பான் கார்டு’ இல்லாமல் இனி,ஒரு கிராம் தங்கம்கூட வாங்க முடியாது பிரதமர் மோடியின் அடுத்த ‘கிடுக்கிப்பிடி’ திட்டம்!
*பான் கார்டு இல்லாமல் ஒரு கிராம் தங்க நகைகள் முதல் கிலோ கணக்கில் தங்க நகைகள் கூட வாங்க முடியாது என்ற கடுமையான நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.*
நிதி ஒழுங்குமுறை குழு அளித்த பரிந்துரையில், தங்க நகைகள் தொடர்பான அனைத்து பரிமாற்றத்துக்கும் பான் கார்டு எண் அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க நகைகள் வாங்கினால்தான் பான் எண் வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அதை மாற்றி, தங்க நகைகள் வாங்கினாலே பான்கார்டு அளிக்க வேண்டும் என்று கடுமையான விதிகள் அமலாக உள்ளன.
மத்திய அரசின் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணை குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு நாட்டில் உள்ள வீடுகளின் நிதிச்சூழல் குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
அந்த குழுவில் லண்டன், இம்பீரியல் கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் தருண்ராமதுரை, ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு வாரியமான ‘செபி’, இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றம் மேம்பாட்டு ஆணையமான ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.’, ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையமன ‘பி.எப்.ஆர்.டி.ஏ.’ ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகள் இடம் பெற்று இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக