ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஆகஸ்ட் 15 -இல் கிராம சபை கூட்டம்



ஆகஸ்ட் 15 -இல் கிராம சபை கூட்டம்
 -----------------------------------------------------------------
தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தனி அலுவலர்களால் காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவித்தல்,  கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசிக்கப்படும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், 'டெங்கு' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் பல திட்டங்கள் குறித்து விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து ஊராட்சிமன்ற தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.  அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து, அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்க வேண்டும்.  அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.
கிராமசபைக் கூட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க உள்ளனர். கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே,  சுதந்திர தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும், பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பெருவாரியான மக்கள் பங்கேற்க, கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்து கூட்டத்தை நடத்த, அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்...
பெ.சங்கர்.ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக