செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

MATHI NEWS -8-8-2017-tuesday

MATHI NEWS  6.30am -8-8-2017-tuesday

♈ 🇮🇳  இத்தாலியில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு அழுகையை நிறுத்த போதை மருந்து கொடுத்த நர்ஸ்ஸை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்து மீட்டுள்ளனர். குழந்தை பிறந்ததும் பலமாக அழுதுள்ளது. அந்த நர்ஸ் எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை அவரால் நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த நர்ஸ் வலியை நீக்கும் மார்ஃபின் என்ற போதை மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளார்.இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக சென்று அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அதில் குழந்தையை சோதித்ததில் ரத்தத்தில் போதை மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

♈ 🇮🇳  அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.அதில், வடகொரியா கையாண்டு வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுருத்தினர்---

♈ 🇮🇳  சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதியான ரோமண்டியில் வசித்து வரும் அந்த நபர் போலி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் சிறுமிகளை குறிவைத்து பழகி வந்துள்ளார். பின்னர் அவர்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் ஆபாச நிர்வாண புகைப்படங்களை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.இதன் விளைவுகளை அறியாத சில சிறுமிகள் தங்கள் நிர்வாண புகைப்படங்களை விளையாட்டாக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி அந்த சிறுமிகளை நேரலையில் ஆபாசமாக காம லீலையில் ஈடுபட வைத்துள்ளார் அந்த நபர்.சில சிறுமிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த செயலை அந்த நபர் கடந்த 5 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இந்த சூழலில் ஒரு சிறுமியிடம் அந்த நபர் இப்படி நடந்துகொள்ள முயற்சிக்கையில் அந்த சிறுமி துணிச்சலாக அதனை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் போலிசில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது--.

♈ 🇮🇳  சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் செப்டம்பர் மாதம் நடக்கிறது. அதில் சிங்கப்பூர் மக்கள் செயல்பாட்டு கட்சியை சேர்ந்த ஹலிமா யாகோப் போட்டியிடுகிறார். இதன் மூலம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது சபாநாயகர் பதவியை ஹலிமா ராஜினாமா செய்துள்ளார். 40ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ள அவர், 2001, 2006, 2011மற்றும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் மலேசிய மக்களுக்கான ஒதுக்கீட்டில் போட்டியிட்டுள்ளார்---

♈ 🇮🇳  திருவள்ளுர் மாவட்டம் பூண்டி காப்பு காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள், காட்டு பன்றிகள், முயல் என பல வகை மிருகங்கள் உள்ளன. அது தவிற செம்மரங்களும் உள்ளன. கடந்த சில மாதங்களில் செம்மரங்கக் கடத்தலும், மர்மமான முறையில் மான்களும் இறந்து உள்ளன. அதை தடுக்கும் வகையில் காட்டின் நடுவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன---

♈ 🇮🇳  ரங்கசாமி ஆதரவாளர்கள் எப்பவுமே ரொம்பவே வித்தியாசம். பிறந்த நாளாகாட்டும்,பதவியேற்பாகட்டும் புதுவையை கலக்கி எடுத்து விடுவார்கள். 60 வயதைத் தாண்டியவராக ரங்கசாமி இருந்தாலும் கூட அவரது தொண்டர்களைப் பொறுத்தவரை ரங்கசாமி ஒரு விஜய், அஜீத் மாதிரிதான். கடந்த 4ம் தேதி ரங்கசாமியின் பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது தொண்டர்கள் வழக்கம் போல புதுவையைக் கலக்கி விட்டனர். அவர்கள் வைத்திருந்த வித்தியாசமான டிஜிட்டல் பேனர்கள் புதுவை மக்களை மிரள வைத்து விட்டன. இன்னும் கூட அந்த போஸ்டர்களின் தாக்கத்திலிருந்து புதுவை மீளவில்லை---

♈ 🇮🇳  நடிகர் திலீப் கோர்ட் காவல் இன்றுடன் முடிவு

 ♈ 🇮🇳  நடிகர் திலீப் கோர்ட் காவல் இன்றுடன் முடிவு---.

♈ 🇮🇳  ஆக-08: பெட்ரோல் விலை ரூ. 69.13, டீசல் விலை ரூ.59.71

♈ 🇮🇳  சந்திரகிரகணம் சென்னையில் தெரிந்தது--

♈ 🇮🇳 சென்னை விமானநிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை-சுதந்திரதினத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது---

♈ 🇮🇳 ஆக., 22 ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

♈ 🇮🇳 அசாம்: வகுப்பறையில் மாணவியுடன் சல்லாபித்த ஆசிரியர் கைது--

♈ 🇮🇳 முதுமலை: மனைவியை கொன்றவருக்கு 8 ஆண்டு சிறை

♈ 🇮🇳 'சிக்கிம் மாநில எல்லை யான, டோகோலாம் பகுதியில் இருந்து, இந்திய ராணுவம் வெளியேறி, மோதலை தவிர்க்க வேண்டும்; இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, சீனா, மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது

♈ 🇮🇳 மஹாராஷ்டிர மாநிலம், அஹமதுநகர் மாவட்டத்தில் நேற்று, பசுக்களை வேனில் கடத்திச் சென்றவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்,போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடந்த போது, பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த, 12 பேர் அங்கு வந்தனர். 'பசுக்களை கடத்திச் சென்றவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறிவிட்டு,ஸ்டேஷனை விட்டு வெளியேறினர். சில நிமிடங்களில் அவர்களை, ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது; இதில், பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக, 36 பேரை, போலீசார் கைது செய்தனர்---

♈ 🇮🇳 ட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

♈ 🇮🇳 போலியான மற்றும் மோசடி பெயரில் வாங்கப்பட்ட 11.44 லட்சம், 'பான் கார்டு' எனப்படும் வருமான வரித் துறை நிரந்தர எண் அட்டையை மத்திய அரசு முடக்கியுள்ளது--

♈   வங்கதேசத்தில் உள்ள, சிட்டகாங்கில் இருந்து, வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு, இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லும், குழாய்கள் அமைப்பது தொடர்பாக, வங்கதேச அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக, பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்---

♈ 🇮  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும் உறியடித் திருவிழாவின்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உறியை உடைப்பதற்கு உயர கட்டுப்பாடு ஏதும் இல்லை. அதே நேரத்தில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி கிடையாது' என,மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

♈ தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் ஒ பி.எஸ்., நண்பர் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம் சென்றனர்---

♈ 🇮  கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 2 பேர் மாயம்

♈ 🇮  தென்கிழக்கு டெல்லி சங்கம் விகார் பகுதியில் உள்ள திறந்த வெற்றிடம் வழியாக சாலையில் பொதுமக்கள் சென்றபோது கடும் துர்நாற்றம்  வீசியது. இதையடுத்து சிலர் அங்கிருநத் சணல் பை மூட்டையிலிருந்து வருவதை கண்டு, உடனே இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார்,பையை  பிரித்தனர். அப்போது அதில் அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. சடலத்தை  ஆய்வு செய்தபோது,அது 20 வயதுடைய  இளம்பெண்ணின் சடலம் என கண்டறிந்தனர். அப்பெண் கொலை செய்யப்பட்டு 20-25 நாட்கள் கடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.போலீசார்,இதுதொடர்பாக வழக்கு பதிந்துள்ளனர் ---
♈   சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே மாத்தூரில் சொத்து தகராறில் தாய்,தந்தையை  மகன் அரிவாளாள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮  100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றார் அமெரிக்க வீராங்கணை டோரி

   10am -8-8-2017-tuesday

♈ 🇮🇳  விவசாயிகளின் வறட்சி நிதி மோசடி அரசு ஊழியர்கள் கைது! திண்டுக்கல்லில் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சார்நிலை கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த அருண்குமாரும் கூடுதல் சார்பு அலுவலருமான விஜயகுமாரும் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் திரும்பிய பணத்தை தங்களுக்கு வேண்டிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்  11 பேரின் வங்கி கணக்கில் வரவு வைத்து 1 கோடியே 50லட்சம் மோசடி  செய்துள்ளனர்

♈ 🇮🇳  அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் சேர 250 இடங்களும், பி.பார்மஸி படிப்பில் சேர 108 இடங்களும்,பிஸியோதெரபி படிக்க 75 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் உள்பட பல்வேறு படிப்புகளுக்கு 538 இடங்கள் உள்ளன.சுயநிதி கல்லூரிகளில் 7 ஆயிரத்து 498 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு விண்ணப்பம் 23–ந் தேதி மாலை 5 மணிவரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை செயலாளர்,தேர்வுக்குழு, மருத்துவக்கல்வி இயக்குனரகம், பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24–ந் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும். இந்த தகவலை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்

♈ 🇮🇳  சிறுமிக்கு பாலியல் தொல்லை: மெக்கானிக் கைது..!சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம்,ஆணையாம்பட்டி புதூர்

♈ 🇮🇳  ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக,கோவையைச் சேர்ந்த, 30 பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர்.ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன், 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பு வைத்திருப்பதாக, தேசிய புலனாய்வு பிரிவு எனும், என்.ஐ.ஏ.,அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த வாரம், இரு நாட்கள், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவையில் முகாமிட்டனர்

♈ 🇮🇳  முன்னாள் தலைமை செயலர், ராம மோகன ராவின் மகனிடம், வருமான வரித்துறையினர், சில தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொண்டதன் மூலம்,ராவ் வழக்கு மீண்டும் சூடு பிடித்துஉள்ளது

♈ 🇮🇳  நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது. நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்

♈ 🇮🇳  காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்தாலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

♈ 🇮🇳  சண்டிகாரில் பா.ஜனதா தலைவர் மகன் பெண்ணை கடத்த முயற்சித்த வழக்கு விசுவரூபம் எடுத்து உள்ளது

♈ 🇮🇳  குஜராத்தில் காலியாக உள்ள3 மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் தொடங்கியது

♈ 🇮🇳  ரெயில்வே பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் 3 பேர் கைது

♈ 🇮🇳  மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

♈ 🇮🇳  நெடுந்தீவு அருகே கடலில் மூழ்கிய 2 மீனவர்கள் மீட்பு

♈ 🇮🇳  சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு நேப்பியர் பாலம் முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்
♈ 🇮🇳  உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாச்சலத்துக்கு பேருந்து இயக்காததால் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

 ♈ 🇮🇳  புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ராமன் தகவல் அளித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

♈ 🇮🇳  வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 249பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 51 பேருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 198 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

♈ 🇮🇳  இலங்கை கடற்படை அதிகாரி கடத்தல்? 50க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
♈ 🇮🇳 கதிராமங்கலத்தில் 80வது நாளாக போராட்டம் தொடர்கிறது

♈ 🇮🇳 திருவண்ணாமலை-செங்கம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்

♈ 🇮🇳 திருவள்ளூர்: சோழவரம் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி


   1pm -8-8-2017-tuesday*

♈ 🇮🇳  அதிமுக ஆட்சி இமயமலை போன்றது. கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

♈ 🇮🇳  கடந்த 2014 ம் வருடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காரில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில், தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் வழங்கி உத்தரவிட்டுள்ளது

♈ 🇮🇳  கன்னியாகுமரியை சேர்ந்த மகேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: வடசேரி பகுதியில் கடந்த 2014ல் எம்.பி.,விஜயகுமார், அமைத்த ஜெயலலிதா மணற் சிற்பத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை அகற்ற வேண்டும் எனக்கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் ஆகஸ்ட் 18 க்குள் பதிலளிக்க கன்னியாகுமரி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது  ---

♈ 🇮🇳  தமிழக அரசு நீட் தேர்வு அவசரச்சட்டம் பற்றி  மத்திய அரசிடம் சட்ட ஆலோசனை கேட்கவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தகவல் அளித்துள்ளார்.நீட் அவசரச் சட்ட வரைவை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார ---

♈ 🇮🇳  சதுரகிரி மலையில் நடக்கும் கட்டடப்பணிக்கு கழுதைகளை பயன்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.மலை அடிவாரத்தில் இருந்து மணல் எடுத்து செல்ல கழுதைகள் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.விருதுநகரைச் சேர்ந்த முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது    ---

♈ 🇮🇳  தமிழகத்தில் உள்ள 7 ஆறுகள் மாசடைந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பவானி,காவிரி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி,மணிமுத்தாறு, வசிஷ்டாறு ஆகியவை மாசடைந்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. ஆறுகள் மாசடைவதை தடுக்க மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது  ---

♈ 🇮🇳  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசுக்கு விரோதமாக செயல்படுகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் விதிகளை மீறி ரகசியங்களை வெளியிடுகிறார். மேலும் வலைதளங்களில் அரசு ரகசியங்களை வெளியிட கிரண்பேடிக்கு யார் அதிகாரம் கொடுத்தது என நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

♈ 🇮🇳  யோகா என்ற பெயரில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட்!சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்

♈ 🇮🇳  சினிமா சங்கங்களின் தலைவர், செயலாளர் ஆனதில் இருந்தே அந்த நடிகருக்கும் அரசுக்கும் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையின்போது நடிகரை சில அமைச்சர்கள் நெருங்கி வந்தார்கள். குடும்பத்துடன் வந்து படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். அரசு சார்பில் விருது மானியம் அறிவிப்புகள் வந்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே உலகநாயகனுக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் முற்றியது. இது அரசுக்கு கடும் அதிருப்தியைத் தந்ததாம். அவரை அமைதிபடுத்தும்படி அரசிடமிருந்து சங்க நடிகருக்கு நெருக்கடி வருகிறதாம்    ---

♈ 🇮🇳  மன நலம் குன்றியவர்களை காயப்படுத்தும் விதமாக நிகழ்ச்சியை அமைத்தது, ஓவியா வெளியேற காரணமாக நிகழ்வுகள் போன்றவை சமூக வலைதளங்களில் தொடர் விவாதங்களாகின. அந்த விவாதங்களின் ஒரு கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தணிக்கை செய்யப்படவேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.தொலைக்காட்சிகள் நடத்துவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கின்றது. செய்திகள் அல்லாத பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விதிகள் உள்ளன. ஆனால், தணிக்கை என்பது இதுவரை கிடையாது என்கிறார்கள் நிபுணர்கள்    -

♈ 🇮🇳

'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி-ஒவ்வொரு நிறத்திற்கும் இருக்கும் குணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு உணவில் எடுத்துக்கொள்வது-மஞ்சள் நிறம் –ஜீரண சக்தியை அதிகரிக்கும் – எலுமிச்சை,வாழைப்பழம் ,வெந்தையம் – நீலம் நிறம்  – அமைதி,துக்கம் வரும்- நாவல்பழம் ,கத்திரி – சிவப்பு நிறம்  – வலியை குறைக்கும் – தக்காளி, மாதுளை –ஆரஞ்சு நிறம்  – சோடியம்,பொட்டாசியம் போன்ற சத்துக்களை சமன் படுத்தும்- கேரட்,பப்பாளி – பச்சை நிறம் -மன இறுக்கத்தை குறைக்கும் – கீரை வகைகள்   ---

♈ 🇮🇳  தனது மார்பகங்களை தானே பாராட்டிக் கொள்ளும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக, `லூஸ் வுமன்` என்ற வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஸ்டேசி சாலமோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

♈ 🇮🇳  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரும் வழக்கில் நோட்டீஸ்-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து- மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
♈ 🇮🇳  சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் புகார் மனு-உதவியாளர் சேவற்கொடியோனுக்கும் கொலை மிரட்டல் வருவதாக புகார்
♈ 🇮🇳  நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக சிடி வடிவில் கையேடு-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
♈ 🇮🇳  அதிமுக அரசுக்கு எதிராக போராடினால் அது ஜெயலலிதாவிற்கு எதிரானது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்   ---
♈ 🇮🇳  அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் நீடித்த சிக்ககல்கள் முடிந்து விட்டதாகவும், இன்றும் சில தினங்களில் அதாவது ஆவணி மாதத்தில் அணிகள் இணையும் என்று அடித்து கூறுகின்றனர் தொண்டர்கள்   ---

♈ 🇮🇳  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1,900 நபர்களை விற்பனை மற்றும் விநியோகம் பிரிவில் பணிக்கு எடுக்க இருக்கின்றது. இது குறித்த முழு விவரங்களையும் ஜியோ.காம் என்ற இணையத் தளத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

♈ 🇮🇳  தமிழ்நாடு பட்டு வளர்ச்சியில்  வேலைவாய்ப்பு .தமிழ்நாடு வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு தகுதியிடையோர் விண்ணப்பிக்கலாம் . தமிழ்நாடு பட்டுவளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு நேரடி நியமனம் மூலம் பணிவாய்ப்பு நியமிக்கப்படுகிறது . தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இயக்குநர் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சென்னை அலுவலகத்தில் பரிந்துரை செய்யப்படும் நபர்களும் பட்டு வளர்ச்சி துறையின்www.tnsericulture.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

♈ 🇮🇳  மும்பை: சோராபுதீன் சேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுகிறது   .
♈ 🇮🇳  கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய 9 பேருக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை
♈ 🇮🇳  4 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கவுள்ளதால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் கிடுகிடு என உயர்ந்துள்ளது

♈ 🇮🇳  போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கோசி. மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்   --

♈ 🇮🇳  அறிவியல் பாடத்தை செயல்முறையில் மாணவர்களுக்கு புரிய வைக்கிறார் ராமநாதபுரத்து இளைஞர் பிரேமானந்த் சேதுராமன். இவரது செயல்பாடுகள் வியக்க வைப்பதோடு மாணவர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது
♈ 🇮🇳  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று அவரது ரசிகர்களும் பொதுமக்களும்,அரசியல்வாதிகளும் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என தஞ்சை ரஜினி ரசிகர்கள் வராஹி அம்மனுக்கு யாகம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்

♈ 🇮🇳  'தூய்மை இந்தியா' குறித்து பாஜகவே தூய்மையாக நடந்து கொள்வதில்லை. என்றும் வேண்டுமென்றே ஒருசில குப்பைகளை கொட்டி அதை சுத்தப்படுத்துவது போல் தலைவர்கள் போஸ் கொடுப்பதாகவும் சமிபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில்  பாஜகவின் இளைஞரணி கூட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்டம் முடிந்தவுடன் மைதானத்தை பார்த்தால் ஒரே குப்பையாக இருந்தது.தூய்மை இந்தியா குறித்து வாய்கிழிய பேசும் பாஜக கூட்டத்திலேயே குப்பை டன் கணக்கில் கொட்டி கிடப்பதை நெட்டிசன்கள் போட்டோ எடுத்து அதை சமூக இணையதளங்களில் பதிவு செய்துள்ளனர். தூய்மை இந்தியாவை முதலில் பாஜக தனது தொண்டர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் விருப்பமாக உள்ளது   ---

 ♈ 🇮🇳  மனைவி வெளியே சென்று வேலை பார்ப்பது பிடிக்காமல் மனைவின் தலையை கணவன் துண்டித்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮🇳  சிவகங்கையில் மஞ்சு விரட்டு: ஒருவர் பலி

♈ 🇮🇳  பாதுகாப்பை ராகுல் புறக்கணித்தது ஏன்? ராஜ்நாத் சிங் கேள்வி
♈ 🇮🇳 குஜராத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்


முக்கிய செய்திகள்@8/8/17

புதிதாக அச்சடிக்கப்பட்ட 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் வெளியாகியுள்ளது குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது

மத்திய அரசு புழக்கத்தில் இரண்டு விதமான ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடி என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கண்ணுக்குப் புலப்படாத வேலி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்

எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் மீது குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான் இந்திய துணைத்தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் முதலுதவி, என்சிசி, தோட்டக்கலை, ஸ்கவுட் உள்ளிட்வை கட்டாயப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உடல்தகுதி விளையாட்டு மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மகனிடம் விசாரணை

சென்னையில் குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது

நரபலி புகார்: வேலூரில் மடம் சூறையாடல்

குடும்பதகராறில் சென்னை புளியந்தோப்பு போலீஸ் எஸ்எஸ்ஐ தற்கொலை

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கடலூர் அருகே பரங்கிப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விமல்ராஜ் மீது பாலியல் புகார்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியரை கைது செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.இதுகுறித்து தகவலறிந்த போலஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

புனே விமான நிலையத்திலிருந்து உப்புமாவுக்குள் மறைத்து வைத்து 1.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை துபாய்க்கு கடத்த முயற்சித்த பெண் உள்ளிட்ட இருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது: 176 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பாதுகாப்பு இல்லாமல் வெளிநாடு சென்று எதை மறைக்க முயற்சி செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அவருக்கான பாதுகாப்பு வளையத்தை சுமார் 100 முறை மீறியதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியை காணவில்லை என அமேதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் இந்த வாரம் முடிவு தெரியும் என்றும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 15-ந் தேதிக்கு பின் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு குறைந்தது இரண்டாண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூன்றாவது முறையாக, டில்லிக்குச் சென்றிருக்கிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா அருகே ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி--மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது இந்தக் கோர விபத்து. கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் நடந்த இவ்விபத்தில் 8 பேர் பரிதாப பலி. காயமடைந்த 25 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் பர்பான் ஆற்றில் 17 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீரில் மூழ்கிய 17 பேரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியபிரேதசம் மாநிலம் ஜபால்பூர்-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானியங்களைய் பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கூறியுள்ளது. செப்டம்பர் 30-க்குள் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மாடுகளுக்கும் ஆதார் எண் அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. சோதனை முயற்சியாக கோவையில் 'கௌஆதார்' பணிகள் தொடக்கம். கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள், கிளை மருந்தகங்கள் உள்ளிட்ட 105 மையங்கள் மூலம் இப்பணிகள் நடந்து வருகின்றன

மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 10ம் தேதி டெல்லி பயணம் செல்ல உள்ளார். துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க 10ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். துணை குடியரசுத் தலைவராக வரும் 11ம் தேதி வெங்கய்ய நாயுடு பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவிலில் வைத்துள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 7 ஆறுகள் மாசடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.பவானி, காவிரி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டாறு ஆகியவை மாசடைந்துள்ளதாம்.ஆறுகள் மாசடைவதை தடுக்க மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விஜயபாஸ்கர் ஒரு பார்ட்-டைம் மினிஸ்டர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு--இது தொடர்பாக தன் அறிக்கையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: அமைச்சர் விஜயபாஸ்கர் தன் சுகாதாரத்துறையை முழுமையாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு பார்ட்-டைம் மினிஸ்டர் போலவே அவர் செயல்படுகிறார். இனம் புரியாத காய்ச்சலுக்கு மக்கள் பலியாகி வருவதை அவரால் தடுக்க முடியவில்லை

சசிகலா கொடுத்த பதவியில் உள்ள தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தங்க தமிழ் செல்வன் வலியுறுத்தல்அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வார்களா என கேள்விதைரியமிருந்தால் ராஜினாமா செய்யட்டும் என தங்க தமிழ் செல்வன் சவால்

விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கேரளா மருத்துவமனைகள் மீது வழக்கு--7 மணிநேரம் ஆம்புலன்சில் அலைந்தும் சிகிச்சை பலன் இன்றி முருகன் மரணம்மருத்துவர்களின் அலட்சியத்தால் முருகனின் உயிர் அநியாயமாக பறிபோனது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 495 பேர் டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதை அக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.ஜுலையில் மட்டும் டெங்கு பாதிக்கப்பட்ட 497பேரில் 495 பேர் குணமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும்,3 குழந்தைகள் உட்பட 42 பேருக்கு தற்போது மருத்துவர்கள் டெங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

சென்னை மடிப்பாக்கத்தில் காதலர்கள் தூக்கிட்டு தற்கொலைபெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே கயிறில் தூக்கிட்டு தற்கொலைகாதலர்கள் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கந்து வட்டி புகாரில் கைதாகி சிறையில் உள்ள ஃபைனான்சியர் போத்ராவிற்கு ஆகஸ்ட் 22 வரை காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் கைதிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதுஇதில் 16 கைதிகள் இருக்க வேண்டிய சத்தியமங்கலம் சிறையில் 200 பேர் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலில் தொல்லியல்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.மேலும், கோயிலில் சிலைகளை பாதுகாப்பாக வைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வைக் கண்டித்து ஆக.10ல் வைகோ ஆர்ப்பாட்டம்--இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படுவதை எங்கள் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. இதையொட்டி கட்சியின் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு என் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும்

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளது.சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 16ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் மூன்று லட்சம் ரூபாய் கொள்ளைகரூர் மலைச்சூர் டாஸ்மாக் கடையில் கொள்ளையர்கள் அட்டூழியம்போலீசார் டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை

நீட் தேர்வுக்கும், பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பெங்களூர்--6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவேண்டும், இல்லையெனில் வேலையை இழப்பீர்கள் என வங்கி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் நடிகர் திலீப்பின் காவலை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை கொச்சி அங்கமாலி நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சேவை வரிச் செலுத்துவதில் மோசடி செய்துள்ளதாகப் பலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் மீது 156 வழக்குவளை பதிவு செய்துள்ளது சேவை வரித் துறை, மேலும் இவர்களது கணக்குகள் எல்லாம் தலைமை கணக்காய்வளரின் கட்டுப்பாட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் அதிக வருமான வரி செலுத்தி வருகின்றார்கள். ஆனால் அதிலும் பலர் வரி ஏய்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டு அதனைக் கண்டறிந்த பிறகு அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது வழக்கம்

பிரதமர் மோடி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் படங்களை வெளியிட்ட பி.டி.ஐ., செய்தி ஏஜென்சி மீது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோபத்தை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள், 44 பேர், 'கடத்தி' வரப்பட்டு பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டதற்கு, 50 லட்சம் ரூபாய் தான் செலவாகி உள்ளது என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் போடார் பள்ளியில் பயிலும் நான்கு வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி அலுவலக உதவியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் மராத்தா கிரந்தி மோர்ச்சா பேரணிக்கு ஆதரவாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அமைச்சர் வினோத் தவாட் தெரிவித்துள்ளார். எனினும் மும்பை புறநகர் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றது

அணு அயுத சோதனையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - வடகொரியாவடகொரியா மீதான பொருளாதார தடை அதன் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கருத்துவடகொரியா மீது ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது

சிகரெட் கழிவு துண்டை பயண்படுத்தி ரோடு போட முடியும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்அவ்வாறு சிகரெட் கழிவு துண்டு பயன்படுத்துவதன் மூலம் ரோடுகளில் வெப்பம் வெளியேறாமல் தடுக்கலாம் என்று கூறியுள்ளனர்மேலும் சிகரெட் கழிவு துண்டுகள் ரோடு போடுவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன கலவையை கசிவதில் இருந்து தடுத்து காக்கிறது.

கென்ய நாட்டின் நிறுவனம் ஒன்று மனிதக்கழிவுகளைக் கொண்டு எரிபொருள் தயாரித்து வீடுகளில் சமையல் செய்யவும், குளிரிலிருந்த பாதுகாக்கவும் பயன்படுத்த ஊக்கமளித்து வருகிறது.

தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்--22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,717-22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,736-24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.28,530வெள்ளி: ஒரு கிராம் - ரூ.40.00வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.40,000

வார வர்த்தகத்தின் 2வது நாளான இன்று பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 259.48 புள்ளிகள் குறைந்து 32,014.20. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 78.85 புள்ளிகள் சரிந்து 9,978.60.

ஐசிசி அனைத்து ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஜடேஜா முதல் இடத்தை பிடித்தார்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் முதுகு வலியினால் விளையாடமாட்டார்.


🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 08/08/17 !

நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடரும் : அமைச்சர் தங்கமணி.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.  தலைமை நீதிபதி ஜேஎஸ்.கெஹர் ஓய்வுபெற்ற நிலையில் தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார் வரும் நவ-27ல் பதவியேற்பு.

நாட்டில் உள்ள பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

நமது மீனவர்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டுவது கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்.

நெஞ்சில், முதுகில் குத்துபவர்களை தாண்டி சவால்களை சந்தித்து ஆக.15ல் முதல்வர் கொடி ஏற்ற உள்ளார்.அதிமுக ஆட்சி என்பது இமயமலை போன்றது மண்சட்டி அல்ல என்பதை துரைமுருகன் புரிந்துகொள்ள வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்.

சிறப்பு பாதுகாப்புப்படையின் பாதுகாப்பை ராகுல்காந்தி புறக்கணிப்பது ஏன் ?: ராஜ்நாத் மக்களவையில் கேள்வி.

ராகுல்காந்தி எதை மறைப்பதற்காக சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை ஏற்க மறுக்கிறார் : ராஜ்நாத் சிங்.

விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது : மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் தண்ணீரே இல்லாதபோது தாமரை எப்படி மலரும் : நாஞ்சில்சம்பத்.

மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த அளவில் புதிய மடிக்கணினி வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்.

சுகாதாரத்துறைக்கு புதிய அமைச்சர் ஒருவரை முதல்வர் உடனடியாக நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்.

2 விதமான ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.

தம் மீதான குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்துவிட்டு விவாதத்திற்கு வரட்டும் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் செங்கோட்டையன்  பதிலடி.

தமிழகத்தில் பாவிகளுக்கு இடம் இருக்கும்போது, காவிகளுக்கும் இடம் இருக்கும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

ஆந்திரா : எஸ்ஆர். பாளையம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 8 தமிழர்கள் கைது.

ஜெயக்குமார், செங்கோட்டையன், சண்முகம் உள்ளிட்டோர் சசிகலா தந்த கட்சி பதவிகளை ராஜினாமா செய்யட்டும் : தங்கதமிழ்ச்செல்வன்.

தமிழக சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் கைதிகள் உள்ளனர் - மத்திய அரசு.

நாளை இரவு 7 மணிக்கு நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை.

பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை இது வரை எதுவும் புழக்கத்தில் இல்லை: மத்திய அரசு தகவல்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் வரும் 20 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை.

ரயில்வே பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது.

இலங்கை கடற்படை வீரரை ஜெகதாப்பட்டினம் மீனவர் படகில் கடத்தியதாக குற்றச்சாட்டு.

ஆண்டிபட்டி அருகே மேகமலை சின்ன சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன் சென்னையில் கைது.

எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட திருப்போரூர் எம்எல்ஏ கோதண்டபாணி தினகரனுடன் சந்திப்பு.

கொடைக்கானலில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

முதல்வர் பழனிசாமியுடன் வணிகர்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்திப்பு; குறிப்பிட்ட சிலபொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்குஅளிக்ககோரிக்கை.

ராகுல் காந்தி மீதான தாக்குதல் எதிரொலி : கடும் அமளி காரணமாக மக்களவை நாள் முழுதும் ஒத்திவைப்பு.

டிடிவி.தினகரனை தமிழக முதல்வராக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு : நாஞ்சில் சம்பத்.

கன்னியாகுமரியில் உள்ள ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்ற கோரும் வழக்கில் ஆட்சியருக்கு நோட்டீஸ்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி காருக்கு அடியில் பைப்வெடிகுண்டு வைத்தவருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

ஓபிஎஸ் வரும் 18ஆம் தேதி நடத்த உள்ள போராட்டம் ஜெயலலிதாவின் அரசுக்கு எதிரானது : அமைச்சர்  ஜெயக்குமார்.

கேரள நடிகை கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் ஆக.22 வரை நீட்டிப்பு.

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பயிற்சிபெற 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி தரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்று வருகிறது: மத்திய வேளாண்துறை அமைச்சகம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி. சந்திப்பு.

ஆம்னி பேருந்துகள் மீது புகார் தெரிவிக்க 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டது . அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா-பாக். எல்லையில் கண்ணுக்கு புலப்படாத வேலி அமைத்து கண்காணிக்க முடிவு : மக்களவையில் கிரண் ரிஜிஜு.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் விதிமீறியதாக தொடரப்பட்ட வழக்கு : புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ்.

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 விதமான சீருடை வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்.

கத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்.

தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத யாரும் தமிழகத்தில் காலுன்ற முடியாது : கனிமொழி

நாளை  ஆக‌ஸ்ட் 9 ம் தேதி உல‌க‌ ஆதிவாசிக‌ள் தின‌த்தை க‌ருப்பு தின‌மாக‌ கொடைக்கான‌ல் ஆதிவாசிக‌ள் அமைப்பு அறிவிப்பு.

கேரளாவை சேர்ந்த ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு தலைவர் தற்காலிக பணியிடை நீக்கம்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல், முதலுதவி, என்சிசி, தோட்டக்கலை, ஸ்கவுட் கட்டாயம் : மத்திய அரசு.

திருச்சியில் 6 குழந்தைகள் உட்பட 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது : திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் அனிதா.

11ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி பரிந்துரை ஏதும்வரவில்லை : மக்களவையில் மத்திய அரசு தகவல்.

கட்சராயன் ஏரியை பார்வையிட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலுக்கு அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

6 மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்காவிட்டால் வேலையை இழக்க நேரிடும்
வங்கி ஊழியர்களுக்கு கர்நாடக மேம்பாட்டுத்துறை ஆணை.

ஆந்திராவில் 400 மூட்டை தமிழக ரேஷன் அரிசி பறிமுதல்.

ஈரோட்டில் கந்துவட்டிக் கொடுமையால் மாற்றுத்திறனாளி தற்கொலை.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீனில் விடுவிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக