5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரி..!!
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரியை, பிரிட்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேபோட் மையத்தின் இயற்பியல் விஞ்ஞானிகள், அணுசக்தி கழிவுகளில் இருந்து தங்கள் ஆய்வகத்திலேயே செயற்கை வைரத்தை உருவாக்கியுள்ளனர்.
மேலும், அந்த வைரத்தில் இருந்து சுமார் 5,730 ஆண்டுகளுக்கு ரீசார்ஜே செய்யாமல் பயன்படுத்தக் கூடிய, செல்போன் பேட்டரியையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
அதாவது 50 சதவீத செயல்பாட்டு அளவில் இந்த பேட்டரி இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என, பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பேட்டரி மூலம், விண்கலம், செயற்கைக்கோள் மற்றும் விமானங்களின் பயணக் காலத்தை நீட்டிக்க முடியும் என்றும், இருதய நோயாளிகளுக்கு பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவியில் பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகள் அந்த கருவிகளின் பயனை முழுமையாக பெறலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக