திங்கள், 28 ஆகஸ்ட், 2017

MATHI NEWS முக்கிய செய்திகள்@29/8/17



MATHI NEWS  முக்கிய செய்திகள்@29/8/17

சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில் திதிவாலாவிற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பயணிகள் உரிய இடத்திற்கு செல்ல பேருந்து வசதி அமைக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடில்லி, தீபாவளி பண்டிகைக்காக டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் 50 லட்சம் கிலோ வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலால் ஆச்சரியம் அடைந்த நீதிபதிகள் 'இந்திய ராணுவத்திடம் இருப்பதை விட அதிகளவில், வெடிபொருட்கள் டில்லியில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது' என்றனர். சீன பட்டாசுகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி–39 ராக்கெட் 31–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டு கடுங்காவல் ஜெயில் பஞ்சாப்-அரியானாவில் கடும் உஷார் நிலை

முதல்வர், துணை முதல்வர் இன்று டில்லி பயணம்

பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பதவியிலிருந்து நீக்க திட்டம்? - சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து தினகரன் ஆலோசனை

தொடர் மழை: வால்பாறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரயில் மோதியதில் மாம்பலம் அருகே 3 பேர் பலி

தமிழக அரசிற்கு வெட்கம்,மானம், ரோஷம் இருந்தால் குட்கா விவகாரத்தில் எங்களால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று ராஜினாமா செய்திருக்க வேண்டுமென்று என்று அதிமுக-வை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க செப்டம்பர் 2-ம் தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை செல்கிறார்.

ஆக., 31ல் ஜனாதிபதியை சந்திக்க திமுக நேரம் கேட்பு

நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்:ஸ்டாலின்

நியமனத்தில் எழுந்த சர்ச்சையால் கோவை ஸ்மார்ட் சிட்டி சிஇஓ ராஜினாமா

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையராக ஜெயா நியமனம்

தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை உடனே ரத்து செய்ய வேண்டும் - காங்கிரசார் மனு.

நாகை: கடல்சீற்றம் காரணமாக 3வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

நாளை ஜனாதிபதியை சந்திக்க திட்டம்: தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார்: தங்கதமிழ் செல்வன்

அக்டோபரில் அமித் ஷா தமிழகம் வருகை

மாணவி வளர்மதி மீதான வழக்கு-செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கணவர் முருகனை காப்பாற்ற வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்

பா.ஜனதா தலைவர்களை தாக்கி அவதூறு பேச்சு: நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை ஓட்டேரி காசநோய் அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

நெல்லையில், ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த மாணவி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள். ஆசிரியை மீது புகார் கூறி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை செய்யாறு அருகே தலித் காலனிக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் புளியரம்பாக்கம் கிராமம் தலித் காலனியில் 30 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.

சென்னை தனியார் கல்லூரி மாணவர் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றார்

வட கொரியாவின் புதிய அடையாளம் தெரியாத ஏவுகணை ஜப்பானை கடந்து பறந்து கடலில் விழுந்துள்ளது என்று செய்தி வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்: 15 பேர் பலி

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஹார்வே புயல்: 200 இந்திய மாணவர்கள் கழுத்து அளவு நீரில் சிக்கி தவிப்பு

நைஜீரியாவிற்கு விமானங்கள் விற்கிறது அமெரிக்கா

இலங்கை கிரிக்கெட் அணியில் பிரச்சினை எதுவும் இல்லை; கபுகேதரா

இன்றைய(ஆக.,29) விலை: பெட்ரோல் ரூ.71.62; டீசல் ரூ.60.02

மதிய செய்திகள்@29/8/17

பலாத்கார சாமியார் குர்மீத் வழக்கு; கொடிய மிருகத்திற்கு எல்லாம் கருணை கிடையாது சிபிஐ கோர்ட்டு

ஓணம் பண்டிகை: கோவைக்கு செப்.4 ம் தேதி உள்ளூர் விடுமுறை

நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு

அதிமுகவினருக்கு நேரம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

மருத்துவ கலந்தாய்வில் முறைகேடு: மேலும் 2 மாணவர்களுக்கு சம்மன்

இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலி: சிர்சாவில் ஊரடங்கு உத்தரவு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று தொடங்குகிறது

பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 9 வயது பெண் குழந்தையை, அவர் வசிக்கும் குடியிருப்பின் 3வது மாடியிலிருந்து இரண்டு முறை வீசி கொன்றார். இதனையறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில், அவரது குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மிக சிரமப்பட்டு வந்தது. இதனால் மனம் வெறுத்து குழந்தையை கொன்றதாக அவரது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை இலை சர்ச்சை தொடர்பாக அளித்த புகாரை ஓபிஎஸ் அணி வாபஸ் பெறுவதாக அறிவிப்புஇரு அணிகளும் இணைந்ததை அடுத்து புகாரை திரும்பப்பெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்கினால் நீதிமன்றம் செல்வோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க.தமிழ்செல்வன் கூறினார்.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை விவகாரத்தில் தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தேரதல் கமிஷனில் தினகரன் தரப்பினர் இன்று மனு அளித்தனர்

கர்நாடக அணைகளில் தொடர்ந்து அதிக நீர் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து கிடுகிடுவென உயர்வு. இதையடுத்து அந்த ஆற்றின் கரையோரங்களில் வாழும் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி பாதகோட்டாவில் உள்ள தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு

அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

டெங்கு காய்ச்சல் ; காரைக்குடி அருகே ஒருவர் பலி

சென்னை திருவொற்றியூரில் கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் பலி

தொடர்ந்து பந்தாடப்படும் நேர்மையான அதிகாரிகள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 மதுக்கடைகள் மூடல்: கவர்னர் கிரண்பேடி அதிரடி

வெடிகுண்டை சுமந்து சென்று 400 குழந்தைகளை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு

நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானை தாண்டி சென்றதால் பதற்றம்; பாதுகாப்பிற்கு முழு நடவடிக்கை - அபே

செப். 9-ல் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை: தென்கொரிய உளவுத் துறை தகவல்

தங்கம் விலை உயர்வு-
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,831
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,648
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,710
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.43.00
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.43,000

உலக குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் கலந்த கொள்ள இருந்த ஷிவதபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார்.

2019 உலக கோப்பையில் டோனி விளையாட முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி: வைரலாகும் வீடியோ.

*மாலை செய்திகள்@29/8/17🌑*

சிறந்த சாலைகள் நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றன உதய்பூரில் பிரதமர் மோடி பேச்சு

தமிழக அரசின் தலைமை வக்கீல் முத்துக்குமாரசாமி, திடீர் ராஜினாமா

சரியாக செயல்படாத பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்: நிதி ஆயோக்

ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது-மீறினால் வாகனம் பறிமுதல்- போலீசார் எச்சரிக்கைடூவீலர் முதல் லாரி வரை எல்லா வாகன ஓட்டிகளுக்கும் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம்

அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 200 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர்

சிர்சாவில் பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், தினகரன் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து பேசி ஒரு முடிவெடுக்கவில்லை என்றால் நான் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் என கோவை எம்.பி நாகராஜன் கூறினார்

போலி இருப்பிட சான்றிதழ்: 5 பேரிடம் போலீசார் விசாரணை

எடப்பாடியை மாற்றினால்தான் ஆட்சி நன்றாக இருக்கும்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன்

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக வரும் 31-ம் தேதி குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்: ஸ்டாலின்

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆசிரமத்தில் ஆயுதங்களை குவித்து பாதுகாப்பு படையினரை தாக்கிய சாமியார் ராம்பால் விடுவிப்பு

லாலு மகன் தேஜஸ்வியிடம் வருமான வரித்துறை விசாரணை

புனே: அளவுக்கதிகமான போதையில், தனது தாயை கொலை செய்து, அவரது இதயத்தை சட்னியில் தொட்டு சாப்பிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்

பத்மநாபசாமி கோவிலில் உள்ள, ' பி' ரகசிய அறை திறக்க ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என, திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முதல்வர் மனைவியுடன் கைது

துணை முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

தங்க மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது; ஜனாதிபதி வழங்கினார்

தமிழக அரசியல் சாக்கடையாகிவிட்டது - அன்புமணி ராமதாஸ்

அ.தி.மு.க., தோழமை கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், மற்றும் தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினர்.

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பெண் யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு

முறையான கோரிக்கை வைத்தால் ஸ்டாலினை நிச்சயம் மோடி சந்திப்பார்: இல.கணேசன்

எஸ்பிஐயில் 2,780 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்த திருப்பதி தேவஸ்தானம்

நீடா அம்பானிக்கு ராஷ்டிரிய புரஸ்கார் விருது

வரும் 2022க்குள் நக்சல் தீவிரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி-தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய டாக்டர்கள், நீண்ட நேர ஆபரேசனுக்குப் பிறகு ஒரு பகுதியை வெற்றிகரமாக பிரித்துள்ளனர்

டிரம்ப் கருத்தால் அமெரிக்கா உடனான உறவை தற்காலிகமாக துண்டிக்க பாகிஸ்தான் முடிவு

தங்கம் விலை-
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,849
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,792
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,910
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.43.30
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.43,300

வார வர்த்தகத்தின் 2வது நாளான இன்று பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 362.43 புள்ளிகள் குறைந்து 31,388.40. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 116.75 புள்ளிகள் சரிந்து 9,796.10.


*இரவு செய்திகள்@29/8/17💥*

மும்பையில் கன மழை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்பையில் கன மழை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம்மேற்கு கடற்கரை பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கைபவானி, மோயார் ஆறுகளுக்கும் நீர் வரத்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

டோக்லாம் பிரச்சனை: இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இந்தியாவிற்கு சீன ராணுவம் மறைமுக எச்சரிக்கை

ஆக.,31-ல் ஜனாதிபதியுடன் தி.மு.க.,வினர் சந்திப்பு

தமிழக எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திப்பதில் தவறில்லை - தம்பிதுரை

தைரியமான முடிவுகளை எடுத்து அதனை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்

1,000 ரூபாய் நோட்டை மீண்டும் வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை: நிதி அமைச்சகம்

ஜி.எஸ்.டி.யில் இணைந்த 59 லட்சம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர்: ஜெட்லி

ஜி.எஸ்.டி வரி மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது அருண் ஜெட்லி

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் இதுவரை 5 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்று கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளர்.மேலும், விசாரணையில் மருத்துவ கலந்தாய்வில் சான்றிதழ்கள் போலி அல்ல எனத் தெரிய வந்துள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் தகவல்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:கட்சியில் உள்ள அனைவருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழில் பங்கு உள்ளது-நாங்கள் நிறைவேற்றிய 4 தீர்மானங்களை முன்னிறுத்தியே இனி அதிமுக தொடர்ந்து செல்லும்.

பாஜக தலைவர் தமிழிசையின் தூண்டுதலின்பேரில், நாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்டு அவரை பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்-இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் வழக்கறிஞர், சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

வன்முறை அரசியலில் விருப்பமில்லை : தமிழிசை

மோடி குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்

சென்னை மதுரை கோவை இடையே நாளை முதல் சிறிய ரக விமானம் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

அதிமுக சிறுபான்மை நல பிரிவு செயலர் அன்வர்ராஜா நீ்க்கம்: தினகரன்

கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் நடிகர் செந்தில்

காஞ்சிபுரத்தில் தலித் மக்கள் மீது கொடூரத் தாக்குதல்: ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நளினி கடிதம்-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நளினி கடிதம-்முருகன் உண்ணாவிரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் : ஜாக்டோஜியோ

தலித் குடும்பங்களுக்கு எடியூரப்பா விருந்து அளிப்பது அரசியல் நாடகம்: முதல்வர் சித்தராமையா விமர்சனம்

தலைநகர் டெல்லியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

இந்தியாவிற்கு எதிராக படுதோல்வி: இலங்கை தேர்வுக்கு குழு கூண்டோடு பதவி விலகல்

விருது பெற்ற மாரியப்பனுக்கு டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக