திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மதி செய்திகள் @14/8/17


மதி செய்திகள் காலை செய்திகள்@14/8/17

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் தமிழக வீரர் இளையராஜா உள்பட 2 பேர் பலியாகினர்.

இமாசல பிரதேசத்தில் பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பஸ்கள் சிக்கிக் கொண்ட துயர சம்பவத்தில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி ஆனார்கள்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்த வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

சுதந்திர தின விழா கொண்டாட்டம்; டில்லியில் பலத்த பாதுகாப்பு

இந்திய ராணுவத்தை நவீனமாக்க தயார்: அமெரிக்கா அறிவிப்பு

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு 200 இந்திய சுற்றுலா பயணிகள் தவிப்பு

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான மத்திய அரசு உத்தரவை பின்பற்ற மேற்கு வங்காள அரசு மறுத்துள்ளது.

மத்திய அரசு உத்தரவை பின்பற்ற மேற்கு வங்காள அரசு மறுப்பு மத்திய மந்திரி கண்டனம்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளால், காஷ்மீரை விட்டு பயங்கரவாதிகள் ஓட துவங்கியுள்ளனர் என பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்

அவசர சட்ட முன்வரைவு: இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு

வாகா எல்லையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுபாகிஸ்தான் நாட்டினர் ஏற்றுவதற்கு ஒரு நாள் முன்னர் நமது கொடி பறக்கிறது360 அடி உயரத்தில் நமது கொடி பறக்கிறது

உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்: கவர்னர் வாழ்த்து

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 4 பேர் கைது

முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம் என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.

ஏசி ஓட்டல்களில் இருந்து, வீடுகளுக்கு வாங்கி செல்லும், 'பார்சல்' உணவுக்கும், 18 சதவீத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலூரில் இன்று தினகரனின் பொதுக் கூட்டம்கட்சியில் தினகரனுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் வகையில் நடத்தப்படுகிறது

டெல்லியில் நரேந்திர மோடியை இன்று ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார்

புதிய அத்திக்கடவு நீர் ஆதார திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும், அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் தொண்டு நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் ரூ.700 கோடி மோடி வழக்கில் முன்னாள் வங்கியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

தூத்துக்குடியில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் ராதாரவி பேசியதாவது: அ.தி.மு.க.வைக் கட்டுக்குள் கொண்டுவந்து, தமிழகத்துல ஆட்சி அமைத்திடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. தமிழகத்தில் அந்தக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர், முதியவர் உள்ளிட்ட மூவர் அடுத்தடுத்து பலியான சம்பவங்கள் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தலைமை மருத்துவர் ஷர்மிளா மாற்றம் செய்யப்பட்டார்.

பொதுமக்கள் எந்நேரம் வேண்டுமானாலும் கோரிக்கை மனுக்கள் தரலாம். அவர்களின் மனுக்கள் உடனே பரிசீலிக்கப்படும் என்று -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

கொங்கு மண் தி.மு.க.வை ஏமாற்றியது: எ.வ.வேலு

சென்னையில் இருந்து 450 பேருடன் ஹஜ் புனித பயணத்திற்காக முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த பயணிகளை அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார்.

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம்

இன்று கவிஞர் நா. முத்துக்குமாரின் முதலாவது ஆண்டு நினைவு தினம்

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

ஓ.என்.ஜி.சி. மேலும் 110 எண்ணெய் கிணறுகள் அமைத்தால் காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாக மாறும்: ராமதாஸ்

110 இடங்களில் எண்ணெய் கிணறுகள்; ஓஎன்ஜிசிக்கு அரசின் பதில் என்ன? ராமதாஸ் கேள்வி

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக திருமா. வலியுறுத்தல்

கனமழை காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தம்

உத்தரகாண்ட்டின் மல்பா பகுதியில் மூன்று சடலங்கள் கண்டெடுப்பு

உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் பலியான மருத்துவமனையில் யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு

உ.பி.யில் விவசாயி சுட்டுக்கொலை

அமித்ஷா, மோடியால் கர்நாடகத்தில் ஆட்சிமாற்றம் நிகழாது : சித்தராமைய்யா

பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கும் என்று மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 16-ம்தேதி விமான சேவை தொடக்கம்: மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

இரு நாட்டு ராணுவ உறவை மேலும் மேம்படுத்த இந்த நடவடிக்கை. தரைப்படை, விமானப்படை, கடற்படை வீரர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் பெயர் 'இந்திரா 2017'. முதல் முறையாக முப்படைகளும் இணைந்து ரஷ்யாவுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கிய தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது

பாகிஸ்தான்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் தொகுதியில் களமிறங்கும் ஹபீஸ் சையது கட்சி

பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்

சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடக்கிறது.

துருக்கி உணவகத்தில் தாக்குதல்; 17 பேர் பலி

அமெரிக்க நகரத்தில் வெள்ளை இனத்தவர் பேரணி, எதிர்ப்பு போராட்டத்தால் பதற்றம்

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி

இன்றைய(ஆக.,14) விலை: பெட்ரோல் ரூ.70.40; டீசல் ரூ.60.27

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி: ரசிகர்களிடையே மோதல்.

மாலை செய்திகள்@14/8/17

அசாமில் கனமழையினால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மோசமான நிலையே நீடிக்கிறது, மீட்பு பணிக்கு ராணுவம் அழைக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது: பாதுகாப்பு படை அதிரடி

காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரின் 6 பினாமிகள் கைது

அணிகள் இணைப்பு முழு வடிவம் பெறுகிறது: ஜெயக்குமார்

தினகரன் நிதானம் இல்லாமல் பேசுகிறார். ஆட்சியில் பலனை அனுபவித்தவர்கள் இதுபோல் பேச கூடாது என, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கனமழை : சென்னையிலிருந்து செல்லும் வடமாநில ரயில்கள் ரத்து

போட்டி தேர்வுகளை எதிர்க்கொள்ள சிறப்பு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

அசாம்: மழை, வெள்ளத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலி - உரிய உதவிகளை செய்வதாக பிரதமர் உறுதி

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் தொடரும்: சுப்ரீம் கோர்ட்டு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: ஹவாலா ஏஜெண்ட் அஸ்லாம் வானியின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

விபத்தில் சிக்கிய தனது கணவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கேரளாவில், அவரது மனைவி குழந்தைகளுடன் வேலை தேடி அலைந்து வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு, 3,800 கோடி ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

டெங்கு சிகிச்சை செலவை அரசு ஏற்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நீட் தேர்வை ஆதரித்து 100க்கும் மேற்பட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டம்

டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மேலூர் தினகரன் கூட்டத்திற்கு நவநீதிகிருஷ்ணன் எம்.பி., வருகை

ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து சரத் யாதவ் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கம்

வெளிநாட்டு நிறுவனங்களில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்ததை அம்பலப்படுத்திய, ' பனாமா பேப்பர்ஸ்' விவகாரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிக்கி கொண்டுள்ளார். இது குறித்து விசாரிக்க உயர் அதிகாரி ஒருவர் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளுக்கு சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த திட்டம் அமெரிக்க உளவுத்துறை

மாலை விலை நிலவரம்:22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.22,152க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.2,769க்கு விற்பனை செய்யப்படுகிறது. வௌளி கிராம் ரூ42..20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 235.44 புள்ளிகள் அதிகரித்து 31,449.03. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 83.35 புள்ளிகள் உயர்ந்து 9,794.15.

லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் எந்த பதக்கங்களும் வாங்காமல் ஏமாற்றம் அளித்தனர்.

 மதி செய்திச் சுருக்கம் (14/08/2017)



1 கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

2 ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற மூன்று வாரங்களில், ஆறு முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

3 எச்.டீ.எப்.சீ வங்கிப் பங்கின் விலை 0.47 சதவீதம் சரிந்து ரூ. 1,751.35-ஆக இருந்தது.

4 கோதாவரி: ஆந்திரா மாநிலத்தில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமாரின் செல்போன் வெடித்து எரிந்து சேதமடைந்தது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சூரியகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

5 மத்திய அரசு மேற்கொண்டுள்ள பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளால், காஷ்மீரை விட்டு பயங்கரவாதிகள் ஓட துவங்கியுள்ளனர் என பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

6 செயின் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.801 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது.

7 இன்போசிஸ் பங்கின் விலை 0.53 சதவீதம் உயர்ந்து ரூ.987.75 - க்கு விலைபோனது.

8 ஐ.டி.சி நிறுவன பங்கு விலை 0.57 சதவீதம் இறங்கி ரூ.271.55-க்கு கைமாறியது.

9 நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கூடுதல் ஆவணங்களை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார்.

10 மாருதி சுசுகி நிறுவன பங்கு விலை 1.68 சதவீதம் குறைந்து ரூ.7,452,85-ல் நிலை பெற்றது.

11 ஓ. என்.ஜி.சி நிறுவன பங்கு விலை 2.14 சதவீதம் சரிவடைந்து ரூ. 160.20-ல் நிலைக்கொண்டது.

12 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

13 டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை வெளியேற்றி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6-வது வெற்றியை பெற்றது.

14 செங்கம் அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் மின்சாரம் தாக்கி இறந்தார். இந்த சம்பவம், உறவினர்கள் மற்றும் தி.மு.க.வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

15 காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

16 வடகொரியா உடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குநர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

17 பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது தொடங்கியுள்ள கட்சி போட்டியிடுகிறது.

18 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டை பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

19 ஈரானில் தூக்கு தண்டனையை குறைக்க சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பின் அது நிறைவேற்றப்பட்டது.

20 மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பெங்களூருவில் தெரிவித்துள்ளார்.

21 இந்திய ஆல்–ரவுண்டர் 23 வயதான ஹர்திக் பாண்ட்யா, டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமாராவின் பந்து வீச்சில் 4, 4, 6, 6, 6, 0 என்று ஒரே ஓவரில் 26 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.


22 நாடு முழுவதும் கடந்த 5-ந்தேதி வரை 9.3 கோடிக்கும் அதிகமானோர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

23 எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

24 உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

25 இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த, அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

26 அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

27 வெளிநாடுகளில் வாழ்கிற லட்சக்கணக்கான இந்தியர்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே, இங்கு வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர்.

28 டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட சாகுபடியை கண்காணிக்க, வேளாண் துறையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

29 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே வாகா எல்லையில், 360 அடி உயர (110 மீட்டர்)கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. இந்தியா-பாக்.,எல்லைப்பகுதியான வாகாவில் ரூ.3.50 கோடி செலவில் 55 டன் எடையும், 24 மீட்டர் அகலம், 110 மீட்டர் உயரமும் கொண்ட நாட்டிலேயே மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது

30 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

31 சுதந்திர தினத்தை முன்னிட்டு 454 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. சென்னை கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

32 சுதந்திர தினவிழா செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

33 பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்ற முடியாது என்று மேற்கு வங்காள அரசு மறுத்து விட்டது. அதற்கு மத்திய மந்திரி கண்டனம் தெரிவித்தார்.

34 வார இறுதி நாள்கள், கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா என தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை என்பதால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


35 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.40 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.27 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

36 இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி வென்றதுடன், நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்கள் செல்சி தோல்வியைத் தளுவியுள்ளது.

37 நாடு முழுவதும் கடந்த 5-ந்தேதி வரை 9.3 கோடிக்கும் அதிகமானோர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

38 ஜேர்மனி கால்பந்தாட்டக் கழகமான பொரிசியா டொட்டமுண்ட், தமது முன்கள வீரரான உஸ்மன் டெம்பிலியை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.

39 உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் பலியான மருத்துவமனைக்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய சுகதார மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

40 ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற மூன்று வாரங்களில், ஆறு முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

41 மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

42 அகில இந்திய அளவில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பெற்றதற்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

43 இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்தது. ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 96 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் குவித்தார்.

44 இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.மூத்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

45 உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட், தனது கடைசி உலக சாம்பியன்ஷிப்பின் கடைசிப் போட்டியான 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் காயம் காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

46 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை தொடர வாய்ப்புள்ளது.

47 நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்காக அவசரச் சட்டம் இயற்றப்படுகிறது. இதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசிடம் அளிப்பதற்காக சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.

48 சென்னையில் இருந்து 450 பேருடன் ஹஜ் புனித பயணத்திற்காக முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த பயணிகளை அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார்.

மதி செய்திகள்

இரவு செய்திகள்@14/8/17

நாளை நாடு முழுவதும் 71 வது சுதந்திர தின கொண்டாட்டம் நடக்கயிருக்கிறதுஇதையோட்டி, லாகூரில் உள்ள வாகா-அட்டரி எல்லையில் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கியதுஅங்கே சிறப்பு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் இன்று இரவு முழுவதும் நடைபெறும்.இதைப் பார்ப்பதற்காக எல்லையில் ஆயிரக்கணக்கான பஞ்சாப் மக்கள் குவிந்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டிடமிருந்து ஆயுதம் பொருத்தி செலுத்தக்கூடிய ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா முயற்சித்து வருகிறது.பிரதமர் மோடியின் பயணம் மூலமாக இதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போர் விமானத்தில் ஏவுகணைகளை பொருத்தி தரை இலக்கை அழிக்க முடியும்.10 ஹெரான் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலமாக எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.

நிலநடுக்க ஆய்வு: அபாயப் பட்டியலில் இந்தியாவின் முக்கியத் தலைநகரங்கள்

கோரக்பூர் துயர சம்பவம்: மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு 2% கூடுதல் ‘கமிஷன்’ கிடைக்காதது காரணமா? கூடுதலாக 2 சதவிகிதம் கமிஷன் தொகையை அந்நிறுவனம் அளிக்க முன்வராமையால் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

112 ராணுவ வீரர்களுக்கு வீரதீர விருது அறிவிப்பு

தமிழக மாணவர்களுக்கு ஓராண்டுக்கு நீட் தேர்வில் விலக்கு கோரிய தமிழகத்தின் அவசர சட்ட வரைவு இன்று உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தனர்.இந்த தேர்வில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை உள்துறை அமைச்சகம் ஏற்றது.

கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் பங்கேற்காமல் கார்த்தி சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேற முடியாது: உச்ச நீதிமன்றம்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறிய ஸ்டாலினை தினகரன் எதிர்த்திருக்க வேண்டும் - ஜெயக்குமார்

ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தினைச் செலுத்தும் முறையினை அன்மையில் ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்தது.இந்த முறையினை இணையதளம், செயலி என ஐஆர்சிடிசி சேவையில் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பெறலாம்.

திருத்தணி அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை தரப்பட்டது.இந்த மாத்திரை தின்ற குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுஇதனையடுத்து மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.பள்ளியில் கொடுத்த குடற்புழு நீக்க மாத்திரை உண்டதால் குழந்தை பலியானது என பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

கோவையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது:நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து சொல்வதை நிறுத்தி விட்டு, களத்தில் இறங்கி போராட வேண்டும்.நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிக்க வாய்ப்பில்லை

ஊழல், சீர்கேடுகளிலிருந்து தமிழகத்திற்கு விடுதலை கிடைக்க உழைக்க வேண்டும்: அன்புமணி சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

டில்லியில் இருந்து கேரளா சென்றார் ஓ.பன்னீர்செல்வம்
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாளை ஓ.பி.எஸ்., தரிசனம்

புதுச்சேரியில் நாராயணசாமி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தை பா.ஜ.க. புறக்கணித்தது

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறதுஇந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுதற்போது கோயில் கட்டுவதற்கான கற்களில் சிற்பங்களை வடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது

சீனாவில் கட்டமைக்கப்பட்டு வரும் உலகின் சவாலான ரயில்வே வழித்தடம்.அதள பாதாளங்கள் நிறைந்த சிச்சுவான் முதல் திபெத் வரை கட்டமைக்கப்படும் சவாலான ரயில் வழித்தடம்.சுமார் 1700 கி.மீ தொலைவில் ரூ. 3600 கோடி செலவில் சீனா கட்டமைக்கும் கடினமான ரயில்வே வழித்தடம்.

ஜெ., மரணத்திற்கு நீதி விசாரணை: தினகரன்

விழாவில் கலந்துகொள்ளவிருந்த எம்.எல்.ஏக்களை கடத்தி சென்றுள்ளனர் டிடிவி தினகரன்

தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள், தர்மயுத்தம் நடத்துகிறோம் எனக்கூறுகிறார்கள் என ஓபிஎஸ்க்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.எங்களுக்கு விரோதியா அல்லது எம்.ஜி.ஆருக்கு விரோதியா என்பதை அமைச்சர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதிமுகவை கொல்லைப்புறமாக அடையலாம் என நினைத்தால் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் தினகரன் கொந்தளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஒரு விபத்து: டிடிவி தினகரன் கருத்து

சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதல்வர் ஆகியிருப்பார்: மேலூரில் தினகரன் பேச்சு

சசிகலா தலைமையில் இயக்கம் செயல்படுகிறது டிடிவி தினகரன் பேச்சு

தினகரன் கூட்டத்திற்கு 14 எம்.எல்.ஏ.,க்கள் வந்துள்ளனர்-
தினகரன் கூட்டத்தில் நான்கு எம்.பி.,க்கள் பங்கேற்பு

சசிகலா குடும்பத்தினரால் அதிகாரம் பெற்றவர்கள் அவருக்கு எதிராக பேசுகின்றனர்: மேலூர் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்

தினகரன் விஸ்வரூபத்தை தமிழகம் பார்க்க போகிறது: நாஞ்சில் சம்பத்

தினகரன் தவிர்க்க முடியாத தலைவர் மேலூர் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக