சனி, 26 ஆகஸ்ட், 2017

மதி செய்திகள்27/8/17

மதி செய்திகள்27/8/17

காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

குர்மீத் சிங்கின் ஆசிரமங்களில் அதிரடி சோதனை அரியானா கலவர சாவு 36 ஆக உயர்வு

தமிழக அரசின் இணை செயலாளராக இருந்த ஆஷிஷ் குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றம் கவர்னர் உத்தரவு

பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர்-ஹரியானா ஹைகோர்ட்
கட்டார் அரசையும் வதக்கி தள்ளியது நீதிமன்றம்
நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நகரத்தை எரிந்து போக அனுமதித்தீர்கள்- உயர்நீதிமன்றம்

ஆதார் விபரங்கள் தொகுக்கும் பணியும், திருத்தங்கள் செய்யும் பணியும் மீண்டும், அஞ்சல் துறை வசமாகிறது. தமிழக அஞ்சலங்களில், இதற்கான பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம் குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

வெள்ளப் பெருக்கால் ஏற்படும் சேதங்களை தடுக்க நதிகளை இணைக்க வேண்டும்: உமாபாரதி

அரியானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

பீகார் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 440 ஆக உயர்வு

ரூ.1,000 கோடி ஸ்ரீஜன் ஊழல் விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

தெலுங்கானாவில் கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர்

ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்கள் உடைய மனைகளை வரன்முறை செய்ய, 'ஆன் - லைன்' திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாததால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மனை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

நளினி ‘பரோல்’ கேட்டு அளித்த மனு பரிசீலனையில் உள்ளது ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் இன்று சந்திப்பு
துணை ஜனாதிபதியுடன் ஓ.பி.எஸ் இன்று சந்திப்பு

குட்கா விவகாரத்தை காரணமாகக் காட்டி திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் ரவுடி வினோத் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச் சாலையில் ரவுடி வினோத்தை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தனர்

கடலூர் அருகே விபத்து: பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு

நெல்லை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 37 பவுன் நகை கொள்ளை

பெரம்பலூர்: தொழுதூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி

மாற்றுத் திறனாளி, விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

காவலர் தேர்வில் தோல்வியடைந்த திருநங்கைக்கு சலுகை வழங்க முடியாது என்றும் அவர் ஊக்கத்தை இழக்காமல் பிற தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குர்மீத்துக்கு தண்டனை விவரம் அறிவிக்க நீதிபதி ரோடக் செல்ல உத்தரவு

தேரா சச்சா தலைவரை ஆதரித்த சாக்‌ஷி மகராஜ் எம்.பி.க்கு கேரள முதல் மந்திரி கண்டனம்

மும்பை:நீல திமிங்கல விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற 10-ம் வகுப்பு மாணவன் மீட்பு

ரூ.15½ லட்சத்துடன் 2 ஏ.டி.எம். எந்திரங்களை தூக்கி சென்ற கொள்ளையர்கள்: புனேயில் துணிகர சம்பவம்

குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளை கடலுக்குள் ஏவி சோதனை நடத்தியுள்ளது வட கொரியா

அமெரிக்க உதவிகளுக்கு பாக். விடை கொடுக்கலாம் - ஷாபாஸ் ஷரீஃப்

ஆக-27: பெட்ரோல் விலை ரூ. 71.56, டீசல் விலை ரூ.60.04

உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் சாய்னா போராடி தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 4-வது தோல்வி

தேசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, சவுரவ் கோஷல் ‘சாம்பியன்’:74-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நொய்டாவில் நடந்தது.

*மதிய செய்திகள்@27/8/17💥*

இறை நம்பிக்கையின் பெயரால் சட்டம், ஒழுங்கை, எவரும் தன் கையில் எடுப்பதை ஏற்க இயலாது, குற்றவாளிகள் தப்பிக்க முடியாது : மோடி

வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு

ஹரியானா மாநிலத்தில், பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு எடுபிடி வேலை பார்த்த மாநில துணை அட்வகேட் ஜெனரல், அப்பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராம் ரஹீம் சிங் ஆசிரமங்களில் அதிரடி சோதனைஆயுத கிடங்குகளாக மாற்றப்பட்ட ஆசிரமங்கள்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல்

பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதா?: சரத் யாதவுக்கு மிரட்டல் கடிதம்

முறைகேடுகளை அம்பலப்படுத்திய பேராசிரியருக்கு மீண்டும் பணி அளித்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்

புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நாளை பதவியேற்பு

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

சேலம் புறநகர் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டதைக் கண்டித்து எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையிலான தி.மு.க.வினர் ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சந்தித்தனர்.

மைனாரிட்டி எடப்பாடி அரசை ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது - ஆளுநரை சந்தித்தப்பின் துரைமுருகன் பேட்டி

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உத்தரவாதம் அளித்துள்ளார்: துரைமுருகன்

முடிந்தால் என்னை பதவியில் இருந்து நீக்கட்டும்: தினகரனுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சவால்

தினகரன் அணிக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள்: கதிர்காமு, ஏழுமலை தகவல்

தினகரனுக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறேன்: ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மகன் கருத்தால் பரபரப்பு

தினகரனை ஜெ., ஆன்மா மன்னிக்காது : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குட்கா விவகாரத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூரில் விசாரணை கைதி உயிரிழப்பு

அதிமுகவின் குடுமிபிடி எங்களிடம் இல்லை: பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை பாரிமுனையில் டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்

 அரசியல், சட்ட கடமையை ஆளுநர் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன்

அதிமுக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை: காதர் மைதீன்

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், கோவில் இல்லை; அது ஒரு கல்லறை தான் என, ஆக்ரா நீதின்றத்தில், ஏ.எஸ்.ஐ., எனப்படும், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் நகரில், விநாயகருடன் மாவட்ட பெண் கலெக்டருக்கும் இளைஞர்கள் சிலை வைத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

டோக்லாம் போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க கூடும்: பிபின் ராவத்

விஷால் தங்கை திருமணம் : ஸ்டாலின் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

புரோ கபடி லீக்: பெங்கால்- பெங்களூர் இன்று மோதல்

அமெரிக்காவை சேர்ந்த தொழில்முறை குத்து சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

*மாலை செய்திகள்@27/8/17💥*

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் முறையாக வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்தார்.அவரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்ம்,ஈபிஎஸ்ம் வரவேற்றனர்.பின்னர் அண்ணா பல்கலை.யில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அவர் திறந்து வைத்தார்

அரசியலில் கமிஷன் இருக்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு பேச்சு

ராணுவ தலைமையகம் செப்டம்பர் 29, 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் எவ்வித சர்ஜிகல் தாக்குதலையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

திமுகவை ஆதரித்தால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி போகாதுடெல்லியில் சு.சுவாமி பரபரப்பு பேட்டிசு.:சுவாமி கூறியிருப்பது அவரின் சொந்த கருத்து என்று கூறியுள்ளார் தினகரன்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரபா டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதன்மூலம் டிடிவிக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.இதற்கு முன்பாக தேனியில் தினகரனை நேரில் சந்தித்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

தொடர் மழை- சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்வுசெம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளின் நீர் மட்டம் கிடு கிடு என உயர்வு

சாமியாரை தப்பிக்க வைக்க முயன்ற Z காவலர்கள் கைது.

பிளாஸ்டிக் நாணயங்கள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட சாமியார்சிர்சா நகரில் சுற்றியுள்ள கடைகளில் சில்லறை தட்டுப்பாட்டை போக்க பிளாஸ்டிக் நாணயங்கள் புழக்கம்ரூ.5, ரூ.10 நாணயங்கள் அச்சடித்த சம்பவம் வெளியாகியுள்ளது

போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் 400 மாணவர்கள் இருந்தபோது, மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வர, அந்த வெடிகுண்டை மீட்ட போலீஸ்காரர் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவு அதனை சுமந்து சென்று பாதுகாப்பான பகுதியில் வைத்தார்.தலைமைக் காவலர் அபிஷேக் பட்டேல் என்பவர்தான் இந்த அசாத்தியச் செயலைச் செய்தது.

பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி: ஒரே மேடையில் லல்லு, மம்தா, அகிலேஷ், சரத் யாதவ்

மத்திய அரசின் பல நடவடிக்கை மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூ.65,844.68 கோடி உள்ளதாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியுள்ளார்.

தேசிய மருந்து படிப்பு நிறுவனம் மதுரையில் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் அனந்தகுமார்

122 எம்.எல்.ஏ.க்களும் எங்களின் ஆதரவாளர்கள்தான்:  எங்களுடைய போராட்டமும் விவசாயிகளுடைய போராட்டமும் ஒன்றுதான்:டிடிவி தினகரன்:தியாகத்துக்கும் துரோகத்துக்குமான யுத்தம் நடைபெறுகிறது:அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்:ஜெ. காலத்தில் கட்சி ராணுவ கட்டுப்பாடுடன் இருந்ததற்கு நாங்கள்தான் காரணம்

எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி கூறியதாவது:பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைப்பு தொண்டர்களுக்காக அல்ல, பதவிக்காக நடந்து இருக்கிறதுபொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது.டிடிவி தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மேலும் உயரும்.

பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது செந்தில் பாலாஜி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆறாவது நாளாக புதுச்சேரியில் முகாம்: மீண்டும் ரிசார்ட்டுக்கு மாறினர்

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது; கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்: டிடிவி தினகரன்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எங்கே..? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்அதிமுகவின் அரசியல் இப்போது கேலிக்கூத்தாகியுள்ளது என்று டுவீட் செய்துள்ளார்.

சென்னை காசிமேடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேருக்கு வெட்டு

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

கட்சி பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கியது நகைச்சுவை: இல.கணேசன்

விநாயகர் சிலை கரைக்க அனுமதி மறுப்பு: நாமக்கல்லில் பொது மக்கள் மறியல்

உடுமலை: மடத்துகுளத்தில் பஸ் மீது கல்வீச்சு: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

மலேசியாவில் நடந்த உலக தமிழ் இணைய மாநாடு நிறைவு பெற்றது

லண்டன் பக்கிங்காமில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழர்கள் பலி.இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைகிறார்

மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடு: இலங்கை பிரதமரின் திட்டம் திடீர் ரத்து

அமெரிக்காவை தாக்கி வரும் ஹார்வே சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 2 பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக