மதி செய்திகள் காலை செய்திகள்@12/8/17
காஷ்மீரில் பாக்., துப்பாக்கிச் சூடு தாக்குதல் - 45 வயது பெண் பலி
தேதி குறிப்பிடாமல் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
குழந்தைகள் பலி: நீதி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு
கைவிடப்படுகிறது 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி:பார்லி.,யில் மசோதா தாக்கல்
சிக்கிமை ஒட்டி சீன எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு
எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய படைகள் தயார்-அருண் ஜெட்லி
அயோத்தி - பாபர் மசூதி பெயர் சர்ச்சை: டிச.5-ல் இறுதிவிசாரணை
விதிமுறைகளை மீறி கட்டிய திருச்சி ரத்னா ஸ்டோர்ஸ்க்கு சீல்
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜெயராமன் விடுதலை
ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை - 2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம்
கரூரில் துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
முதல்வரின் செயல் ஏமாற்று வேலை -தங்கதமிழ் செல்வன்
சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: போலீசார் அணிவகுப்பு
என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிவடைந்தது 89 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன
முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் மீண்டும் சிறப்பாக நடத்தப்படும்-மு.க.ஸ்டாலின்
கேரளாவில் கைதான ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொடைக்கானலில் தாக்குதல் நடத்தத் திட்டம்-
எர்ணாகுளம் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் தகவல்-
வட்டக்கனல் பகுதிக்கு சுற்றுலாவிற்கு வரும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டம் எனத் தகவல்
வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 22 மாணவ-மாணவிகள் காயம்
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மறுவாழ்வுக்கு கூடுதல் உதவிகள்: ராமதாஸ் வலியுறுத்தல்
புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
இரோம் சர்மிளாவின் திருமணத்துக்கு எதிர்ப்பு: தே.மு.தி.க. பிரமுகரின் மனு நிராகரிப்பு
3 மாதத்தில் 1.18 கோடி ரயில்வே துறை அபராதம் வசூல்-இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் உரிய பயணச்சீட்டு இல்லாதவர்களிடம் அபராதம்-ரயில்வே அமைச்சர் ராஜன் கோகெய்ன் லோக் சபாவில் தகவல்
புதிய நிறுவனத்தில் பணிக்கு சேரும் போது பழைய நிறுவனத்தில் உள்ள பிஎப் கணக்கு தானாக மாறும்
இந்தத் திட்டம் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது
அசாமில் காந்தி சிலை அகற்ற முடிவு: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
கொலை வழக்கில் குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
சிறையில் பெண் கைதி கொலை: பைகுல்லா ஜெயில் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நரேஷ்குமார் (42) என்பவர் மின்சாரத்தை உணவாக எடுத்துக்கொள்கிறார்.
இதனால் அப்பகுதி மக்களை இவரை மின்சார விளக்கு மனிதன் என அழைக்கின்றனர்.
பசி எடுக்கும் போது பல்புகளை எரிய வைத்து அதன் ஒயர்களை தனது வாயில் கடிப்பதன் மூலம் தனது பசி அடங்கி விடுவதாக நரேஷ் கூறியுள்ளார்.
உடலிலி மின்சாரம் பாய்ந்தும் அவருக்கு ஓன்றும் ஆகாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சூம் மனு தாக்கல்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் விசா மோசடி
சிரியாவின் ஜோர்தான் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் - 23 பேர் பலி
எகிப்தில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 43-ஆக உயர்வு
நடிகை கடத்தல் வழக்கில் எனது முன்னாள் மனைவி சிக்க வைத்து சதி செய்து உள்ளார்- நடிகர் திலீப்
சென்சார் போர்டு தலைவர் பதவியில் இருந்து நிஹலானி நீக்கம் - நடிகை கவுதமி உறுப்பினராக நியமனம்
பெண்கள் அமைப்பே தேவையில்லை: நடிகை சுவேதா மேனன்
இன்றைய(ஆக.,12) விலை: பெட்ரோல் ரூ.69.92; டீசல் ரூ.60.16
உலக தடகள போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி.
மாலை செய்திகள்@12/8/17
குழந்தைகள் இறப்புக்கு ஆக்சிஜன் காரணமல்ல: உ.பி., துணை முதல்வர்
கோரக்பூர் சம்பவம்: மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள 2 அமைச்சர்களைப் பணித்தார் யோகி ஆதித்யநாத்
பிரதமர் மோடியைச் சந்திக்கும் முடிவைக் கைவிட்டு விட்டு ஷீரடிக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
ஜெ. சிகிச்சை குறித்த வீடியோ வெளியிட்டால் நட்புக்கு களங்கம் ஏற்படும் என்றார் சசிகலாபெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அவரை சந்தித்தபோது தெரிவித்தார்- தங்கத் தமிழ்ச்செல்வன்
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை டெண்டர் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்
சட்டசபையில் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்ததில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
ஆதம்பாக்கத்தில் கத்தி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை : ஒருவர் கைது
உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்
சசிகலா விவகாரத்தில் தெளிவான முடிவு தெரிந்தபின்னர் அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் தீவிரம் காட்டலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீர்மானித்துள்ளனர்.
சென்னை-50 மூட்டைகளில் பதுக்கி வைத்த பல லட்சம் ஜர்தா பறிமுதல் - குடோன் மேலாளர் கைது
திண்டுக்கல் அருகே மர்மக்காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு
செப். 5ஆம் தேதி முரசொலி பவளவிழா - ஸ்டாலின் அறிவிப்பு
முக ஸ்டாலின் இன்று இரவு லண்டன் பயணம்
முதல்வரை 420 என வசைபாடியது தினகரன் வாய்தவறி கூறியதாகும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
இணைப்பு என்ற நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை இரு அணிகளும் ஏமாற்ற முடியாது- ஜெ.தீபா கடும் தாக்கு
அ.தி.மு.க.வின் 3 அணிகளும் 420 தான்-தி.மு.க ஜெ.அன்பழகன் தாக்கு
சசிகலா தலைமையில் உள்ளது தான் உண்மையான அதிமுக : சுப்ரமணியன் சுவாமி
கோரக்பூர் சம்பவம் மிகப்பெரிய படுகொலை: கைலாஷ் சத்யார்த்தி
ஆலப்புழாவில் படகு போட்டி தொடக்கம்
450 பேர் சென்னையில் இருந்து நாளை புனித ஹஜ் பயணம்
பா.ஜனதா தமிழக அரசை உதைப்பந்து போல் உருட்டி விளையாடுகிறது: வைகோ
நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு; மாணவர்களை நட்டாற்றில் விட்ட தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்
காங்கிரஸ் காரர்கள் தான் ஊழல் செய்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி விரைவில் சிறைக்கு செல்வார்கள். கார்த்தி வெளிநாடு தப்பித்து செல்லக்கூடாது என உள்துறை உத்தரவிட்டுள்ளது. இவர்கள் சிறையில் தான் செயற்குழு கூட்டம் நடத்த வேண்டும்-சுப்ரமணிய சாமி
அதிமுக கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தவறு செய்து விட்டது: சாமி
ஜனாதிபதியுடன் தமாகா தலைவர் வாசன் சந்திப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ் குமாருக்கு அமித் ஷா அழைப்பு
உ.பி., கிழக்கு பகுதியில் 6 ஆண்டுகளில் 3 ஆயிரம் குழந்தைகள் பலியாகியுள்ளனர் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
உ.பி.யில் தூங்கிக்கொண்டிருந்த 2 சகோதரிகள் மர்மநபர்களால் தீ வைப்பு: போலீசார் விசாரணை
உ.பியில் குழந்தைகள் பலியான சம்பவம்: யோகி ஆதித்யநாத் ராஜினமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
ராஜஸ்தான் பல்கலைக்கழங்களில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது என அறிவிப்பு
பீகார்-15 நபர்களை கொடூரமாக தாக்கி கொன்ற யானைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பா.ஜனதா ஆட்சியா?: நாராயணசாமி
ஆக.,16 முதல் புதுச்சேரி - ஐதராபாத் இடையே விமான சேவை: நாராயணசாமி
அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை போலீசார் நீக்கிய குற்றத்திற்காக அப்பெண்ணிற்கு ரூ.54 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் அமோக வெற்றி: கென்யா அதிபராக கென்யட்டா மீண்டும் தேர்வு
இந்தோனேசியாவின் துபான் நகரில் ஒரு கோவில் வளாகத்தில் சீனக் கடவுளின் 100 அடி உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்துக: வடகொரியாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
தூய்மையின்மை கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் இருக்கிறது: அக்ஷய் குமார்
ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: நடிகர் விவேக்
தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
மத்திய தணிக்கை குழு உறுப்பினரானார் வித்யாபாலன்
மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலையை நிறுவிட முதல்வருக்கு திரையுலகினர் வேண்டுகோள்
தற்கொலை முயற்சி செய்தாரா?- நடிகை ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் சதம்
புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இது குஜராத் அணிக்கு 2-வது வெற்றியாகும்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை டெனிப்ஹிப்ஸ்ஸி தங்கம் வென்றார்.
திரிபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரணி அருகே இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
எளியோர் அரியணையேறுவதே ஜனநாயகத்துக்குப் புகழ்: பிரதமர் மோடி
அவை நடவடிக்கைகளில் இடையூறு விளைவிக்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு பேச்சு
‘420’ என்பது தினகரனுக்குத்தான் பொருந்தும்: டெல்லியில் முதல்வர் பழனிசாமி கருத்து
சென்னையில் சொகுசு பஸ்சில் தீ விபத்து
இந்திய வரைபடத்திலிருந்தே காவிரி படுகை காணாமல் போகக்கூடும்: ஜெயராமன்
நெடுவாசலில் 122வது நாளாக பொதுமக்கள் போராட்டம்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் டெங்குவுக்கு இலவச சிகிச்சை : விஜயபாஸ்கர் தகவல்
பாலியல் புகார் : ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு பலாத்காரம் அல்ல- சுப்ரீம் கோர்ட்
பெரு நிறுவனங்களின் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை: ஜேட்லி
விருப்பப்படி சரத் யாதவ் முடிவெடுக்கலாம்: மோடி, அமித் ஷாவை சந்தித்த பிறகு நிதீஷ் அறிவிப்பு
தினகரன் நியமனம் செல்லாது: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் மனு
ரேஷனில் மசூர் பருப்பு விநியோகிக்கலாம் : தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு
தமிழக புதிய பாட திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் : பாட திட்ட குழு தலைவர் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது: திருநாவுக்கரசர்
'நீட்' தேர்வு விலக்கு: பிரதமரிடம் முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்
7.5% பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை: ஆய்வறிக்கையில் தகவல்
தலித் மக்களிடம் உண்மையான அன்பு இருந்தால் கலப்பு திருமணத்தை பாஜ தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும் : முதல்வர் சித்தராமையா பேச்சு.
*மாலை செய்திகள்@12/8/17-பகுதி-2
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: ஒரு வீரர் காயம்
பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
எதிரிகளுடன் சண்டையிட இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பணப்புழக்கம் ரூ.3.5 லட்சம் கோடி குறைந்துள்ளது: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
அழகன் குளத்தில் அகழாய்வுப் பணியில் பண்டைய தமிழக நாகரீகம் கண்டுபிடிப்புகீழடி போலவே அகழாய்வு பணி அழகன் குளத்தில் நடைபெறுகிறதுபழங்கால நாணயங்கள் அழகன்குளத்தில் கண்டெடுப்பு
உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தானாங்கூரில் ஏரியில் குளித்தபோது பள்ளி மாணவர்கள் டேனியல் மற்றும் சசிகுமார் உயிரிழந்துள்ளனர்
தருமபுரி அருகே மர்ம காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
கொடைக்கானல் வட்டகானலில் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி.சக்திவேல் ஆய்வு செய்தார். யூத சுற்றுலா பயணிகள் மீது ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்த உள்ளதாக என்.ஐ.ஏ. நேற்று அறிவித்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்றிரவு சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பெரியப்பட்டில் நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்த உடன் பேருந்து ஓட்டுநர் பிரபு, மற்றும் நடத்துனர் ரவி ஆகியோர் புதுசத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான ஓட்டுனர், நடத்துனரை விடுவிக்கக் கோரி பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஒரே அணியாக செயல்பட வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
வேலூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
எல்.ஈ.டி. தெரு விளக்குகள் டெண்டருக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்
டெங்கு அறிகுறியுடன் திருவள்ளூர் மருத்துவமனையில் 5 பேர் அனுமதி
நான் மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்கியதில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
அதிமுகவில் யார் 'நம்பர் ஒன் 420' என்பதில்தான் போட்டி - ஜெ.அன்பழகன்
கல்பாக்கம் அருகே டாஸ்மாக் கடைக்கு சீல்
திருச்சியில் ரத்னா ஸ்டோர் உள்ளிட்ட 223 கடைகளுக்கு சீல் வைப்பு
சின்னமலை முதல் தேனாம்பேட்டை வரை சுரங்க மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்விரைவில் இதே வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தகவல்.
தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனராம். நிந்தவூரில் இலங்கை கடற்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். மூவரையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் எடுபடாது: கி.வீரமணி
எல்லையில் பின்வாங்க மாட்டோம்: சீன அரசு பிடிவாதம்
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு என்பது தமிழக மாணவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய தீங்கு என மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும், சிவாஜி சிலை அகற்றப்பட்டது தொடர்பாக சட்டசபையை கூட்டி தமிழக அரசு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்
குழந்தைகள் மரணம்: உ.பி. மருத்துமனையை பார்வையிட சுகாதாரத்துறை இணை மந்திரியை அனுப்பி வைத்த நட்டா
கோரக்பூர் மருத்துவமனை தலைவர் சஸ்பெண்ட்
தேநீர் பைகளுக்கு ஸ்டேப்ளர் பின் போடுவதற்குத் தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது.2018 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ள.மேலும், தேநீர் உற்பத்தி நிறுவனங்களும் ஸ்டேப்ளர் பின் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு தர நிர்ணயம் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சுவையான மீன் இனங்களை உள்நாட்டு நீர்நிலைகளில் வளர்ப்பதற்கு மேற்கு வங்க அரசு தீவிரம் காட்ட முனைந்துள்ளது.
கொடிய வால் நட்சத்திரங்கள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் என நாசா கூறுகிறது
கென்யா ஜனாதிபதி தேர்தலில் தோல்வி எதிரொலி: எதிர்க்கட்சியினர் வன்முறை - போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
ஈரானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த மேலும் ஒரு நகரை ராணுவம் மீட்டது
ஐ.எஸ். வசமுள்ள அல் சுக்னா நகரை முழுமையாக கைப்பற்றியது சிரிய ராணுவம்
எகிப்து ரயில் விபத்தில் 43 பேர் பலி: காயம் 100
ஒரு படத்தில் வாய்ப்பு வேணும்னா இயக்குநர் அல்லது நடிகருடன் படுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது--மலையாள இளம் நடிகை ஹிமா சங்கர் பகிரங்க குற்றச்சாட்டு
தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்-
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,783
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,264
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.29,220
வெள்ளி ஒரு கிராம் - ரூ.42.40
வெள்ளி கட்டி ஒரு கிலோ - ரூ.39,670
பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு: 4 நாட்களில் ரூ.6.4 லட்சம் கோடி இழப்பு
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ ‘பிளேஆப்’ சுற்று: திருவள்ளூர் - கோவை அணிகள் இன்று மோதல்.
இரவு செய்திகள்@12/8/17
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: '35 ஏ'-வை நீக்கினால் விளைவு மோசமாகும் என ஹூரியத் அமைப்புகள் எச்சரிக்கை
சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: தீவிரவாதிகள் குறித்து போஸ்டர் வெளியிட்டது டெல்லி காவல்துறை
உ.பி.,யில் சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி
அசாமில் கன மழை, வெள்ளம்: 11 லட்சம் பேர் பாதிப்பு
போதைப் பொருள் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
பாதுகாப்பு படையினர் மீது குறைகூற வேண்டாம்: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மக்கள் பிரச்னைகளில் அரசு முழு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது-நீட் தேர்வு விவகாரத்தில் முடிந்த அளவு அரசு முயற்சித்து வருகிறது - வேலுமணி
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை- குற்றச்சாட்டுமாநில அரசை முடக்கி வைப்பது ஜனநாயக விரோதமானது-மத்திய-மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதன் பின்னணி பற்றி விளக்க வேண்டும்-திருமா கோரிக்கை
கதிராமங்கலத்திற்கு பாதிப்பு இல்லை; ஓஎன்ஜிசி விளக்கம்
காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றம் விஏஓ அரம்பேஷ்வரனை பணிநீக்கம் செய்தும், வட்டாட்சியர் மனோகரனை பணி மாற்றம் செய்தும் சார் ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். வட்டாட்சியர் மனோகரன் செய்யூர் மெகா பவர் திட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தனிநபருக்கு மின்சாரம் வழங்க விஏஓ அரம்பேஷ்வரன் பரிந்துரை செய்ததாகவும் இவரது பரிந்துரையை ஏற்று தனிநபருக்கு தடையில்லா சான்றை வட்டாட்சியர் மனோகரனும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆக.,29ல் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ஸ்டாலின் கூறியது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதையே காட்டுகிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்
ஈரோட்டில் 100 கிலோ ரேசன் கோதுமை பறிமுதல்
மேட்டூர் அணை நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு
50,000 மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம்: அமைச்சர் தங்கமணி
வரி வருமானத்தைப் பொறுத்து ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என்று நிதித்துறை இணையமைச்சர் மேக்வால் தெரிவித்தார்.
கொல்கத்தா: பிரபல நீச்சல் குளத்தில் இருந்து பயிற்சியாளர் உடல் மீட்பு
இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை: அரியானா பா.ஜ.க. தலைவரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
டில்லி: மம்தா பானர்ஜி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியினரால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் ராஜினாமாவை ஏற்க பட்னாவிஸ் மறுத்துள்ளார்.
மத்திய அரசு புதிதாக 7 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் கோயல் தெரிவித்தார்.
ரஷ்யாவில் நடந்த சர்வதேச அளவிலான டாங்குகள் போட்டியிலிருந்து இந்தியா டாங்குகள் வெளியேறின.
குழந்தைகள் இறப்பு: பிரதமரிடம் யோகி விளக்கம்
நேபாளத்தில் மழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: 23 பேர் பலி
வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அவர்களை எதிர்த்து போரிட 40 லட்சம் வீரர்கள் தயாராக உள்ளதாக வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தமிழர்கள் ஒன்றிணைந்தது போல் தமிழக இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைய முன் வர வேண்டும் என்று ஜி.பி.பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக