மதி செய்திகள் காலை செய்திகள்@4/8/17
குஜராத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில், 'நோட்டா' எனப்படும், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை சேர்ப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. அதே நேரத்தில், சட்ட ரீதியில் இந்த உத்தரவு செல்லுமா என்பது குறித்து விசாரிக்க, முன்வந்து உள்ளது
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆறு எம்.எல்.ஏ.,க்கள், வரும் 7ம் தேதி பா.ஜ.,வில் இணைய உள்ளனர்.
ஆக-04: பெட்ரோல் விலை ரூ. 68.34, டீசல் விலை ரூ.59.04
பெங்களூரு சிறையில், அ.தி.மு.க., சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது குறித்து, கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழுவினர், இன்று அங்கு ஆய்வு செய்கின்றனர்.
இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் மீது, போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி சிறப்பு நீதிமன்றம், பரிசீலனைக்கு எடுத்து கொண்டது
இனி ஒரு சிலைசெய்வோம் --அரசுக்கு அப்பால் என் அப்பாசிவாஜி -சிலை குறித்து கமல் டுவிட்டரில் கருத்து
முதல்வர் பழனிச்சாமி மற்றும் தினகரன் தரப்பினர் தங்கள் அணிகளுக்கு வருபவர்களுக்கு எத்தனை கோடி ரூபாய் கொடுக்கவும் தயாராக இருப்பதாக, பேரம் பேசுவதாக ஓ.பி.எஸ்.,அணியை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தெரிவித்தார்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் கடந்த 1ம் தேதி, 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் சட்டை பட்டன் போடாமல் சென்றதாககூறி, 3ம் ஆண்டு மாணவர்கள் சிலர் தகராறு செய்தனர். இதனால், இருதரப்பு மாணவர்களும் உருட்டு கட்டைகளுடன் தாக்கிகொண்டனர். இதில், 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு கூடி 10 மாணவர்கள் அடையாளம் கண்டது அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நளினி, நேற்று உத்தரவிட்டார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உட்பட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் மே 28ம் தேதி சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலை: பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு; 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்
நெல்லை அருகே 5 துப்பாக்கிகளுடன் மர்ம நபர் கைது
முதல் முறையாக ரூபாய் நோட்டுக்கள் நீல நிறத்தில் வெளியாக உள்ளன. புதிதாக வர உள்ள 50 ரூபாய் நோட்டில் நீல நிறம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் கருப்பு-சாம்பல் நிறத்தில் மஹாத்மா காந்தியின் உருவம் இருக்கும்
அமைச்சர் விஜயபாஸ்கரை, உடனே பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறிஉள்ளார்
திருச்சி: பள்ளி மாணவிகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியருக்கும் அப்பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கொடைக்கானலில் இருந்து மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா வெளியேற வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
என்ஜினீயரிங் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சென்றாலும் என்ஜினீயரிங் படிப்பில் ஒரு இடம் கூட வீணாகக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தி ஜனநாயகப் போரை அறிவிக்க வேண்டும்தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வலியுறுத்தல்-அதிமுக அணிகளாக பிளவுபட பாஜகவே காரணம்- தமிமுன் அன்சாரி
காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்-கோவையில் காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி 26 லட்சம் மோசடி செய்ததாக 2009ல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்திவைத்தார்.
தமக்கு எதிராக தம்மை பதவியில் இருந்து நீக்க முன்னாள் ஊழியர்கள் சதி செய்வதாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கடமலைப்புத்தூரில் போலி மருத்துவர் ஒருவரை அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திராகாந்தி இஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஐஜிஐஎம்எஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் திருமண நிலை குறித்த உத்தரவாத விண்ணப்பத்தை நிர்வாகம் கொடுத்து பூர்த்தி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளது.அந்த விண்ணப்பத்தில், உங்களுக்கு எத்தனை மனைவிகள் என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது. மேலும் நான் ஒரு பிரம்மச்சாரி/விதவை/கன்னி போன்ற விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது.இந்த கேள்விகள் பெரும் சர்ச்யை ஏற்படுத்தியது.
தேசத்தில் 75 சதவிதம் நெருக்கடி நிலை பிரகடனம் --லாலு பிரசாத் யாதவ்
பாகிஸ்தான் என்று பயங்கரவாதத்தை கைவிடுகிறதோ, அப்போதுதான் பேச்சுவார்த்தை என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துவிட்டார்.
மொபைல் டேட்டா வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும்முதலிடம்4ஜி தொழில்நுட்பத்தில் 6வது முறையாக ஜியோ முதலிடம்தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை நிறுவனமான டிராய் அறிக்கையில் தகவல்
அமெரிக்கா - ரஷியா இடையிலான உறவானது மிகவும் ஆபத்தான மட்டத்திற்கு சென்றுவிட்டது என டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார்.
7am -4-8-2017-friday*
♈🇮🇳 கோவை அரசு கலைக்கல்லூரியில் கடந்த1ம் தேதி, 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் சட்டை பட்டன் போடாமல் சென்றதாககூறி, 3ம் ஆண்டு மாணவர்கள் சிலர் தகராறு செய்தனர். இதனால், இருதரப்பு மாணவர்களும் உருட்டு கட்டைகளுடன் தாக்கிகொண்டனர். இதில், 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு கூடி 10மாணவர்கள் அடையாளம் கண்டது அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நளினி, நேற்று உத்தரவிட்டார்
♈🇮🇳 2100-ம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரிப்பால் இந்தியாவில் உயிர்வாழ்வது சிரமம்-பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது (வெட் பல்ப் டெம்பரேச்சர்) மற்றும் ஈரப்பதம் சேராதது (டிரை பல்ப் டெம்பரேச்சர்) என விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக அறியப்படுகிறது.இந்த வெப்பநிலை 2100-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 35 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்போது அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தால் மனித உடல் தகுதி இழந்து நோய்களும், மரண எண்ணிக்கையும், அறிதல் திறன் குறைபாடுகளும் அதிகரிக்கும். நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் கூட மரணத்துக்கு தப்ப முடியாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியா முழுவதும் இதன் தாக்கம் இருந்தாலும், அடர்த்தியான மக்கள் தொகை நிறைந்த கங்கை நதிப்படுகை, சிந்து சமவெளிப்பகுதிகளில் இதனால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டு உள்ளது
♈🇮🇳 பீப்புல் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா(பி.எஸ்.எல்.ஐ.,)' எனும் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களால் 780மொழிகள் சேப்பட்டு வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் இவற்றில்400க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது. கல்வியறிவின்மை மற்றும் பள்ளி செல்லாத காரணத்தால்,பழங்குடியின மக்கள் பேசும் மொழிகளுக்கு அழியும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆயிரம் வருடம் பழமையான மைதிலி(பீகார் பழங்குடியினர் மொழி) உள்ளிட்ட 22 பழங்குடியின மொழிகள் அழியும் அபாயம் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் 250 இந்திய மொழிகள் அழிந்து விட்டது. இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
♈🇮🇳 பீஹார் தலைநகர் பாட்னாவில், இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில், பணியாளர் நியமனத்துக்கான உறுதிமொழி படிவத்தில், விண்ணப்பதாரரின் திருமண விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில், 'திருமணமானவரா; வாழ்க்கை துணையை இழந்தவரா; கன்னி கழியாதவரா' என, கேட்கப்பட்டிருந்தது. அதாவது,ஆங்கிலத்தில், 'சிங்கிள்' என அச்சிடுவதற்கு பதில், 'விர்ஜின்' என,அச்சடிக்கப்பட்டிருந்தது. இது, பெரும் சர்ச்சையை உருவாக்கியது.இது தொடர்பாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர், மங்கல் பாண்டே கூறியதாவது: 'விர்ஜின்' என்கிற வார்த்தைக்கு, ஹிந்தி அகராதியில், 'கன்யா,கன்யா ராசி, குமார' என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வார்த்தையில் தவறில்லை. ஆனால், எதிர்ப்பு எழுந்துள்ளதால், இந்த வார்த்தையை,திருமணமாகாதவர் என, மாற்ற உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்
♈🇮🇳 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட, மூன்று ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள், ஒரே நேரத்தில் டில்லி புறப்பட்டு சென்றது, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 திருவண்ணாமலை மாவட்டம் கிளியாப்பட்டியில் காணமல் போன துவக்கப்பள்ளி மாணவர்கள் இருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி தலைமையாசிரியை தமிழ்செல்வி மற்றும் ஆசிரியை கங்கா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
♈🇮🇳 தமிழக போலீஸ்துறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் 8அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
♈🇮🇳 கோவையில் கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளை சேர்ந்த இருவரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைய உள்ளதாக வந்த தகவலை அடுத்து 2 மணி நேரமாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
♈🇮🇳 ராஜ்யசபாவில் இன்று ஆக.,3) இரண்டு மசோதாக்களுக்கு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி சட்ட திருத்தமசோதா, இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன சட்ட திருத்த மசோதா ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
♈🇮🇳 மணிப்பூரில் நேற்று முன்தினம் இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 11.48மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4ஆக பதிவானதாக புவியயில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளைவிட்டு வெளியேறினார்கள். சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள் சில மணி நேரத்துக்கு பின்னர் வீடுகளுக்கு திரும்பினார்கள். சூரசந்த்பூர் மாவட்டத்தை மையமாக வைத்து,பூமியில் 55 கி.மீ. ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது
♈🇮🇳 டெல்லி மேல்-சபை தேர்தலில் நோட்டாவுக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
♈ 🇮 பணப்பட்டுவாடா, குட்கா ஊழல் மற்றும் குவாரி உள்ளிட்ட பிரச்சினைகளில் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றுள்ள ஆவணங்களின் அடிப்படையில் 3-வது முறையாக அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த வழக்கு அமலாக்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
♈ 🇮 டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாள் ‘கெடு’ இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 2 அணிகள் இணைவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது
♈ 🇮 அ.தி.மு.க.வில் நிலவும் உச்சக்கட்ட குழப்பத்தை பயன்படுத்த தி.மு.க. தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்
♈ ‘பெப்சி’ தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்
♈ அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை, முழு அளவிலான வணிகப்போர்தான் என்று ரஷியா ஆவேசமாக கூறி உள்ளது
♈ 🇮 பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்
♈ ஏமனில் கார் குண்டு வெடிப்பு7 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
♈ அமெரிக்காவின் உளவுத்துறை எப்.பி.ஐ.யின் இயக்குனராக கிறிஸ்டோபர் வராய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்
♈ தெற்கு சூடான் நாட்டின் நெடுஞ்சாலை ஒன்றில் பஸ்கள் அணிவகுத்து சென்றபோது துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயணிகள் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்–
♈ கம்போடியாவில் ஆஸ்திரேலிய நர்சு டேமி டேவிஸ் சார்லஸ் (வயது 49) என்பவர், சட்ட விரோதமாக வாடகைத்தாய் மையம் நடத்தி வந்து, சட்டத்தின்பிடியில் சிக்கி உள்ளார். அவருக்கு 1½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
♈ ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிரேசில் நாட்டு பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு ஒன்றில் அதிபர் மைக்கேல் டெமரின் பதவி தப்பியது.
♈ துணை ஜனாதிபதி தேர்தல்; பா.ஜ., கூட்டணி எம்.பி.,கள் இன்று ஒத்திகை–விஸ்வரூபம்
♈ தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்–விஸ்வரூபம்
♈ சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? சட்டசபை குழு இன்று ஆய்வு
♈ வருமான வரி கணக்கு; நாளை(ஆக., 05) கடைசி நாள்–விஸ்வரூபம்
♈ சென்னை: ஆவடி அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி-விஸ்வரூபம்
♈ ஆக-04: பெட்ரோல் விலை ரூ. 68.34, டீசல் விலை ரூ.59.04
♈ நெல்லை அருகே 5 துப்பாக்கிகளுடன் மர்ம நபர் கைது
♈ 🇮 திண்டிவனம் அருகே ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். 2இருசக்கர வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அஜித்குமார்,தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
11.30am -4-8-2017-friday*
♈ 🇮🇳 திருச்சி: மணப்பாறை அடுத்த வையம்பட்டி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் இருவர் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து தலைமையாசிரியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமையாசிரியர் விசாரணைக்காக சென்றுள்ளதால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது--
♈ 🇮🇳 திருவண்ணாமலை ஆற்காடு - செய்யாறு புறவழிச்சாலையில் 25 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
♈ 🇮🇳 வட கொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு 100 கிலோமீட்டர் அருகே பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது---
♈ 🇮🇳 ஹரியானாவில் தேசிய ஹாக்கி வீராங்கனை ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது--- vishwarubam news
♈ 🇮🇳 மண்ணெண்ணெய் உபயோகம் நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து, இனி 15 நாட்களுக்கு ஒருமுறை 25காசுகள் விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி மண்ணெண்ணெய் மானியத்திலும் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த செய்தி சமையல் எரிவாயு இல்லாதவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலாகவே உள்ளது
♈ 🇮🇳 மின்சாரத்தினை பிரதானமாக கொண்டு உணவு தயாரிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மின்சாரத்தின் மூலம் வரும் உணவு இரவு உணவினை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.மின்சாரம், தண்ணீர், காபனீரொட்சைட்டு மற்றும் சில நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மூலப் பொருட்களை சேர்த்து மின்சாரத்தினை பாய்ச்சும்போது 50சதவீதம் புரதமும், 25 சதவீதம் கார்போஹைட்ரேட் உணவு உற்பத்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது---
♈ 🇮🇳 மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள்,மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்
♈ 🇮🇳 என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்!
♈ 🇮🇳 போலி பாஸ்போர்ட்டில் குவைத் செல்ல முயன்ற ஆந்திரா வாலிபரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்
♈ 🇮🇳 சென்னையில் இயக்கப்படும் அனைத்து மாநகர பஸ்களிலும் வரும் 20ம் தேதி முதல் மின்னணு பயணசீட்டு மட்டுமே வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
♈ 🇮🇳 விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கக் கோரிய தமிழகத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
♈ 🇮🇳 தக்காளி விலை உயர்வு எதிரொலி: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு வெளியே தக்காளி விற்கும் காங்கிரஸ் கட்சியினர்
♈ 🇮🇳 மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்.
♈ 🇮🇳 சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதனின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
♈🇮🇳 தமிழகத்தில் டெங்கு இல்லை கட்டுக்குள் உள்ளது : சுகாதார செயலர்.
♈🇮🇳 அப்படி என்ன செய்தார் சிவாஜி தமிழக மக்கள் நலனுக்காக - மெரினாவில் சிவாஜிக்கு புதிய சிலை அமைப்போம்: பிரபு ---
♈🇮🇳 இன்று வரலட்சுமி விரதம்: சுமங்கலி பாக்கியம் நிலைக்கட்டும்!
♈🇮🇳 ஆதார் தகவலை திருடிய ஐஐடி பட்டதாரி பெங்களூருவில் கைது
♈🇮🇳 மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ்., அழைப்பு
♈🇮🇳 சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் -
♈🇮🇳 ஜெமினி அளவுக்கு என்னால் காதலிக்க முடியாது: துல்கர் சல்மான்
♈🇮🇳 வலுவடையும் இந்திய ரூபாய் மதிப்பு: 63.60 -
♈🇮🇳 ஆக.,10 தமிழக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்
♈ 🇮🇳 பா.ஜ., எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
♈ 🇮🇳 2017 ம் ஆண்டு மார்ச் வரையிலான கணக்கீட்டின்படி இந்தியாவில் உள்ள 37 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார்---
♈ 🇮🇳 கோவையில் டெங்கு அறிகுறி காரணமாக 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்துள்ளார். இதுவரை டெங்க பாதிப்பு காரணமாக 195 பேர் அனமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
♈ 🇮🇳 ஐக்கிய அரபு நாடுகளில் வேலை தேடி வரும் இந்தியர்கள், சுற்றுலா விசாவில் வரக்கூடாது என்று தூதரகம் மூலம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
♈ 🇮🇳 நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று கூட்டியுள்ளார். தமிழக அரசை தொடர்ந்து புதுச்சேரி அரசும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிகளை தொடங்கியுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி ஏற்பாடு செய்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுதல், சென்டாக் சேர்க்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
♈ 🇮🇳 ராஜ்யசபாவில் காங்., கட்சியை பின்னுக்கு தள்ளிய பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வளர்ச்சி அடைந்துள்ளது
♈ 🇮🇳 16வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று(ஆக.,4)துவங்குகிறது. இப்போட்டியுடன் உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் விடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மொத்தம்205 நாடுகள் கலந்து கொள்ளும் உலக தடகள போட்டியில், இந்தியா தரப்பில் 25வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். உசைன் போல்ட் கடைசியாக கலந்து கொள்ளும் 100மீ., ஓட்டப்பந்தயத்தின் பைனல் நாளை நடைபெற உள்ளது.
♈ 🇮🇳 அவதுாறு வழக்கில் ஆஜராகாத, சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு,டில்லி கோர்ட், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
♈ 🇮🇳 அமெரிக்காவில் கணவர் ஒருவர் தனது மனைவி தூங்கி கொண்டிருக்கும்போது பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்த குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
♈ 🇮🇳 அமெரிக்காவில் காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபர்!
♈ 🇮🇳 விண்ணை யார் முதலில் தொடுவது?' என்ற போட்டியில், பல அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டிவருகிறது இன்றைய நவீன உலகம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இதேபோன்று அடுக்குமாடிக் குடில்களை மண்ணாலேயே ஒரு பழங்குடியினர் கட்டினார்கள் என்றால் நம்புவீர்களா?சமையலறை, படுக்கையறை என அறைகளை வகுக்கத் தெரியாத காலத்தில்,இவர்கள் ஓர் அடுக்குகொண்ட குடில்களைக் கட்டியிருக்கிறார்கள். அவர்கள்தான் `பெட்டாமரிபி' இனத்தின் மூதாதையர்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோவுக்கு வடகிழக்கில் அமைந்திருக்கும் அடக்கோரா மலைத்தொடரின் பள்ளத்தாக்குப் பகுதியில் `குத்தமக்கு'எனும் இடத்தில் வாழ்ந்துவருகின்றனர் `பெட்டாமரிபி' பழங்குடியினர்
♈ 🇮🇳 மதுரை மாவட்டத்தில் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.மதுரை வாடிப்பட்டி தெத்தூர் பகுதி நாராயணபுரம் கிராமத்து மக்கள் ஆண் நாய் பெண் நாய்களை மணமக்களாக அலங்கரித்து தாலிகட்டி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
♈ 🇮🇳 டெல்லியில் மத்திய அமைச்சர் நட்டாவுடன் விஜயபாஸ்கர் சந்திப்பு
♈ 🇮🇳 தமிழகம் முழுவதும் டெங்கு பரவி வருகிறது. காய்ச்சலைக்கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்போகிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
🔴மதிய செய்திகள்@4/8/17
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
கவர்ச்சியான பெண்கள் மூலம் இந்திய ராணுவ வீரர்களை கவர்ந்து அவர்களிடம் இருக்கும் ரகசியங்களை சேகரிக்கும் திட்டத்தில் எதிரி நாடுகள் ஈடுபட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்தினமும் பல்வேறு போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்ந்து 19 வது நாளாக நடைபெற்று வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்பது பற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அ.தி.மு.க.வில் நிலவும் உச்சக்கட்ட குழப்பத்தை பயன்படுத்த தி.மு.க. தயாராக இல்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்
ஆக.,10 தமிழக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் டெங்கு இல்லை கட்டுக்குள் உள்ளது : சுகாதார செயலர்
சென்னை அண்ணாசாலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகை தூண் மீது மாநகர பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மாநகர பஸ்சில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்
ஆதார் தகவலை திருடிய ஐஐடி பட்டதாரி பெங்களூருவில் கைது
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
கட்சி அலுவலகம் செல்லாமல் முதலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தினகரன் திட்டமிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை தினகரன் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.4 கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தினகரன், முதலில் தெற்கு மண்டலத்தில் தனது பயணத்தை துவங்குகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை என்.எல்.சி நிர்வாகம் பணி நீக்கம் செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் தங்கை பத்மாவதி வீட்டில் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றன.
திருவண்ணாமலை ஆற்காடு - செய்யாறு புறவழிச்சாலையில் 25 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூற ஓபிஎஸ்ஸுக்குத் தகுதி இல்லைசட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் விழுப்புரத்தில் பேச்சு.
அ.தி.மு.க.வில் வருத்தத்துடன் இருக்கும் தலைவர்களை அழைத்து பேசினால் இரு அணிகளும் இணையும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்
மணப்பாறை அடுத்த வையம்பட்டி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் இருவர் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து தலைமையாசிரியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமையாசிரியர் விசாரணைக்காக சென்றுள்ளதால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்இருந்து ஒரு பைக், 10 சவரன் நகை, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பா.ஜ., எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
தமிழக அரசு ஏற்கனவே ரூ. 45,119 கோடி கடனில் தவிக்கிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது
மெரினாவில் சிவாஜிக்கு புதிய சிலை அமைப்போம்: பிரபு
இந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது.வருகிற 12 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறைஅதேபோல் 25ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை .வங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மந்திரி சிவகுமார் வீடு மற்றும் அவருடைய மாமனார் திம்மையா மைசூரில் வசிக்கும் வீட்டில் இன்று 3-வது நாளாகவும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை செய்து போராட்டம்
ஆடிப் பெருக்கு தினத்தையொட்ட்டி காலண்டர் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டுக்கான நாள்காட்டி தயாரிக்கும் பணிகள் சிவகாசியில் உரிய பூஜைகளுடன் தொடங்கின. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட காரணங்களால் நாள்காட்டி விலை உயரும் எனத் தெரிகிறது
ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்த 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் கட்சியை விட்டு நீக்கி மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளனர்
ஐக்கிய அரபு நாடுகளில் வேலை தேடி வரும் இந்தியர்கள், சுற்றுலா விசாவில் வரக்கூடாது என்று தூதரகம் மூலம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கழிப்பறையில் படிக்க வைக்கும் அவலம் நடந்துள்ளது.
ராஜ்யசபாவில் காங்., கட்சியை பின்னுக்கு தள்ளிய பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
2017 ம் ஆண்டு மார்ச் வரையிலான கணக்கீட்டின்படி இந்தியாவில் உள்ள 37 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார்.
2050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒடிசா (1998-ம் ஆண்டு), ஆந்திரா (2003), குஜராத் (2010) ஆகிய மாநிலங்கள் சமீபத்திய ஆண்டுகளில் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டன.2015-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளில் ஏற்பட்ட பயங்கர வெப்ப அலைகளுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டில் இந்தியாவில் உயிர்வாழ்வது கடினம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக 'அறிவியல் முன்னேற்றங்கள்' என்ற ஆய்வு இதழில் கூறப்பட்டு உள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அழிந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை உயர்ந்து தெற்காசியாவில் புதிய பாலைவனங்கள் உருவாக வாய்ப்புஆய்வில் அதிர்ச்சி முடிவுகள்2100ம் ஆண்டில் வட இந்தியா வெப்பக்காற்று வீசும் பகுதிகளாக உருமாகுமாம்
அமெரிக்காவில் ஆண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
வட கொரியா நடத்திய ஏவுகனை சோதனையிலிருந்து ஏர் பிரான்ஸ் விமானம் தப்பியுள்ளதுஏவுகனை விழுந்த இடத்தை 10 நிமிடத்திற்கு பின்னர் கடந்ததால் தப்பியது ஏர் பிரான்ஸ்ஏர் பிரான்ஸ் விமானத்தில் 330 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
விலை நிலவரம்---22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,72322 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,78424 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.28,590வெள்ளி: ஒரு கிராம் - ரூ.40.80வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.40,800
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே டாலரின் தேவை சரிந்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.63.60. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.63.69.
மாலை செய்திகள்@4/8/17
அக்., 1 முதல் இறப்பு பதிவு செய்ய ஆதார் அவசியம்: உள்துறை அறிவிப்பு
நடப்பாண்டு எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்து உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு எல்லை கோடு தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டோக்லாம் எல்லை பிரச்னையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொறுமையாக உள்ளோம். இதற்கும் ஒரு எல்லை உண்டு என சீன ராணுவம் கூறியுள்ளது
மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதீய ஜனதாவில் இணைந்தார்
தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது
மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என்பது பற்றி எம்.எல்.ஏ.,க்கள் சிந்திக்க வேண்டும் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.
திருச்சியில் வரும் 20-ம் தேதி நடக்கும் காந்திய மக்கள் இயக்க மாநாட்டுக்கு செல்லுங்கள் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. அன்னனூரைச் சேரந்த சுப்பிரமணி(73) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதற்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சதாம் ஹூசைனை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் சதாம் ஹூசைன் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தாம்பரம் அருகே பாதாள சாக்கடையில் பஸ் கவிழ்ந்து விபத்து
கன்னியாகுமரியில் 18 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை ஐகோர்ட் கிளையில் மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி
கர்நாடகா அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜோதிடர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டத்திற்கு உட்பட்டே நியமிக்கப்பட்டனர். அவர்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது துரதிருஷ்டவசமான முடிவு என்று கிரண்பேடி கூறினார்.
இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி வர்த்தகச் சந்தையைப் புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலி இந்திய சந்தையில் அடுத்தச் சில மாதங்களில் தெரியும். ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் வரியமைப்பிற்குள் வரும் என எதிர்பார்க்கிறது.சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து வெறும் 35 நாட்களே ஆன நிலையில், இதில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸ் என்று கூறி 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. புழலை சேர்ந்த சிவப்பிரகாசத்திடம் ரூ.45,000 பணத்தையும் பறித்துச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் நேற்று மூட உத்தரவிட்ட 6 மனமகிழ் மன்றங்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? என உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் உள்ள சிறைகளிலேயே மிகவும் வசதியானது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைதான் என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்துவாரா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் மர்மநபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தியில் இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான விவகாரத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசுக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் கேரள அரசு: ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து, ஆக. 18 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் வீடு வீடாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.மேலும், ஆர்எஸ்எஸ்-ன் கலாசார பாதுகாப்பு படைகளை தடை செய்ய கோரி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது
கொடைக்கானல் சார்நிலை கருவூலத்தில் ரூ.1 கோடி கையாடல் நடைபெற்றுள்ளதாக கருவூல உதவி அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகை கடத்தல் வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் நடிகர் திலீப் தனது வக்கீலை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐகோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஷூவை கழற்றுமாறு தனது உதவியாளரை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டி.வி.யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. இதில் போட்டியிடுவோர் ஆபாச உடை அணிவதாகவும், ஆபாசமாகப் பேசுவதாகவும், அடித்தட்டு மக்களை விமர்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது
தமிழகத்தை தனிமையாகவே மத்திய அரசு பார்க்கிறது: சீமான்
இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு மருத்துவ கல்வி கவுன்சில் அமைக்கப்படுகிறது - மத்திய அரசு.
சென்னை கோவளத்தில் ஜனவரி ( 2018 ) 6ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் - தென்னிந்திய ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர்.
தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைகளை வரையறை செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு - தமிழக அரசு செப்.15-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
3 அதிமுக அணிகளுடன் இணைந்து ஆட்சியை நிலைநிறுத்த மத்திய அரசு முயற்சி : நல்லகண்ணு.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல யாருக்கும் கட்டுப்பாடு கிடையாது.கட்சி அலுவலகத்திற்கு செல்ல நினைத்தால் தொண்டர்கள் ஒவ்வொருவரும் செல்லலாம்: ஆர்பி.உதயகுமார்.
கட்சியின் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அனைத்து அதிகாரமும் டிடிவி தினகரனுக்கு உள்ளது : நாஞ்சில் சம்பத்.
துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது தேர்தல் ஆணையமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது பொதுச்செயலாளருக்கே அதிகாரம் : நாஞ்சில் சம்பத்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில்தான் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியும் : எம்எல்ஏ வெற்றிவேல்.
எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்.
அதிமுகவின் இரு அணிகளையும் டிடிவி தினகரன்தான் இணைப்பார் : எம்எல்ஏ வெற்றிவேல்.
வாக்குப் பதிவு எந்திரங்கள் உறுதியான நம்பகத்தன்மை கொண்டவை – தேர்தல் ஆணையம்.
வறுமை, விவசாயி தற்கொலை, கல்விக்கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தமிழகம் உள்ளது : எம்ஏல்ஏக்கள் ஊதிய உயர்வுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம்.
பினாமி பெயரில் எங்கள் குடும்பத்தினர் தொழில் நடத்தவில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறையின் நற்பணி, வேகத்தையும் முடக்கிவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார் : அமைச்சர் விஜயபாஸ்கர்
2011 பேரவை தேர்தல் பரப்புரையில் தேர்தல் அதிகாரியை தாக்கியதாக அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்க கோரும் வழக்கை செப்.20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
ஒப்புகைச் சீட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானது : தலைமை தேர்தல் ஆணையம்.
லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
வடசென்னை அனல்மின்நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படும் வழக்கில் ஆய்வு செய்ய 4பேர் கொண்ட குழு அமைத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
விமர்சனங்களைத் தாண்டி நான் நிரபராதி என்பதை காலம் நிரூபிக்கும்.அதிமுக ஆட்சியில் அங்கம் வகித்ததை ஓபிஎஸ் மறக்கக் கூடாது : ஆர்.பி.உதயகுமார்.
கட்சராயன் ஏரி விவகாரத்தில் இன்று மாலை 5 மணிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
தனியார் மர வியாபாரிகளுடன் சிண்டிகேட் அமைத்து சில்வர்ஓக் மரங்களை விற்க கூடாது : முக.ஸ்டாலின்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆதரவு கோரி எம்பிக்களுக்கு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம்.
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தை மீண்டும் லாபத்தில் இயக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.
சேலம் கட்சராயன் ஏரியில் வண்டல் மண் அள்ள இன்று முதல் யாருக்கும் அனுமதியில்லை : தமிழக அரசு.
தமிழக அமைச்சர்களின் ஊழல் புகார்கள் பற்றி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்.
ரூ.1500கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப்பத்திரங்களை விற்கிறது தமிழக அரசு.ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ஆக.8 ஏலக்கேட்புகள் நடைபெறுகின்றன.
மதுரை அரசு மருத்துவமனையில் இயங்கும் தனியார் உணவகத்தை 6வாரத்தில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க மருத்துவமனை முதல்வருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு சரியா என எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மீனவர் பிரிட்ஜோ வழக்கு – 6 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு.
கூடங்குளம் 2ஆவது அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பாம்பு கடித்து 156 பேர் உயிரிழந்துள்ளனர் : மத்திய அரசு தகவல்
வேலூர்: வசந்தாபுரம் கே.கே.நகர் பகுதியில் குடும்பப் பிரச்னையில் 7வயது மகளை கொன்றுவிட்டு தாய் வாணிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை.
நாகை, கடலூரை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்தது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை தாரிகா பானு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை இழந்த நிலையில் தற்போது சித்த மருத்துவ படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார்
ம.பி.,யில் குழந்தைகள் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், குடிசைப் பகுதியில் வசிக்கும் 5ம் வகுப்பு மாணவி, தனது வீட்டில் நூலகம் நடத்தி வருகிறார். இதனையறிந்த முதல்வர் சவுகான் நேரில் சென்று பாராட்டி நிதியுதவி செய்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு வகுப்பிற்கு பா.ஜனதா ஏற்பாடு செய்து உள்ளது.
5வது புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் முதல் வெற்றியைத் தமிழ் தலைவாஸ் பெற்று வெற்றிக் கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரியானாவில் இந்திய ஆக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா ரெயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
பாகிஸ்தானின் 19-வது பிரதமராக அப்பாஸி பதவி ஏற்றார். 46 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘எச் 1-பி’ விசா மீதான கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்ததால், புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 622 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.
கால்பந்து வீரர்கள் டிரான்ஸ்பர் பீஸில் நெய்மர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். அவருக்காக பி.எஸ்.ஜி. அணி 222 மில்லியன் யூரோ கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
விலை நிலவரம்-22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,730-22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.21,840-24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.28,660வெள்ளி: ஒரு கிராம் - ரூ.41.10வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,100
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88 புள்ளிகள் அதிகரித்து 32,325 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 10,074 புள்ளிகளானது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக