ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

MATHI NEWS 7.30am -6-8-2017-sunday

MATHI NEWS 7.30am -6-8-2017-sunday

♈ 🇮🇳  அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா -குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்து வாழ்த்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் இந்த குட்டி வீடியோவை ஷேர் செய்துள்ளார். அது வைரலாகியுள்ளது. வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்த முயலும்போது வேறு ஒருவர் குறுக்கிட்டு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அந்த நபர் பார்க்க கொஞ்சம் எம்.பி.தருண் விஜய் ஜாடையில் உள்ளார். இதனால் தாமதிக்கும் பொன்னார் மீண்டும், காத்திருந்து பொன்னாடை போர்த்துகிறார். பிறகு அங்கேயே நின்றபடி மலர் கொத்தை எடுத்து கொடுக்கிறார்.. மலர் கொத்தை வாங்கிய வெங்கையா நாயுடு, போங்க, போங்க என்பதை போல கையால் ஜாடை காட்டி ஏறத்தாழ பொன்.ராதாகிருஷ்ணனை விரட்டிவிடுவதை போல அனுப்புகிறார்---

♈ 🇮🇳  நீங்கள் ஒரு தேநீர் விரும்பியாக இருந்தால் உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி காத்திருக்கிறது. ஆம், தினந்தோறும் காலையில் ஆவி பறக்க நீங்கள் குடிக்கும் டார்ஜிலிங் தேநீரை மிக விரைவில் இழக்க நேரிடலாம். தற்சமயம் டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. நேபாள மொழி பேசும் கூர்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை தனியாக பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று உள்ளூர் அரசியல் கட்சி ஒன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளதே இதற்கு காரணம். இதனால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து டார்ஜிலிங் முழுவதும் போராட்டங்களும், தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற்று வருகிறது

♈ 🇮🇳  ஒடிசாவில் மருத்துவமனை கட்டணம் செலுத்த பணமில்லாததால் ரூ.7,500க்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்த குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

♈ 🇮🇳  ஆக-06: பெட்ரோல் விலை ரூ. 68.88, டீசல் விலை ரூ.59.51

♈ 🇮🇳  இந்தோனேசியா: காடுகளுக்கு தீ வைப்போரை சுட உத்தரவு

♈ 🇮🇳  புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்---

♈ 🇮🇳  நெல்லை: இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை

♈ 🇮🇳  ஜவுளி சார்ந்த தொழில்களுக்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 5சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்---

♈ 🇮🇳  பான் மசாலா, குட்காவின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உ.பியிலும் தடை விதிக்கப்படவுள்ளது

♈ 🇮🇳  சென்னை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் குமார் (40), தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று காலை, வடபழனி பஸ் நிலையம் அருகில் பைக்கில் சென்றபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், பிளாட்பாரத்தில் பைக்கை ஏற்றி ஓட்டி சென்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பைக்கில் இருந்து சாலையில் விழுந்தார். அப்போது, கோயம்பேட்டில் இருந்து தி.நகர் நோக்கி சென்ற மாநகர பஸ் (எம்27) அவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்--- vishwarubam news

♈ 🇮🇳  வெனிசுலாவில் புதிய அரசியல் அமைப்பிற்கு எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை

♈ 🇮  புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி சென்னையில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 22-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்

♈ 🇮  ஐஎஸ் படைகளை சுற்றி வளைத்தது சிரியாவின் ராணுவம் என்ற தகவலை சிரிய மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது--- vishwarubam news

♈ 🇮  ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த இந்தி நடிகை ராக்கி சவந்துக்கு முன்ஜாமீன் அளித்து கோர்ட்டு உத்தரவு

♈ 🇮  டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் தங்களது உடலில் சேறு பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர்---vishwarubam news

♈ 🇮  ஐ.ஏ.எஸ். அதிகாரி மகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த அரியானா மாநில பா.ஜனதா தலைவர் மகன் கைது

♈ 🇮  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள், காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த  ஆண்டுக்கான யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை ரக்‌ஷா பந்தன் விழாவை அடுத்து கடந்த 40 நாட்களாக நீடித்த அமர்நாத் பயணம் இச்சாரி முபாரக் நிகழ்வுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இந்த கோயிலுக்கு 89 பேர் கொண்ட யாத்ரீகர்கள் கடைசி குழுவினராக நேற்று பயணம் மேற்கொண்டனர். இதில் 15பெண்கள் மற்றும் 37  ஆண்கள் அடங்குவர். கடந்த ஜூன் 29ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில், இதுவரை 2,58,414பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

♈ 🇮  சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இதை இந்தியாவில்  பார்க்க முடியும்.நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர  கிரகணம் நாளை நடக்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என  கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூறி உள்ளார்.அவர் கூறுகையில், ‘‘சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.52மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.48 மணி வரை நீடிக்கும். முழு கிரகணம் 11.50 மணிக்கு ஏற்படும்’’ என்றார்

 ♈ 🇮  ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில்,திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில்  அபாரமாக வென்றது.இந்தியா சிமென்ட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த டிராகன்ஸ் 20 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்  குவித்தது. கேப்டன் வெங்கட்ராமன் 41, விவேக் 32,ஜெகதீசன் 22, சுப்ரமணிய சிவா 19 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு131 ரன் மட்டுமே எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத்  தழுவியது.
கவுஷிக் 25, கணேஷ் 24, கேப்டன் இந்திரஜித்17, கிரிதர் 16, நிலேஷ் 11, பிரபு 25* ரன் எடுத்தனர். டிராகன்ஸ் கேப்டன் வெங்கட்ராமன் ஆட்ட நாயகன்  விருது பெற்றார்---

♈ 🇮  புனே அருகே பிம்பிரி சின்ச்வாட் நகரின் மிலிந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரோஷ் ஹமித் ஷேக் (37). அங்குள்ள மார்க்கெட்டில் காய்கறி  வியாபாரம் செய்கிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு  17 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் திருமணம் செய்த வலியுறுத்தி உள்ளார். ஆத்திரமடைந்த பெரோஷ், அவரை கழுத்து நெரித்து, கொன்று தனது கடையின் கீழ் புதைத்துள்ளார்.  பெண்ணின் குடும்பத் தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் இந்த பயங்கர சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெரோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்

♈ 🇮  இலவச காஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஏழை பெண்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்கான காலக்கெடு அடுத்த மாதம்  இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 5 கோடி ஏழை பெண்களுக்கு பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு தொடங்கியது. இலவச கேஸ் இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த மார்ச் மாதம்  அறிவித்தது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதை சமர்பிக்க, கடந்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இலவச கேஸ் இணைப்பு பெற விரும்புவர்கள்  ஆதார் எண் சமர்ப்பிதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ்2.6 கோடி கா்ஸ் இணைப்பு  பெற்றுள்ளனர்-

♈ 🇮  ஆசிய - பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் விஜேந்தர் சிங் (இந்தியா, 31வயது) - சுல்பிகார் மைமைதியாலி (சீனா, 23வயது) மோதிய பரபரப்பான குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளார், மும்பையில் இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது---

♈ 🇮  தருமபுரி மாவட்டம் ஜக்குப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலத்தை பயன்படுத்திக் கூடாது என கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்த ராஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

♈ 🇮  நிதி ஆயோக் புதிய துணைத் தலைவராக ராஜீவ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரவிந்த பனகாரியாவின் ராஜினாமாவை அடுத்து புதிய துணைத் தலைவராக பொருளாதார வல்லுனர் ராஜீவ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்---

♈ 🇮  திருச்செங்கோடு: இருவேறு கொலைவழக்கில் தொடர்புடைய 2 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. தனசேகரன் மற்றும் அவரது நண்பர் கார்த்தியை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்---


[🇮🇳  12pm -6-8-2017-sunday*

♈ 🇮🇳  சென்னை பூந்தமல்லி சாலையில் கெங்குரெட்டி சுரங்கம் - ஈகா திரையரங்கம் வரையிலான சாலை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததையடுத்து இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது  

♈ 🇮🇳  ஆறுகளுக்கான பயணத்தில் ஏராளமான கார்கள் பங்கேற்று உள்ளனர் . கீழ்பாக்கம் குருசாமி சாலையிலுள்ள அறிஞர் அண்ணா அரங்கத்திலிருந்து ஏராளமான கார்கள் புறப்பட்டு சென்றன. ஏராளமான போக்குவரத்து காவலதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இடுபட்டுள்ளனர் --

    ♈ 🇮🇳  சென்னையில் ஒரு நம்பர் லாட்டரியை தயாரித்த காந்தி என்கிற கார்த்தி(32) என்பவர் கைது செய்யப்பட்டார். சின்னமலையில் வைத்து லாட்டரி தயாரிக்க பயன்படுத்திய கணினி, பிரின்டர் பறிமுதல் செய்துள்ளனர்---

   ♈ 🇮🇳  தஞ்சை: வல்லம் பகுதியில் அடகுக்கடை உரிமையாளரை அரிவாளால் தாக்கி 10 சவரன் நகை பறித்துள்ளனர்.  அடகுக்கடை உரிமையாளர் கரிகாலனை அரிவாளால் தாக்கி 2 பேர் தப்பியோடினர்.  சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்--

♈ 🇮🇳  நெல்லை: சங்கரன்கோவிலில் இன்று ஆடி தபசு நடப்பதால் அங்கு பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து குவிய தொடங்கியுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது  

♈ 🇮🇳  புதுச்சேரியில் பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

 ♈ 🇮🇳  ஓ.பி.எஸ்.,க்கு எதிராக லட்சுமிபுரம் கிராம மக்கள் உண்ணாவிரதம்---


  ♈ 🇮🇳  கடலூர் அமைச்சர் சம்பத் பங்கேற்கும் விழா 4 எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பு

♈ 🇮🇳  டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 ஏ தேர்வு துவங்கியது

     ♈ 🇮🇳  திருச்சி விமானத்தில் ஓ.பி.எஸ்., அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி பயணம்-அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் டில்லி பயணம்  

♈ 🇮🇳  புதுக்கோட்டை அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

   ♈ 🇮🇳  அரியலூர் கருவிடச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு---
 ♈ 🇮🇳  மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ., பரமேஸ்வரி வீடு முற்றுகை
    ♈ 🇮🇳  ஆத்தூர் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை-


♈ 🇮🇳  வரி ஏய்ப்பு, பெங்களூரு ரிசார்ட்டில் குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 44 பேரை தங்க வைக்க ஏற்பாடு செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கர்நாடக மின்துறை அமைச்சர் சிவகுமார் வீட்டில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அமைச்சருக்கு சொந்தமான கர்நாடகா மற்றும் டில்லியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.100 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ரூ.15 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் கைப்பற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால், அறிவிக்கப்பட்டது ரூ.100 கோடியாக இருந்தாலும்,உண்மையில் சிவகுமார், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.300 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்கில் வராத பணம் தவிர ஏராளமான தங்கம் சிவகுமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

  ♈ 🇮🇳  ஷாங்காய் சர்வதேச நட்புறவு நிறுவனத்தின் சமூக அறிவியல் அகாடமி ஆராய்ச்சியாளரான ஹூ ஷியோங் என்பவர் அந்த நாளிதழில் எழுதிய கட்டுரையில்,சமீபகாலமாக சீனாவுக்கு எதிராக இந்தியா பக்குவம் இல்லாத கொள்கை நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனா அதுபோல் நடந்து கொள்வதில்லை. பிரச்சினை இல்லாத இடங்களுக்குள் நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தி பேரம் பேசுவதை இந்தியா கையாண்டு வருகிறது. டோக்லாம் பகுதியில் இரு ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ள நிலை வெகுகாலத்திற்கு நீடிக்காது. அதை சீனா அனுமதிக்கவும் செய்யாது. இதற்கான போர் ஒத்திகைதான் தற்போது நடந்து வருகிறது. இந்த பகுதியில் இருந்து இன்னும் 2வாரத்துக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும். இதற்காக சிறிய அளவிலான போர் நடவடிக்கையை சீன ராணுவம் மேற்கொள்ளும். இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்த பிறகே இந்த தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்---

♈ 🇮🇳  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மினி ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மினி ஆட்டோ டிரைவர் கவுதமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
♈ 🇮  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2500 கனஅடியில் இருந்து3000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 39.56 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 11.86 டிஎம்சி.,யாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 7095 கனஅடியில் இருந்து 7051 கனஅடியாக குறைந்துள்ளது

♈ 🇮🇳 அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கப்பட்டு, மத்திய அமைச்சரவையிலும் சேர்க்கப்பட்டால், வரும் 2019ல் நடக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு, தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்படுவதோடு, சரி பாதி தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது குறித்தெல்லாம் கூட, இன்றைய கூட்டத்தில் பேசப்படும். இதனால், இன்றைய கூட்டம், அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு, அமித் ஷாவின் தமிழக வருகைக்குள், தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். அ.தி.மு.க.,வை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து, மத்திய அமைச்சரவையில் பங்கெடுக்க வைக்க வேண்டும் என்றும் தீவிரமாக களம் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஒருவேளை, இணைப்பு முயற்சி விரைவில் சாத்தியமாகும் பட்சத்தில், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு குறித்தும் பேசப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து இருவர் கூடுதலாக மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பும் உள்ளது.

♈ 🇮🇳  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கத்தியால் கத்த முயற்சித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது---

♈ 🇮🇳  தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮🇳  சென்னை முழுவதும் 23 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்
 ♈ 🇮🇳  நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆறை தூய்மை படுத்த பொது மக்களை கலெக்டர் அழைத்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

  ♈ 🇮🇳  உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகரில் வங்காளதேச பயங்கரவாதியை அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்து உள்ளது.

 ♈ 🇮🇳  டெல்லியில் தமிழக விவசாயிகள் 22வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆதிவாசிகளை போல் உடல் முழுவதும் இல்லை, தழைகளை கட்டிக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்--- v

♈ 🇮🇳  சுவர்கள் உடைந்து, ஆங்காங்கே தண்ணீர் ஒழுகும் நிலையில் இருக்கும் தனது வீட்டு கழிப்பறையை உலகின் மோசமான கழிப்பறையாக தனியார் நிறுவனம் அறிவிக்கும் என ஒருவர் காத்திருக்கிறார்.பிரித்தானியாவின்Bridlington நகரை சேர்ந்தவர் John Furniss-Wright (59), இவர் வீட்டின் கழிப்பறை மிக மோசமான நிலையில் உள்ளது.

   ♈ 🇮🇳  தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல தொழிலதிபராக இருப்பவர் Simon Pearson (47),இவர் மனைவி Emma (43). இவர்களுக்கு Lily (10) என்ற மகளும் Monty (6)என்ற மகனும் உள்ளனர்.விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நோக்கில் Simonதனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு தெற்கு இத்தாலிக்கு சென்றுள்ளனர்.இவர்களுடன் Simon-ன் மாமனார் Anthony McGregor-ம் உடன் சென்றுள்ளார்.அங்குள்ள கடலில் Simon, Lily, Anthony ஆகிய மூன்று பேரும் சேர்ந்து குளித்துள்ளனர்.அப்போது திடீரென மூவரும் கடலில் மூழ்க தொடங்கினார்கள். Anthony சாமர்த்தியமாக தண்ணீரில் நீந்தி வெளியேறினார்.Simon-க்கு நீச்சல் தெரிந்திருந்த நிலையில் தனது மகள் Lily-ஐ காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.தண்ணீரில் தத்தளித்த நிலையில் தனது கையை கெட்டியாக பிடித்து கொள் என மகளிடம் Simonகூறியுள்ளார்.அந்த சமயத்தில் அங்கிருந்த ஒருவர் Simon மற்றும் Lily-ஐ காப்பாற்ற நீரில் குதித்துள்ளார்.ஆனால் அவரால் Lily-ஐ மட்டுமே காப்பாற்ற முடிந்தது. தண்ணீரின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாமல் Simon நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து Simon மனைவி Emma கூறுகையில்,தனது உயிரை காட்டிலும் தனது மகளின் உயிரை காப்பாற்றவே இறுதி வரைSimon போராடியதாகவும், அன்பான கணவர் எனவும் தெரிவித்துள்ளார்.Simon-ன் பிரேத பரிசோதனை முடிவில் அவர் நுரையீரலில் அதிகளவு தண்ணீர் போயுள்ளது தெரியவந்துள்ளது.

♈ 🇮🇳 இந்தியாவில் இளைஞர் ஒருவர் தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் பன்ஸ்வாரா நகரத்திலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது--.

 ♈ 🇮🇳  யோகா பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் சிவகாசி பள்ளியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு பயிலும் ஹர்ஷா நிவேதா என்ற மாணவி 4.59 நிமிடத்தில் 100 வகையான ஆசனங்களைச் செய்து, இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதுவே இந்திய அளவில் முதல் சாதனையாகும் என்கிறார்கள்--


  ♈ 🇮🇳  கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் மகளிரணியைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு வளையல்களை அனுப்பியுள்ளனர்

  ♈ 🇮🇳  “டாஸ்மாக்” கடையில் மோதல், கைகலப்பு; கோமா நிலைக்கு போன சிறைக்காவலர்-சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது-42). இவர் சேலம் மத்திய சிறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர். தற்சமயம் புகாரின் பேரில் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வைத்தியநாதன் என்பது ரூபாய் மதிப்புடைய சரக்க பாட்டிலை கேட்டபோது, விற்பனையாளர்கள் பத்து ரூபாய் கூடுதலாக கேட்டதாகவும் இரு தரப்பிலும் கூறப்படுகிறது.  பணியில் இருந்த கடை மேற்பார்வையாளர் மோகன்குமார், விற்பனையாளர் முருகன் ஆகியோர் அவரை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதில் மயங்கி விழுந்த வைத்தியநாதன்  மறுநாள் காலை வரை அங்கேயே கிடந்துள்ளார்.

♈ 🇮🇳  கமிஷன் தகராறு; சாலை விபத்தில் மரணடைந்ததாக முகநூலில் செய்தி வெளியிட்டவர் கைது-நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலியாக பேஸ்புக் பக்கம் தொடங்கி சர்ச்சைக்குரிய படங்களை பதிவிட்ட, ரியல் எஸ்டேட் தரகர் மன்சூர்அலி கைது செய்யப்பட்டார்கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதி
   ♈ 🇮🇳 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களை தாக்கிய வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்-சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ஆட்டுக்காரனூரில் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 29-ஆம் தேதி  நள்ளிரவு பாதுகாப்பு பணிக்கு சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள்--.
   ♈ 🇮🇳  தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தரக் கோரி சேலத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்      ♈ 🇮🇳 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சந்தனக் கட்டைகளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்து களக்காடு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    ♈ 🇮🇳  பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை: தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை-
 ♈ 🇮🇳  தேசிய கைத்தறி தினம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து


*முக்கிய செய்திகள்@6/8/17🔴*

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீஸ் ஐஜி கூறியுள்ளார்

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியும். நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.இந்த சந்திர கிரகணம் நாளை நடக்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூறி உள்ளார்

மராட்டியத்தில் பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டவர்களை ஒரு கும்பல் தாக்கிஉள்ளது, இது தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.

பூடானில் உள்ள டோக்லா எல்லையில்சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட போது இந்திய ராணுவம் தடுத்தி நிறுத்தியதுஇதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, இந்திய ராணுவம் மீது 2 வாரங்களில் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இதை அந்நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரியவந்துள்ளது

வேலூர் அருகே ரத்தினகிரியில் 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

சேலம் ஆத்தூர் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.

வருகிற 4 ஆண்டுகளும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். எந்த கொம்பனாலும் இதை அசைக்க முடியாது என்று கடலூரில் அமைச்சர்கள் ஆவேசமாக பேசினார்கள்

திருச்சியில் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:குடிநீர், டெங்கு போன்ற மக்கள் பிரச்னைகளில் அரசை வேகப்படுத்த தான் ஆகஸ்ட் 10ஆம் தேதி போராட்டம் நடத்துகிறோம்எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தர்மயுத்தம் தொடரும்.

தினகரனை மட்டும் ஆதரித்து பேசவில்லை, பா.ஜ.க.வை எதிர்த்தே கருத்து தெரிவித்தேன் என்று எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார்.

மோடிக்கும் அமித்ஷாவுக்கும் வளையல் அனுப்பிய கோவா மகளிர் காங்கிரஸ்குஜராத்தில் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்கோவா மகளிர் காங்கிரஸார் கண்டனம்

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்ஸுடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது சோலைராஜா என்ற நபர் கத்தியால் குத்த முயன்றுள்ளார்அப்போது,பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில் சோலைராஜாவிடம் கத்தி இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்இந்நிலையில், என்னுடைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மத்திய அரசுக்கு கோடானுகோடி பணம் கிடைக்கும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தினகரன் நியமனம் செல்லாது: அமைச்சர் ஜெயக்குமார்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நிலோஃபர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி ஒன்று, 6000 குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது

மூன்று அணிகளையும் இணைக்க ஊடகங்கள் உதவ வேண்டும்- அமைச்சர் செல்லூர் ராஜு

கூவத்தூரில் தங்கியிருந்த போது எனக்கு மாவட்டச் செயலர் பதவி வழங்குவதாகக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார் என்று பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்ஆனால் இன்னும் அந்த பதவி வழங்கவில்லை என்றும் என்னை ஏமாற்றி விட்டார் என்று அவர் மீது குற்றம்சாட்டியுள்ளார் வெங்கடாலம்

சேலம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பாபு என்பரை காரில் கடத்தி கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டியில் இருந்து காரில் கடத்தி ஏற்காடு மலையடிவாரத்தில் கூலித்தொழிலாளி பாபுவை வெட்டிக் கொலை செய்துள்ளனர்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாதுகாப்பு அளிக்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

பல்கலைக்கழக முறைகேடுகளை தடுத்த சுனில் பாலிவாலை மாற்றக் கூடாது- ராமதாஸ்துணைவேந்தர்கள் நியமனத்தில் நியாயமாக நடந்து கொண்டதால் பாலிவால் மீது முதல்வருக்கும், அமைச்சருக்கும் அதிருப்திநேர்மையான அதிகாரியை இடமாற்ற செய்ய தமிழக அரசு திட்டம்  

ஜிஎஸ்டி வரியை காரணம் காட்டி வரி வசூலித்தால் தண்டனைசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிஆட்சியை கலைக்கும் சூழ்ச்சிகள் செய்தால் ஜெ. ஆன்மா மன்னிக்காது

சென்னை:போலீசார் சார்பில் நண்பர்கள் தின கொண்டாட்டம்

ரெயில்வே துறை சமீபத்தில் அறிமுகப்படுத்திய பிளக்சி ஃபேர் கட்டணம் மூலம், ஒரு ஆண்டுக்குள்ளாகவே கூடுதலாக ரூ. 540 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

போபர்ஸ் ஊழல் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க கோரி பா.ஜ.க வக்கீல் அஜய் குமார் அகர்வால், சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

பாரதீய ஜனதாவிற்கு எதிராக முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

கேரளாவில் சி.பி.எம்,., ஆட்சி வந்தால் வன்முறை வரும்; ஜெட்லி

RSS ராஜேஷ் மீதான காயங்கள் பயங்கரவாதிகளின் மனதைகூட நிலைகுலைய செய்யும் என அருண் ஜெட்லி ஆவேசமாக கூறிஉள்ளார்.

எங்களது கட்சியினர் கொல்லப்பட்டது ஜெட்லிக்கு முக்கியமானது கிடையாதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்

கேரளா மாநிலம் ஆரியங்காவில் தமிழக அரசு பேருந்தில் ஜாஹீர் அசனிடம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் ஹவாலா பணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர

மத்திய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வூதியக் கணக்கு தொடங்க வங்கிக்கு இனி அலையத் தேவையில்லை. இனி, அவர்கள் ஓய்வு பெறும் அன்றே, ஓய்வூதிய கணக்குக்கான உத்தரவை வழங்கப்படும் என்று மத்திய அரசின் பணியாள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்

வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது

இத்தாலியில் மாடல் அழகியை கடத்தி ஆல்-லைனில் ஏலம் விட திட்டமிட்ட நபரை அந்நாட்டு போலீஸ் கைது செய்தது.

இரண்டாவது முறை ஆசிய பசிபிக் பட்டத்தை வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தனக்கு பதக்கம் வேண்டாம், இந்தியா-சீனா இடையே அமைதி நிலவினால் போதும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் வந்தார் உசைன் போல்ட்லண்டனில் 16வது உலக தடகள போட்டிகள் நடைபெறுகின்றனஜஸ்டின் கட்லினிடம் தங்கப்பதக்கத்தை பறிகொடுத்தார் உசைன் போல்ட்

கொழும்புவில் நடைபெற்ற 2- வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக