செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்



வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி
ரயில் எண் 06085: ஆகஸ்ட் 30 செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ரயில் எண் 06086: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 5, 7 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - வேளாங்கண்ணி
ரயில் எண் 06087: ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06088: ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
ரயில் எண் 06091: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06092: செப்டம்பர் 1, 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி
ரயில் எண் 06016 : ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ரயில் எண் 06015: செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்.

இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் டவுன் -வேளாங்கண்ணி
ரயில் எண் 06090: ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டவுனில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ரயில் எண் 06089: ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் டவுன் வந்தடையும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் - நாகப்பட்டினம்
ரயில் எண் 06093: செப்டம்பர் 7 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வேளாங்கண்ணி - மும்பை பாந்த்ரா முனையம்
ரயில் எண் 09028: ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு மும்பை பாந்த்ரா முனையம் சென்றடையும்.
இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ரேணிகுண்டா, கொடுரூ, ராஜம்பேட்டை, கடப்பா, எரகுண்டலா, முத்தனரு, தாதிபத்ரி, கூட்டி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், யாத்கிர், வாதி, குல்பர்கா, சோலாபூர், தாந்த், புணே, லோனாவாலா, கல்யாண், வசாய் சாலை, போரிவலி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக