⭐ திருமா -- 55
1. அரியலூர் மாவட்டம் அங்கனூரில் ஆகஸ்டு 17 (1962), இராமசாமி-பெரியம்மாள் பெற்றோருக்கு பிறந்தவர் தொல்.திருமாவளவன்.. தீண்டாமையை பொசுக்க வந்த தீப்பந்து.
2. இடைநிலைக் கல்வி ( 1-8 ) அரசு நடுநிலைப் பள்ளி அங்கனூர் . எஸ் எஸ் எல் சி வரை ( 9-11) அரசு உயர்நிலைப் பள்ளி திட்டக்குடி . அரியலூர் மாவட்டம் .
3. பி யு சி (1978-79) கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி விருதாச்சலம். பி. எஸ். சி, வேதியியல் (1979-82) மாநில கல்லூரி சென்னை.
4. எம்.ஏ ( முதுகலை குற்றவியல் ) சென்னை பல்கலைகழகம் (1983-85).
5. தலித் மாணவ அம்பேத்கர்- இயக்க போராட்டம் - கைது.
6. கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை பொதுச்செயலாளராக பொருப்பேற்பு.
7. ஈழவிடுதலை ஆதரவு மாணவர் மாநாடு தொல்.திருமாவளவன் தலைமை. ஈழத்தமிழர் ஆதரவு விடுதலைப்புலி கையெழுத்து ஏட்டின் ஆசிரியர்.
8. தலித் மீனவ இளைஞர் நல இயக்க பொதுச்செயலாளராக (1985) பொருப்பபேற்றல்.
9. (1985-88 ) பி.எல் சென்னை சட்டக்கல்லூரி,பி.எச்.டி குற்றவியல் துறை (ஆய்வில்).
10. இந்திய அமைதிப்படை இலங்கை அத்துமீரலை கண்டித்து (1986) கல்லூரி மாணவ கூட்டமைப்பை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினார்.
11. தமிழ் தேசியப் போராளி.
12. திராவிடர்கழகம் நடத்திய ஈழத்தமிழ் ஆதரவு இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைது.
13. இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் பங்கேற்பு.கைது.
14. ஈழத்தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு (1987) மனித சங்கிலி போராட்டத்திற்கு தலைமை.
15. "இந்திய தலித் பேந்தர் இயக்கம் " மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் அ.மலைச்சாமியுடன் சந்திப்பு, கூட்டங்களில் பங்கேற்பு(1989).
16. மலைச்சாமி மறைவையொட்டி (31.12.1989) மதுரை தமுக்கம் கலையரங்கில் இரங்கல் கூட்டம் எழுச்சித் தமிழரால் நடத்தப்பட்டது.
17. ஜனவரி 21 ,1990 "விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் " தலைமை பொருப்பை எழுச்சித்தமிழர் ஏற்றார்.
18. மதுரை கோ.புதுரில் இயக்கத்தின் ( விசிக ) முதல் கொடியை ஏற்றினார் (ஏப்ரல் 14,1990).
19. மராத் வாடா பல்கலை கழக அம்பேத்கர் பெயர் சூட்டல்-சிவசேனா எதிர்ப்பு , இரயில் மறியல் கைது.
20. இட ஒதுக்கீடு உச்ச வரம்பை கண்டித்து விமான மறியல் , போராட்டம் . எழுச்சித்தமிழர் கைது.
21. தாமிரபரணி , பரமக்குடி துப்பாக்கி சூடு, சென்னகரம்பட்டி படுகொலை , திட்டக்குடி மற்றும் மேலவளவு படுகொலை , கண்டித்து பேரணி ஆர்ப்பாட்டம்-
கைது. மேலவளவு முருகேசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க சம்பளத்திலிருந்து 90000 அப்பொழுதே கொடுத்தவர்.
22. தடய அறிவியல் துறை அறிவியல் உதவியாளர் பணியினை இராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டி (1999) .
23. சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல,போட்டியிட்டு 2 25 768 வாக்கு பெற்று இரண்டாம் இடம் (1999).
24. மங்களூர் சட்டபேரவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி (2001) .
25. டர்பன் மாநகரில் (தென்னாப்பிரிக்கா) நிறவெறிக்கான அனைத்துலக மாநாட்டில் (WCAR) பங்கேற்றவர் தொல்.திருமாவளவன்.
26. நமது தமிழ்மண் இதழ் ஆசிரியர் . எழுத்து மற்றும் பேச்சுப் புரட்சியால் மக்கள் மனம் கவர்ந்தவர்.
27. செந்தமிழ் காவலர் விருது ( 3.4.03 ).இந்தி எதிர்ப்பு போர் தளபதி .
28. எழுச்சித்தமிழர் விருது ( 18.4.03).பிறந்த நாள் " தமிழர் எழுச்சி நாள் " என கொண்டாடப்படுகிறது.
29. தலித், சிறுபான்மையினர் , ஒடுக்கப்பட்ட மக்கள் ,அனைத்து சாதி மதத்தினர் மதிக்கும் ஒரே தலைவர் .
30. செம்மொழி செம்மல் விருது (ஜூலை 2003). உலகத்திலேயே கட்சியில் உள்ள அனைவருக்கும் தமிழ் பெயர் சூட்டி அழகு பார்த்த ஒரே தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே பிரபாகரனைப்போல.
31 . ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தி இலவச கல்வி அளித்து வரும் தொல். திருமாவளவன் .
32. சிகரம் விருது (1.8.07 ) இந்தியா டுடே வழங்கியது. எழுத்தாழும் ,செயலாலும் , பேச்சாலும் சிந்தனையாலும் உச்சத்தை அடைந்தவர்.
33. தூயதமிழ் செம்மல் விருது (27.10.2007).இந்தி எதிர்ப்பு போரின் தளபதி .
34. மக்களவையில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினராக முதல் கன்னிப்பேச்சு (2.06.2009) .
35. கௌரவ டாக்டர் பட்டம். பல்துறை அறிவு.புதிய சிந்தனை மற்றும் புதிய சித்தாந்தம் கொண்டவரே எழுச்சித் தமிழர் .
36. தேசிய மது விலக்கு கொள்கை .மகளிர் இட ஒதுக்கீடு ஐம்பது சதவீதம் கேட்ட ஒரே தலைவர் .
37. ஈழப்போர் நிறுத்த தொடர் ( சாகும் வரை ) உண்ணாநிலைப்போர் (2009 ஜனவரி 16-19).
38. நாடாளுமன்ற குழுவோடு ஈழம் சென்று முள்வேலி முகாம் மக்களை சந்தித்து ஆறுதல் சொன்ன களப்போராளி.
39. அம்பேத்கர் தேசிய விருது -(7.9.2011).
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சிந்தித்த ஒரு மாமனிதன்.
40. டெசோ அமைப்பில் உறுப்பினர்.இராஜ பக்சேக்களுக்கு எதிரி.
41. வாழ்நிலை சாதனையாளர் விருது-(6.3.12) மக்களுக்காக தன்னை அர்பனித்தவர்.
42. காவிரி நீர் உரிமை ஊர்தி பயணம்,
(4.10.2012) .விவசாயம் பாதுகாப்பு இயக்கம் .
43. பொன் விழா-(2012) சிறுத்தைகளிடம் பொற்காசு பெற்று வெளிச்சம் தொலைக்காட்சி தொடக்கம்.
44. சேலத்தில் கல்வி உரிமை மாநாடு -ஆரம்ப படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவச கல்வி.
45. தொல்காப்பியர் நினைவு அறக்கட்டளை - இலவச மருத்துவம் , நலத்திட்டங்கள்.
46. திருமா பயிலகம். அனைத்து போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில்.
47. வெள்ளிவிழா மாநாடு மதுரை -(25.04.2015).
48. தர்மபுரி இளவரசன் , ஓமலூர் கோகுல்ராஜ், டி எஸ் பி விஷ்னுப்பிரியா படு கொலைக்கான
நீதி கேட்பு போராளி. கோகுல்ராஜ் உடலை புதைப்பதற்கு மண்வெட்டி பிடித்து குழி தோண்டிய மகத்தான தலைவர் .
49. கூட்டணி ஆட்சி கோட்பாடு. இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக "மக்கள் நலக் கூட்டனி" யை உருவாக்கிய தலைவர்.
50. களத்தில் முதல்வர். மீத்தேன், நியுட்ரினோ ,ஹைட்ரோ கார்பன் , நீட் , மாட்டுக்கறி , ஜல்லி கட்டு , தலித் படுகொலை , வன்கொடுமை ,டெல்டா பெட்ரோலிய மண்டலம் இப்படி மக்கள் போராட்டத்தில் .
51. ஈழத்தமிழர் ஆதரவு இயக்கம்.தனி ஈழம் அமையும் வரை.
52. மது அழிப்பு போராட்டம் விடுதலை சிறுத்தைகளால் நாடு முழுவதும் எழுச்சித் தமிழர் அறிவுறுத்தல் படி
இன்றுவரை தொடர்ந்து.
53. கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் ,சசிகலா போன்ற இரண்டு திராவிட கட்சித் தலைமையையும் கவர்ந்த ஒரே தலைவர் .
54. மாநில சுய ஆட்சி போராளி.
55. நமது முதல்வர்
--ஆதிமொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக