செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

மதி செய்திகள் காலை செய்திகள்@16/8/17

  மதி செய்திகள்
காலை செய்திகள்@16/8/17

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதி

தொண்டைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குழாயை மாற்றுவதற்காக கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதி

சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2 மணி நேரத்தில் வீடு திரும்புவார் கருணாநிதி: முன்னாள் அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்: வானிலை மையம்

தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசர சட்டம்; மத்திய அரசு இன்று ஆய்வு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவின்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, பார்வையாளர்களில் பெரும்பாலானோர், அமர்ந்தே இருந்தனர்.

காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன படைகள் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு

மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டத்தின்படி, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால், நிரந்தர குடியுரிமை பறிக்கப்படும்; ஆனால், முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, அவரது மகன், ஒமர் அப்துல்லாவுக்கு மட்டும், நிரந்தர குடியுரிமை கிடைத்தது எப்படி?' என, பெண் வழக்கறிஞர் கேள்வி எழுப்பி உள்ளார்

எதிர்க்கட்சிகள் செயல்பாடு பற்றிய நடிகர் கமல் கருத்துக்கு ராமதாஸ் அதிருப்திபாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் என ராமதாஸ் பதிலடி

ஆகஸ்ட் 18ம் தேதி நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்தி வைத்தது ஓ.பி.எஸ் தரப்புஅரசுக்கு எதிராக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

பெங்களூருவில் வெள்ள அபாயம்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.1,700 கோடி அபராதம். கிருஷ்ணா கோதாவரி படுகையில் போதிய எரிவாயுவை உற்பத்தி செய்யாததால் இந்த அபராதத்தை விதித்துள்ளது மத்திய அரசு. ஆனால், இவ்விஷயத்தில் தங்கள் மீது தவறேதும் இல்லை என ரிலையன்ஸ் கூறி வருகிறது

சேலம் அருகே கேரளாவிற்கு சென்ற சுற்றுலா பேருந்து விபத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை விதிப்பு

நாடு முழுவதும் உள்ள கிராம அஞ்சல் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் நாட்டின் அடிமைகளா? டெல்லியில் அய்யாக்கண்ணு ஆவேசம்: தங்களுக்கும் சுதந்திரம் தரக்கோரி இன்று இங்கி. தூதரகத்தில் மனு

திருவாரூர் நகரில் முதல்வர் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு

அய்யா வைகுண்டரின் ஆவணி திருவிழா 18-ம் தேதி தொடங்குகிறது

பா.ஜ.க.வின் பிடியில் இருந்து தமிழக அரசு விடுதலை பெற வேண்டும்: திருநாவுக்கரசர் காங்கிரஸ்

பேசிக்கொண்டே இருக்காதீர்கள் களத்திற்கு வாருங்கள்: கமல்ஹாசனுக்கு சீமான் சவால்

மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘வாட்ஸ் அப்’பில் முதல்வருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது: வாலாஜா அருகே போலீஸ் அதிரடி

உளுந்தூர்பேட்டை அருகே பஸ் மீது கார் மோதி 4 பேர் பரிதாப சாவு: மேலும் 3 பேர் படுகாயம்

ஓவிய ஆசிரியர்களுக்கான நியமனத்தை எதிர்த்து வழக்கு; பள்ளி கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பூர்த்தி செய்வோம் என்று சுதந்திர தின விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

சுதந்திர தினவிழாவில் ஒடிசா முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு

சபரிமலை புதிய தந்திரி இன்று பொறுப்பேற்கிறார்

மும்பை--ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு கைதியை, மனைவியுடன் ஓட்டலில் தங்க போலீசார் அனுமதித்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம் அருகே சிறுமியை நரபலி கொடுத்த பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இந்திய - சீனா பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் : அமெரிக்கா

 போராளி குழுவான அல்-சபாப் போராளிகள் கென்யாவில் 5 பொலிஸ் அதிகாரிகளை கொன்றனர்.

பாகிஸ்தானில் 2 குண்டுவெடிப்புகளில் பாதுகாப்பு படையினர் 7 பேர் சாவு

நீதிபதிகளை விமர்சித்ததாக புகார் நவாஸ் ஷெரீப்புக்கு லாகூர் ஐகோர்ட்டு நோட்டீஸ்பி

அமெரிக்காவின் குவாம் தீவின் மீதான ஏவுகணை தாக்குதல் திட்டம்: வடகொரிய தலைவர் ஆய்வு

ஆக-16: பெட்ரோல் விலை ரூ. 70.59, டீசல் விலை ரூ.60.38.

மதிய செய்திகள்@16/8/17

வீடு திரும்பினார் கருணாநிதி

பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்கப்பட்டது தொடர்பாக காஷ்மீரில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு சோதனையில் ஈடுபட்டு உள்ளது.

எல்லையில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது.

லாடக்கில் சீனாவின் ஊடுருவலை இந்திய ராணுவம் முறியடித்தது, கற்களை வீசி தாக்குதல், வீரர்கள் காயம்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று காலை நிலம் லேசாக அதிர்ந்தது. இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவு. இதன் காரணமாக எந்தச் சேதமும் ஏற்படவில்லை

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை 13 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

பெங்களூருவில் தமிழ் பேனர்களை கிழித்த கன்னட அமைப்பினர்--கர்நாடகாவில் தமிழில் எழுதப்பட்ட பேனர்கள் கன்னட அமைப்பினரால் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அன்னிய செலாவணி மோசடி: எழும்பூர் கோர்ட்டில் தினகரன் ஆஜர்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

கட்சி பதவிகளில் அமைச்சர்களின் டிரைவர்கள், சமையல்காரர்கள்: திவாகரன் குற்றச்சாட்டு

திரிபுரா முதல்வரின் சுதந்திர தின உரைய ஒளிபரப்ப தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மறுப்பு

நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வலியுறுத்தி வருகிறோம்: செங்கோட்டையன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று டெல்லி விரைந்தார். தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது.

லட்டர் பேடு கட்சிகள் ஆதரவுடன் கமல் ஆட்டம் போடுகிறார்: ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ.

சசி கணவர் நடராஜன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு நீதிபதி கண்டனம்

இணைப்பு முயற்சியால் ஓ.பி.எஸ். போராட்டம் ரத்து: புதுக்கோட்டை செயல்வீரர்கள் கூட்டமும் ஒத்திவைப்பு

கடலூரில் எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி: 4 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

விழுப்புரத்தில் 118 சவரன் தங்கக்கட்டி மீட்பு

அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த விபத்துகளில் 2-வது இடத்தில் தமிழகம்

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வைத் தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தாமிரபரணியில் சிறு பிடி மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம்நல்லக்கண்ணு தூத்துக்குடியில் பேட்டிதாமிரபரணி நதி நீர் பாதுகாப்பு தேசிய பேரவை போராட்டம்

சிவகாசியில் தொடர் மழை : பட்டாசு விலை, 15 சதவீதம் உயர்வு

அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை நிரந்தர கண்காட்சி

புதுச்சேரி - ஐதராபாத் விமான சேவை துவங்கியது

குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித் மீது தாக்குதல்குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பசுபாதுகாவலர்கள் வெறிச்செயல்தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

விமானங்களில் ஏற முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் சுதந்திர தின நாளில் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜன்தன் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 1,767 வாரிசுகளுக்கு விபத்து இழப்பீடு

இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தின் நடுவே நடைபெற்ற சுதந்திர விழாவை நடிகர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

தன்னை குறித்து மோசமான கருத்துகளைக் கூறும் எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முன்னணி நடிகை கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 600க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவியை அந்த நாட்டு அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவோம்: அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை

குவாம் தீவு தாக்குதலை நிறுத்திவைத்துள்ளோம்: வடகொரியா அறிவிப்பு

விலை நிலவரம்-
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,759
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,072
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.28,970
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.50
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,500

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் சரிந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை உயர்வு, பங்குச் சந்தைகள் சரிவு ஆகியவை முக்கியக் காரணங்கள். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.29. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.12.

சின்சினாட்டி டென்னிசில் விளையாட இயலாது என ரோஜர் பெடரர் கடைசி நேரத்தில் கூறிவிட்டதால், டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு நடாலுக்கு பிரகாசமாகியுள்ளது.

MATHI NEWS செய்திச் சுருக்கம் (16/08/2017)


1 தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை கேன்டீன்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன.

2 டாட்டா பவர் நிறுவனம் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.164 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது.

3 டீ.எல்.எப். நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.110 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது.

4 ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) ரூ.290 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது.

5 ஜி.வி.கே பவர் அண்டு இன்ப்ராஸ்டரக்சர் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) ரூ.48 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது.

6 பிலிப்ஸ் கார்பன் பிளாக் நிறுவனம் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) ரூ.48 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது.

7 சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

8 சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

9 கர்நாடக அரசு இன்று தொடங்க இருக்கும் மலிவுவிலை உணவகமான இந்திரா உணவகம் இன்று திறக்கப்படுகிறது.

10 ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கின் பாங்கொங் ஏரி அருகே எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயற்சி செய்துள்ளார். எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் கற்களை வீசி தாக்கியதையடுத்து சீன ராணுவத்தினர் பின் வாங்கியுள்ளனர்.

11 சென்னை: ஃபெப்சியில் இருந்து டெக்னீஷியன்யூனியனை இடைநீக்கம் செய்து ஃபெப்சி பொதுச்செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் நடந்த பில்லா பாண்டி படப்பிடிப்பை நிறுத்தியதால் 22 சங்கங்களின் நலனைகருத்தில் கொண்டு டெக்னீஷியன் யூனியன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

12 மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயங்களை நடத்த மகாராஷ்டிரா மாநில அரசுக்கு பாம்பே உயர் நீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது. மாட்டு வண்டி பந்தயங்களுக்காக சரியான விதிமுறைகளை மாநில அரசு வடிவமைத்து வெளியிடும் வரை தடை நீடிக்கும் என்று பாம்பே உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

13 தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று(ஆக., 16) ஆய்வு செய்கிறது.

14 சுதந்திர தின விழாவில் பங்கேற்ற, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக்கிற்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

15 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவின்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, பார்வையாளர்களில் பெரும்பாலானோர், அமர்ந்தே இருந்தனர்.

16 சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருதை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

17 அமெரிக்காவின் குவாம் தீவின் மீதான ஏவுகணை தாக்குதல் திட்டம் பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆய்வு செய்தார். டிரம்ப் நடவடிக்கைக்காக காத்திருக்க அவர் முடிவு செய்துள்ளார்.

18 சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் நீலத் திமிங்கல சவால் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது.


19 நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பூர்த்தி செய்வோம் என்று சுதந்திர தின விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

20 இலங்கை மண்ணில் அதிக வெற்றி பெற்று இந்திய அணி சாதனை.

21 வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையிலுள்ள பழைமையான பிள்ளயார் கோயிலில், 6,000 ஆண்டுகளுக்கு முன் புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் இருப்பதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர்.

22 இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள 10 ரயில் நிலையங்களில் 'ஒரு ரூபாய் கிளினிக்' அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

23 இந்தியாவிற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என கேப்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.

24 சென்னை விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

25 தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையினரின் சிறப்பான பணியே காரணம் என்று முதல்வர் கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

26 வடகொரியாவுடன் போரை விரும்பவில்லை, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறோம் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.

27 பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என நேற்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

29 நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று டெல்லி விரைந்தார். தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது.

30 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

31 முதல்வரின் நல் ஆளுமை விருது, மூன்று துறைகளுக்கு வழங்கப்பட்டது.காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை, வணிக வரி ஆகிய, மூன்று துறைகளின் செயல்பாடுகளைப் பாராட்டி, நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.

32 ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

33 பாடத்திட்டத்தை உருவாக்கும் கலைத்திட்டக் குழுவின், கருத்தாய்வுக் கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது.

34 தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தில்லியைச் சேர்ந்த தமிழ் பள்ளி மாணவர்கள் தமிழக பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.

35 சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் உதவியை அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார்.

36 சென்னை கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தியாகிகள் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

37 மலேசிய இளவரசியை திருமணம் செய்து கொண்ட நெதர்லாந்து கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ், கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

38 விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த அறிக்கையை லண்டன் நீதிமன்றத்திடம் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது

39 இலங்கையில் புதிய வெளியுறவு துறை மந்திரியாக திலக் மரபோனா நேற்று அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா முன்னிலையில் பதவியேற்றார்.

40 அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


41 உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டேவிஸ் கோப்பை போட்டியில் ஆடும் அணியில் லியாண்டர் பயஸ் இடம் பெற்றிருந்தார்.

42 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.59 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

43 உ.பி.யில், சுதந்திர தினத்தையொட்டி, லக்னோவில் உள்ள ஒரு மதரசாவில், மூவர்ண தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

44 நாட்டின் 71-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

45 அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் நிரந்தர அஞ்சல்தலைக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

46 மத்திய அரசின் நிதி உதவியுடன், 10 மாவட்டங்களில், சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளை, வேளாண் துறை துவங்கி உள்ளது.

47 பேசிக்கொண்டே இருக்காதீர்கள் களத்திற்கு வாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

48 எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

49 நாடு முழுவதும் உள்ள கிராம அஞ்சல் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

50 மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்குள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் திறனை பெறுவார்களா? என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

51 புதுச்சேரி - ஹைதராபாத் விமான சேவையை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை தொடக்கி வைக்கிறார்.

52 தமிழக அரசின், சிறந்த மாநகராட்சிக்கான விருது, திருநெல்வேலி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

53 திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

54 கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு நெல் வரத்து அதிகரித்து உள்ளதால், அரிசி விலை குறையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

55 ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களுக்கான பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார்.

56 அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி வெற்றி பெற்றார்.

57 ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்து அணிக்கு எதிரான 2வது ஹாக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

58 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இதில், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், இந்திய தொடக்க வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் முதன்முறையாக 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

59 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியது.

60 சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சார்பாக போட்டியிடும் ராம்குமார் ராமநாதன், 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக