்த்தகத்தின் 4வது நாளான இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 105.43 புள்ளிகள் உயர்ந்து 31,673.44. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 28.70 புள்ளிகள் அதிகரித்து 9,881.20

இன்றைய 1 வரிச்செய்திகள்!

24/08/17 வியாழக்கிழமை!

கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

புதிய வடிவிலான 50 ரூபாய் நோட்டுக்கள் நேற்று முதல் புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், நாளை 200 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்ததுள்ளது.

யமுனை நதியில் மாசு கலப்பது தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாத காரணத்திற்காக மத்திய, டெல்லி மாநில அரசுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல் இன்றுடன் தனது சிறப்பான பயணத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றது.

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக பதவிவகித்த அங்கோலா நாட்டின் அதிபர் தாஸ் சண்டோஸ் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

சென்னையில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகியது.

தமிழகத்தில் வேளாண் விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க, வட்டார அளவில் உழவர் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தி தலா 5 லட்சம் ரூபாய் சுழல் நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தாதது ஏன்? என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தை மாற்ற முடிவெடுத்துள்ளது.

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வனி லோஹhனி நியமிக்கப்பட்டுள்ளார்.

💎 பெட்ரோல் ஒரு
லிட்டர் விலை - ரூ. 71.37

💎 டீசல் ஒரு
லிட்டர் விலை - ரூ. 60.06

💎 தங்கம் 1
கிராம் - ரூ. 2,766.00

💎 வெள்ளி 1
கிராம் - ரூ. 42.45


மாலை செய்திகள்@24/8/17

இந்தியா, நேபாளம் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து - பிரதமர் மோடி அறிவிப்பு

தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

நாளை முதல் புழக்கத்துக்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாசிச சக்திகளுக்கு விழுந்த அடி: ராகுல் காந்தி உள்ளிட்டோர் கருத்து

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸை அங்கீகரித்து, வேட்புமனுவில் ஜெயலலிதா இடதுகை பெருவிரல் ரேகை வைத்தது தொடர்பான வழங்கில் ஆவணங்களுடன் ஆஜர்இதுகுறித்து அவரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது

ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு: ஐகோர்ட்டில் வழக்கு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் அறிவிப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ்

கொறடா இன்னும் நியமிக்கப்படவில்லை; ராஜேந்திரனின் முடிவு சட்டப்படி எங்களை கட்டுப்படுத்தாது - தங்க தமிழ்செல்வன்

தனபால் முதலமைச்சராவதில் எந்த தவறும் இல்லை: வெற்றிவேல்

பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை வீடு மீது கல்வீச்சு

3 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் 19 பேரும் எடப்பாடி பக்கம் வந்து விடுவார்கள்: ராஜன் செல்லப்பா

தகுதிநீக்கம் என்ற பெயரில் மிரட்டப் பார்க்கிறார்கள்: எடப்பாடி தரப்பினர் மீது வெற்றிவேல் பாய்ச்சல்:சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் எடப்பாடி பழனிசாமி: வெற்றிவேல்

குஜராத், கர்நடக சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். குஜராத் தேர்தல் பொறுப்பாளராக ஜெட்லியையும், கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக ஜவடேகரையும் அமித்ஷா நியமனம் செய்துள்ளார்.

குர்மீத் ராமிற்கு எதிரான பலாத்கார வழக்கு தீர்ப்பு; பஞ்சாப், அரியானாவில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

ராஜூவ் கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு வேலூர் சிறை மருத்துவமனையில் சிகிச்சை

திருவள்ளூரில் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறதுஇதில் ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம்தற்போது அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சித்தூர் கிளைச்சிறையில் இருந்த சங்கீதா சாட்டர்ஜி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தம்பதி முருகன்-சாந்தி ப்ரியா மற்றும் ஒரு வயது குழந்தை ரித்திகா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊர் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே கடத்தப்பட்ட பெண் மணக்கோலத்தில் மீட்பு

திருவாரூர் அருகே நீர்தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

தமிழக அரசியல் குழப்பங்களுக்கு பா.ஜனதா தான் காரணம்: ஜி.கே.வாசன்

சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா: 1,000 போலீசார் பாதுகாப்பு

ரெயில் பயணிகளின் பாதுகாப்பு ரெயில்வே துறையின் அதிமுக்கிய விசயம் ஆக கொள்ளப்படும் என ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக இன்று பொறுப்பேற்று கொண்ட அஸ்வனி லோஹானி கூறியுள்ளார்

மத்தியப்பிரதேசம் மாநிலம் சட்னாவில் பள்ளி குழந்தைகளை சுமந்து செல்லும் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து கொள்ளையடித்த மர்மநபர்கள்

உத்தரப்பிரதேசம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்ட 15 பள்ளி மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

சீனாவை தாக்கிய ஹடோ புயல்: 9 பேர் பலி

இந்தியா செல்லும் தங்கள் நாட்டவர்களுக்கு 2-வது முறையாக பயண எச்சரிக்கை விடுத்தது சீனா:இந்தியாவிலுள்ள சீனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க சீனா அறிவுரை

சவூதி அரேபியாவில் நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன் கைது

தங்கம், வெள்ளி மாலை விலை நிலவரம்:
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,764
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,112
24 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.23,224
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.70
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,700

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது.இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 28 புள்ளிகள் உயர்ந்து 31,596.06.தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 4.55 புள்ளிகள் அதிகரித்து 9,857.05

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண் பேரினவாத அமைப்பு என பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கூறி உள்ளார்.


*🔵🔴மதி செய்திச் சுருக்கம் (24/08/2017)*



1 ஜியோ இலவச செல்போனை பெறுவதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

2 தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

3 நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

4 யூனிடெக் பங்கின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து ரூ.21- ல் முடிவுற்றது.

5 கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் பங்கின் விலை 0.08 சதவீதம் அதிகரித்து ரூ.21-ல் முடிவுற்றது.

6 அன்சால் ஹவுசிங் பங்கு விலை 0.48 சதவீதம் அதிகரித்து ரூ.21-ல் முடிவுற்றது.

7 உலக அளவில் இரண்டாவது காலாண்டில்(ஏப்ரல்- ஜூன்) 36.62 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகி உள்ளது.

8 அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது.

9 நீட் தேர்வு முடிவில், ஓசூர் மாணவர் சந்தோஷ், மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவில், 226வது இடமும் பெற்று சாதனை படைத்தார்.

10 இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஐரோப்பியாவில் அடுத்த மாதத்தில் சுற்றுப்பயணம் செய்து 15 நாட்கள் விளையாடுகிறது. ஐரோப்பிய பயணத்துக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

11 ஆந்திர மாநிலம் நந்தியாலில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிகளவாக 80 சதவீதமும், டெல்லி பவானா தொகுதியில் குறைந்த அளவாக 45 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

12 புதிய வடிவிலான 50 ரூபாய் நோட்டுக்கள் நேற்று முதல் புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், விரைவில் 200 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்ததுள்ளது.

13 தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருக்கும் டி20 குளோபல் லீக் தொடரில் பங்கேற்கும் பெனோனி ஜால்மி அணியின் பயிற்சியாளராக, கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

14 மத்திய அரசானது மாநில அரசுகளை கலைக்க எடுக்கும் அஸ்திரமான 356-வது பிரிவுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்த எஸ்.ஆர் பொம்மை வழக்கின் மீதான தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

15 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து சாதனை.

16 ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.

17 தமிழக பள்ளிக் கல்வித் துறை, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தை மாற்ற முடிவெடுத்துள்ளது.

*🔵🔴மதி செய்திகள் 24/7*

18 கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

19 கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

20 எடப்பாடி பழனிசாமி அரசு மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வராது என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

21 லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தாதது ஏன்? என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

22 காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,309 கனஅடியில் இருந்து 3,534 கன அடியாக குறைந்துள்ளது.

23 பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

24 மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் விவகாரத்தில், தமிழக விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்று என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

25 ஜம்மு காஷ்மீரில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

26 பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு, செப்., 25ல் துவங்கும்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

27 தமிழக அமைச்சர்கள் வியாழக்கிழமை அன்று சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

28 ரூ.654 கோடி ஒதுக்கீடு செய்து, மூன்று இடங்களில் ஏழை, எளியவர்களுக்கென 5,012 வீடுகளை கட்ட, டெல்லி குடிசை மாற்று வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

29 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பி.வி.சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

30 டென் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதில் வீரேந்திர சேவாக், கிறிஸ் கெயில், குமார் சங்ககாரா, ஷாஹித் அப்ரிதி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

31 உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, தனக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடைக்குப் பின்னர் பங்குபற்றும் முதலாவது கிரான்ட் ஸ்லாம் தொடரில், தன்னை நிரூபிக்க எதிர்பார்ப்புடனும் உறுதியுடனும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

32 சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 40 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

33 தமிழகத்தில் வேளாண் விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க, வட்டார அளவில் உழவர் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தி தலா 5 லட்சம் ரூபாய் சுழல் நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

34 சென்னையில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

35 இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், ஹாம்ப்ஷேர் அணிக்காக களமிறங்கிய அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி (பாகிஸ்தான்), 42 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.

*🔴🔵மதி செய்திகள் 24/7*

36 உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார்.

37 தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

38 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

39 தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.

40 உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக பதவிவகித்த அங்கோலா நாட்டின் அதிபர் தாஸ் சண்டோஸ் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

41 கேரளாவில், ஓணம் பண்டிகைக்காக, மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்க, 3,000 கடைகளை திறக்க, மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

42 இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல் இன்றுடன் தனது சிறப்பான பயணத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றது.

43 பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

44 இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.

45 ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

46 யமுனை நதியில் மாசு கலப்பது தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாத காரணத்திற்காக மத்திய, டெல்லி மாநில அரசுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

47 கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

*🔵🔴மதி செய்திகள் 24/7*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக