துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைப் பற்றிய சில தகவல்கள்..
தற்போது துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள *வெங்கையா நாயுடுவைப்* பற்றிய சில தகவல்கள்!
*வெங்கையா நாயுடுவின்* சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள சவட்டப்பாலம் ஆகும்
இவர் 1949ஆம் வருடம் ஜுலை மாதம் 1ஆம் தேதி பிறந்தார்.
இவர் விசாகப்பட்டினத்தில் கல்வி பயின்றவர்.
B.A., B.L. படித்துள்ள இவர் மாணவப் பருவத்திலேயே ஆர் எஸ் எஸ் மற்றும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஆகிய அமைப்புகளில் சேர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டவர்.
இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் நடந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார்.
1978ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சிக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆனார்.
பின் பா ஜ க வில் இணைந்து மூன்று முறை கர்நாடாகாவில் இருந்து ராஜ்யசபை எம் பி ஆனார்.
1999, மற்றும் 2000ல் வாஜ்பாய் அரசில் அமைச்சர் பதவி வகித்தார்.
2002 முதல் 2004 வரை பா ஜ க வின் தேசியத் தலைவர் பதவி வகித்தார்.
2014 ல் மோடியின் அரசில் அமைச்சர் பதவி வகித்து வந்தார்.
தற்போது இவர் ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபை எம் பி ஆவார்.
இவர் முழுப்பெயர் *முப்பவரப்பு வெங்கையா நாயுடு* ஆகும்.
இவரது பெற்றோர்கள் ரங்கையா நாயுடு, ரமணம்மா ஆகியோர்
இவர் 1971 ல் உஷா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இவருக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக