பாஜகவிற்கு பத்து கேள்விகள்.... பாஜககார்களிடம் இருந்து பதில் கிடைக்குமா ?......
1) ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள கருப்புப்பணத்தை மீட்டு கொண்டு வருவேன் என்று மோடி கூறினார். இப்போது 1100 நாட்கள் முடிந்து விட்டது. சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்பட்ட கருப்புபணம் எவ்வளவு? பாதி மீட்கப்பட்டதா? 25% அல்லது குறைந்தபட்சம் 1%? பதில் சொல்லுங்கள்.....
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
ஒவ்வொரு இந்திய குடி மகனின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்ச ருபாய் போடப்படும் என சொன்ன மோடியின் வாக்குறுதிகள் என்னவாயிற்று?
2) கடந்த UPA ஆட்சியின் போது சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 105டாலர். தற்போது 44டாலர். 58% விலை குறைந்துள்ளது. இதன் பலன்கள் மக்களுக்கு கிடைத்துள்ளதா? பெட்ரோல் டீசல் விலை 50% குறைக்கப்பட்டுள்ளதா 25 சதவீதமாவது குறைக்கப்பட்டுள்ளதா? வெறும் 10 ரூபாயாவது குறைக்கப்பட்டுள்ளதா? விலை ஏற்றம் மட்டும்தான் மிச்சம். யாருக்காக அரசு?2014ல் மோடி சொன்ன வார்த்தைகள் எல்லாம் பசப்பு வார்த்தைகள் என மோடி பக்தர்களே ஒப்புக் கொள்வீர்களா?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
கேஸ் விநியோகம் முழுவதும் அம்பானி வசம் ஒப்படைக்கப்படுகிறதாமே? அப்படியே ஆட்சியையும் ஒப்படைத்துவிடலாமே?
3) 2013ல் ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என மோடி கூறினார். ஆனால் ஆட்சிக்கு கட்டிலில் அமர்ந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. இன்றைய நிலைமை என்ன தெரியுமா? மூன்று வருடங்களில் ஆறு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்ப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் ஐம்பது இலட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கவில்லை.UPA ஆட்சியின் போது4.9% ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை ஐந்து சதவீதமாக உயர்ந்துள்ளது.
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
பசுக்களை பாதுகாக்க பசுத் தீவிரவாதிகள் படை அமைத்தால், அதன் மூலமாவது வேலை வாய்ப்பின்றி கொலை வெறியுடன் திரியும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். குண்டர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமமே?.
4) லோக்பாலை உருவாக்குவோம் என்று சொன்ன வாக்குறுதி என்னவாயிற்று? மூன்று வருடங்கள் முடிந்த பின்பும் அதை குறித்து எந்த சலனங்களும் இல்லை. உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் கூட மௌனம் சாதிக்கிறது மத்திய அரசு. லோக்பாலை உருவாக்கவில்லை என காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த சங்பரிவார் கும்பல்கள் இன்று எங்கே போனது.? என்னவானது லோக்பால்?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
‘லோக்பால் புகழ்’ அன்னா ஹசாரே எங்கே? கண்டுபிடிப்பவர்களுக்கு சிறப்பு பரிசு........
5) பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவோம் என கூறியிருந்தனர். ஆனால் இன்று நாட்டில் நிலைமை என்ன? முஸ்லிம்களும் தலித்துகளும் ஜனநாயக, முற்போக்குவாதிகளும் அமைதியாக நிம்மதியாக வாழ முடியாத சூழல்தான் நிலவுகிறது. சர்வதேச ஆம்னெஸ்டி நிறுவனத்தின் அறிக்கையின்படி 2016-2017 வருடங்களில் மட்டுமே SC/ST வகுப்பினர் மீது 45,000 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் வருடத்தில் இது 11,000 ஆக இருந்தது. ஆக ஒரு வருடத்திற்குள் 75% உயர்வு. இதுதான் சமாதானச்சூழலா? சங்பரிவார் மற்றும் ஆரியக்கும்பலை எதிர்க்கும் எல்லோரையும் ஒழித்து விட்டு நீங்கள் மட்டுமே வாழும் இந்தியாவில்தான் நீங்கள் சொன்ன அமைதி நிலவுமா?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சொல்லி பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது இறந்த இராணுவ வீரர்களை விட மோடியின் மூன்றாண்டு ஆட்சியில்தான் அதிகமான வீரர்கள் இறந்துள்ளனர். இதுதான் தீவிரவாத்தை ஒழிக்கும் இலட்சணமா? ஆட்சிக்கு வந்தால் தாவூது இப்ராஹிமை கைது செய்வோம் என வீம்பளந்தாரே மோடி... இன்னமும் தாவூதை கைது செய்ய நேரம் வரவில்லையா? அல்லது 56 இஞ்ச் மார்பளவு மாவீரனுக்கு துணிவில்லையா?
6) மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 2014 லில் இருந்து 2015க்குள் விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. விவசாயிகள் தங்களது வாழ்வுரிமைக்களுக்காக நடத்தும் போராட்டங்கள் அன்றாட செய்திகள் ஆகிவிட்டது. மோடியின் அச்சே தின்னில் விவசாயிகள் இடம் பெற மாட்டார்களோ?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
நடிகைகள் பிரியங்கா சோப்ராவையும் கவுதமியையும் சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடி, ஒட்டாண்டிகளாய் நடுத்தெருவில் நிற்கும் விவசாயிகளை சந்திக்க மறுப்பதேன்?
7) நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கர்கள் இந்திய விசாவிற்காக வரிசையில் நிற்பார்கள் என வீம்பளந்தார் மோடி. இன்று இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி 6.1 சதவீதமாக சரிந்துள்ளது. வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. இப்போது எவ்வளவு அமெரிக்கர்கள் இந்திய விசாவிற்காக வரிசையில் நிற்கிறார்கள் என மோடி பக்தர்களால் சொல்ல முடியுமா?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப்பணம் ஒழியும் என்றீர்களே? எவ்வளவு ஒழிந்தது என கணக்கு சொல்ல முடியுமா?
8) காங்கிரஸ்சுக்கு அறுபது வருடங்களை கொடுத்தீர்கள். எனக்கு அறுபது மாதங்களை தாருங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் மோடி. முப்பத்தாறு மாதங்கள் முடிந்து விட்டது. வளர்ச்சியின் நாயகன் மோடியின் ஆட்சி சாதித்தது என்ன? 2013ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.72 இருந்தது. இன்று ரூ.64 ஆக உள்ளது. இதுதான் மோடி சொன்ன மாற்றமா? வளர்ச்சியா? முன்னேற்றமா?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
மோடியின் அமெரிக்க பயணங்கள் ஆயுத ஒப்பந்தங்களோடு முடிந்து விடுகிறதே? இது இந்திய நன்மைக்கா? அமெரிக்காவின் நன்மைக்கா?
9) ரூ.2,958 கோடி. இத்தொகை இதுவரை கங்கையை சுத்தப்படுத்த மத்திய அரசு செலவிட்ட தொகை. ஆனால் கங்கை மட்டும் இன்னமும் அப்படியேதான் நாறிக் கிடக்கிறது. எந்தவொரு திட்டத்தையும் முறைப்படி உருப்படியாக நிறைவேற்றும் ஆற்றல் மோடியின் பாஜக அரசிற்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
கங்கையை சுத்தப்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.20,000 கோடியில் ரூ.2,958 கோடியை செலவிட்டதாக கணக்கு காட்டி பாஜக சுருட்டியது எவ்வளவு? நாடு முழுவதும் பாஜகவினர் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. நாட்டை சூறையாடிக் கொழுக்கும் நீங்களா தேச பக்தர்கள்?
10) கடந்த மூன்று வருடங்களில் நாட்டின் வளர்ச்சிக்காக, மக்கள் நலத்திற்காக செய்யப்பட்ட பணிகளின் ஏதாவது சிறிய அடையாளத்தையாவது காட்ட முடியுமா? 100 நாட்கள் வேலை வாய்ப்புத்திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம் என்பதை போன்று ஏதாவது பணிகளை மோடி அரசால் அடையாளம் காட்ட முடியுமா?
அத்தோடு ஒரு துணைக்கேள்வி.
மேக் இன் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மாதந்தோறும் பிரதமர் மோடி பிரசவிக்கும் புதிய இந்தியா போன்றவற்றின் மூலம் என்ன பலன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்துள்ளது?
இந்த கேள்விகளுக்கு மோடியின் பக்தர்களும் சங்பரிவார் அடியாட்களும் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.... முடியவில்லை எனில் தோல்வியை ஒப்புக்கொள்வீர்களா?
மோடி ரசிகர்களே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக