திங்கள், 7 ஆகஸ்ட், 2017

MATHI NEWS காலை செய்திகள்@7/8/17

 MATHI NEWS  செய்திகள்@7/8/17

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதி சுட்டுக்கொலை

தமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

மத்திய மந்திரி சபையை விரைவில் மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

கனமழை காரணமாக கொச்சி விமானம் சென்னையில் தரையிறக்கம்

உடலில் இலை, தழைகளை கட்டியபடி தமிழக விவசாயிகள் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை கமி‌ஷனர் (கிழக்கு மண்டலம்) மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் 6 ஆண்டுகளுக்கு பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நேற்று முதல் இருவழி பாதையாக மாற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிகளில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினருக்கு ராக்கி அணிவித்து உள்ளூர் பெண்கள் ரக்‌ஷாபந்தனை விமர்சையாக கொண்டாடினர்.

ஆக-07: பெட்ரோல் விலை ரூ. 69.03, டீசல் விலை ரூ.59.59

குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஆமதாபாத் திரும்பினர்

குண்டூர்:ஆந்திராவில், முதல்வர், சந்திரபாபு நாயுடுவை, துப்பாக்கியால் சுட்டுத் தள்ள வேண்டும் எனப் பேசிய, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர், ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக, கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க, அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், புதன்கிழமைக்குள் முடிவு தெரியும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினரை பற்றி பேசினால், அமைச்சர்கள் ஜெயகுமாரும், உதயகுமாரும் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.

புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது; சூழ்ச்சிகள், அநியாயங்கள் செய்து அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க சதி -டி. ஜெயக்குமார்

பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு இன்று விண்ணப்ப வினியோகம்

இன்று சந்திர கிரகணம்: கோவில்கள் நடையடைப்பு

அணு ஆயுத ஒழிப்பிற்கு உலகம் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் - ஐநா பொதுச் செயலர்

கருப்பு பண தகவல் பரிமாற்றம்: சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு வெளியீடு--இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு அந்த நாடு வழங்க திட்டமிட்டு உள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019–ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–2 ஏ தேர்வை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினர். 25 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவில் 10 மணிநேரம் நடை அடைக்கப்படுகிறதுதிங்கட்கிழமை இரவு 10.50 மணி முதல் நள்ளிரவு 12.44 மணி வரை சந்திரகிரகணம் நடைபெறுகிறது.திருச்செந்தூரில் 8ஆம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும்

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற கோரி 79வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம்--கணவரை கொலை செய்து விட்டு மாயமானதாக நாடகம் ஆடிய பெண் கள்ளக்காதலனுடன் கைது

திருமுருகன் காந்தியை புழல் சிறையில் சந்திக்கிறார் வைகோ

கோவையில் நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, உயிரோடு இருக்கும் ஒருவரை விபத்தில் இறந்து போனதாக புகைப்படத்துடன் பதிவு செய்த நில புரோக்கர் மன்சூர் அலி கைது செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை மு.க.ஸ்டாலின் செய்து கொண்டு இருக்கிறார் என வைகோ தெரிவித்தார்.

விபத்தில் மகனை இழந்து, இழப்பீட்டுக்காக 24 ஆண்டுகள் போராடிய தாயிடம் சென்னை ஐகோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது

சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் அதனை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

சபாஹர் துறைமுகத் திட்டத்தை விரைந்து முடித்து, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது என்று இந்தியாவும், ஈரானும் முடிவு செய்துள்ளன.

சத்தீஸ்கார் மாநிலத்தில் சரியாக பணியாற்றாத 2 போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது

இந்தியாவில் இந்து பெண்களை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் சதி நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஆதாரங்களை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லவ் ஜிகாத் பற்றிய ஆதாரங்களை சமர்ப்பிக்க என்ஐஏ -வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுஇந்து பெண்களை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மற்றும் சதி நடப்பதாக புகார்கள்வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்

ரியோடி ஜெனிரோ: அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை, சிறிது நேரத்தில் தாயை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டது அங்கிருந்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாசாவின் பூமி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்பூமியை பாதுகாக்க தகுதியானவன் என கடிதத்தில் சிறுவன் குறிப்பிட்டுள்ளார்சிறுவனின் ஆர்வத்தை பாராட்டிய நாசா விஞ்ஞானிகள்

இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

*மாலை செய்திகள்@7/8/17

மதுரை நகரில் கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாப்பு ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல் அருகே பிளஸ் 2 மாணவி மீது ஆசிட் வீச்சு

தண்டேவாடாவில் சிஆர்பிஎப் வீரர்கள் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நடந்த என்.எல்.சி., முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி

சென்னையில் கத்தி முனையில் அழக நிலைய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டார்

ஆகஸ்ட் 22ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர். வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது, வங்கிகளை ஒருகிணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் , வராக்கடன் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

40 நாட்களாக நடைபெற்று வந்த அமர்நாத் யாத்ரா இன்றுடன் நிறைவு பெற்றது. நடப்பாண்டு 2.60 லட்சம் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

லுக்அவுட் நோட்டீஸ் விவகார வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிசெல்ல வாய்ப்பு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

மும்பையில் தனியாக வசித்து வந்த 63 வயது பெண்மணி ஒருவரின் உடல் மக்கிப்போன நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது

நண்பர் ஜெயக்குமார் தொடர்ந்து பேசினால் அவரது ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும். என்ன ரகசியம் என்பது அவருக்கு தெரியும் என எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்

கேரள மருத்துவமனைகளால் அலைகழிக்கப்பட்ட தமிழர், ஏழு மணி நேரம் ஆம்புலன்சில் இருந்தபடியே உயிர் துறந்தார்

வைகை ஆற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதிகளை சுத்தம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை மீண்டும் தொடங்க கோரிய பொதுநல வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தொல்லியல் துறை அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை செப்டம்பர் 4ம் தேிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில், நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரால் நிற்க கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வருடன் பா.ஜ., தலைவர் தமிழிசை சந்திப்பு

ஸ்டாலினுடன் கவுரவ பிரச்னையில்லை : தமிழக அரசு விளக்கம்

ஆந்திராவில் ரூ.1.91 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்.இந்த பணத்தை வைத்திருந்த 3 பேரை விசாகப்பட்டினம் சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர்இதுதொடர்பாக அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆதார் குறித்த வழக்கை விசாரித்து வரும், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள இரண்டு நீதிபதிகள், விசாரணையின் போது, 'ஓட்டுரிமையும், சொத்துரிமையும் ஏன் அடிப்படை உரிமையாக இல்லை' என, கேள்வி எழுப்பினர்.

பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்கள் கண்டிப்பாக ஆதார் எண் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) அறிவித்துள்ளதுமேலும், இனி பட்டப்படிப்பு சான்றிதழில் மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆதார் எண் இடம்பெற வேண்டும் என்று யஜிசி சுற்றிறிக்கை அனுப்பியிருக்கிறதுபோலி பட்டப்படிப்பு சான்றிதழில் அதிகம் நடமாடுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு அருகே கவுந்தம்பாடியில் 8 வயது சிறுவன் நிதீஷ் மர்ம காய்ச்சலால் உயரிழந்துள்ளதாக கூறப்படுகிறதுஅருகே இருந்த தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் சிறுவன் பரிதாபமாக பலியாகியள்ளார்.மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர், உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் தாக்கம் அதிரித்து வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கிராமங்களில் டெங்கு பரவி உள்ளதுஇந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் தமிழகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினகரன் தரப்பினரிடம் பின்வருமாறு அழுத்தமாகக் கூறிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி: எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரைத் தவிர என் ஆட்சிக்கு யாரும் சிக்கலை ஏற்படுத்த முடியாது

பள்ளிக் கல்வித்துறை பற்றி தம்முடன் பொது மேடையில் விவாதிக்க தயாரா என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.இந்நிலையில், செங்கோட்டையனுடன் விவாதிக்க தயார் என்று அன்புமணி சவால் விடுத்துள்ளார்.மேலும், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் திருப்பதிக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா, "புதிய துணை ஜனாதிபதியாகிய நான் தற்போது எந்தக் கட்சியையும் சேராதவன்" என்றார். "என் பொறுப்பை உணர்ந்து தன்னிச்சையாக செயல்படுவேன்" என்றும் கூறினார் வெங்கையா

திருச்சி: குடிபோதையில் வாகனம் இயக்கிய 106 பேரின் லைசென்ஸ் ரத்து

பழநி முருகன் கோவிலில் ரோப் கார் தினமும் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.இந்நிலையில் வரும் ஆக.15 பின் ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படவுள்ளது.பாராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் ஒரு மாதம் நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி, தமிழர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு உடனடியாகத் இந்த நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும்.அப்படி செய்யவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.

வங்கிகள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் பாஜக பதில் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்தமைக்காக மொத்தம் 60 நெசவாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டார்

வாகா எல்லை பகுதியில் பாகிஸ்தான் 400 அடி உயரம் கொண்ட கொடி மரத்தை அமைத்து வருகிறது. இதற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது

இந்தியாவில் தற்சமயம் அதிக மக்கள் பான் அட்டைகளை பயன்படுத்துகின்றனர், வங்கி சார்ந்த சில முக்கிய இடங்களில் இதன் பயன்பாடுகள் அதிகமாக உள்ளது.இப்போது 11.44 லட்சம் பான் அட்டைகள் செயலிழந்தது என மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் நிதி அமைச்சர் சந்தோஷ் குமார்.போலி விபரங்கள் மற்றும் போலி அடையாளங்கள் போன்றவற்றை கொடுத்து சிலர் பான் அட்டைகளை பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் பல மக்களின் பான் அட்டைகள் பயன்படாமல் போனது.

அரியானாவில் ஆம்புலன்ஸை பா.ஜனதா தலைவர் 30 நிமிடங்கள் நிறுத்தியதால் நோயாளி உயிரிழந்தார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் புதிய மாற்றம்எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களின் விலை ஏற்றம்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹலிமா யாகோப்.சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக உள்ள ஹலிமா யாகோப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். சிங்கப்பூர் அரசியல் வரலாற்றிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஹலிமா.

வடகொரியாவிற்கு அனைத்து உலக நாடுகளும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டுமென ஆசியன் மாநாட்டில் பங்குபெற்ற அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டாக அறிவித்தனர்

எங்கள் அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம் என வடகொரியா கூறி உள்ளது.

தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 40 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய பாரம்பரிய இசையை விண்வெளியில் ஒலித்து வரும் வாயேஜர் -2 விண்கலம் 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

விலை நிலவரம்--22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,710-22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,680-24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.28,460வெள்ளி: ஒரு கிராம் - ரூ.39.90வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.30,900

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 51.74 புள்ளிகள் குறைந்து 32,273.67.தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 9.00 புள்ளிகள் சரிந்து 10,057.40

காட்லின் தலைவணங்க உசைன் போல்ட் தகுதியானவர். அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக சஞ்சனா பங்கேற்பு

தடகள வீரர் ஜஸ்டின் கேட்லின் ஊடகங்கள் தன்னை கெட்டவனாக சித்தரிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக