சனி, 12 ஆகஸ்ட், 2017

மதி செய்திகள் @13/8/17

மதி செய்திகள்  காலை செய்திகள்@13/8/17

காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், தீவிரவாதிகளின் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என பெங்களூரு சிறையில் இருந்து தொண்டர்களுக்கு எழுதிய கடித்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியில் குட்கா கடத்தல் : 2 பேர் கைது

சென்னை : உணவகத்தில் குட்கா பறிமுதல்; 4 பேர் கைது

டெல்லியில் 22 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் சிக்கியது: விமான நிலைய ஊழியர் உள்பட 2 பேர் கைது

உத்தரகண்ட் மாநில வெள்ள பாதிப்பின்போது மக்களை காப்பாற்றிய மம்தா ராவத்மலையேற்ற வீராங்கனையான இவர் பலரின் உயிரை காப்பாற்றி மலையில் இருந்து கீழே கொண்டு வந்தார்சுயநினைவில்லாத ஒருவரை தனது முதுகில் சுமந்து மலையடிவாரத்துக்கு வந்தார்

மானாமதுரை : மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவலை தொடர்ந்து கொடைக்கானலில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

போபர்ஸ் ஊழலை கையில் எடுக்கும் பா.ஜ.க: பதிலடியாக சவப்பெட்டி ஊழலை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு தனி இணையதளம் கோரி வழக்கு

இறக்குமதி சர்க்கரை மீதான வரியை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆகஸ்ட் 22-ல் வேலைநிறுத்த அறிவிப்பு

மேட்டூரில் திறந்து விடப்பட்ட நீ்ர் திருச்சி வந்தடைந்தது

தமிழக காங்., அமைப்பு தேர்தல் : இன்று ஆலோசனை கூட்டம்

ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்குகுடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கால் மக்கள் மகிழ்ச்சி

நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

பீகாரில் 15 பேரை மிதித்துக் கொன்ற சுட்டுக்கொலைவனத்துறை அதிகாரிகளால் யானை சுட்டுக்கொல்லப்பட்டது

ஜம்மு மக்களிடையே அச்சத்தை உருவாக்க தேசிய மாநாட்டுக் கட்சி முயற்சி: பாஜக

உ.பி.: பாஜகவில் இணைந்தார் சமாஜவாதி கட்சி முன்னாள் எம்எல்சி

மதுவுடன் புகையிலைப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும்: சத்ருகன் சின்ஹா

தற்கொலைக்கு தூண்டும் ‘நீல திமிங்கலம்’ (‘புளூ வேல்’) விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்

கர்நாடகாவில் அடுத்த சட்டசபை தேர்தலை எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. சந்திக்கும்: அமித்ஷா அறிவிப்பு

காங்கிரஸ் இல்லா கர்நாடகத்தை உருவாக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும்: அமித் ஷா

அமெரிக்காவை மிரட்டியதற்காக வட கொரியா வருந்தும்: அதிபர் டிரம்ப்

எல்லைப் பிரச்னையை திறம்படக் கையாளுகிறது இந்தியா: அமெரிக்க பேராசிரியர் பாராட்டு

புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உண்டு: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்

அமெரிக்கா: விர்ஜினியா மாகாணத்தில் இரு தரப்பினரிடையே மோதலில் 3 பேர் பலி - அவரசநிலை பிரகடனம்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார்.

இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - மன்னிப்பு கேட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் அறிவு மற்றும் அனுபவத்தில் இந்தியா 20 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இன்றைய(ஆக.,13) விலை: பெட்ரோல் ரூ.70.19; டீசல் ரூ.60.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக